நா, அஸ்லம், செய்புதீன், குஞ்சி, நைனா எல்லாரும் போரோ(ம்). எங்க சகனுக்கு ஆள் இருக்கு! நீயும் வரண்டா வாடா!
கூப்டாம எப்படிடா வரது. நீ எப்பவும் கூப்புட்டுதான் போவியா? டேய் சும்ம விளையாடாதே! சும்ம விளயாட்டுக்கு சொன்னா கொச்சுக்கிரிய மாப்ள இல்ல மாப்ள நான வெயிட் பன்றெ(ன்) , பசங்கல நிறுத்தி வக்கிரெ(ன்) நீ உங்க உம்மாட்ட சொல்லிட்டு வா.
உங்க உம்மா மரந்திருப்பாங்க! அது எப்டிடா உங்க ஊட்ட கூப்புடாம இருப்பாங்க? நாம ஒரே தெரு ஆனாக்கா பழஞ்செட்டி தெருவுல யெல்லம் கூப்புட்டு இருக்காக இவ்ளொ தூரத்துல கூப்டிகும்போது, அதும் சொல்ல போன நீங்க தாயபுள்ள.
மாப்ள ஜமாத் வய்க போராங்க தொலுதோனி துவா கேக்காம நீ உன்க உம்மாட்ட கேட்டுட்டு உங்க வூட்டு வாசல்லஇரு. பசங்கள கூட்டிட்டு நாவரேன்.
(நா சொன்னமாரி இக்பால் ஊட்ட கூப்புட்டத அவன் உம்மா மறந்துட்டாங்க நாலைக்குதா(ன்) கலரின்னு நினச்சுக்கிடாங்கலாம்)
மாப்ள கைய குட்ரா, உம்மாத(ன்) மரந்துடிச்சு நீ சொன்னது சரிதான்டா
போலாம மாப்ள! (மற்ற கூட்டாளிங்க இக்பால்ட வாழ்துச் சொல்றான்க!ஏதோ படிப்புள பஸ்ட் வந்தவனுக்கு சொல்ற மாரி) அடிசுவுடு மச்சான் ,கலகிடனுன்டா (என்னத?).
டேய் செய்பு ,இக்பால் சகனுக்கு எக்ஸ்ட்ரா அதனாலெ நம்ம பசங்க யாராச்சும் வரலேனாக்கா 3 பேரா உக்கருவோ(ம்)!
என்ன சொல்ரானுவன்னு பாப்போ(ம்).
மச்சான் சொன்னா சரிதான் - சைபு(தீன்).
(அனைவரும் சின்னத்து வீடு அடைறாங்க .வாசல்ல வரவேக்க அங்க ஊட்டு காரங்க யாருமில்ல கபீராக்க மட்டும் எம்.ஆர்.ராதா குரலில் கத்திக்கிட்டு இருக்கார்).
தம்பி! அந்த ஊட்டுக்கு போங்க இங்க புல்லாகிடுச்சி.. (அனைவரும் காதர் சாகிபு காக்கா வீட்டு அடுத்த வீட்டு ஹால்ல போய் உக்காருராங்க.)
மாப்ள இன்கெய உக்கராலான்டா - குஞ்சி.
பேப்பர் போட்டாங்க, டேய் எக்ஸ்ரா பேப்பர் கேளூ, கைய துடைக்க வேனு(ம்)-நான் .
சமர்த்தா ரெண்டு சகனுக்கு 3 பேரா குக்காந்து, என்ஸ்ரா பேப்பர் கைதுடைக்க வாங்கி ஜமுகமா மடிச்சி, சதுரமா 4 பீஸா கிழிச்சி, எக்கல்ல ஆளாலுக்கு வச்சிக்கிட்டோம்.
அஸ்லம் சோறு வருதுடா அத வாங்கு.
மாப்பிள இங்க எங்களுக்கும் சொல்றா - இக்பால்.
நீ யே கேலுடா, இது என்ன காலெஜ் சீட்ட நா வாங்கி தரத்துக்கு - நான்.
(எல்லாரும் இக்பாலப் பாத்து சிரிகிராங்க ஒரே சத்தம், 4 சகன் தள்ளி அப்பாத்துர மாப்ள சரியா சொன்னேடான்னு எனக்குப்பாராட்டு.அதற்குள்ள இக்பால் சகனுக்கு சாப்பாடு வந்துரிச்சி), மாப்ள தண்னீ பாக்கெடு இல்லடா! - அஸ்லம்.
''மத்தெதெல்லாம் இருக்கானுப்பாரு அது மரு சோரு சகன இருக்கப்போது'' மருபடியும் நான் இப்படிசொன்னதும் ஒரே சிரிப்பு.
சைபுக்கு பொற ஏறிக்கிடுச்சி னெஞ்ச் புடிச்சபடி- டே தண்ணி பாக்கட்ட ஒடைங்கடா நெஞ்சு அடைக்குது.(கண்ணீர் வடிந்தது சைபுக்கு)
மாப்ள தலைல தட்டுடா - குஞ்சி.
ரொம்ப தட்டாத மூள கலங்கிடும் - இக்பால்,
அவனுக்கு அது இருந்தாதானே ? நான்,
?????????( கெட்ட வார்தைங்க! வட்டார ஸ்பெசல்). சைபு
கம்கட்ல பேப்பர் கட்டோட சுத்திக்கிட்டு இருந்த கபிர் காக்காகிட்ட இந்தாங்க காக்கா என்க சகனுக்கு தண்ணி பாக்கெட் வய்கல - இக்பால்.
மூணு, மூணு பேரா உக்கந்துட்டு தண்னி பாக்கெட் வேனுமா! (கபிர் காக்கா முனங்கலாக மறுபடியும் எம்.ஆர். ராதா குரலில்).
''அவர் கபிர் காக்கா யிலாடா கர்னாடக காக்கா'' (கடசி சகனிலிருந்து அப்துல் காதர் காக்கா சேட உட) மருபடியும் ஒரே சிரிப்புதான் போங்க!
''அவர் கபிர் காக்கா யிலாடா கர்னாடக காக்கா'' (கடசி சகனிலிருந்து அப்துல் காதர் காக்கா சேட உட) மருபடியும் ஒரே சிரிப்புதான் போங்க!
பொறவு காதர் சாகிபு காக்கா காதுல சைதி போயி தண்ணிப்பாக்கெட்டு கொண்டு வந்தார்.
''டே நம வச்சிருந்த பிர்னிய யாரோ எடுத்துட்டானுவ' '- நான்.
நல்லா தேடு! டேய் அல்தாப் மருவாதையா சொல்லிடு நீதேனெ எடுத்தே!
இன்ட்ட ஏன்டா கேக்குற, ?????! (கெட்ட வார்த்தை)
டேய் ????? (கெட்ட வார்த்தை) அது ,இதுன அப்ப நடக்குறது வேர!- நான் .
இன்னாடா செய்வ? - அல்தாப்.
டே உடுங்கட சண்டய" இஸ்மாயில் சகன்ல ரெண்டு பிர்னி இருக்குது பாரு அவனுவதான் எடுத்து இருப்பானுவ" - குஞ்சி சொல்லிகிட்டு இருக்கும் போது யாரொ என் முதுகுள இறச்சி முள்ளால அடுச்சானுவ "யார்ரா ??????? (கெட்ட வார்த்தை) நான் எழுந்ததும் - மருபடியும் ஒரு எறச்சி முள் என் விலாவுல உலுந்தது.
எனக்கு கெட்ட கோபம் யார்ரா---ப் பையன்?
தம்பி சும்ம உடுங்க நீங்க நாணய கார உட்டுப்புள்ள நீங்கலெ இப்படி அசிங்கமா பேசலாமா? - புகாரி காக்கா.
அப்படி சொல்லிவிட்டு அவரு சொன்னார். எந்த ?????? வோ (கெட்ட வார்த்தை) இப்படிதான் நடந்துக்கானுவ .ஏன் காக்கா திட்ரிய-- நான். '
பின்னெ என்ன தம்பி எந்த பொரம்போக்கோ எம்மேல முள்ள வுட்டு அடிகிரானுவ திட்டாம கொஞ்ச சொல்ரியலா?
என்னடா உலகம் தனக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?(மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்..)
மாப்ள நீ நானயக்கார வூட்டுப்புள்ளன்னா நாங்கள் எல்லாம் அநியாய ஊட்டுப்புள்ளயா? - யூசுப் .
நான் என்ன பதில் சொல்ல? (பொறவு காதர் சாயிபு காக்கா வர பிர்னி பிரச்சனையும் தீர்ந்தது).
தீடிரென்டு, யார்ரா எம்மேல தண்ணி பாச்சுனது - காதர் சாயிபு காக்கா.
தீடிரென்டு, யார்ரா எம்மேல தண்ணி பாச்சுனது - காதர் சாயிபு காக்கா.
(பெரும் ரகல பசங்க சாப்ட்டுட்டு வெளியில ஓடராங்க! எல்லாரிடமும் அவசரம் 3 மணிக்கு இந்தியா,சிரிலங்கா கிரிக்கெட் மேட்ச் டி.வியில) .
-- தஸ்தகீர்
CROWN
-- தஸ்தகீர்
CROWN
23 Responses So Far:
கலரி சோறு சாப்பிட்டு 6 வருடங்களுக்கு மேலாகி விட்டது..கடைசியா ஒரு வீட்டில் 40-ம் ஹத்தம் சோறு சாப்பிட்டதுதான்...அந்த குறையை சகோ.கிரவுனின் கட்டுரை நீக்கி விட்டது... ஒரு virtual கலரி விருந்தில் கலந்து கொண்ட உணர்வு...கலவரமும் கலக்கல் தான்.....நான் அதிகம் பார்த்தது கிடையாது..மரு சோறுக்கு பதில் புதிய சகனையை (ஃபுல் செட்டுடன் ) வாங்கும் கூட்டத்தை பார்த்து இருக்கிறேன்..கலரி என்னறவுடன்...நாக்கில் சிறிது எச்சில் ஊறி விட்டது
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோ.யாசிர் ஆறிபோகாமல் சுட,சுட கருத்து பறிமாரிவிட்டீர். நன்றி,இப்பத்தான் வயிரும் ,மனசும் நிறைஞ்ச மாதிரி இருக்குது. நாம் கலரி சாப்பிட்டு 12 வருடம் ஆகிறது.செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்.எல்லாரும் சுட சுட கருத்து(சோறு)எழுதுங்க.யரும் என்மேல் முளைவிட்டு அடிக்கவேண்டாம்.
உண்ட மயக்கம் முள்ளை யென திருத்திக்கொண்டு படிக்கவும்.
கலரியின் நேரடி ஒலிபரப்பு ...............
தஸ்தகீர் இப்போதுதான் வெளியே வருகிறாய் ...
விருந்தோம்பல் : 150லிருந்து 250வரை சஹன் சாப்பாடு விருந்துக்கு ஏற்பாடு செய்திட்டு, அன்றே வேறு ஒரு இடத்திலும் கலரிச் சாப்பாடாக இருந்திருந்தால் நாம் கூப்பிட்டவங்களெல்லாம் வருவாங்களா சாப்பாடு மிஞ்சிடுமோ என்று பதபதப்புடன் லுஹர் தொழுகை முடிந்து கால் மணிநேரம் ஆகும்வரை இருக்குமே பதற்றம் அது அடுத்த அரைமணி நேரத்தில் சாப்பிட்டவர்களின் கமெண்ட் "என்னா சாப்பாடு" / "மேஸ்த்திரி தூங்க்கிட்டானா" / " " அவனை வச்சு ஆக்கியிருந்த சுப்பரா இருந்திருக்கும் / இங்கே வந்ததற்கு அந்த கூப்பாட்டிற்கு சென்றிருக்கலாம் / "நெஞ்சு எரியுது" !! இவைகளினூடே நல்ல கமெண்டும் "ரொம்ப சிம்பிளா இருந்திச்சு" / நல்லாதானே ஆக்கியிருக்கான் / இன்னும் நிறைய !!
இதன் Credit / ctrisism வழக்கமான சம்பாஷனைனக் நம்மூர் கலரிகளில் - இவைகள் எல்லாமே டேக் இட் ஈஸியாகி விட்டது.
தம்பி தஸ்தகிர், நடந்தது என்ன கலரியா களரியா? நேர்முக வர்ணனை நேர்த்தியாக இருந்தது. இப்படித்தான் சமீபத்தில் ஒரு விருந்துக்குச் சென்றிருந்தபோது
சாப்பாட்டைவிட சகன் பரத்துபவர்கலின் அலம்பல் தூக்கலா இருந்தது. சகன் Kஐ மாற்றும்போது தவறி எங்களுக்கருகில் விழுந்ததில் நான் தந்தூரிக்கான மசாலாக் கோழி போலவும் நண்பர் இர்பான் கந்தூரிக்கான கரிக்கோழி போலவும் கலர் மாரிப் போனோம். தோள் கிழப்பும் உங்கள் நினைவுகள் தொடரட்டும். ( ஆயினும் கலரில சாப்பாடு என்ன பிரியாணியா அஞ்சு கறியான்னு சொல்லாமல் விட்டது பெருங்குற்றம். Yasir, shahul, abu ibrahim கவனிக்க)
Sent from my iPhone.
ம்ம் படிக்கும்போதே நல்ல விருந்து சாப்பிட்டது போல் இருந்தது. சகோதரர் தஸ்தகீரிடம் சில வினாடிகள் பேசிக்கொண்டிருந்தாலே ஒரே கலகலப்புதான். கொடுத்துவச்ச நண்பர்கள்.
//அஸ்லம் சோறு வருதுடா அத வாங்கு.
மாப்பிள இங்க எங்களுக்கும் சொல்றா - இக்பால்.
நீ யே கேலுடா, இது என்ன காலெஜ் சீட்ட நா வாங்கி தரத்துக்கு - நான்.//
//மாப்ள தலைல தட்டுடா - குஞ்சி.
ரொம்ப தட்டாத மூள கலங்கிடும் - இக்பால்,
அவனுக்கு அது இருந்தாதானே ? நான்//
இந்த டைமிங் காமெடியெல்லாம் அதிரையில் பொதுவாக சஹஜம், இதை இங்கு யதார்த்தமாக சொல்லியிருப்பது அருமை. தொடருங்கள் அன்பு சகோதரரே.
கலரி கார ஊட்டு சாப்பாடு சாப்டதுல கலோரி ஏறிபோச்சி.
வாத்தியார் கேள்வி .
கலரி பெயர் காரணம் கூறு?
தஸ்தகிர். பதில்
இது சாப்டா கலோரி கூடூம் சார் அதனால் தான் கலரின்னு பெயர் வச்சாங்க!!
வாத்தியார் அருமையான பதில்
அடுத்த விருந்தில் உனக்கு ஒரு மல்ல எறச்சி எக்ஸ்ட்ரா !!!
அதே வாத்தியார் இன்னொரு கேள்வி கேட்டர்
ஒரு சஹனுக்கு அப்பா காலத்தில் எத்தனை பேர் வாப்பா காலத்தில் எத்தனை பேர் இன்று உன் காலத்தில் எத்தனை பேர் அமர்ந்து சாப்பிடுவார்கள் ?
பதில் இப்படியும் இருக்கும் :
அப்பா காலத்தில் = 6 பேர்
வாப்பா காலத்தில் = 5 பேர்
இன்று என் காலத்தில் = 4 பேர் ஆனா மூனுபேர்தான் உட்காருவோம் நாலுபேர் சாப்பாட்டுக்கு !
///வாசல்ல வரவேக்க அங்க ஊட்டு காரங்க யாருமில்ல கபீராக்க மட்டும் எம்.ஆர்.ராதா குரலில் கத்திக்கிட்டு இருக்கார்///
கபீராக்கவின் யதார்த்த மிமிக்ரி பேச்சு நம் அனைவரையும் ரசிக்க வைக்கும், கபீராக்கவை ஞாபகப்படுத்தியதுக்கு மிக்க நன்றி.
சகோதரர் தஸ்தகிர்,
சிலர் முதல் சஹனை வாங்கிவிட்டு அதுக்கு மேல பேப்பர் போட்டுவிட்டு உடனே இரண்டாவது சஹன் வாங்கின கதை கேள்விபட்டதுண்டு, உங்களுக்கு தெரியுமா அந்த கதைகள் எல்லாம்?
sabeer
கலரில சாப்பாடு என்ன பிரியாணியா அஞ்சு கறியான்னு சொல்லாமல் விட்டது பெருங்குற்றம். Yasir, shahul, abu ibrahim கவனிக்க
சிலருக்கு பிரியாணி பிடிக்கும்
சிலருக்கு அஞ்சு கறி பிடிக்கும்
குறிப்பிட்டு போட்டா பொல்லாப்பு வரும் அவரவர் விருப்பத்திற்கு கற்பனை செய்து கொள்ளட்டும் என்று தான் இன்ன விருந்து என்று குறிப்பிட்டு போடவில்லை .எல்லாம் ஒரு டெக்னிக்
தான்.
போட்டோவில் இருக்கும் ஷஹன் சோத்துகளர் சாப்பிடும் ஆட்கள் இவை அனைத்தும் நம்மூர் விருந்து போட்டோ போல் இல்லையோ! (கவனிசுருவோம்லோ)
//நம்மூர் விருந்து போட்டோ போல் இல்லையோ! (கவனிசுருவோம்லோ)//
நம்மூர் ஆளுக ரொம்ப உஷார் சகோதரர் சாஹுல், கூகிலில் தேடிப்பார்த்தா சஹன் சாப்பாடு போட்டே ஒன்னுகூட கிடைக்கல.
உங்க கிட்ட சஹன் சாப்பாடு போட்டே இருந்தா அனுப்பிவைங்க நம் அதிரைநிருபரில் பதியலாம்.
என்னிடம் சகன் சாப்பாடு போட்டோ இல்லை.
காரணம் நாம போட்டோ எடுக்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்காது அதனால் தான் நான் இதுவரை சகனை போட்டோ எடுத்ததில்லை.
//நாம போட்டோ எடுக்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்காது //
நம்மூர் ஆளுக ரொம்ப உஷார் தான், அதான் நம்ம ஊர் சஹன் சாப்பாடு போட்டோ கிடைக்க மாட்டேங்குது.
டோர்னமென்ட் என்று சொல்லிக்கொண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கலரி சாப்பாட்டுக்கு போயி களரி ஆட்டம் போட்டதை நியாபக படுத்திய கிரெளன் அவர்களுக்கு கீரீடம் சூட்டலாம்
//நாம போட்டோ எடுக்க போனால் நமக்கு சாப்பாடு கிடைக்காது //
சாகுல் ...இது யாரோ சொன்ன அட்வைஸ் மாதிரி தெரியுதே!!!
ZAKIR HUSSAIN
//டோர்னமென்ட்//
சின்னகாக்கா கரக்டா ஞாபகப்படுத்தி சரியான "வார்தையை" போட்டுறிகீங்க.
எங்க செட்டெல்லாம் சஹன்ல உட்கார்ந்துட்டா அங்கே இறச்சிய போட்டா எடுக்கமுடியாது அதான் ஃபோட்டோ எடுக்க முடியலை
ZAKIR HUSSAIN
யாரோ சொன்ன அட்வைஸ் மாதிரி தெரியுதே!!!
ஆமா (எஸ்)
இப்போதைக்கு நாம கேட்டத மட்டும்தான்
எக்ஸ்போஸ் செய்துள்ளேன்
இனிமே தான் சொந்த சரக்கு வெளி வரும்....
அஸ்ஸலாமு அலைக்கும்.நான் கண்ட கலரியில்,கலோரியும் கண்டேன்,களரியும் கண்டேன்,பின் பிர்னியும் கண்டேன்,பிரியானியும் கண்டேன் பின் பிரட்சனையும் கண்டேன். அதேயே இங்கு பகிர்ந்து கொ(உ)ண்டேன்.டிப்ஸ்(கருத்து )வைத்த அனைவருக்கும் நன்றி.முடிந்தால் நிஜாம் பாக்கு பாக்கெட் வாங்கிஅனுப்புகிறேன்.
சவன் சோறு ஃபுல் கட்டு கட்டிட்டு விருந்து கொடுத்தவன்கிட்டேயே கோலி சோடா வாங்கி குடிச்சிட்டு யாராவது நண்பன் வீட்டுலே தலகானிய கக்கத்துலே வெச்சிக்கிட்டு ஹாயா கிரிக்கெட் மேட்ச் பார்க்கும் சுகமே தனிதான்... இப்போ நெனெச்சாலும் அப்படியே ஜுவ்வுனு மேலே பறக்குராக்குபுலே இருக்கு
பகிர்வுக்கு நன்றி
Post a Comment