Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகம் எப்படி உருவானது ! 18

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2016 | , , ,


உலகம் எப்படி உருவானது  என்ற சோதனை நடக்கின்றது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்  இந்த சோதனையை நடத்துகிறது.  உலகம் எப்படி உருவானது(ரூம் போட்டு யோசிப்பான்களோ ) என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள்.(இது என்ன லண்டன் கந்துரி கடையா வேடிக்கை பார்க்க ) இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக பல  பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளனர் ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகள் கூட்டு சேர்ந்து இந்த  டீம் வொர்க் நடக்கின்றது.(இதில்  நீங்கள் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும்  ஒரே பைப்பில் ஓட உட போறிங்க நாங்க பல வருசத்துக்கு முன்பே ஒரே பைப்பில் நல்ல தண்ணியையும் சாக்கட தண்ணியும் மோத விட்டு என்னென்ன நோய்கள் பொது மக்களுக்கு வருதுன்னு கண்டு பிடிச்சிட்டோம்)


தடிமனான இரும்பால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் பலவித  ரசாயனங் களை கலந்து பூசி மொழுவி , அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு  கொண்ட இந்த கொல்லாய்டர்.எனும் ஆய்வு கலன் தயார் செய்யப்பட்டு உள்ளது (நீங்களெல்லாம் இரும்புக்கு ரசாயனம் தடவுரிய நாங்க கோழிக்கு மசாலா தடவுறோம் )

இது அணுக்களைp பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். இதன் செயல்பாடும்  ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். (என்ன இவன் எப்போ பார்த்தாலும் வேகத்தை பத்தியே போட்டு அருக்கின்றானே என்று வேகமா புலம்புவது காதில் விழுது ) 1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன சர்கஸில் கூண்டுக்குள் பைக்கில் சுத்துவார்களே அதுபோல் . LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.(இதை எல்லாம் எப்படித்தான் எண்ணுகிறார்களோ)

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். (அந்த கரண்டை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்பி விட்டா நாங்க கொசு கடி இல்லாம நிமதியா தூங்குவோம்) அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் அப்சர்வ் செய்து  அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்ய திட்டமிட்டு உள்ளனர் கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.அதாவது உலகம் எப்படி உறவானது என்று ஒரு ரிகர்சல் பார்க்க போகின்றார்கள். இதை சிம்பிளா சொன்னா வட்டில் அப்பம் வைக்க தெரியாதவக சும்மா நாலு முட்டைக்கு வட்டில் அப்பம் வைத்து பார்ப்பதுபோல்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம் ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.அதாவது கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம  ஊர் பூனை அடுபங்கரையை  சுற்றி சுற்றி வருவதுபோல்  இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். (காட்டு மாடுகள் அனிமல் சேனலில் முட்டிக் கொள்வதுபோல்) இப்போது புரிகிறதா. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்று. 

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை வட்டில் அப்பம் வைக்க முட்டை அடிப்பதுபோல் அடித்தால்  குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் பலவாறாக அடித்து   சிதறடிக்கப்படும்   மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம்.உண்டு   ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் இது வரை நிரூபித்ததில்லை.அறிவியலில்  எந்த  விசயமாக  இருந்தாலும்  நிருபிக்கப்படவேண்டும் (சும்மா வாயால் விடும் புருடாவிற்க்கெல்லாம் வேலை இல்லை) இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை மூலம்  வெளியில் கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் 5000 விஞ்ஞானிகள்  செயலில் இறங்கி உள்ளனர்   ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. (கூடங்குள  கதைதான் அங்கும் )உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கெளப்பியும்  அவுத்தும்  விடுகின்றார்கள் 

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் ஊரில் ஒரு  சஹன் சோத்தை ஒரே ஆள் உள்ளே தள்ளுவிட்டு மறு சோறும் கேட்ப்பாரே அதுபோல்  . உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை போட்டு ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்ப மட்டும் என்னவாம் தெளிவாவா இருக்கு என்று பலரும் புலம்புவது காதில் விழத்தான் செய்கின்றது 

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள்,கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலங்கள் அல்ல  அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் (D.M.K.குடும்பம் அல்ல ) இருக்கும் மண்டலத்தின் பெயர் பால்வெளி மண்டலம்

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.  

ஒரு சிறிய பட்டாணிக்கடலை   சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், (அது என்ன நிலாக்கள் நிலா தானே என்று  கேள்வி வரும் அதாவது நமது பூமிக்கு ஒரு நிலாதான் மற்ற கோள்களுக்கு  நான்கு  ஐந்து நிலாக்கள்  எல்லாம் உண்டு நாம் ஒருநிலாவை வைத்துக்கொண்டு பாட்டும் கவிதையும் போட்டு தாக்குகின்றோம்  ). எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவைதான்  கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என்ற அச்சத்தை கிளப்பி விட்டுவிட்டார்கள் .

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.இதைத்தானே கூடங்குளத்திலும் நம் விஞ்ஞானிகள் சொல்கின்றார்கள் எந்த ஒரு நாட்டில்   விஞ்ஞானிகளும் பொது மக்களும் ஒத்து போகின்றார்களோ அந்த நாடுதான் முன்னேற்றத்தில் முன்னணியில் இருக்கும்.

இத்தனை பணம் செலவு செய்து உலகையே பணயம் வைத்து இந்த ஆராய்ச்சியை செய்யும் இவர்கள் இந்த அல் குரானின் சூராவை பார்க்காதது ஏனோ !!!!! 

7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

50:38   وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَمَا مَسَّنَا مِن لُّغُوبٍ

50:38. நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை

57:4   هُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۚ يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا  ۖ وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

57:4. அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்

Sஹமீது

18 Responses So Far:

Yasir said...

உங்களின் இந்த ஆக்கத்தை படித்தபிறகு புரோட்டான்னின் வேகத்தைவிடவும் தலை சுத்துகின்றது....கருவாட்டு ஆனம் பூனை -சான்ஸ்சே இல்லை..கடைசியா ஒரு பெரிய குத்தாவுல விஞ்ஞானிக முகத்தில விட்டு இருக்கீங்க..அல்லாஹூ அக்பர் சூப்பர் காக்கா

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum Savanna!!!
It is quite interesting to read your article. Actually I expected you to post this article when the news about Higgs Boson was hot last November.
You have rightly quoted the verses from the Holy Qur'an.
I do recollect one incident in 1980's with our respected Prof.U.Mohamed Iqbal, Head of the English Department. One day when I was in the Physics Lab he came to me and asked me a question in Physics. He asked me Shahul, what is the difference between speed and velocity. I told him speed is a scalar quantity and velocity is a vector quantity. Speed contains the amount only and NOT the direction, but velocity contains amount and direction. Still I explained him the difference between MASS and WEIGHT of a body.
He wondered and said gracefully Subhanallah. I asked him why do you Praise Allah for this? He recited the Sura "Sabbi hisma rabbikal A'la" and said it means praise be to the protector who hath contributed the amount and direction to the particles.
As I was young and as I did not have much knowledge on the translation of Qur'an I could not appreciate it.
But after reading the articles on the recent Higgs Boson theory, what they said the God's particle is already mentioned in the Holy Qur'an.
And when we think deeper we will get more insight into the greatness of Allah and those verses you quoted too confirm their research.
Allah knows everything and our knowledge is very little.
Wassalam
N.A.Shahul Hameed

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சோதனையை பார்வையிட தங்களுக்கும் அழைப்பு வந்திருக்குமே!
கருவாட்டு ஆனத்திலிருந்து எங்க கந்தூரி வரைக்கும் அருமையான உதராணங்களுடன் அது பற்றிய விளக்கம்.
(அது ஏனுங்க அதிரைலெ கந்தூரி இனி நடக்காதோ,முற்றுப் புள்ளி வைத்தாச்சா?)

sabeer.abushahruk said...

ரெண்டு "ஷா"வண்ணாக்களின் க்ளாஸும் சூப்பர்.

ஷா 1: ஆங்காங்கே நக்கலானத் துணுக்கள் தூவியிருப்பது பேசுபொருளின் புரிதலில் உள்ள சிரமத்தைக் குறைத்து கவனம் செலுத்த வைக்கிறது.

குட் வொர்க்.

ஷா அவர்கள் 2:

ஸ்பீடுக்கும் வெலாசிடிக்கும் உள்ள வித்தியாசம் சொன்னதுபோல், மாஸுக்கும் வெயிட்டுக்கும்கூட விளக்கியிருந்தால் உபகாரமாகிபோகும்.

1980ல் எனக்கு லிக்விட் லென்ஸ் பாடம் எடுத்ததுபோல்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஸார்

Ebrahim Ansari said...

மருமகன் சாவன்னாவுடைய இந்தப் பதிவும் தொடர்ந்து வரும் பின்னூட்டங்களும் மிக மிக சிறப்பானவை. வசிஸ்டர் வாயால் பிரம்மா ரிஷி என்று பெயர் வாங்குவது என்று சொல்வார்கள். அந்த வகையில் மரியாதைக்குரிய பேராசிரியர் என். ஏ. எஸ் . அவர்களின் பாராட்டும் விளக்கமும் அமைந்திருப்பது தங்கப் பதக்கத்தில் முத்துப் பதித்தது போல் ஆகும்.

இனிக்கும் இடைச் சொற்களுடன் - தனது வழக்கமான நகைச் சுவையுடன் இந்த கடினமான விஷயத்தை விளக்கி இருப்பது படிப்போரைப் பரவசப் படுத்தும் ஒரு வசியம். நிறைவாக திருமறையின் வசனங்களை குறிப்பிட்டிருப்பது அறிவுடைமையின் சான்று.

உரத்த சிந்தனைகளைத் தரத்தொடங்கி இருக்கும் சாகுலுக்கு நல் வாழ்த்துக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கு, ஹமீத் காக்கா,

//கருவாட்டு ஆன வாசத்துக்கு நம்ம ஊர் பூனை அடுபங்கரையை சுற்றி சுற்றி வருவதுபோல் இந்த வளையத்தில் புரோட்டான்கள் சுற்றி சுற்றி வரும்.//

சூப்பர்.. எழுத்தே சுவையா இருக்கே... நீங்க கருவாட்டு ஆனம் வைச்சா.... ம்ம்ஹும் சான்சே இல்லை...

பொருத்தமான இறைவசனங்கள். ஜஸக்கல்லாஹ் ஹைரன்..

அப்துல்மாலிக் said...

சாவணாக்கா, 5000 விஞ்ஞானிகளின் கூட்டுமுயற்சியும், பல்லாண்டுகளாக யோசித்தும் செய்யப்போகும் விசயத்தை நம்மூரு ஆணத்துக்கூட ஒப்பிட்டு இந்த உலகம் பற்றி குரானில் முன்னரே தெளிவாக்கூறப்பட்டுவிட்டது பின்னே ஏண்டே உங்களுக்கு இந்த் வேண்டாத வேலை என்பதை எவ்வளாவு சிம்பிளா சொல்லிப்புட்டிய..

இது புரிஞ்சா இவனுங்க ஏன் உசுர பணயம் வெச்சிவிளையாடுறாய்ங்க....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இது ஒரு அற்புதமான கோண(ப்) பார்வை !

வலைப்பூ உலகில் அதிரைக்கு அறிவியல் என்றால் உங்கள் பெயர் நிச்சயம் ஞாபகம் வரும்...

சில விஷயங்களில் சிலரை ஞாபகம் வருது போன்றே !

Unknown said...

அருமை ஷாகுல் காக்கா ....!மென்மேலும் அறிவியல் கட்டுரைகள் எழுதி எங்களுக்கு அறிவியல் செறிவூட்ட வாழ்த்துக்களுடன் துஆ .....!

-Harmys

Unknown said...

Assalamu Alaikkum

An interesting narration on scientific research about "creation of worlds"

All of the research in scientific labs are to find the laws Allah has already established, and utilize the discovered laws for the benefit of human. There are so many things the common man started using from mobiles, computers, robots, to flights, all are from the research and developments like this. There so many inventions not yet come to common man's usage(eg. medical research). There are other inventions used in the scientific labs only, not for public.

Allah Subhanahwathaala created the human as one of the greatest creatures in the world with thinking ability and direct us through The Holy Quran to think and reflect by exploring the whole universe in order to realize His characteristics and power.

Allahu Akbar...

Unknown said...

ஒரு மோரிஸ் புக்கைல் அறிவியல் ஆய்வில் ஈடுபட்டு, கொஞ்சம் குர்ஆனின் பக்கம் எட்டிப் பார்க்கப் போய், இஸ்லாத்தை ஆரத் தழுவிக்கொண்டார்! இப்போது 5000 அறிவியல் அறிஞ்ர்கள் உலகத் தோற்றம் பற்றி ஆராயப் போகிறார்கள். இவர்களும் இறைமறையை எட்டிப் பார்க்கட்டும்; இஸ்லாத்தைத் தழுவட்டும், இன்ஷா அல்லாஹ்.

Abdul Razik said...

Real revealed by Holy quraan. These scientists couldn’t get positive solution, instead they may find a strange way to produce electric power lower than the cost. I sense, this is an unwanted experiment. will it make any change ? or will it generate an egg sized globe within that area? We will wait and see .None will happen apart from Allah’s determination. Fantastic article with a funny expression. Thanks lot Mr. Shahul.

Abdul Razik
Dubai

KALAM SHAICK ABDUL KADER said...

உண்மையில் அதிரை நிருபர் என்னும் இத்தளம் ஓர் ஒப்பிலாப் பல்கலைக்கழகம்; இதில் அனைத்து வகுப்புகளும் சிறப்பாய் நடந்தேறி வருகின்றன!

KALAM SHAICK ABDUL KADER said...

சுட்டும் விழிச்சுடர் “ஷா” அவர்கட்கு,

அஸ்ஸலாமு அலைக்கும், உங்களின் இவ்வாக்கத்தை ”காபி-பேஸ்ட்” செய்து என்னுடன் முகநூலில் தொடர்புடன் உள்ளவரும்- தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கையில் உள்ளவருமான ஒரு நண்பர்க்கு அனுப்பலாமா?

“காபி-பேஸ்ட்” என்றாலே நன்மைக்கும் தான் என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டாலும், அண்மையில் எனக்கு ஏற்பட்ட அவதூறுகளை எண்ணியே உங்களிடம் அனுமதி வேண்டி நிற்கிறேன்.

அல்லது அன்புநெறியாளர் அவர்களின் அனுமதியுடன் இந்தப் பதிவின் இணைப்பு முகவரியைக் கொடுக்கலாமா?

குறிப்பு: நேற்று முகநூலில் இறைமறுப்பாளனுக்கு அடியேன் சொன்ன விடை:

1) இறைவன் இல்லை என்று சொல்லுகின்ற இந்த நாக்கைப் படைத்தும், அதனை வாய்ப்பாக வாய்க்குள் வைத்தவன் இருப்பதும் அறிக.

2) இருதயம் எப்படித் துடிக்கின்றது (கருவிலிருந்து வாழ்வு முடியும் வரைக்கும்) என்பதை உங்களின் அறிவியலின் அல்ட்ரா ஸ்கேனில் பார்த்தால் இயக்குபவன் ஒருவனின் ஆற்றலை மருத்துவத் துறையே ஒப்புக்கொள்ளும்.

Anonymous said...

அன்பு அபுல் கலாம் காக்கா அவர்கட்கு:

தாராளமாக ! அந்த நன்மையில் கட்டுரையாளருக்கும் இதில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்மைகள் சேரட்டும் இன்ஷா அல்லாஹ் !

என்றுமே நன்றி... என்று சொல்லத் தயங்காதவர்கள் நாம்!

KALAM SHAICK ABDUL KADER said...

அன்பும் நன்றியுணர்வும் மிக்க நெறியாளர் அபூ இப்றாஹிம் அவர்கட்கு ”ஜஸாக்கல்லாஹ் கைரன்”

நீங்களும் உங்கள் குழுவினரும் எப்பொழுதும் நன்றி மறவா நல்லுள்ளம் கொண்டவர்கள் என்பதாற்றான், அதிரை நிருபரின் ஒரு பங்களிப்பாளானாக அடியேனையும் அரவணைத்துக் கொண்டீர்கள்!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

உலகம் எப்படி உருவானது என்பது இருக்கட்டும் உலகத்தில் எப்படி சந்தோசமாய் வாழ்வது என்பதை சொல்லித்தந்தால் நல்லது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு