Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஹஜ் கடமை 13

அதிரைநிருபர் | October 25, 2010 | ,



அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான். அல்குர்ஆன் (3:97)

'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி)

'செயல்களில் சிறந்தது எது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, 'அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என வினவப்பட்டதற்கு, 'இறைவழியில் போரிடுதல்' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டதற்கு, 'அங்கீகரிக்கப்படும் ஹஜ்' என்றார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி)

எமக்கு பிரசங்கம் நிகழ்த்திய நபி (ஸல்) அவர்கள் மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆகவே விரைந்து ஹஜ் செய்யுங்கள்என கட்டளையிட்டார்கள் என அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்).

இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செய்யும் நம் அதிரைவாசிகள் அனைவருக்கும்நம் சமுதாய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும் துஆக்களும்.  ஹஜ் செய்ய இருக்கும் அன்பு சகோதர, சகோதரிகளே...  உங்கள் புனித பயனத்தில் அதிகமாக   நம்  சமுதாயத்தின்  நலனுக்காக  துஆ  செய்யுங்கள்.    இந்த பதிவை படித்துக்கொண்டிருக்கும் அன்பர்களே இந்த வருடம் ஹஜ் செல்லும் உங்களின் சொந்தங்களிடமும் நம் முஸ்லீம்  சமுதாயத்தின் நலனுக்காக  அதிகம் துஆ செய்ய சொல்லுங்கள். அல்லாஹ் போதுமானவன்.
 
சவுதி அரேபியா, தமாமில் இருக்கும் நம் அதிரையை சேர்ந்த எங்கள் அன்பும், பாசமும் நிறைந்த சகோதரர் ஷாஹுல் ஹமீது (காக்கா) அவர்கள் குடும்பத்துடன் இந்த வருடம் ஹஜ் பயணம் செல்கிறார்கள். சகோதரர் ஷாஹுல் ஹமீது அவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் ஹஜ் பயணம் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக அமைய துஆ செய்கிறோம். இன்ஷா அல்லாஹ். அன்பு சகோதரரே தங்கள் அனைவரின் உடல் நலனை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்.

அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீது அவர்களிடமிருந்து நமக்கு வந்த மடலை இங்கு வெளியிடுகிறோம், வாசித்துப்பாருங்கள்.



அல்லாஹ்வின் திருப்பெயரால்... 


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)


இந்த இணையகடலில் வளம் வரும் அனைவருக்கும் என் ஸலாம்.

நாங்கள் (குடும்பத்துடன்) வரும் துல்ஹஜ் மாதம் பிறை 6 (12 / 11 /10 )வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு தமாம்மில் இருந்து ஹஜ் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம் உங்கள் அனைவருக்காகவும் நாங்கள் துஆ செய்வோம் நீங்களும் எங்களுக்காக துஆ செய்யவும்.


என்னுடைய பின்னூட்டங்களிலோ அல்லது கட்டுரைகளிலோ யாருடைய மனமும் புண்பட்டு இருந்தால் தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள் எங்களின் ஹஜ் இனிதே நிறைவேற இறைவனிடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள்.


ஷாகுல் ஹமீது
 தமாம்.

வெளியிடு: அதிரைநிருபர் குழு

13 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இடம் பொருள் ஏவல் அறிந்து வெளிவந்த பதிவு, நல்ல தருனம் !

எங்கள் சாஹுல் காக்கா மற்றும் அவர்களின் ஹஜ் கடமை நல்லமுறையில் நிறைவேறவும் அவர்களின் ஹஜ் கடமையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நானும் என் குடும்பமும் துஆச் செய்கிறோம் அதேபோல் நீங்கள் எங்களுக்காகபும் நம் சமுதாயத்திற்காகவும் துஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்....

mohamedali jinnah said...

தேவையான செய்தி.நல்ல செய்தி . செய்தி தந்தமைக்கு நன்மை உண்டு
அன்புடன் வாழ்துக்கள்

sabeer.abushahruk said...

எங்கள் சாஹுல் மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஹஜ் கடமை நல்லமுறையில் நிறைவேறவும் அவர்களின் ஹஜ் கடமையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நானும் என் குடும்பமும் துஆச் செய்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா நான் எழுத்தில் விட்டதை என் மனசோடு சேர்த்துச் சொல்ல வந்ததையும் சேர்த்துச் சொன்னமைக்கும் ஒரு SMILE :) !

sabeer.abushahruk said...

Abu Ibrahim,
Keep that beautiful smile all the time on.

Where is alaudeen?

crown said...

எங்கள் சாஹுல் காக்கா மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஹஜ் கடமை நல்லமுறையில் நிறைவேறவும் அவர்களின் ஹஜ் கடமையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நானும் என் குடும்பமும் துஆச் செய்கிறோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செய்யும் நம் அதிரைவாசிகள் அனைவருக்கும், நம் சமுதாய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களும், துஆக்களும்.

எங்கள் அன்பு சகோதரர் சாஹுல் காக்கா மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஹஜ் கடமை நல்லமுறையில் நிறைவேறவும் அவர்களின் ஹஜ் கடமையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நானும் என் குடும்பமும் துஆச் செய்கிறோம்.

அலாவுதீன்.S. said...

சகோ.சாகுல் ஹமீது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

*************************************************************
'ஒரு உம்ரா, மற்றொரு உம்ராவுக்கு இடையில் ஏற்பட்ட பாவங்களை அழித்துவிடும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு கூலியாக, சொர்க்கத்தை தவிர வேறு இல்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா(ரலி) புகாரி,முஸ்லிம்)

இறைத்தூதர் அவர்களே! செயல்களில் மிகச்சிறந்ததாக தியாகம் செய்வதை நாங்கள் கருதுகிறோம்.நாங்கள் தியாகம்(ஜிஹாத்) செய்யலாமா? என்று கேட்டேன். ''எனினும் ஜிஹாதில் சிறந்தது, ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரலி) புகாரி)

*************************************************************

தாங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தாரின் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்ள துஆச் செய்கிறோம். எங்களுக்காகவும் துஆச் செய்யுங்கள்.

jalal said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..,) ச்சாவன்னா !

திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள் நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது. அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும்,(அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆல்யத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக் கட்டளையச் செயல்படுத்த மறுத்தால்--(அவர் தெரிந்து கொள்ளட்டும்) உல்கத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவைய்ற்றவனாய் இருக்கின்றான்.
(அல்குர் ஆன்; 3 - 96,97)

ச்சாவன்னா (ஹமீது) மற்றும் குடும்பத்தினரின் ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைவதர்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தாஆலாயிடம் நானும் என் குடும்பத்தினரும் துஆ செய்கின்றோம். நீயும் எங்களுக்காக துஆ செய்

ZAKIR HUSSAIN said...

To

Bro.Shahul,

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எல்லாம் வல்ல இறைவனின் நல்லருளால் ஹஜ் கடமையை இனிதே நிறைவேற்ற வாழ்த்துக்கள்.

நீங்கள் ஹஜ் செய்வதில் நான் மிக சந்தோசம் அடைகிறேன். 70 களின் தொடக்கத்தில் மலேசியா வந்தபோது உங்களை சிறுவனாக தெரியும், 80 களின் முடிவில் இளைஞனாக தெரியும். 90 களின் நடுவில் கல்யாணம் செய்து குடும்பத்துடன் வாழும் பொறுப்புள்ள மனிதனாக தெரியும்.சில வருடங்களுக்கு முன் மலேசியா வந்த போது வாழ்க்கையை பூமி என்னும் பேரேட்டில் எழுதிப்படித்த மாணவனாக தெரியும். வயது துரத்தினாலும் வாழ்க்கை முழுக்க கற்றுக்கொள்ள தயங்காத ஒரு சிலரில் நீங்களும் ஒருவர்.....

எனக்காக ஒரு சிறு துவா மட்டும் அந்த புனித பூமியில் கேட்டு வரவும்.

# எல்லோரையும் படைத்து பாதுகாக்கும் வல்ல இறைவனே எனக்கு எது சரி என்று நீ நினைக்கிறாயோ அதை உன் கருணை கொண்டு எளிதாய் கொடுத்து உதவு.

# எனக்கு எது உதவாது என நீ நினைக்கிறாயோ அதை என்னிடம் இருந்து உன் கருணை கொண்டு உடன் நீக்கிவிடு.

# என்னை உன்னிடம் மட்டும் கையேந்துபவனாக வை.

சாகுல்,இந்த துவாவை மட்டும் எனக்காக கேளுங்கள்.


சாகுல் இதுபோல் நான் யாரிடமும் உதவி கேட்டதில்லை.

Yasir said...

எங்கள் அன்பு சகோதரர் சாஹுல் காக்கா மற்றும் அவர்களின் குடும்பத்தின் ஹஜ் கடமை நல்லமுறையில் நிறைவேறவும் அவர்களின் ஹஜ் கடமையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் நானும் என் குடும்பமும் துஆச் செய்கிறோம

எங்களுக்காக துவா செய்யுங்கள் காக்கா

Shameed said...

அபுஇபுறாஹிம்
நிறை குடம் தளும்பாது என்பர் அதை உங்களிடம் உணர்தேன்.இதுவரை இவரிடம் நான் பேசியது இல்லை ஆனால் என் எண்ணங்களை இவர் மிக சரியாக பிரதிபலிப்பார்

நிடுரளி
ஹஜ்ன் சிறப்பு அறிந்து பின்னுட்டம் இட்ட நிடுரளி

சபீர்
எங்கள் சாஹுல் என்று பாசமழை பொழிந்த சபீர். இவரை நண்பர் என்று அழைப்பதா சகோதரர் என்று அழைப்பதா என்பது கூட தெரியாத அளவுக்கு பழக கூடியவர்.எந்த விசயமாக இருந்தாலும் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்.

கிரௌன்
என்னை பற்றி அதிகம் அறிந்தவர்களில் இவரும் ஒருவர் இவரை பற்றி சமிபத்தில்தான் நான் அறிய ஆரம்பித்தேன்

தாஜுதீன்
என்ன சொல்ல வருகின்றோம் என்பதை உடன் புரிந்து கொண்டு செயல் ஆற்ற தொடங்கும் ஆற்றல் உள்ள பக்குவப்பற்றவர்.ஊர் நலனில் ஆர்வம் உள்ளவர் இதுவே இவருக்கு பல நண்பர்களை பெற்று தந்துள்ளது

அலாவுதீன்.S.
என் சிறு வயதில் இருந்து நன்கு பழக்கம். இவரிடம் இத்துணை ஆற்றல் ஒளிந்து கிடப்பது சமிப காலமாக என்னை வாய் பிளக்க வைகின்றது

ஜலால்
எதற்குமே கோபப்படாத ஆள் சமைத்த பொருளை கழுவி சாப்பிடும் அளவிற்கு சுத்தமான ஆள்

ஜாகிர் ஹுசைன்
என்னை பற்றி எனக்கு தெரிந்ததை விட என்னை பற்றி இவர் அதிகம் அறிந்தவர்.இவர் இட்டபின்னுடம் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.இவர் கேட்க சொன்ன துவாவை நாங்கள் உங்கள் அனைவருக்காகவும் கண்டிப்பாக கேட்போம்

யாசிர்
நான் தூக்கி வளர்த்த பிள்ளை இன்று பெரிய ஆளாக இருந்தாலும் இன்னும் என்கண்களுக்கு சிறு பிள்ளையாகவே காட்சி தருகின்றார்.

அதிரைநிருபர் said...

தன் பாச மழையில் எங்களை நனைய வைத்த எங்கள் பசமிகு அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்களுக்கு நம் அதிரைநிருபர் குழு சார்பாக மிக்க நன்றி.

நம் அனைவரின் நட்பு, அன்பு என்றென்றும் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் துஆ செய்கிறோம். நீங்களும் துஆ செய்யுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு