Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மழைக்காலத்தில் நம்ம ஊர்..... 26

அதிரைநிருபர் | October 05, 2010 | , ,


கார் மேகத்தை விரட்டிக்கொண்டு வரும் இடி முழக்கம்.

மின்சாரக்கண்களால் கண் சிமிட்டிச்செல்லும் மின்னல்.

காண்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வானவில்.

தூரல் வந்து எல்லோரின் உள்ளத்தையும் தூர் வாரும்.

ப‌ல‌த்த‌ காற்றில் பேய் போல் த‌லை விரித்தாடும் ம‌ர‌ங்க‌ள்.

ஓட்டு வீட்டின் ஓட்டையினூடே வடியும் மழை நீர்.

சில்லென்ற‌ சார‌ல் காற்றில் ம‌ன‌ச்சுமைக‌ளெல்லாம்

ச‌ப்த‌மில்லாம‌ல் செத்துப்போகும், ம‌ன‌ம் சாந்தி பெறும்.



ம‌ழையில் ந‌னைந்த‌ காக்கை குருவிகள் முள்ளும், தொலியுமாக காட்சி தரும்.

தெருக்க‌ளில் எல்லாம் சிறு ஓடைக‌ள் ஓர‌ணியில் ஓடும்.

தார் சாலைக‌ளை பிரித்து மேயும். த‌ர‌ம‌ற்ற‌ சாலைக‌ளின் மேல் த‌ம்ப‌ட்ட‌ம் அடித்துச் செல்லும்.

காணாம‌ல் போன வண்ணக்காய்ச்ச‌ல் குருவி க‌டைத்தெரு வ‌ந்து சேரும்.

பொட்டி ம‌டையானும் புரோட்டாவுக்கு த‌யாராகும்.

உள்ளாங்குருவிக‌ள் எல்லாம் கூடைக்குள் கூனி நிற்கும்.

குள‌ங்க‌ளெல்லாம் த‌ன் அள‌வை உய‌ர்த்தி நிற்கும்.

அதைக்காணும் உள்ள‌ம் வ‌ங்கி க‌ண‌க்கின் இருப்பு போல் வட்டியின்றி ஆன‌ந்தக் குதிரை மேல் ஏறி சவாரி செய்யும்.

குள‌த்தில் குளிக்க‌ இற‌ங்கும் ஒவ்வொருவ‌ருக்கும் குளிர் காற்று வ‌ந்து ம‌தில் மேல் பூனை போல் இரு ம‌ன‌தை ஏற்ப‌டுத்தும்.

குளிர் காற்றில் அடுப்ப‌ங்க‌ரையின் அடுப்பில் பூனை போர்வை இன்றி ப‌டுத்து உற‌ங்கும்.

சேற்றை செருப்பு ச‌ப்த‌த்துட‌ன் வ‌ர‌வேற்று ந‌ம் வெள்ளை வேட்டியை ந‌ன்கு ப‌த‌ம் பார்க்கும்.

பார் சோப்பில் அக்க‌றை ப‌ல் இளித்து நிற்கும்.



க‌ன‌ ம‌ழையில் நனைந்த ந‌ம் வீட்டு ம‌ர‌ங்கள் ந‌ல்ல‌ ஷாம்பு போட்டு குளித்த‌து போல் புத்துண‌ர்ச்சியுட‌ன் ப‌சுமையாக‌ காட்சி த‌ரும்.

த‌லைக்கு ம‌ல்லிகைப்பூ வைத்த‌து போல் அத‌ன் மேல் வ‌ந்த‌ம‌ரும் வெண் கொக்குக‌ள் சிறுவ‌ர்க‌ளின் அட்ட‌பில்லை தேட‌ வைக்கும்.

ஈச‌ல் பூச்சிக‌ள் வானில் ப‌ற‌ந்து பிற‌கு ச‌ப்த‌மின்றி செத்து ம‌டியும்.

தும்பிக‌ள் வானில் வ‌ட்ட‌மிட்டு ப‌ற‌ந்து சிறுவ‌ர்க‌ளை ப‌ர‌வ‌ச‌மூட்டும்.

சாலைக‌ள் எல்லாம் குண்டும், குழியுமாக‌ அம்மை வ‌ந்த‌ முக‌ம் போல் ஆகிப்போகும்.

ம‌றைந்து இருந்த‌ குடைக‌ள் எல்லாம் ம‌றும‌ல‌ர்ச்சி பெரும் தேர்த‌லை நோக்கும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் போல்.

தின‌ம், தின‌ம் க‌ரு மேக‌ங்க‌ள் வானில் உல‌க வ‌ரை ப‌ட‌த்தை இல‌வ‌ச‌மாக‌ வ‌ரைந்து செல்லும்.

குளிர் காற்று வ‌ந்து அதை க‌ட்டி அணைத்துச் செல்லும்.



அடுப்ப‌ங்க‌ரை செல்ல‌ அலுப்பாய் இருக்கும் பெண்க‌ளுக்கு

தெருவில் கூவி விற்கும் இட்லியும், இடிய‌ப்ப‌மும் ஆறுத‌ல் அளித்து பேருத‌வி புரியும்.

ஆட்டோக்க‌ளின் ஆட்சி ஆங்காங்கே ந‌ட‌ந்தேறும்.

அரிக்க‌ளாம்பு, குத்து விள‌க்கு, முட்டை விள‌க்குக‌ளெல்லாம் ப‌ண்டிகைகால‌ க‌டைக்கார‌ன் போல் க‌டின‌ உழைப்பில் இற‌ங்கும்.

ஆசைக்கணவனின் வெளி நாட்டுப்ப‌ய‌ண‌த்தால் வாடும்/காத்திருக்கும் பாச‌மிகு ம‌னைவி போல் வெயிலுக்காக‌ வாடும் துவைத்து காய‌ப்போட‌ப்ப‌ட்ட‌ துணிமணிக‌ள்.

ம‌ழையால் நீதி ம‌ன்ற‌மின்றி த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ளின் மாலை நேர‌ விளையாட்டுக்க‌ள்.

சிறையில் பெயிலுக்காக‌ காத்திருக்கும் சிறைவாசிக‌ள் போல் வெயிலுக்காக‌ காத்திருக்கும் வாலிப‌ர்க‌ள்.

க‌ன‌ ம‌ழையால் மீன் விலை ம‌லையேறிப்போகும்.

மின் துண்டிப்பு ஊரை இருளில் மூழ்க‌டித்து நீதி ம‌ன்றமில்லா தீர்ப்பு மூல‌ம் ந‌ன்கு பிரித்து மேயும்.


கொசுக்க‌ளெல்லாம் த‌ன் வியாபார‌த்தில் (க‌டி)கொடி க‌ட்டிப்ப‌ற‌க்கும்.

கொசுவ‌ர்த்தி வியாபார‌மும் சூடு பிடிக்கும்.

புய‌ல்க‌ள் வ‌ந்து ந‌ம்ம‌ ஊர் க‌ரையை காசின்றி க‌ட‌ந்து செல்லும்.

ப‌ள்ளி விடுமுறை வந்து பால‌க‌ர்க‌ளை ம‌கிழ்விக்கும். அவ‌ர்க‌ளின் அட்ட‌காச‌மும் அர‌ங்கேறும்.

ஒரு மாத‌ இடை வெளிக்குப்பின் என் ம‌ழைக்கால‌ க‌ட்டுரையை உங்க‌ளின் அன்பான‌ பார்வைக்காக‌வும், பின்னூட்ட‌த்திற்காக‌வும் இங்கு ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்....

வ‌ஸ்ஸ‌லாம்.

அன்புட‌ன்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.


26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நல்வரவு MSM(n) ! Excellent !

மற்றுமொரு மழைச் சாரல் இங்கே அரங்கேற்றம் நடத்தியிருக்கிறது, இனிமேல் பின்னூடங்களின் வெள்ளம் கரையைக் கடக்கும் !

chinnakaka said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தாயகத்தில் இருந்து பாலைவனத்திற்கு திரும்பி இருக்கும் நெய்னா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும், வாருங்கள் அன்பு சகோதரர் நெய்னா முகம்மது அவர்களே, ஆவலுடன் எதிர்ப்பத்திருந்தோம் உங்கள் வருகையை.

