அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
சிந்திக்க சில நபிமொழிகள்
சிந்திக்க சில நபிமொழிகள்
எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.
மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.
''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி
கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.
பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.
நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.
எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.
நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான்.
இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி.
இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ.
தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.
தொகுப்பு: சின்னகாக்கா
20 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.பொக்கிஷம். நல்ல தொகுப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும். நிர்வாகக்குழுவிற்கு ஒரு வின்னப்பம்.கட்டுரையின் முகவுரை தோற்றம் சரியாக இருக்கு அனால் Read full story என்பதுFull Detail or Detail இப்படி இருக்கலாம் என்பது என் கருத்து காரணம் ஹதீஸ் மற்றும் அல்குரான் வசனங்கள் என்பது story அல்லவே இதனால் மறைமுக தவறு செய்கிறோமோ என என்னுகிறேன்.ஒருக்கால் அதை நீக்கிவிடலாம் அல்லது Detail இப்படி மட்டும் மாற்றி விடலாம் .சரியா?????
தம்பி crown,
சின்னக்காக்காவின் ஹதீஸ் தொகுப்புகளைப் படித்த்திலிருந்து எல்லாம் நல்லதாகவே நடக்கிறது.
இன்று மாலை என் பிரியமானவனிடமிருந்து ஃபோன், சந்திக்க விரும்பி ரொம்ப நாட்களாக தள்ளிப்போய்க் கொன்டிருந்தவர்களுடன் இனிமையான உறையாடல் என what a day!!!
(பிள்ளையாரை குளத்தில் போட்ட மேட்டர்லாம் லீக்காயிடிச்சி)
"டொ ரெஅட் என்று இருக்கலாமா?
can it be as "to read further"?
sabeer on Saturday, October 16, 2010 11:43:00 PM said... can it be as "to read further"?
------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் .என்னே டெலிபதி உங்களிடமிருந்துதான் முதல் அலோசனை வரும் என நான் நினைத்தேன் அதுவே நடந்தது. நீங்கள் சொல்வது மிக்கச்சரி இதுவே எழுத்துத்துறையில் கையாளப்படும் வார்தை."to read further- I agree.
next wait for admin.
அன்பு சகோதரர் தஸ்தகிர், தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்வது சரி தான், இதற்கு சில மணி நேரமாகும், முயற்சி செய்து மாற்றிவிடுகிறோம். முடிந்தவரை தமிழில் இருக்க முயற்சி செய்கிறேன்.
சகோதரர் தஸ்தகிர், நம் நல்ல எண்ணங்களும் அதுபோல் நம் செயல்பாடுகளும் எப்படி மிக கவணம் செலுத்த வேண்டும் என்ற உங்கள் நல்ல எண்ணத்துடன் கூடிய ஆலோசனையை பாராட்டுகிறோம்.
தொடர்ந்து இணைந்து உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள்.
நல்ல தொகுப்பு - சி.கா. தொடரட்டும் !
----------------
பின்னூட்டத்திற்கு பின்னுட்டமாக (சொல்ல வந்த விஷயம்):
இன்று கவிக் காக்காவுடனும் யாசிருடனும் நேசம் பேசினோம் ! கலக்கல் உரையாடலோடு கவிக் காக்காவின் (அடங்களின்) விரும்தோம்பல் ! கவிதையாக வாப்பா பேசட்டுமென்றும் மைந்தன் அமைதிகாத்து அனுமதி கொடுத்தது ஒரு கவிதை ! அதோடு யாசிரின் மைந்தனின் மின்னும் பசுமை புன்னகை மனசோடு நிழலாடுகிறது ! நிச்சயம் என் அனுபவங்கள் ஓரிடத்தில் பதியப்படும் அதில் பரவசம் விரியும் ! :)
வழக்கமா உறங்கும் நேரம் வந்தும் உறங்கச் செல்லவில்லை உறவுகளோடு உரையாடிவிட்டு வந்ததால் !
ஆஹா என்ன பவ்யம் வீட்டுப்பாடம் எழுதாமல் வாத்தி முன்னால் நிற்பது போலிருந்தது !
அட கிரவ்னு கவிக்காக்கா சொன்னது வெ(ள்ளக் குலம்)ளங்களையா ?
அஸ்ஸலாமு அலைக்கும்.புரிந்து கொண்டேன் காக்கா நீங்கள் சொல்வது வெள்ளக்குளம் நான் செய்தது ஆனைவிழுந்தான் குளம்(யானையாங்குளம்) காரணம் நாம் (இரு)அனைவரும் ஓர் குளம்.அதுவும் இந்த (கட்ட பிள்ளையார் பேரன்)பிள்ளையை பிடித்தவர் நாம்.ஹாஹஹஹஹ்ஹ்ஹ்ஹஹஹ்.விருந்தும் விருந்தோம்பலும் பலமாக இருந்திருக்குமே???? ஏழு வருடத்திற்று முன்பு இங்கு ஒரு பம்பாய் காரர் நண்பர் தென்னிந்திய உணவு விடுதி ஆரம்பிக்க என்னிடம் இந்திய உணவு விளம்பரம் தழிழில் எழுதிக்கேட்டார். நான் எழுதிக்கொடுத்தது.ஜனகன மன கமகமவென இந்திய பாராம்பரிய உணவு.(எப்படி இருக்கு?)
நாம் (இரு)அனைவரும் ஓர் குலம்.
To Sabeer, Taj, Abu Ibrahim, Yasir..
எல்லாரும் என்னை தனியா "உட்டுட்டு' போயி அரட்டை அடிச்சிட்டு எனக்கு "வெவ்வெவே" காட்டுறீஙகளா?..
ஜாஹிர் காக்கா,
முதலில் உங்ககிட்ட அலைப்பேசியில் பேசிய பிறகு அரட்டையை ஆரம்பித்தோம் என்பது என் நினைவில் உண்டு. உண்மையில் இது மறக்க முடியாத நிகழ்வு. மிக்க மகிழ்ச்சி.
உங்களின் வருகையை விரைவில் நாங்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.
நற்சிந்தனையுடயை நபிமொழி தொகுப்பை தொடர்ந்து அளித்துவரும் சகோதரர் சின்னகாக்காவுக்கு மிக்க நன்றி.
தொடருங்கள் உங்கள் சேவையை அதிரைநிருபரில்..
//ஜனகன மன
கமகம வென//
.(எப்படி இருக்கு?)
there is an advertising rhythum in your slogan.
Smashing!!!
தாஜுதீன் Said..
நற்சிந்தனையுடயை நபிமொழி தொகுப்பை தொடர்ந்து அளித்துவரும் சகோதரர் சின்னகாக்காவுக்கு மிக்க நன்றி//
வழிமொழிகிறேன்..நல்ல தொகுப்பு..
சின்னகாக்காவின் தொகுப்பு...நம்முடைய இமானுக்கு ரீ சார்ஜ் போன்றது...உலக நினைப்பில் சிறிதளவு மிதக்க ஆரம்பித்தவுடன் ...தலையில் குட்டி..இதுவல்ல உனக்கு நிரந்த இடம்..மறுமை உண்டு அதற்க்கு உன்னை தயார் செய்து கொள் என்ற செய்தியை நறுக்கேன்று தருகிறது...தொடர்ந்து எழுதுங்கள் காக்கா
வாழ்க்கையில் ஒரு சிலரை முதன் முதலில் சந்தித்தால்...மிக்க மகிழ்ச்சியும்,அளவிட முடியாத ஆனந்தமும் எற்படும் ...அந்த உணர்வு நேற்று மாலை எற்பட்டது...சகோ.அபு இபுராஹிம்,தாஜீதின்...கவிக்காக்கா ...இவர்களிடம் உரையாடியது..ரொம்ப மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வு...ஜாகிர் நானா we were missing you..சீக்கிரம் சந்திப்போம்..குறுந்தகவல் : யாரும் உங்கள் காரை dismantle ஃப்ரீயாக பண்ண வேண்டும் என்று நினைத்தால் சபிர் காக்காவின் மகனை அனுகவும்..என் மகனும் இப்ப அவரிடம் assistant -க சேர்ந்துள்ளார்
கிரவுன்னு பொறி வைத்தாய் தட்டியது சில்லென்று அதிரை நிருபரின் சிறு மூளைக்கு விளைவு மற்றொமொரு அற்புதமான மின்னும் முகப்புடனும் பொலிவுடனும் நம் யாவரின் முன்னால் பளிச்சிடுகிறது... சுட்டியாக இருக்காமல் சுட்டிக் காட்டிடவும் இருப்பதை நினைத்து பெருமைப் படுகிறோம் !
தம்பி(களின்) உழைப்புக்கு அல்லாஹ்வின் பாதுகாவலுடன் மன உறுதியும் ஆரோக்க்கியத்தையும் கொடுப்பானாக இன்ஷா அல்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
சின்ன காக்காவால் இங்கு தொகுத்து வழங்கப்பட்ட நபி மொழி ஒவ்வொன்றும் நம் கண்களில் மட்டுமல்ல ஒவ்வொருவரின் இதயத்தில் எழுதப்பட்டு அன்றாடம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வைர வரிகள். தினந்தோறும் இதுபோன்று தொகுத்து வழங்கினால் உலக அலுவல்களால் மங்கிப்போகும் நம் மார்க்க அறிவை ரீசார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக இருக்கும். சின்னகாக்கா உங்கள் சீரிய இப்பணி தொடரட்டுமாக....
sabeer சொன்னது…
//ஜனகன மன
கமகம வென//
.(எப்படி இருக்கு?)
there is an advertising rhythum in your slogan.
Smashing!!!
-------------------------------------------------------------
Assalamualikum thanks for your kind comment.
அடக் கிரவுன்னு உன்னோட டிரமையில செஞ்ச டமிலாக்கத்தை (அதிரைக்)கவிக் காக்கா மடக்கிப் போட்டு கவிதையாக்கிட்டங்களே ! இதுதான் அவங்களோட ஸ்பெஷலே !
Post a Comment