Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 29, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

நீங்கள் வீடுகளில் நுழையும் போது அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : அந்நூர்: 24:61)

''மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 861)

'பெண்களான எங்களைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், எங்களுக்கு ஸலாம் கூறினார்கள். (அபூதாவூது)

திர்மிதீயில் வரும் ஹதீஸ் :

''நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் பள்ளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்களில் ஒரு கூட்டம் அங்கே அமர்ந்திருந்தது. உடனே அவர்கள் தன் கையால் சைகை மூலம் ஸலாம் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீத்(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீயில்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 864)

'முஸ்லிம்களும், இணை வைப்போரும், சிலை வணங்கிகளும், யூதர்களும் கலந்து இருந்த ஒரு சபையை கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், அவர்களுக்கு ஸலாம் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: உஸாமா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 868)

''உங்களில் ஒருவர் அவைக்கு வருவாரானால், அவர் ஸலாம் கூறட்டும். (அங்கிருந்து) புறப்பட விரும்பினாலும் ஸலாம் கூறட்டும்! (புறப்படும் போது ஸலாம் கூறுதல் எனும்) பிந்தியதை விட, (வந்தபோது ஸலாம் கூறுதல் எனும்) முந்தியது ஒன்றும் அதிக முக்கியத்துவம் பெற்றதில்லை என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 869)

வீட்டில் நுழைய அனுமதி கோருதலின் ஒழுங்குகள்

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.  (அல்குர்ஆன் : 24: 27)

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு  அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! ''திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ்; அறிந்தவன். (அல்குர்ஆன் : 24: 28)

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்: ஞானமிக்கவன். (அல்குர்ஆன் : 24: 59)

''அனுமதி கேட்பது ஏற்படுத்தப்பட்டது என்பது, (தவறான) பார்வையை (விட்டும் தடுக்கும்) காரணமாகத்தான்'' என்று நபி(ஸல்); கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஹ்து(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 870)

''நபி(ஸல்) அவர்களிடம் நான் வந்தேன். அவர்களின் (வீட்டினுள்) நுழைந்து, ஸலாம் கூறினேன். உடனே நபி(ஸல்) அவர்கள், ''நீர் திரும்பிச் செல்வீராக! அஸ்ஸலாமு அலைக்கும் நான் உள்ளே வரலாமா?'' என்று கேட்பீராக!  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கில்தா இப்னு ஹன்பல் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (புகாரிமுஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 873)

தும்மியவர், 'அல்ஹம்துலில்லாஹ்' கூறினால் அவருக்கு பதில் கூறுவது விரும்பத்தக்கதாகும்.

நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு  அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில்  ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு  தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 878)

 ''உங்களில் ஒருவர் தும்மினால் அவர், ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறட்டும்! அவரின் சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறட்டும்! யர்ஹமுகல்லாஹ் என அவருக்கு ஒருவர் கூறினால், தும்மியவர், "யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹுபாலகும்'' (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக! உங்கள் நிலையை சீராக்குவானாக) என்று கூறட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 879)

''உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' எனக் கூறுங்கள். அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறவில்லையானால், அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' கூறாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 880)

''நபி(ஸல்) அவர்கள் முன் இரண்டு நபர்கள் தும்மினார்கள். அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தார்கள். மற்றொருவருக்கு துஆச் செய்யவில்லை. தனக்கு துஆச் செய்யாத நிலையில் உள்ளவர் ''இன்ன மனிதர் தும்மினார். அவருக்கு நீங்கள் ''யர்ஹமுகல்லாஹ்'' என்று கூறி துஆச் செய்தீர்கள். நான் தும்மினேன். எனக்கு துஆச்  செய்யவில்லையே'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். ''இவர் ''அல்ஹம்துலில்லாஹ்'' எனக் கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார். நீர் அல்லாஹ்வை புகழவில்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 881)

''நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தன் கையை அல்லது  தன்  துணியை தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்து) குறைத்துக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ)  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 882)

''உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தன் கையால் தன் வாயை மூடட்டும். நிச்சயமாக ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 884)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்….

99:01 பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,

99:02 தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,

99:03 இதற்கு என்ன நேர்ந்தது?  என்று மனிதன் கேட்கும் போது,

99:04,05 அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.

99:06 அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.

99:07 அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.

99:08 அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.

(அல்குர்ஆன் :அஸ்ஸில்ஸால் - நில அதிர்ச்சி : 99 :1 - 8)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஸலாம், தும்மல்,கொட்டாவி பற்றிய நல் படிப்பினைகள்!

//மகனே! உன் குடும்பத்தாரிடம் நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும் அபிவிருத்தியாக இருக்கும்//

இத்தகவலை என் மகனிடமும் தெரியப்படுத்தி விட்டேன்.

Shameed said...

//''நபி(ஸல்) அவர்கள் தும்மினால் தன் கையை அல்லது தன் துணியை தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்து) குறைத்துக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 882)

''உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால் தன் கையால் தன் வாயை மூடட்டும். நிச்சயமாக ஷைத்தான் அதன் வழியாக நுழைந்து விடுவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 884)//

நம் மார்க்கத்தில் அனைத்திற்கும் விளக்கங்களும் நடைமுறைகளும் உள்ளன என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்

sheikdawoodmohamedfarook said...

அதிரை நிருபருக்கு என்ன ஆகிவிட்டது?சொன்னதையே திரும்ப்திரும்பசொல்லும்கிளிப்பிள்ளைபோல் இருக்கிறதே.சூடான கட்டுரைகள் வாதப்பிரதிவாதங்கள் நடந்த அதிரை நிருபர் தளம் முதலை கிடக்கும் ஆறுபோல் சலனமின்றி அமைதியாய் இருக்கிறதே?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு