வலை வீசித் தேடல், வலையில் சிக்கிட்டான், வலைத்துப் போட்டாங்க இப்படியாக 20 வருடங்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் தலைப்பில் அல்லது அன்றைய ஊடங்கங்களில் செய்திகள் வந்திருப்பதை யாவருக்கும் ஞாபகமிருந்திருக்கும். சரி அதுக்கென்ன இப்போவென்று பார்க்கும் windowவை minimizeசெய்ய வேண்டாம்.
சமீபகாலமாக எல்லோராலும் பேசப்படும் புலம்பப்படும் வார்த்தை நெட்வொர்கிங்க் (networking) இதனை நம்மவர்களின் நிகழ்வுகளில் எப்படியெல்லாம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சு பார்த்துட்டு இருந்தேன் அதன் விளைவுதாங்க இங்கே.
வீட்டில் நெட் வேலை செய்யவில்லை இப்படியும் புலம்பல் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலில் எழத்தான் செய்கிறது அந்த நெட் (net) என்று எதைச் சொல்கிறார்கள் இவர்கள் வலைத்தளங்கள் அல்லது தனிதூது வாயாடி தங்களுடைய கணினியில் தெரியவில்லை அல்லது வேலையை செய்யவில்லை என்பதால்தானே இவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் அதன் பின்னால் என்னதான் சிக்கல் இருக்கிறது என்று இவர்களுக்கு தெரியாது இதுக்காக நம்மவர்கள் படுத்தி எடுக்கும்பாடு இருக்கிறதே சொல்லி மாலாது ! இதனை தனிக்கோர்வையாக எழுதனும்.
அதுவல்ல இன்றைய மக்கள் பேசும் நெட்வொர்கிங் ? அப்போ என்னதான் நினைக்கிறாங்க !
மெய்யாலுமே நல்ல வெளக்கமா மக்களுக்கு ஒரு பதிப்பு எழுதலாம்னு இருக்கும் போது மாத்தியோசிக்கச் சொன்ன கவிக் காக்கா இங்கே நெனப்புல வந்துட்டாங்க அதானலதான் ரூட்டு மாறிடுச்சுங்க.
நட்புகளின் நெட்வொர்க்குன்னா (friends network) இருவரோ அல்லது அதற்குமேலோ இருப்பவர்களின் கூட்டுதான் இங்கேயும் நெட் துண்டிப்பு இருக்கும், அல்லது சிலருக்குள்ளேயே அதிவேக இணைப்பாக இருக்குக்கும் அதுவே நிறைய நன்மைகளையும் கொண்டுவரும் அதுபோல் வேண்டாத வைரஸ்களும் உள்ளே நுழைந்து சீரழிக்கும். இன்றோ ஆணுக்கும் பெண்ணுக்குமென்று நட்பு வலைச் சிக்கலில் மாட்டித் தத்தளிக்கும் இளசுகள் மட்டுமா பார்க்கிறோம் மருமகன் மருமகள் எடுத்த பெருசுங்களும் இவ்வலைக்குள் சிக்கியிருக்கிறார்கள்.
குடும்பங்களுக்கிடையான நெட்வொர்க் (family network) இரு குடும்பங்கள் மட்டும்தான் என்றில்லாமல் அவர்களின் கிளைக் குடும்பங்களும் இதிலே உள்ளடக்கம், ஒவ்வொரு குடும்பங்களுக்கு இடையே அவரவர்களின் ஆபரேட்டிங்க் சிஸ்டம் அன்றாட நிகழ்வுகள் வேறுபடுவதும், வீட்டிலிருப்பவர்களுக்கு இடையேயான நெட்வொர்க்கில் சிக்கலும் உண்டு சீறிப்பாயும் வேகமும் உண்டு, இந்த நெட்வொர்க்கு அறுபடுவதும் மீண்டும் சரிசெய்வதும் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றுதான். இந்த நெட்வொர்க்கிற்குள் கணக்கிடலங்காத நட்புகளானாலும் வெறுப்புகளானாலும் வென்றிடவும் வீழவும் செய்யும்.
சரி, இன்றைய சூழலில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் மற்றொரு நெட்வொர்கிங் "சோஸியல் நெட்வொர்க்கிங்" - "சமூக பிணைப்பு"ன்னு இங்கே சிக்கித் தவிக்கும் இளசுகளும் பெரிசுகளும் படுத்தும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை, இதன் சாதக பாதகங்களை நாம் யாவரும் அறிந்திருக்கிறோமா ? இல்லை அறியாமலே அதனுள்ளே உலாவருகிறோமா ? இதனை நிச்சயம் அலச வேண்டும்.
இவ்வகை சமூக பிணைப்புகள் (social networking) இன்றைய நிலையில் எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது, இங்கே முதலில் ஆரம்பிப்பது பொய்தான் அதனை நிஜமாக்கப் அவர்களும் படும் பாடு இருக்கிறதே சொல்லிமாலாது, இதன் வலைக்குள் சிக்கியவர்களின் தனித்தன்மை சின்னா மாகிவருதை அவர்களாளே உணர முடிவதில்லை அப்படி இதன் போதை எல்லா வற்றையும் மறைத்து அடிமையாக்கி விடுகிறது.
இந்த சமூக பிணையம் (social networking) வரவினால் சமுக கட்டுக்கோப்பும் தனித்தன்மையும் சீர்செட்டு போவது ஒருபக்க வாதமாக இருக்கும்போது, இதனால் எல்லையில்லா வருமானத்தை கொட்டிக் குவிக்கும் இதனுடைய உரிமையாளர்கள் சூதாட்டம் எப்படி நடந்தேறுகிறது என்பதை விலாவாரியாக பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...
என்னடா இவனும் தொடரும்னு போடப்போறானேன்னு யோசிக்காதீங்க வேற வழியில்லை நேரம் அமையும் போது மிதமிருக்கும் பதிவும் வரும்...
-அபுஇபுறாஹீம்
25 Responses So Far:
To Bro.Abu Ibrahim
இது பற்றி யாராவது எழுதமாட்டார்களா என எதிர்பார்த்தேன்,[ஏன்னா எனக்கு இதுபற்றிய டெக்னிக்கல் விசயங்கள் தெரியாது...] நல்ல வேலையாக நீங்கள் எழுதி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். சமீபத்தில் சிங்கப்பூரில் இந்த சோசியல் நெட் வொர்க்கில் சிக்கி ஒரு பதின்ம வயதுப்பெண்ணை ஒரு 45 வயது ஆண்....எந்த வயதில் கவனம் தேவை என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்ல ஆரம்பிப்பது நல்லது.
// எல்லையில்லா வருமானத்தை கொட்டிக் குவிக்கும் இதனுடைய உரிமையாளர்கள் சூதாட்டம் எப்படி நடந்தேறுகிறது என்பதை விலாவாரியாக பார்ப்போம் //
இதையும் எழுதுங்கள் ...இன்னும் நம் ஆட்கள் "இந்த இ-மெயிலை உடனே பார்வேர்டு செய்தால் உன் கடன் தொல்லை தீரும், தென்கிழக்கு பகுதியிலிருந்து நல்ல சேதி வரும், வீட்டில் குமர்காரியம் நிறைவேரும் [ ஆண்பிள்ளைகள் மட்டும் இருந்தாலும்,] விசா வரும்[பாஸ்போர்ட்டே எடுக்கலையே!!] என்று லந்து பன்னும் இ-மெயில்களை பார்வேர்டு செய்கிறார்கள். இன்னும் சில "பாய்கள்' போன வருடம் மதுரை மீனாட்சி கோயில் உலக அதிசயம் ஆக வேண்டும் என இ-மெயில் அனுப்பினார்கள்...என்னே ஒரு அதீத அறிவு!!
காக்கா மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சு எழுதி இருந்தாலும்...ஒரு மனதுக்கு பிடித்த ஆக்கத்தை பின்னி எடுத்து கொடுத்து இருக்கிறீர்கள்....தொடரட்டும் உங்கள் “ மாத்தி யோசி “ ப(பா)ணி... சமூக பிணையம் பற்றி மிக நீண்ட எச்சரிக்கை கட்டுரை தேவை..உங்களிடம் இருந்து வரட்டும்
Social Networking.... Need to be understanding More... Please continue
நாங்க குப்பரப்படுதுகிட்டு யோசிச்சோம் இது பற்றி யாராவது எழுதமாட்டார்களா என
நீங்கள் மல்லாக்க படுத்துகிட்டு யோசிச்சு எழுதி புட்டிங்க
இதுலே தொடரும் வேற போட்டுடிங்க நாங்க இனி NUTS வாங்கிவைத்து கொறித்துக்கொண்டு NET பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
சாகுல் காக்கா..உங்க கமெண்ட்டை படித்து விட்டு ஆபிஸ் என்றும் பாராமல் குபிரென்று சிரித்துவிட்டேன்...comment of the year 2010 பட்டம் உங்களுக்குதான்
சகோ. அபுஇபுறாகிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
/////இன்றைய சூழலில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் மற்றொரு நெட்வொர்கிங் 'சோஸியல் நெட்வொர்க்கிங்' - 'சமூக பிணைப்பு'ன்னு இங்கே சிக்கித் தவிக்கும் இளசுகளும் பெரிசுகளும் படுத்தும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை /////
=====================================================================
சமூக பிணைப்பு பொய்யின் இணைப்பு!
(ஷைத்தானின் ஆடு களம்)
************************************************************************
ஆண் தன்னைப் பெண் என்றும்
பெண் தன்னை ஆண் என்றும்
கிழவன் தன்னை வாலிபன் என்றும்
வாலிபன் தன்னை கிழவன் என்றும்
விஷமிகள் தன்னை நல்லவன் என்றும்
நல்லவர்கள் தன்னை விஷமிகள் என்றும்
ஏழை தன்னை பணக்காரன் என்றும்
பணக்காரன் தன்னை ஏழை என்றும்
பொய்யின் பிறப்பிடமான
சமூக பிணைப்பு என்பது
ஷைத்தானின் மைதானம்!
உடனே உன் மெயிலை திற
உனக்கு பரிசு காத்திருக்கிறது
உனக்கு வந்த மெயிலை
பல பேருக்கு அனுப்பினால்
பில்கேட்ஸ்! உன் கணக்கில்?
பணம் தருகிறார்
என்ன ஒரு பித்தலாட்டம்!
இதையும் எல்லோருக்கும்
அனுப்பும் ஒரு கூட்டம்!
மனிதன் பலமணி நேரம்
இணையத்தில் செலவழிக்கிறான்
நன்மைகளை தேடுவது சில மணிநேரம்
தீமைகள் பக்கம் சாய்வது பல மணிநேரம்
நீங்கள் தனி ஆளா நட்புக்கு ஏங்குகிறீர்களா?
உடனே இந்த இணையத்தில் தொடர்பு
கொள்ளுங்கள் - இலவச சேவை!
உலக அளவில் ஏமாற்றுக்காரர்களால்
நிறைய ஷைத்தானிய வலைகள்
பின்னப்பட்டு காத்திருக்கின்றன!
தூண்டில் மீன் மாற்றுவதற்கு!
************************************************************************
நபிமொழி : அபூஹூரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்: ''ஒரு மனிதனின் அழகிய இஸ்லாமிய பண்புகளில்; அவன் தனக்கு அவசியம் இல்லாததை விட்டு விடுவதும் ஒன்றாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (திர்மிதீ.).
அல்குர்ஆன்:
உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன். அவர்களை வழிகெடுப்பேன், அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்...
அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.(அல்குர்ஆன் : 4:119)
************************************************************************
வாழ்த்துக்கள் சகோதரரே தொடருங்கள்... இன்ஷாஅல்லாஹ்.
அபு இப்ராஹிம் காக்கா தேவையான நேரத்தில் அவசியாமான எழுத்து. சமூக பிணையம் கள்ள பேர்வழிகளையும் (கூட) குற்றவாளிகளையும் உருவாகியுள்ளது.
இன்று மேற்கத்திய நாடுகளில் நடைபெரும் குற்றங்கள் சம்மந்தப்பட்ட செய்திகளை உதாரணமாக கொலை செய்திகளை தொடர்ந்து உள்ளூர் நாளிதழ்களை வாசித்து வந்தால் சமூக பிணையம் தனது கைவரிசையை காட்டியதை அறிய முடிகிறது.
இவற்றை சமூக பிணையம் என்பதைவிடவும், 'குட்டிசுவர்' பொருத்தமான வார்த்தை.
ஆசையே துன்பியலுக்கு அடித்தளம் என்று ஒருவன் சொன்னது போல குற்றங்களுக்கு வாசல் இந்த குட்டிசுவர்.
''ஒரு அன்னிய ஆணும் மற்றும் ஒரு
அன்னிய பெண்ணும் தனித்து இருக்கும் இடத்தில் மூன்றாவது ஆளாக
சைத்தான் இருப்பான்'' நபி மொழி ஒன்று சொல்கிறது.
இது சமூக பிணையத்துக்கும் பொருந்தும்தானே? அதிரை அஹ்மது சாச்சா விளக்கினால் இன்னும் நிறைய விசயம் கிடைக்கும்.
ஏனெனில் இந்த குட்டி சுவரில் ஆணும் ஆணும் உரையாடுவதைவிடவும் பெண்ணும் பெண்ணும் உரையாடுவதைவிடவும் பாலினம் மாற்றிய உரையாடல்களே அதிகம் நடைபெருகிறது.
நமதூரில் கூட 10வகுப்பு படிக்கும் மானவர்களுக்கும் மானவிகளுக்கும் கூட இந்த குட்டிசுவர் கணக்கு உள்ளது!(யார் என்றலெல்லாம் கேட்காதீர்கள். உங்கள் வீடு கணிணியில் HISTORY யை பாருங்கள்.(இதுவும் அதிரை HISTORY நல்லா இருக்கனுமென்ற ஆசைதான்) அல்லது கணிணி வல்லுணர்களிடம் சொல்லி நமது கணிணியில் இந்த குட்டி சுவர்களை தடைசெய்ய சொல்லுங்கள்;அதிரை நிருபர் கூட குட்டிசுவர்களை தடை செய்வது எப்படி என்று பதிவு போடலாம்)
//என்னடா இவனும் தொடரும்னு போடப்போறானேன்னு யோசிக்காதீங்க வேற வழியில்லை நேரம் அமையும் போது மிதமிருக்கும் பதிவும் வரும்...//
"(இதுவும் ஒரு தொடரா?னு யாரோ கேக்கிறப்ல தெரிது)
சிலருக்கு எறச்சி பிடிக்கும் சிலருக்கு காய்கறி பிடிக்கும்
எறச்சி சாப்பிடுபவர் காய்கறியை பார்த்து இது ஒரு கறியா என்பார் காய்கறி சாப்பிடுபவர் எறச்சி பார்த்து இது ஒரு கறியா என்பார்.
அவரவருக்கு என்ன பிடிக்குதோ அதை சாபிட்டுகொள்ள வேண்டியதுதான்.ஆனால் சமைப்பவரை நோகடிக்கா கூடாது சமைப்பவருக்குதான் வலியும் வேதனையும் தெரியும்."
என்று ஷாஹுல் ஹமீது காக்கா அதிரைவரலாறு தளத்தில் இட்ட கருத்துரையை அபு இப்ராஹிம் காக்காவுக்கு நியாபகமூட்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.இந்த வகை நெட் தொடர்புகள் கட் செய்ய பெற்றோர்கள் யோசிக்க கூடாது.பட்,பட்ன்னு காரியத்தை முடிச்சிடனும் இல்லேன்னா நட்டம் நமக்குத்தான் இந்த நெட்டினால். நெட்டில் , நெட்டி முரித்தபடி என்ன வெட்டிமுரிக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்னு எட்டிபார்த்து ஆரம்பத்திலேயே தட்டி வைக்கலேன்னா குட்டிசுவரா போய்விடுவர்.மேலும் ஸோஸியல் நெட் என்பது எல்லாம் அவர்களின் நெட்பிராபிடுக்காகத்தான்.(மேலும் ஆபத்தான இந்த வலையிலே நாம விழுந்துடக்குடாதுன்னு ஆரம்ப எச்சரிக்கை சங்கை(பங்கை)ஆரம்பிச்சிட்டாரு அபு இபுறாகிம் காக்கா இன்ஷாஅல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இன்னும் பல விசய மீன் இந்த நெட்டில் பிடித்து நமது சமுதாயத்துக்காக சமைபார்கள் என உங்களை போல் நானும் ஆவலுடன் காத்திருக்கிறென்.
அஸ்ஸலாமு அலைக்கும் .இன்று எனக்கு ஒரு விசேட நாள்.வெகு நாளைக்குப்பின் அபுஇபுறாகிம் காக்காவின் குரலை கேட்டு மழிந்ததும்.கவி காக்காவிடம் உரையாடியதும் மறக்கவியலா நிகழ்வுகள்(காக்கா தொண்டை வலியையும் பொருட்படுத்தாது அன்புத்தொண்டை கடைப்பிடித்தீர்கள் நாந்தான் படுத்திட்டேன்(அதையும் நீங்கள் ஒருபொருட்டா படுத்தல) இப்ப தொண்டை வலி சரியாகிடுச்சா?இன்ஷால்லாஹ் தொண்டை வலி நீங்கி தொடருங்கள் உங்கள் தொண்டை)
//இங்கே முதலில் ஆரம்பிப்பது பொய்தான் அதனை நிஜமாக்கப் அவர்களும் படும் பாடு இருக்கிறதே சொல்லிமாலாது,//
சரியாக சொன்னீர்கள் காக்கா. social networkகளால் ஏற்படும் விளைவுகள் பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
எனக்கு தெரிந்து 1998 ஆண்டும் முதல், public chatting இணையங்களில் அநேக மக்கள் பொய்யை மூலதனமாக வைத்து பொழுதை கழிக்கிறார்கள். இளசுகளைவிட, நடுத்தர வயது கிழடுகள் தான் வேறு வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் இணையங்களில் பொய் வெட்டி விளையாட்டு விளையாடி வருகிறார்கள்.
சமூக பிணையத்தில்( கிரவுன் சொன்னது போல் குட்டிசுவரில்) சிக்கி மாட்டிக்கொள்வது அப்பாவி பெண்கள் தான்.குட்டிசுவரில் ஏறி கோவலப்பட்டதையும், இதன் பாதகங்களை அறியாத இந்த அப்பாவிகளுக்கு தெரியாது அவர்களின் உரையாடல்கள்(எழுத்து,ஆடியோ, வீடியோ) இவைகள் இணையத்தில் யாராவது தேடினால் கிடைக்கும் என்று.
அல்லாஹ் தான் நம் ஆண், பெண் மக்கள் அனைவரையும் காப்பாத்துவானாக.
நேரங்காலம் பார்த்து நெத்தியடியாக துவங்கியிருக்கும் உங்களின் இந்த அத்தியவாசிய் தொடர் நீ(ண்)டூழி வாழ்க!(அடைப்புக் குறியைப் பார்த்தவுடன் crownனோடு பேசியாச்சுன்னு விளங்கனுமே?)
(நான் எதிர்பார்த்தது போல தம்பி ஒரு கொள்கைப் பிடிப்புள்ள துடிப்பான இளைஞன் என்பதை அவருடன் பேசியதிலிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் பேசியதற்கும் எழுதுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
அவர் பேசினாரா அல்லது என் மூளைக்குள் எழுதினாரா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.)
என்னைப் போன்ற hydrulics தலையர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாகச் சொல்லுங்கப்பான்னு கேட்டுக்கிறேன்.
அதிரை, இஸ்லாம், டெக்னாலஜி, அறிவியல், சமூகம், வரலாறு, கவிதைகள், மருத்துவ மற்றும் சுகாதாரக் கட்டுரைகள்,என ஏதோ முடிவோடுதான் புறப்பட்டுட்டீங்க. கலக்குங்க.
என்னடா இன்னும் பதிலையேக் கானோமேன்னு யோசிக்காதீங்க நிச்ச்யம் வருவேன், என்ன குப்புறபடுத்து யோசிச்சேன்னு சொன்னாங்களே அதெப்படின்னு படுத்து யோசிச்சுப் பார்த்தேன் தூக்கம் வந்திடுச்சு... கண்டிப்பா நளைக்கு வருவேன்.. :)
sabeer சொன்னது…
(நான் எதிர்பார்த்தது போல தம்பி ஒரு கொள்கைப் பிடிப்புள்ள துடிப்பான இளைஞன் என்பதை அவருடன் பேசியதிலிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் பேசியதற்கும் எழுதுவதற்கும் அதிக வித்தியாசம் இல்லை.
அவர் பேசினாரா அல்லது என் மூளைக்குள் எழுதினாரா என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.)
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .எல்லாப்புகழும் அல்லாஹ்குரியதே!
நான் உங்கள் மூளைக்குள் எழுதினேனா?ஹாஹாஹா.. நீங்கள் எந்த மூலைக்கு நான் எந்த மூலைக்கு????மலைக்கும்,மடுவிற்கும் கடுகளவல்ல கடல் அளவு வித்தியாசம்... அன்பிற்கு நன்றி
என்னைப் போன்ற hydraulics தலையர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாகச் சொல்லுங்கப்பான்னு கேட்டுக்கிறேன்.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் It used for the generation, control, and transmission of power mechanics system but your inside head all the same way of generation,control and transmission of real life system so your brain fit for all matter don't too much Modesty.
இன்றய உலக இளைஞ்கர்கள் முதல் முதியோர்வரை "சமூக பிணைப்பு" (social networking) போன்ற இனய சகதியில் சிக்கித் தவிக்கும் நிலையைப் பற்றிய தகவல்களை இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் எழுதியது போன்ற ஒர் உணர்வை ஏர்படுத்தி இருக்கின்றார் அபு இப்ராஹிம்! வாழ்த்துக்கள்!!
இதர்க்கு வழுசேர்க்கும் வகையாக சகோ. ஜகிர் முதல் சகோ.சபீர் வரை தன் வேட்கைகளை பின்னூட்டத்தின் மூலம் இட்டு நம்மையும் கருத்திட வைத்துள்ளனர்.
இதில் குறிப்பாக சகோ. அலாவுதீன் அவர்களின் "சமூக பிணைப்பு பொய்யின் இணைப்பு! (ஷைத்தானின் ஆடு களம்)" வரிகள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யான சுந்தரத்தில் புரட்சி பாடல்களை நமக்கு நினைவூட்டியதுபோல் உள்ளது. அதிலும் முத்தாய்ப்பாக நபிமொழிகளையும் இறைவசனங்களையும் எடுத்துக்கூறி நம்மை இறையச்சப் படவைத்தது நிச்சயம் எல்லோரையும் சிந்திக்கவைக்கும் நல்லோரை செயல்படுத்தும். வாழ்துக்கள் சகோ. அலாவுதீன்
காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருக்கவில்லை:
என் அதிரைப்பட்டினத்தின் சொந்தங்களான காக்காமார்கள் ஜாஹிர்,சஃபீர், அலாவுதீன்,சாஹுல் இவர்களோடு தம்பிமார்கள் யாசிர், அப்துல் மாலிக், கிரவுன்(கீர்), ஹிதாயதுல்லாஹ், என் உடபிறப்பும் மற்றும் என் நட்புச் சகோதரன் ஹாலித் உங்கள் யாவரின் ஒவ்வொரு கருத்துக்களும் மற்றுமொரு ஆக்கத்திற்கான முத்தான கரு, இவைகளை நிச்சயம் அலசப்பட வேண்டிய தருனமே இது. முடிந்தவரை கைகோர்த்து கருவறுப்போம் பாதுகாப்போம் நம் சமுதாயத்தை இன்ஷா அல்லாஹ்...
கருத்துக்கள் மட்டும் என்று யோசிக்கிறவனை ஒரு "கரு" கொடுத்து சிந்திக்க வைத்த சீனியர்களுக்கும், இளையவர்களுக்கும் நன்றி..
//என்னைப் போன்ற hydrulics தலையர்களுக்கு விளங்குகிற மாதிரி எளிமையாகச் சொல்லுங்கப்பான்னு கேட்டுக்கிறேன்.///
இதென்ன புதுக் கவிதையா இருக்கே ! ஓ அதான் ஊசுப்பேத்தி விட்டு அப்படியே மூச்சு புடிச்சுகிட்டு இருக்குமே அதைத்தானேச் சொல்றதா "hydraulics"ன்னு !
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மனைவியின் சகோதரி இஸ்லாத்தை தழுவினார்...அல்லாஹு அக்பர்
http://timesofindia.indiatimes.com/world/uk/Blairs-sister-in-law-converts-to-Islam/articleshow/6805951.cms
please visit:www.samsulislamsangam.blogspot.com
Yasir சொன்னது…
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மனைவியின் சகோதரி இஸ்லாத்தை தழுவினார்...அல்லாஹு அக்பர் ///
தான் இஸ்லாத்தினை தழுவியதோடு மட்டுமல்லாமல் உடனே தன் சகோதரியின் கணவரான தோணி பிளேருக்கும் அழைப்பு விடுத்து தன் தாவா பணியினை ஆரம்பிதுள்ளது பாராட்டுக்குரியதாகும்.
அல்லாஹ் அக்பர் !
இன்றையச் சூழல் வலைமேய்ச்சலில் இருக்கும்போது சுள்ளென்று ஒரு விஷயம் மனதைச் சுட்டது, இந்த வலைப்பூக்கள் என்று ஒன்று இருப்பதனால் எங்கு வேண்டுமானாலும் எதனை வேனும்னாலும் செய்திடலாம்னு எவரின் தனித் தன்மையையும் எள்ளி நகையாடலாம் என்றிருந்த சூழலில் உழன்ற சில வலைச் சிக்கல்களின் நிலை எப்படியாகியது என்றால் மேடை கிடைத்ததும் அடிவயிற்றிலிருந்து சத்தமிட்டு சத்தமிட்டு அலறிக் கொட்டி திர்த்ததும் கிடைத்த மேடையில் கூட்டம் முடிந்ததும் அதனை பிரித்தாய்ந்திட சிறுவர்கள் அங்கே மேடை ஏறி விளையாடிடவும் அவர்களின் மாதிரிக் கூட்டம் போடுவதுபோல் இருப்பதை கண்டு வேதனைப் படுவதா ? அல்லது இதுதான் சிந்திக்க வேண்டிய தருனமென்று கூடிப்பேசுவதா என்று இன்னும் எனக்குப் பிடிபடவில்லை !
அஸ்ஸலாமு அலைக்கும்.போலி வலைப்பூவை நிறுத்துக!ஷம்சுல் இஸ்லாம் சங்கம் வேண்டுகோள்!www.adiraipost.blogspot.com.
crown-
தம்பி கிரவுன் எந்த பஸ்டாப்பில ஏறனும் / இறங்கனும் ? சரியான பிளஸ்ஸருலதானே ஏறினே ! டிரைவரு யாரப்பா ? தம்பி சொல்றது வெளங்குதா ?
கலக்குங்க
Post a Comment