Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌ங்க‌ள்.. 6

அதிரைநிருபர் | October 12, 2010 | ,

சென்ற செப்டம்பர் 30ம் தேதி உத்திர பிரதேச அலகாபாத் நீதி மன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பு உரிய ஆவணங்களை பரிசீலித்து கொடுக்கப்பட்ட தீர்ப்பாக தெரியவில்லை. பெரும்பாண்மையான மக்களின் ஐதீகத்தை (நம்பிக்கையை) வைத்து கொடுக்கப்பட்ட தீர்ப்பாக‌ உள்ள‌து.

இதற்கு நாடு முழுவதும் ஏன் இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்புகளும் கொடுக்கப்பட்டன என்று தெரியவில்லை.

இதற்கு ஏன் இத்தனை நீதிபதிகள் பத்தி, பத்தியாக பல நாட்கள் தீர்ப்பை எழுதி முடித்தார்கள் என்பது தெரியவில்லை.

இத‌ற்கு ஏன் எல்லாத்த‌லைவ‌ர்க‌ளும் நாட்டு ம‌க்க‌ளை அமைதி காக்கும்ப‌டி கேட்டுக் கொண்டார்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை.

ப‌ள்ளி வாச‌ல் தோறும் காவ‌ல‌ர்க‌ள் பாதுகாப்பிற்கு நிறுத்த‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை.

அன்று ந‌ம் நாடே அமைதி காத்த‌த‌ன் அர்த்த‌ம் ஒன்றும் புரிய‌வில்லை.

மத்திய அரசு எதிர் பார்க்க‌ வைத்து ஏமாற்றிய‌த‌ன் கார‌ண‌ம் ஒன்றும் விள‌ங்க‌வில்லை.

ந‌ம் நாடு ம‌த‌ச்சார்ப‌ற்ற‌ நாடு என்று இறையாண்மை கூறி கிருஸ்துவ‌ ச‌மூக‌த்திற்கும் அதில் ஒரு ப‌ங்கை கொடுக்காம‌ல் விட்ட‌து ஏனோ?

இங்கு தோற்ற‌து பாப‌ரோ இல்லை ராம‌ரோ அல்ல‌. இந்தியாவின் இறையாண்மை தான் என்ப‌தில் ஐய‌ம் இல்லை.

ப‌ள்ளியை இடிக்க‌ ம‌த்திய‌ ராணுவ‌த்தை இற‌க்கி பாதுகாப்பு கொடுத்த‌ அர‌சு. நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு மூல‌ம் ந‌ம‌க்கு நிலத்தை மீட்டு திரும்பிக்கொடுத்துவிடும் என்ப‌து எத்த‌னை அறியாமை? என்ப‌தை நன்கு அறிந்து கொண்டோம் அறியாமையைத் தாண்டி. என்றும் அமைதி காப்போம். பொறுமை இழ‌க்க‌மாட்டோம்.

மனித‌ர்க‌ள் மட்டும் தான் த‌வ‌றிழைப்பார்க‌ளா என்ன‌? நாங்களும் ம‌னித‌ர்க‌ள் தானே? என்று நீதிப‌திக‌ள் நினைத்துக்கொண்டார்க‌ள் போலும்.

நாட்டில் எவ்வ‌ள‌வோ இட‌மிருந்திருக்க‌ கோவிலை இடித்து அத‌ன் மேல் ப‌ள்ளி க‌ட்ட‌ பாப‌ருக்கு அவ‌சிய‌ம் வ‌ந்த‌தேனோ?

உரிய‌ ஆவ‌ண‌ங்க‌ளை ந‌ம்பாம‌ல் வெறும் ஐதீக‌த்தை ந‌ம்பும் நீதி ம‌ன்ற‌ம் கைதேர்ந்த‌ ஜோதிட‌ர்க‌ளை வ‌ருங்கால‌த்தில் ப‌ணிக்கு நிய‌மிக்குமோ? என்ன‌வோ? ஒன்றும் புரிய‌வில்லை. கேட்க‌ நாதியில்லை.

அன்று பள்ளியை இடித்த‌து த‌வறென்று கூறிய‌ அர‌சு. இன்று ப‌ள்ளி நில‌த்தை யாருக்கோ ப‌ங்கிட்டு கொடுப்ப‌தில் பெருமித‌ம் கொள்கிற‌து.

இறுதியில் பாவ‌ப்ப‌ட்ட‌ ஜென்ம‌மாகிப்போன‌து பாப‌ரோ இல்லை ராம‌ரோ அல்ல‌. இந்திய‌ இறையாண்மை எத்த‌னை தான் இடித்தாலும் உதைத்தாலும் அதை இன்முக‌த்துட‌ன் ஏற்றுக்கொள்ளும் சிறுபாண்மை இஸ்லாமிய‌ர் தான்.

அல‌காபாத் நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்ப‌ல்ல‌. கியாம‌த் நாளே (இஸ்லாம் கூறும் யுக முடிவு நாள்) எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்பு நாள்.
எது எப்ப‌டியோ "வாழ்க‌ பார‌த‌ம்" ம‌ற்றும் ச‌ந்திசிரிக்காத‌ ச‌மூக‌ நீதி...

வ‌ருந்திய‌ ம‌ன‌துட‌ன்.....

--- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

6 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அன்று பள்ளியை இடித்த‌து த‌வறென்று கூறிய‌ அர‌சு. இன்று ப‌ள்ளி நில‌த்தை யாருக்கோ ப‌ங்கிட்டு கொடுப்ப‌தில் பெருமித‌ம் கொள்கிற‌து.//

அரசு மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் தான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///உரிய‌ ஆவ‌ண‌ங்க‌ளை ந‌ம்பாம‌ல் வெறும் ஐதீக‌த்தை ந‌ம்பும் நீதி ம‌ன்ற‌ம் கைதேர்ந்த‌ ஜோதிட‌ர்க‌ளை வ‌ருங்கால‌த்தில் ப‌ணிக்கு நிய‌மிக்குமோ? என்ன‌வோ? ஒன்றும் புரிய‌வில்லை. கேட்க‌ நாதியில்லை.///

வெத்திலையில எதோ தடவி அதுல 3டி எஃபெக்ட் 35mm படம் பார்த்து சொல்லுவாங்களே அதானே ! ஒருவேலை பாபருக்கு கைரேகை ஜோசியம் பார்த்திருப்பாங்கலோ இடிச்சதுக்கான ரேகை ஓடியிருக்காது அதனால் பள்ளி சொந்தமில்லைன்னு முடிவுக்கு வந்திருப்பார்கள் ஜோதிட சிகாமணிகள் ! அடப்பாவிங்களா இதுக்காட இத்தனை பாதுகாப்பு ஒரு மரத்தடியில உட்கார்ந்து சொல்லியிருக்கலாமடா !

இந்தக் கொடூரத்தை வாசிக்கும் போது நினைக்கும் போது இந்திய இறையான்மையை வெட்கித் தலைகுனிய வைத்தவர்கள் இவர்கள்.

//இத‌ற்கு ஏன் எல்லாத்த‌லைவ‌ர்க‌ளும் நாட்டு ம‌க்க‌ளை அமைதி காக்கும்ப‌டி கேட்டுக் கொண்டார்க‌ள் என்ப‌து தெரிய‌வில்லை.//

எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதைதான் ! இவர்களே பீதியை உருவாக்குவார்கள் இவர்களே கண்டும் பிடிப்பார்கள் இவர்களே முடித்தும் வைப்பார்கள். முக்கிய நாட்களை மக்களுக்கு இவர்களால் ஞாபகப் படுத்த எடுத்த யுக்திதான் "அச்சுறுத்தல்" / "மிரட்டல்" பீதியை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தை அங்கே குவிக்கத்தான் இவர்கள் இப்படி செய்யாமல் ஒரு சுதந்திர தினமோ அல்லது குடியரசுத் தினமோ கொண்டாடமுடியவில்லை வேதனையான விஷயம்.

Shameed said...

அல‌காபாத் நீதி ம‌ன்ற‌ தீர்ப்பு எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்ப‌ல்ல‌. கியாம‌த் நாளே (இஸ்லாம் கூறும் யுக முடிவு நாள்) எங்க‌ளுக்கு இறுதி தீர்ப்பு நாள்.


சரியான தீர்ப்பு அங்கே தான்

sabeer.abushahruk said...

சகோ. MSM தங்களின் வருத்தத்தில் எமக்கும் பங்குண்டு

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

எம் வருத்தத்தில் பங்கெடுத்த சகோ. சபீருக்கும், வருத்தத்தில் பங்கெடுக்காமல் வருத்தப்படும் அனைத்து நல்லுள்ளங்களையும் வல்ல ரப்புல் ஆலமீன் பொருந்திக்கொள்வானாக...ஆமீன்...

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நடந்தவை யாவும் திட்டமிட்ட முடிவு .அல்லாஹ் நாளை தீர்ப்பு எழுதுவான் .அல்லாஹ் போதுமானவன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு