உம்மென்றிருக்கு...!
கருவேலங் காட்டினிடை
காலார நடந் ததுண்டா...
கண்கொத்திப் பாம்பு பயம்
கையோடு கூடவர...?
உப்புக் குவியல்கள்
உப்பளக் கானல் நீர்...
உற்று நோக்கியதுண்டா
ஓரிரு முறையேனும்...?
பாத்தி கட்டிப் பராமரிக்கும்
உப்புப் படிகத்தை -
ஒற்றை விரல் கொண்டு
பொத்துப் பார்த்ததுண்டா...?
உமுறிக்கீரை ஒடித்து
உவர்ப்பு நீர் ருசித்ததுண்டா...?
வேட்டிமீன் விளையாடும்
சேற்றுக் கடற்கடையில் -
வேட்டி சட்டை படபடக்க
தோனியோட்டம் ரசித்ததுண்டா...?
துணைக்குச் சென்ற தம்பி வைத்து
அடையாலம் கண்டதுண்டா
தூரத்துத் துப்பட்டியை...?
எல்லாம் சரி...இவற்றினூடே
இன்னொண்றும் கண்டதுண்டா?
கஸ்டம்ஸ் கட்டிடங்கள்
காணாமல் போன பிறகு
மொழுக்கென்று ஒரு கல்
பாதையோரம் பிறந்ததை?
அது...
நாட்பட நாட்பட...
சந்தனமும் மஞ்சளும்
பூவும் பொட்டும்
புத்தம் புது புடைவையும்
கீற்றுக்கூரைக்குள்
பூஜையும் புனஸ்காரமுமென வளர்ந்து...
காசுக்கு உண்டியலும்
கல் கட்டிடமுமென
ஆத்தா கோயிலாகி
அமர்க்கலமாக நிற்பதை?
தார் சாலையில்...
காரல்ல -
தேர் ஓடப்போகுது
ஊர் உடையப்போகுது!
காத்திருக்குது கயமை...
ஓடுமீன் ஓட
உறுமீன் வரும்வரை
உம்மென்றிருக்கு...!
--சபீர்
புகைப்படங்களில் உள்ளவைகள் அதிரையில் உள்ள இடங்கள் அல்ல
14 Responses So Far:
அதிரைக் கவி(காக்கா) உங்களோடு என் பதைபதப்போடுதான் இருக்கிறேன் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் !
-------------
காலார நடந்திருக்கிறேன்
உப்புக் குவியலை உற்று நோக்கிருக்கிறேன்
ஒத்தை விரல் பொத்தல் போட்டிருக்கிறேன்
தோனியோட்டம் ரசித்திருக்கிறேன்
தூரத்து துப்படியும் கண்ணில் பட்டிருக்கிறது
இவைகளுக்கு ஆப்புவைக்கத்தானோ ?
//தார் சாலையில்...
காரல்ல -
தேர் ஓடப்போகுது
ஊர் உடையப்போகுது!
காத்திருக்குது கயமை...
ஓடுமீன் ஓட
உறுமீன் வரும்வரை
உம்மென்றிருக்கு...!!///
விழித்தெழ வேண்டும் பங்கு பிரிக்க நாட்டமை துண்டுபோட்டு சொம்பில் துப்பும் முன்னரே !
கட்டுரையாக எழுத வேண்டியதை கவிதையாக எழுதி கடல் காற்றில் கடல் மணத்தை கலக்கும் லாவகம் பிரமிக்க வைகின்றது.
கரையான் கட்டிய கூட்டை
கரையான்களை விரட்டிவிட்டு பாம்பு குடி வந்தது
அன்று
பாம்பை விரட்டிவிட்டு
ஆத்தா குடிவந்தது
இன்று
ஆத்தாவை விரட்டிவிட்டுயார் குடி வரப்போகிறார்!! நாளை
//ஆத்தாவை விரட்டிவிட்டுயார் குடி வரப்போகிறார்!! நாளை //
கோயில்கள் காசு சம்பாதிக்க ஒரு கருவியாக பயன்படுவதால் இதுபோல் நிறைய கோயில்கள் உருவாகும்.கூடவே யாராவது சாமியார்கள் தோன்றி ஆசீர்வதிப்பு , ஆசிரமம், பக்தைகள் ...மற்றும் VCD என்று டெவெலப் ஆகிவிடும்.
//தார் சாலையில்...
காரல்ல -
தேர் ஓடப்போகுது
ஊர் உடையப்போகுது!//
இந்தியாவின் சாபக்கேடு..
ஆங்கிலேயர்கள் வைத்த நெருப்பை இதுவரை ஒரு ஒலிம்பிக் தீபம் மாதிரி தொடர்ந்து எரியவிட்டு நம் சகோதர சகோதரிகளை விறகாக பொசுக்கிகொண்டிருக்கிறோம்.
ZAKIR HUSSAIN on Friday, October 08, 2010 6:51:00 PM said...
ஆங்கிலேயர்கள் வைத்த நெருப்பை இதுவரை ஒரு ஒலிம்பிக் தீபம் மாதிரி தொடர்ந்து எரியவிட்டு நம் சகோதர சகோதரிகளை விறகாக பொசுக்கிகொண்டிருக்கிறோம். ///
அதான் காக்கா இந்த வினையை இன்னும் விளையாட்டாகவே நடத்துகிறார்கள் இந்த அரசு ! இது ஒரு சாபக்கேடு.
அஸ்ஸலாமு அலைக்கும்.எப்பொழுதும் இயற்கையை சிலாகித்து சொல்லும் கவிஞர் அத்துடன் செயற்கையாய் சேர்கை சேர்த்த ஆபத்தையும் கவனித்து கவலை கொண்டுள்ளார்.அந்த நியாயமான கவலை பரவாமல் , நம்மை பின் தொடர்ந்து தாக்காமல் தடுக்கவேண்டிய அனுகுமுறைகளை கூடி களைவோம் இன்ஷா அல்லாஹ்.
சகோ.சபீர் சரியான தருணத்தில் விழிப்புணர்வை
ஏற்படுத்தியதற்கு நன்றி!
///தார் சாலையில்...
காரல்ல -
தேர் ஓடப்போகுது
ஊர் உடையப்போகுது!///
அதிரையில் காவிகளுக்கு பாதை
விரித்து நாளாகிவிட்டது
பள்ளியில் தக்பீர் கட்டி தொழ
ஆரம்பித்தவுடன் - ஈஸ்வரியின்
ஆத்தா பாடல் காதில் வந்து
என்ன ஓதுகிறோம் என்பதை
குழப்பத்தில் ஆழ்த்தி விடும்!
முன்புபெல்லாம் கோவில் வாசல்படி
வரை விழா எடுத்தவர்கள்
இப்பொழுது பஸ்டாண்ட்
(பாரி மளிகை வாசலில் பெரிய கட்அவுட்டுடன்)
காவல் நிலையம் இப்படியே போய்
இமாம் ஷாபி ஸ்கூல் ஆட்டோ ஸ்டாண்ட்
வரை தோரணங்கள், டியூப்லைட்கள்
என்று அமர்க்களப்படுகிறது! மேலும்
ஆள் உயர ஸ்பீக்கர் போட்டு
காதின் செவிப்பரை கிழியும் அளவுக்கு
எந்த காலத்திலோ பாடிய பாடல்கள்
பக்தி என்றபெயரில் அலறுகிறது!
நாம் பஸ்சுக்காக காத்திருந்தால்
காதில் பஞ்சை வைத்துக்கொள்ளவேண்டும்!
இப்படியே போனால் அதிரை முதல்
பட்டுக்கோட்டை வரை காவிகளின் கொடி
பறக்க ஆரம்பித்து விடும்!
நான் ஒவ்வொரு தடவையும்
ஊர் சென்றால் மனதில்
புலம்பிக்கொள்வேன்
காவிகள் பல ரூபத்தில் வளர்ந்து
வருகிறார்களே நமது மக்கள்
எதையும் கண்டு கொள்ளாமல்
இப்படி விருந்து சோரும்
ஊர் புறமும் பேசிக்கொண்டு
இருக்கிறார்களே என்று!
///காத்திருக்குது கயமை...
ஓடுமீன் ஓட
உறுமீன் வரும்வரை
உம்மென்றிருக்கு...! ///
காவிகள்: முஸ்லிம்கள் அதிகம் வாழும்
ஊர்களைத்தான் குறிவைத்து எப்பொழுது
கலவரத்தை ஆரம்பிக்கலாம்
என்று காத்து கொண்டு இருக்கிறார்கள்!
பாபரி பள்ளிக்கும் அதை தொடர்ந்து
நடந்த நிலைமைகளும் இனி எங்கும் வரக்கூடாது
அனைத்து அதிகார வர்க்கமும் காவிகளின்
கையில் உள்ளது அதனால் எல்லா நேரங்களிலும்
நாம்தாம் கவனமாக இருக்கவேண்டும்
சின்ன விஷயம்தான் என்று எதையும் அலட்சியபடுத்தும்
சூழ்நிலை இன்று இல்லை!
சபீர் சங்கை ஊதியாகிவிட்டது நம் சமுதாய
மக்களின் காதுகளில் போய்ச்சேரவேண்டும்.
காவிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படவேண்டும்.
சரியான தருணத்தில் சகோ. சபீர்
சிகப்பு அலாறம் பொறுப்புணர்வுடன்
வலம் வந்துள்ளது
பூனைக்கு மணி கட்டியாகிவிட்டது!
சகோதரர்களே! இதற்கு கருத்து
மட்டும் பதிந்தால் போதாது
எதிர்கால சந்ததிக்கு நாம்
பாதுகாப்பான அதிரையை
விட்டு செல்ல வேண்டும்!
வல்ல அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரிடம்
இருந்து நம்மையும் நமது குடும்பத்தையும்
நம் சமுதாயத்தையும் பாதுகாக்க
போதுமானவன் - உங்களின் துஆக்களும் வேண்டும்!
அல்லாஹ்வை நிராகரிக்கும் கூட்டத்தாரை
வெற்றி கொள்ள வல்ல அல்லாஹ்
நமக்கு ஒற்றுமையையும் வலிமையும் தரட்டும்!.
கருவேலங் காட்டினிடை காலாற நடந்ததுண்டு!
உப்புக் குவியல்கள்
உப்பளக் கானல் நீர்...
உற்று நோக்கியதுண்டு பல சந்தர்பத்தில்.
பாத்தி கட்டிப் பராமரிக்கும்
உப்புப் படிகத்தை -
ஒற்றை விரல் கொண்டு
பொத்துப் பார்த்தில்லை,ஆனால் ஐவிரல் கொண்டு அதன் தலையில் வகிடெடுத்ததுண்டு.
உமுறிக்கீரை ஒடித்து
உவர்ப்பு நீர் ருசித்ததுண்டு.
வேட்டிமீன் விளையாடும்
சேற்றுக் கடற்கடையில் -
வேட்டி சட்டை படபடக்க
துடுப்பு போடும் தோனியோட்டம் ரசித்ததுண்டு.(இன்றும் ரசிப்பதுண்டு மட்டை போடும் தோனி(மஹேந்தர சிங்)ஆட்டம்.
தார் சாலையில்...
காரல்ல -
தேர் ஓடப்போகுது
ஊர் உடையப்போகுது!
------------------------------------------------
அந்த தேரை வம்பு கயிற்கொண்டு இழுக்கத்தானே அந்த திருவிழாவேனும் சடங்கும்,பிள்ளையார் கரைப்பும்.....
------------------------------------------------
காத்திருக்குது கயமை...
ஓடுமீன் ஓட
உறுமீன் வரும்வரை
உம்மென்றிருக்கு...!
-----------------------------------------------
உம்மென்றால் கலவரம் உண்டு என்று நம்மை மீனைபோல் கொத்திதின்ன காத்திருக்கும் காவிய கொக்கு அதற்கு நாம் பலியாகாமல் நம்மை காத்துக்கொள்ளவேண்டியது நம் சமர்த்து அது ஒற்றுமையில் தான் உள்ளது.
------------------------------------------------
மாசாஅல்லாஹ் இவ்வளவு வீரியமிக்க எச்சரிக்கை அவசியாமாய் கருதி கவி வாயிலாக சொன்ன சகோ.சபீர்காக்காவுக்கு அல்லாஹ் எல்லா நலனும் நல்குவானாக ஆமின் . நமது ஆக்கம் நகைச்சுவையுடன் மட்டுமல்லது நம் சமுதாயத்திற்கான ஊக்கமாக இருப்பதுதான் நம் எழுத்தில் வெற்றி கிட்டும்.
சரியான தருணத்தில் பொறுப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறீர்கள் அன்பு சகோதரர் சபீர்.
சுங்கவரி வசூலிக்கப்பட வேண்டிய இடம் இன்று உண்டியல் வரி (சாமி பிச்சை) வசூக்கும் இடமாக மாறும் அவலம்.
இதை அரசின் கவனத்திற்கு யாராவது எடுத்துச்செல்வார்களா? (நீதிமன்றம் போய் 3 பகுதிகளாக பிரிப்பதற்கு முன்பு)
விட்டுப்பிடிக்க இது சிறு பிள்ளைக் குறும்பல்ல. முட்டிட்டு குனிவது அறிவுடைமை ஆகாது. பட்டது போதாதா?
சபுராளிகள் தார்மீக ஒத்துழைப்பு தரளாம். உள்ளூர் சகோதரர்கள் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் உடனடி தீர்வு உறுதி. காரணம் அது சென்ட்ரல் கவர்மென்ட் இடம்.
//சபுராளிகள் தார்மீக ஒத்துழைப்பு தரளாம். // நிச்சயமாக இன்ஷா அல்லாஹ்... ஊரிலிருக்கும் நல்லுங்களே தயவு செய்து கொஞ்சம் சிரத்தை எடுங்கள் இது மத்திய அரசுக்குச் சொந்தமானதுதான் இதனை இப்படியே விட்டால் மத்தியம் செய்ய ஒரு நாட்டமை வருவார் கூறுபோட இடத்தையல்ல நம் நிம்மதியை..
ஒரு 12 வருங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் காக்கா...”இரயில் “ என்று பட்ட பெயருடன் அழைக்கபடும் ஒருவர் கூம்பலாக சென்று அதை தூக்கி போட்டார் கடல் கால்வாயில்...ஆனால் இன்னொரு முஸ்லிம் பெயர் தாங்கி...அதை மீண்டும் கொண்டுவந்தார்...எனென்றால்..அவருக்கு அந்த ஏரியா மாற்று மத பெண்களின் ஆதரவு தேவை...எலக்கஷன் ஆதரவு இல்லை...வேறு விதமான ஆதரவு ( மரணமடைந்து விட்டார் )...அலாவுதீன் காக்கா சொன்னதுபோல..மாரியாத்தா பாட்டு நமது நமது காதை கிழிக்கும் காலம் வெகுவிரைவில் வரும்..நாம் இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தால்
Post a Comment