வீட்டில் அனைவரும் நலமா?

தங்களின் மழை செய்தியை நம் அதிரைநிருபரில் பதிந்தவுடன் ஊரில் தமிழ்நாட்டில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாமே.

அதிரைநிருபரில் கருத்து மழையும் பொழியும் என்ற எதிர்ப்பார்ப்பு நம்மிடம்

வாழ்த்துக்கள் சகோதரர் நெய்னா முகம்மது.

mohamedali jinnah said...

அழகிய, பொருத்தமான படத்துடன் அருமையான கட்டுரை

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். நலமா? முதலில் நைனா வந்தாலே மழைவந்த மா(ரி)திரிதான்.
------------------------------------------------
-------------------------------------------------
சில்லென்ற‌ சார‌ல் காற்றில் ம‌ன‌ச்சுமைக‌ளெல்லாம்
ச‌ப்த‌மில்லாம‌ல் செத்துப்போகும், ம‌ன‌ம் சாந்தி பெறும்.
------------------------------------------------
சில்லென்ற‌ சார‌ல் காற்றில் மனப்புழுக்கம் நீங்கும்)மனச்சுமை(மனச்சோர்வு) நீங்கும்,அல்லது மன தில் துன்பம் செத்துப்போகும் இப்படி இருந்திருக்கலாமா? நைனா இதுஎனக்குதோன்றிய யோசனை நான் தம்மைபோல் நன்கு அறிந்தவன் அல்ல.
------------------------------------------------
குள‌ங்க‌ளெல்லாம் த‌ன் அள‌வை உய‌ர்த்தி நிற்கும்.

அதைக்காணும் உள்ள‌ம் வ‌ங்கி க‌ண‌க்கின் இருப்பு போல் வட்டியின்றி ஆன‌ந்தக் குதிரை மேல் ஏறி சவாரி செய்யும்.
------------------------------------------------
அப்பப்பா! என்னே நேர்தியான வர்ண(ன்)னை.கற்பனைகுதிரையை செலுத்திய லாவகம்...மேலும் இஸ்லாத்தின் பார்வை(எல்லா படைப்பிலும் இதைத்தான் நான் மொத்தமாய் கவனித்து எழுதுவேன் எந்த ஒரு வார்தையும் அல்லாஹுக்கு இணை வைக்காதிருக்கவேண்டியது நம் கடமை)பாராட்டுக்கள்.
------------------------------------------------
ம‌றைந்து இருந்த‌ குடைக‌ள் எல்லாம் ம‌றும‌ல‌ர்ச்சி பெரும் தேர்த‌லை நோக்கும் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் போல்.
------------------------------------------------
ஆஹா!அருமை!!!!!
------------------------------------------------
அடுப்ப‌ங்க‌ரை செல்ல‌ அலுப்பாய் இருக்கும் பெண்க‌ளுக்கு

தெருவில் கூவி விற்கும் இட்லியும், இடிய‌ப்ப‌மும் ஆறுத‌ல் அளித்து பேருத‌வி புரியும்.
------------------------------------------------
மழையில் இயல்பு வாழ்கை பாதிக்கும் ,அந்த வேளையில் பெண்கள் அடுக்களை செல்ல விரும்பமாட்டார்கள் .வெளியில் உணவு பதார்தத்தை வாங்கி சமாளித்துவிடுவார்கள் என்பதை சொல்லும் எதார்த்தம்.கோடி அர்த்தம் சொல்லும்....
-----------------------------------------------
-அரிக்க‌ளாம்பு, குத்து விள‌க்கு, முட்டை விள‌க்குக‌ளெல்லாம் ப‌ண்டிகைகால‌ க‌டைக்கார‌ன் போல் க‌டின‌ உழைப்பில் இற‌ங்கும்.
------------------------------------------------
சரியா சொன்னிங்க!
------------------------------------------------
ஆசைக்கணவனின் வெளி நாட்டுப்ப‌ய‌ண‌த்தால் வாடும்/காத்திருக்கும் பாச‌மிகு ம‌னைவி போல் வெயிலுக்காக‌ வாடும் துவைத்து காய‌ப்போட‌ப்ப‌ட்ட‌ துணிமணிக‌ள்.
------------------------------------------------
துணிமணிகள் காத்திருப்பது வெப்பத்திற்கு.....இங்கு துவைத்து காய்வதற்கு துணிமணிகள் அதுபோல் துன்பத்தில் காயப்(பட்ட)போடப்பட்ட நம் கண்ணியத்துக்குறிய பெண்மணிகள்( நாம் அவர்களையும் துவைத்து காயப்படுத்திவிடுகிறோம்)அங்கே துணிக்கும்,இவர்களுக்கும் தேவை எதிர் மறை.
என்னாமாய் பொருந்திவரும் வார்த்தை நயம்.அங்கே காய வெயில் தேவை இங்கே அந்த தனிமையின் கொடுமை வெப்பம் தீர தேவை அன்பு மழை!!!!!
------------------------------------------------
ம‌ழையால் நீதி ம‌ன்ற‌மின்றி த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ளின் மாலை நேர‌ விளையாட்டுக்க‌ள்.

சிறையில் பெயிலுக்காக‌ காத்திருக்கும் சிறைவாசிக‌ள் போல் வெயிலுக்காக‌ காத்திருக்கும் வாலிப‌ர்க‌ள்.
------------------------------------------------
அங்கு பையில் கிடைத்தால் சிறை விடுதலை(தற்காலிகம்).இங்கு வெயில் கிடைத்தால் கவலை விடுதலை நிரந்தர (sun)சந்தோசம்.
-----------------------------------------------
க‌ன‌ ம‌ழையால் மீன் விலை ம‌லையேறிப்போகும்.
---------------------------------------------
Bad Luck.
------------------------------------------------
புய‌ல்க‌ள் வ‌ந்து ந‌ம்ம‌ ஊர் க‌ரையை காசின்றி க‌ட‌ந்து செல்லும்.
------------------------------------------------
எந்த சின்னம் ஜெய்த்தாலும், தோத்தாலும் புயல் சின்னம்(சினம்) என்றும் தோற்க வேண்டும் என் இறைவனை வேண்டுவோம்.
மொத்தத்தில் நனைந்துவிட்டேன்...

crown said...
This comment has been removed by a blog administrator.
crown said...
This comment has been removed by a blog administrator.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.தாஜ் நான் வெளிட்ட கருத்து முதலில் தோல்வியில் முடிந்தது..பின் தும்மல் போல் தொடர்ந்து பதிவாகிவிட்டது.எஞ்சியவைகளை நீக்கிவிடவும்.ஒரே மழையால் தடுமல் வந்தது போல் தடுக்க முடியல!!!ஹச்,ஹச்,ஹச்.ஹச்ச்ச்ச்ச்...

Shameed said...

நெய்னாவின் கை வண்ணம் என்றால் மண்வாசனையுடன் வரும் மழைபோல் இருக்கும் என்பதில் மாற்றம் இல்லை.

அதிரையில் மழை பெய்தால் அதிரை நிருபரில்சாரல் அடிக்கிறது .

இனி பின்னுட சாரல் மழைதான்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown on Wednesday, October 06, 2010 12:52:00 AM said...
பின் தும்மல் போல் தொடர்ந்து பதிவாகிவிட்டது.எஞ்சியவைகளை நீக்கிவிடவும்.ஒரே மழையால் தடுமல் வந்தது போல் தடுக்க முடியல!!!ஹச்,ஹச்,ஹச்.ஹச்ச்ச்ச்ச்.. //

இதுக்குதான் குடைய எடுத்துகிட்டுபோன்னு சொன்னது, மழையில நனஞ்சுட்டு மட்டுமா வருவே அங்கங்கே பாத்தி கட்டி மழைநீர் சேமிப்பும்லா செய்வே :)

சரி அதென்ன ?
Bad Luck இதை தமிழில் சொல்லாதது "துரதிஷ்டமே"ன்னு சொன்னா கோவிச்சுக்க மாட்டியே :)))

mohamed said...

மாஸாஅல்லாஹ் வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//க‌ன‌ ம‌ழையில் நனைந்த ந‌ம் வீட்டு ம‌ர‌ங்கள் ந‌ல்ல‌ ஷாம்பு போட்டு குளித்த‌து போல் புத்துண‌ர்ச்சியுட‌ன் ப‌சுமையாக‌ காட்சி த‌ரும்.//

இந்த வரியை படிக்கும்போதே பசுமையான புத்துணர்ச்சி உள்ளத்தில்.

சகோதரர் நெய்னாவின் ஸ்டைலே தனிதான்.

வாழ்த்துக்கள் சகோதரர் நெய்னா, மழை கவிதையுடன் தங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

Yasir said...

மீண்டும் நல்வரவு சகோ.நெய்னா முகம்மது உங்கள் எழுத்து மழையில் நனைந்து - ஜீரம் வந்துவிட்டது..அருமை அருமை

sabeer.abushahruk said...

சகோ. நெய்னாவின் வருகைக்காக காத்துக்கிடந்தது வீண் போகவில்லை. அதிரையில் சூழ் கொன்டு அங்குமிங்கும் கொட்டுது மழை! 
மழையை மட்டுமல்ல... ஊரிலிருந்து கொண்டு வந்த அத்தனையும் பங்கு வைத்து தந்தாகனும் (ஊர் நடப்பு, ஊர்வாசிகள் வாழ்க்கைமுறை உட்பட)

நல்ல ரசனையான  குறிப்புகள், அனுபவித்து மகிழ்ந்து சொல்லும் வர்ணனை, அழகான உவமானங்கள் (உங்கள் ஸ்டைலில் சொல்வதென்றால்... சேமியாக்கஞ்சி குடிக்கும்போது சிக்கும் முந்திரி திராட்சை போல)
கொசுக்கடி ஃபோட்டோ பார்த்ததும் சுருக்குன்னு ஒரு வலி.

Sent from my iPhone

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer on Wednesday, October 06, 2010 12:09:00 PM said...
(உங்கள் ஸ்டைலில் சொல்வதென்றால்... சேமியாக்கஞ்சி குடிக்கும்போது சிக்கும் முந்திரி திராட்சை போல)

ஆஹா இப்படி இச் வைப்பதில் கவிக் காக்காவின் ஸ்டைலே தனிதான் அது iPHONE4ல் பொத்தனை தேடித் தேடித் தொட்டு பார்ப்பதுபோல் இருக்கிறது.

அங்கே பொத்தானை தேடியவர்ளையும் எனக்குத் தெரியும் !

அப்துல்மாலிக் said...

நெய்னா வெக்கேஷனின் பலனா இந்த வரிகள், மழையை கண்டால் மட்டுமே இந்த வரிகள் பிறக்கும், தொலைக்காட்சியில் மட்டுமே மழையை பார்த்து பழகிவிட்ட நமக்கு என்று காணல் நீர்தான்.

அருமை அபார திறமைக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

அழகான கை! (ஐந்தாவது படத்தைத்தான் சொல்கிறேன்.) இவ்வளவு அழகான கையில் மாயாஜாலம் (கிராஃபிக்ஸ்) செய்து வைத்த கொசுக்கள் எப்படிக் கடிக்கும்? காட்சிப் பொருள்தானே? இருப்பினும், பொருத்தமான படம்தான்.

Shameed said...

உள்ளாங்குருவிக‌ள் எல்லாம் கூடைக்குள் கூனி நிற்கும்

என்ன ஒரு பார்வை கூர்மை!!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரை அஹ்மது on Wednesday, October 06, 2010 1:17:00 PM said...
அழகான கை! (ஐந்தாவது படத்தைத்தான் சொல்கிறேன்.) இவ்வளவு அழகான கையில் மாயாஜாலம் (கிராஃபிக்ஸ்) செய்து வைத்த கொசுக்கள் எப்படிக் கடிக்கும்? காட்சிப் பொருள்தானே? இருப்பினும், பொருத்தமான படம்தான் ///

அங்கே கிராஃபிக்ஸ் வேலைக்கு (கைமேல்)காசு வைக்கனும் அப்போதான் கடிக்காது :)

ZAKIR HUSSAIN said...

வாழ்த்துக்கள் சகோதரர் நெய்னா

கொஞ்சம் நாளாக ஊருக்கு போகவேண்டும் என் ஆசை உங்கள் எழுத்தால் எனக்கு அதிகமாகியது.

ஊரில் எவ்வளவோ மைனஸ் பாயின்ட் இருந்தாலும் நம் ஊரே ப்ளஸ் பாயின்ட்தான். அதுவும் மழையில் அவித்த மரவள்ளிக்கிழங்கை பங்கீடும் போது வரும் வெள்ளைஆவி எனக்கு போட்டோகிராபி மாதிரி இன்னும் நினைவில் இருக்கிறது

Shameed said...

ZAKIR HUSSAIN
அவித்த மரவள்ளிக்கிழங்கை பங்கீடும் போது வரும் வெள்ளைஆவி எனக்கு போட்டோகிராபி மாதிரி இன்னும் நினைவில் இருக்கிறது.

மஞ்சள் கலந்த கிழங்கில் இருந்து வரும் அந்த "ஆவி" எல்லோருக்கும் பிடிக்கும்.

அதிரைநிருபர் said...

//இவ்வளவு அழகான கையில் மாயாஜாலம் (கிராஃபிக்ஸ்) செய்து வைத்த கொசுக்கள் எப்படிக் கடிக்கும்?//

நம்ம ஊர் கொசுக்கள் படை எடுத்து கடிக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த கொசுக்கடி புகைப்படம்.

பொருத்தமான புகைப்படங்கள் என்று பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.

Saleem said...

மச்சான் மிக அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அரட்டை அரங்கமின்றி அரட்டை அடிக்கும் இராக்கால (மழைகால) தவளைகளும், சுவற்றுக்கோழிகளும் கூக்குரலிட்டு யாருக்கோ ஓட்டு கேட்கும்.



மழை காலத்தில் நாம் செய்த குறும்புகளும், அதனால் வரும் சளி, இருமல், காய்ச்சல் தொல்லைகளும் ஆஸ்பத்திரி கொண்டு போய் சேர்க்காமல் நம்மை விடுவதில்லை.



பனி படர்ந்த விடியலுக்கு முன் நம் பள்ளி சாபின் 'அல்லாஹு அக்பர்' பாங்கின் ஒலி ஏகத்துவத்தை எடுத்துரைத்து நம் எல்லோரையும் உறக்கத்திலிருந்து எழுப்பி விடும்.





எளிதாக நாம் பெறும் மழை நீரை மண்ணுக்கு அனுப்ப இறைவா! நீ எத்தனை ஏற்பாட்டை செம்மையாக செய்து முடிக்கின்றாய்....உனக்கே எல்லாப்புகழும்... சக்திகள் அனைத்தும்...என்று அவனையே போற்றி புகழ்ந்தவனாக...



வ‌ஸ்ஸ‌லாம்.



அன்புட‌ன்....



மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பல தடைகள் இருந்தும் தனக்கு பேசப்பட்ட (நிச்சயம் செய்யப்பட்ட) பெண்ணை ஆசையுடன் கள்ளத்தனமாக எட்டிப்பார்க்கும் ஒரு இளைஞனைப்போல் கரு மேகங்கள் சூழ்ந்திருக்கும் அவ்வேளையில் இடையில் ஏற்படும் சிறு இடைவெளியில் சூரியன் தரையை எட்டிப்பார்க்கும் மழைக்காலத்தில். (மேலே சொன்ன‌ க‌ருத்து ஒரு கால‌த்தில் இருந்த‌து. க‌ணினிம‌ய‌மான இக்கால‌த்தில் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை).‌

இருள் சூழ்ந்த விண்ணில் அங்காங்கே விண் மீன்கள் ஒளிர்வது போல் மின் துண்டிக்கப்பட்ட இரவில் சில வீடுகளில் இண்வெண்டர் மூலம் வெளிச்சம் வெளிப்படும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இங்கு கருத்திட்டு ஊக்கமளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றிகளுடன் உங்களின் ஈருலக நற்பாக்கியங்களுக்காக அந்த வல்ல இறைவனிடமே து'ஆச்செய்கின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு