சின்ன காக்காவை கடித்த ஜோக்ஸ்

டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும் .
ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும் ..
சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும் . ஆனா...
கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா ??

யோசிக்கனும்............ ...!!

தத்துவம் 1:

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:

ஆட்டோக்கு ' ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:

வாழை மரம் தார் போடும்
ஆனா....... அதை வச்சு ரோடு போட முடியாது!

(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம் ,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

(டேய் ! எங்க இருந்துடா கிளம்புறீங்க ?!)

தத்துவம் 6:

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ...
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் ,
அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ?

(ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க!!!)

தொகுப்பு: சின்ன காக்கா

13 கருத்துகள்

sabeer.abushahruk சொன்னது…

கெழம்பிட்டாய்ங்கய்யா கெழம்பிட்டாய்ங்க. இப்பவே கண்ணக் கட்டுதே இனி சின்னக்காக்கவ பதிலுக்கு ஆளாளுக்கு வந்து கடிப்பாய்ங்களே.உஸ்ஸ்ஸ்...

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.சின்ன''காக்காகடி''ஏற்கனவே கேட்டதாய் இருந்தாலும் நன்றாகவே இருந்தது ஆகவே இது போல் அடி''கடி''எழுதவும் .கடிதம் போட்டாவது 'கடி'க்கவும்.அப்படி 'கடி'த்தால் 'கடி'காரத்தில் நேரம் போவதே தெரியாத படி கடி,கடி யென கடித்தால் 'கடி'னமான் சோகம் ஓடிவிடும். நெருக்'கடி' நீங்கிவிடும். நிறைய ஜோக்'கடி'க்கவும்.
----------------------
மூனாவது மாடியிலிருந்து தபால் காரன் கீழே விழுந்தால் எப்படி விழுவான்????
"தபால்"ன்னு விழுவான்.
----------------------
ஜாக்கிசான்னின் மகன் பெயரென்ன?
ஜாக்கி"முழம்"
----------------------
ஒரு குளத்தில் யானை விழுந்து விட்டது அது எப்படி எழுந்து வரும்?
ஈரமாதான் எழுந்துவரும்.


இப்படி நிறைய தொடரபோகுது.இது சாம்பிள்தான் மெயின் பிச்சர் நம்ம ஆள்கள் கிட்டேன்ந்து வரும் பாருன்ங்க.......கடி வெடிதான் போங்க.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

காலையில மடிக்கணினிப் பக்கம் வந்தா ஒரே கடியா இருக்கு !!

எனக்குத் தெரிந்த நாம்மூர் பெரியவங்க ரொம்பவே (நல்லவங்க) அலங்காய்த்தார் இப்படி "என்னோட (அதாவது அவரோட) கல்யாணம்தான் ரொம்ப லேட்டா நடந்துச்சு இந்த அவஸ்த்தை என் மஹனுக்கு வரக்கூட்டாதுன்னு அவன் கல்யாணத்தை சீக்கிரமே நடத்தி வச்சுட்டேன்னு சொன்னார்" அதுக்கு நான் அவ்ளோ சின்ன வயசுலையான்னு கேட்டேன் அவர் ரொம்ப கூல அட "நீ வேற எனக்கு பகல் 11:00மணிக்கு நடந்தது என் மஹனுக்கு காலை 06:00மணிக்கே நடத்திட்டேனே" :>

****

சமீபத்தில் வாசித்தது இப்படி:-

"உங்க மாமியாருக்கு ஆபரேஷன் செய்ய இரண்டு இலட்சம் பணம் தேவை உடனே ரெடி பன்னுங்க"

"அட என்ன டாக்டர் கொடுமை நேத்து கூலிப்படைக் காரங்க ஒரு இலட்சம்தானே கேட்டாங்க அவங்களை விட அதிகமா கேட்கிறீங்களே"

****

கிரவுனு காக்காவிடம் கேட்டுப் பார் அன்று நன்பர் ஒருவரிடம் அவர் ஆஃபிஸில் இருக்கும் போது வெளியிலிருந்து வந்த மற்ற அலுவலக நன்பர் கேட்டார் எனக்கு எதாவது ஃபோன் வந்ததான்னு அதற்கு எங்கள் தோழப்புள்ள கூலாக ஒவ்வொரு டேபிலுக்குச் சென்று பார்த்துட்டு வந்து இல்லேங்க இங்கே ஒரே ஒரு ஃபோன் தான் இருக்கு அது மேனேஜர் டேபிலில் இருக்கு உங்களுக்கு ஃபோன் வரலைன்னு சொன்னார்"

***

காத்திருப்போம் ராக்கெட்டுலேருந்து எதாவது குதிக்குதான்னு

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நம்மூர் மிகப் பிரபலமானவர் ஒருவர் டாக்டரிடம் தனது உடல்நிலையை சோதனை செய்யச் சென்றார் அங்கே டாக்டர் அவரை எல்லாம் செக்கப்பும் செய்துட்டு சொன்னார் உங்களோட இரத்தம் சாம்பிள் எடுக்கனும் சோதனைச் செய்து பார்க்கனும் அதற்கு அந்த முக்கியஸ்தர் பக்கத்திலிருந்த தன்னோடு வந்திருந்தவரிடம் டேய் நீ போய் இரத்தம் கொடுத்துட்டுவான்னு அமைதியாக சொன்னார் அதற்கு டாக்டர் அதிர்ச்சியுடன் உங்க இரத்தம் தாங்க எடுக்கனும் "அட எல்லாம் நம்ம இரத்தம்தான் என்னொட இரத்தம் ரொம்ப அலர்ஜின்னு சொன்னார்"

Shameed சொன்னது…

வாப்பா மகன்களிடம் இருவரிடம்மும் சொன்னார் தினமும் கேரட் ஜுஸ் குடித்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் என்று
மகன்கள் இருவரும் 10 நாட்கள் கேரட் ஜுஸ் குடித்து விட்டு ஒருவன் சொன்னானாம் வாப்பா தக்வா
பள்ளி கிட்ட நின்னு பார்த்த கடல் கரை தெளிவா தெரிகின்றது என்று ,மட்டறவன் சொன்னானாம் தக்வா
பள்ளி கிட்ட நின்னு பார்த்த எனக்கு யாழ்பானம் தெரிகின்றது என்று.

Shameed சொன்னது…

ஒருவன் எல்லா விசயத்திலும் ரொம்ப ஸ்லொவ் வா இருப்பானாம் அவன் 20 நிமிசத்து டிவி சீரியலை 30 நிமிசத்திற்கு பார்ப்பானாம்!!!!

Shameed சொன்னது…

சின்ன காக்கா உசுபோத்தி யாச்சா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Shahulhameed on Friday, October 08, 2010 2:47:00 PM said...
வாப்பா மகன்களிடம் இருவரிடம்மும் சொன்னார் தினமும் கேரட் ஜுஸ் குடித்தால் கண் பார்வை நன்றாக இருக்கும்///

அந்த இரண்டு பேரும் இன்னொன்னு சொன்னதகவுல லேட்டஸ்ட் தகவல்.

மூத்தவர் : காலேஜ் ரோடு தாண்டி நிறைய மனைகள் காலியா தெரியுதுன்னும்.

இளையவர் : அங்கே மனைபோட ஒரு கூட்டம் போயிட்டு இருக்குன்னும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நம்ம டாக்டர் ஏன் ரொம்பதான் அலுத்துக்கிறார் ?

பின்னே என்னடா போஸ்ட்மார்ட்டம் செய்து முடிச்சுட்டு "ஸாரி பேஷண்டை என்னால காப்பத்த முடியலைன்னு சொல்லிட்டு போறாரே" !

****

டேய் நான் அவருக்கு ரொம்பவே கடன்பட்டிருக்கேன் !

எந்த விஷயத்துலடா ?

வேற எதுல பண விஷயத்திலதான் !

****

நம்ம காக்கா பேசுறது எல்லாமே "பொன்மொழிதான்"

என்ன மச்சான் சொல்றே ?

அவர்தான் தங்கப் பல் கட்டியிருக்காரே !

****

என்னடா மாப்ளே உன் பொண்டாட்டி சுடுதண்ணிய ஊத்தினதும் அப்படியே பதறிப் போய்ட்டேண்டா !

அட போட நான் பழகிபோய்ட்டேண்டா !

Shameed சொன்னது…

ஒருவர்:
உங்க குடும்பத்திலே பிரச்னை இல்லமே எப்படிங்க பத்துக்கிறிங்க

இரண்டாமவர்:
வீடு வாங்குவது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பது பையனுக்கு பொண்ணு பார்ப்பது இது போன்ற சின்ன சின்ன பிரச்னைகளுக்கு என் மனைவி முடிவு எடுப்பாள்.
நான் பின்லேடன் பிரச்னை இலங்கை பிரச்னை காஸ்மீர் பிரச்சனைக்கு எல்லாம் நான் தான் முடிவு எடுப்பேன்!!!

chinnakaka சொன்னது…

ஒரு முறை புது பணக்காரர் ஒருவர் கார் வாங்குவதற்கு (அது தாங்க பிளஸ்ஸர்) போய் ஒரு வருடம் ஒடிய காரை வாங்கி வந்து கொண்டிருக்கும்போது கீர் பாக்ஸ் ரிப்பேராகிவிட அருகில் இருக்கும் மெக்கானிக்கிடம் காண்பித்து சரி செய்து கொண்டு வரும்போது டிரைவர் கீர் மாற்றும் சத்தம் வர வண்டி முதலாளி என்னப்பா சத்தம் என்று கேட்க டிரைவரோ கீர் மற்றினேன் என்றார் உட்னே முதலாளிக்கு கோபம் ஓங்கி கண்ணதில் அறைந்து விட்டு இப்போதனே மெக்கனிக் மாற்றினான் அப்போது சும்மா இருந்து விட்டு இப்போது நீ மற்றிபார்க்க என் வண்டிதான் கிடைத்ததா என்றாரே உடனே டிரைவர் சாவியை தூக்கி எறிந்து விட்டு வர முட்டாள் முதலாளி கையை பிசைந்து கொண்டது தான் மிச்சம்

Shameed சொன்னது…

ஒருவர் எல்லாத்துக்கும் "தம்"பட்டம் அடிப்பாராம்
கடைசியா என்ன ஆச்சி அவர்கிட்ட இருந்த எல்லா பட்டமும் கிழிஞ்சி போச்சாம் !!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

நம்மாளு அவர் பொஞ்சாதிகிட்டே போய் "ஒரு ஜோக் சொல்லேன்" ன்னு கேட்டுவத்தார்

அதுக்கு அந்தம்மா "அட போங்க நீங்க வேற எல்லோரும் சிரிப்பாங்க" !