பேரண்டம்
நாம்வாழத் தகுமிந்த பூமிப் பந்தின்
நான்கெல்லைப் பருமனதோ எள்ளைப் போன்றாம்!
தாம்வாழும் ஆதவனின் குடும்பத் துள்ளே
தனித்தனியாய்ப் பிறகோள்கள் சுற்றி ஓடும்!
நாம்காணா விதமிந்த அண்டத் துள்ளே
நாயனிறை அமைத்துள்ளான் கோளின் கூட்டம்!
போம்பாதை தவறாமல் சுற்றும் விந்தை
புகழ்மிக்கோன் காட்டுகின்ற வித்தை யன்றோ!
அதிரை அஹ்மத்




0 Responses So Far:
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.