இயற்கை இன்பம் –15

புவியீர்ப்பு...


கவியாலும்  உரையாலும்  விளக்கிச்  சொல்லிக்
                    கற்பனையும்  செய்திடவே  இயலா  வண்ணம்
செவியாலும்  நோக்காலும்  அறிய  வொண்ணாச்
                    செயலூக்கம்  பெற்றுத்தன்  இறையின்  கையால்
எவையெல்லாம்  தன்மீது  நிலைத்து  நின்றும்
                    இருக்காமல்  அசைந்துள்ள  வற்றை  யும்தன்
புவிஈர்ப்பாம்  அற்புதத்தால்  பிடித்து  நிற்கும்
                    புவிப்பந்தின்  இயல்பும்பேர்  இன்ப  மன்றோ!

அதிரை அஹ்மத்

கருத்துகள் இல்லை