Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபர் – அமைதியின் ஆளுமையா? 25

அதிரைநிருபர் | April 16, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அன்பான அதிரைநிருபர் நேசங்களே, உங்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

படைத்தவனின் பேருதவியால் நம் அதிரைநிருபர் இன்னும் இரண்டு மாதத்தில் ஒரு வருடத்தை நிறைவு செய்யவிருக்கிறது. இச்சூழலில் அதிரைநிருபரில் அன்றாடம் சந்தித்த, சாதித்த மற்றும் சகித்தவைகளை என்று உங்கள் அனைவருடன் ஞாபகப்படுத்தி பகிர்ந்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.

அதிரைநிருபர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை கல்வி விழிப்புணர்வு, சுகாதார விழிப்புணர்வு, இஸ்லாமிய விழிப்புணர்வு, சகோதரத்துவம் மற்றும் சமுதாய சகோதரகளிடையே ஒற்றுமையை வழியுறுத்தும் செய்திகள், கவிதைகள், கட்டுரைகள், பழைய முத்திரை பதித்த அதிரைப்பட்டின நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டுவரும் பதிவுகள், சகபதிவாளர்களை ஊக்கப்படுத்தும் கருத்துப் பின்னூட்டங்கள் என்று அதன் கவனத்தில் சிறிதளவும் சிதறாமல் தன் நிலையில் மிகத் தெளிவாக இணைய வலையுலகில் அதிரையை சார்ந்த வாசகர்களை மட்டுமல்லாது மற்ற ஊர் சகோதரர்களையும் தன்னோடு வசப்படுத்திக் கொண்டுள்ளது என்பது பெருமைப்பட வேண்டியது என்று சொன்னால் அது மிகையில்லை.

ஒத்தக்கருத்துடன் ஒத்துழைத்து நமக்கு ஊக்கமும் ஆதரவும் தந்து சகோதரத்துவத்துவத்தை வலுபடுத்தி நாளுக்கு நாள் பழைய நட்புகளை புதுப்பித்து மற்றும் புதிய நட்புகளை உருவாக்கி நல்ல செய்கைகளை பரிமாறிக்கொள்வதால் ஒரு ஒற்றுமையான சமூக சகோதர கட்டமைப்பை உருவாக்க முடியும் என்பதை அதிரைநிருபர் நேசவட்டம் உருவாக்கியுள்ளது என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம். இது மென்மேலும் தொடரவேண்டும், ஒற்றுமையை அதிகம் வழியுறுத்தும் நகரீகமான நம் நேசவட்டம் தொடர்ந்து வளரவேண்டும்.

அதிரைநிருபர் என்று வைத்துக்கொண்டு அதிரை சார்புடையச் செய்திகள் ஒன்றும் மிளிர்வதில்லையே என்ற குழப்பமான சிந்தைனையோட்டம் சிலரிடமும் இருப்பதையும் எங்களால் உணர முடிகிறது. அதிரைநிருபர் வலைத்தளம் குழுவாக இருந்து நிர்வகிப்பவர்கள், ஆலோசகர்கள் யாவரும் ஊரிலும் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். ஊர் தகவல்கள் அன்றாட நிகழ்வாக உடனுக்குடன் தருவதற்கான முயற்சிகள் முழு அளவில் செய்யப்பட்டாலும், அதற்கான ஒத்துழைப்பும் ஆர்வமும் ஏனோ அதிரையில் உள்ள சகோதரர்களிடமும் கிடைக்கவில்லை. மேலும் ஒன்றினைந்து மேலும் வலுவாக செயல்படலாமே என்ற வேண்டுகோளும் வெறும் அறிக்கையாகவே உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்ஷா அல்லாஹ் விரைவில் அதிரைநிருபர் தனது இரண்டாம் ஆண்டு தொடக்கம் (ஜூன் 2011) முதல் எல்லா அதிரையின் ஏனைய பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அன்றாட அதிரை நிகழ்வுகளை செய்திகளாக வெளிவரும் வகையில் ஏற்பாடு செய்துவருகிறோம். எம்மோடு கைகோர்த்திடும் அதிரை சகோதரர்களின் ஒத்துழைப்புடன் வழக்கம் போல் வெற்றிநடை போடும் நிதர்சன உணர்வுபூர்வமான பதிவுகளுடன் சேர்த்து விரைவில் அதிக அதிரை செய்திகளை அதிரைநிருபரில் காணலாம்.

நாம் ஏற்கனவே பிரகடனம் செய்ததுபோல் நம் அதிரைநிருபர் வலைப்பூ எந்த ஒரு அதிரைசார்புடைய வலைப்பூவுக்கும் போட்டியாக மலர்ந்தது அல்ல, நாம் இதுநாள் வரை யாருடனும் போட்டி போடவில்லை என்பதை பல முறை அறிவித்துவிட்டாலும் மீண்டும் அதை வழியுறுத்தி சொல்லுகிறோம். மேலும் விழிப்புணர்வுகள் மற்றும் சர்ச்சைகளற்ற பதிவுகளை நம்மவர்களிடையே பகிர்ந்து எல்லோரிடமும் வரவேற்பை பெற்றுள்ள அதிரைநிருபர் வலைப்பூ மற்ற அதிரை வலைப்பூக்களுக்கு முன்மாதிரியாக செயலாற்றி வருகிறது என்பதற்கு அதிரை வலைப்பூகளின் தற்போதைய செயல்பாடுகளே சாட்சி. இதற்காக அதிரைநிருபர் மட்டும்தான் முதலில் இருப்பதாக நாமே சொல்லிக்கொள்ள விரும்பவில்லை. அதிரைநிருபர் இதுவரை இரண்டு இலட்சம் செல்ல குட்டுக்களே வாங்கியிருந்தாலும், உங்கள் யாவரின் தகவலுக்காக நம் அதிரைநிருபர் உலக இணையத் தளங்களின் தரவரிசையில் மற்ற பிரபலமான தமிழ் வலைப்பூக்களை காட்டிலும் முன்னனியில் உள்ளது என்பதற்கு ALEXA உலக இணையதள தரவரிசைப் பட்டியலே சாட்சி. தற்போது (15.04.2011) ALEXA RANKINGல் அதிரைநிருபர் 225,637 இடத்தில் உள்ளது. மற்ற வலைப்பூக்கள் எந்த இடங்களில் உள்ளது என்பதை இந்த சுட்டியில் http://www.alexa.com/siteinfo  சென்று அந்த வலைப்பூ முகவரிகளை தட்டிப்பார்த்தால் அவைகளின் உலக தரவரிசைகளின் எண்ணிக்கை தெரியும்.

முக்கியமான ஒரு தகவல், சுய அறிமுகமில்லாமல் அனாமத்தாக அனைவருக்கும் எரிச்சலூட்டி வரும் பின்னூட்டங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை, ஒரிரு முகவரிகளை வைத்துக்கொண்டு பல பெயரில் ஒரு சில சகோதரர்கள் நம்மேல் ஏற்பட்ட பாசத்தாலும் இன்னும் மெருகு ஊட்டவும், நமக்கு சில நேரங்களில் அவர்களின் பொன்னான நேரங்களை வீணடித்தும் நம்முடைய நேரத்தையும் வீணடித்து விடுகிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த வகையில் இடையூறாக இருக்கிறோம் என்று தெரியவில்லை. அனாமத்து பின்னூட்டக்காரார்கள் தொடர்பாக விரிவான விபரங்களுடன் இணையக் குற்றங்கள் Cyvber Crime என்று ஓர் ஆய்வுப் பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அனாமத்துக்களாக வலம் வரும் விபரமான(?) சுய அறிமுகமில்லாத பலமுக (வரிகள்)வாளிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இது போன்று மின்னலடித்து சன்னலைச் சாத்துபவர்கர்களின் இருப்பிடக் கதவை எப்படித் தட்டுவது என்றும் நமக்கு நன்றாகவே தெரியும். அதிரைநிருபர் பக்கம் வந்து செல்லும் நேசங்களின் வழித்தடங்கள் எவைகள் என்று அதிரைநிருபர் குழுவுக்கு நன்றாகவே தெரியும். அனாமத்தாக பின்னூட்டமிடும் சகோதரர்கள் நம் அதிரைநிருபர் குழுவின் செயல்பாடுகள் பற்றி அறியாதவர்கள் அல்லது அறிந்திட மறுக்கும் மனம் கொண்டவர்கள் என்ற காரணத்தால் அவர்களின் அறியாத தவறுகளை நாம் பெரிதுபடுத்தி நம் யாவரின் நேரத்தை வீணடித்துக் கொள்வதற்கு நாம் தயாராக இல்லை என்பதை மட்டும் நேசத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

கடந்த ஒரு மாதகாலமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் கவனம் திரும்பியதால் அரசியல் தொடர்பான பதிவுகள், விமர்சனங்கள், விவாதங்கள் வெளிவந்தது, இது நல்ல வரவேற்பபை பெற்றாலும் நம்மிடையே நலமே நாடும் சில சகோதரர்களுக்கு இதில் உடன்பாடு இல்லை என்பதையும் எங்களால் உணர முடிந்தது. இனிமேல் (back to pavilion) நாம் எடுத்திருக்கும் சேவைப் பணியான கல்வி, சுகாதாரம், இஸ்லாம் என்று வழக்கம்போல் தொடருகிறது, இன்ஷா அல்லாஹ்.

இந்த கோடைவிடுமுறையில் கல்வி தொடர்பான நிகழ்வுகள் அதிரையில் நடத்தப்பட வேண்டும். கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் ஈடுபட்ட சகோதரர்கள் பெரும்பாலானவர்கள் தங்களின் அதிக அலுவலக பணிச்சுமைகள் காரணமாக தற்போது கல்வி விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பாக அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை. கோடைவிடுமுறை கல்வி பயிற்சி விழிப்புணர்வு தொடர்பாக விரைவில் நல்ல அறிவிப்புக்கள் நம் அதிரைநிருபரில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ் !.

படைத்தவனின் துனையில்லாமலும், நம் பங்களிப்பாளர்கள் மற்றும் வாசக நேசங்களின்  ஆதரவும், பங்களிப்பும் ஊக்கமும் இல்லாமலும் நாம் நிச்சயமாக இவ்வளவு மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்க முடியாது என்பதை மிக உறுதியாக நம்புகிறோம்.
 
வழக்கம் போல் தொடர்ந்து  இணைந்திருங்கள்....
 
அதிரைநிருபர் குழு

25 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

முதலாண்டில் அடிஎடுத்து வைக்க இருக்கும் அதிரைநிருபர் முதல் இணையதளமாக வளர வாழ்த்துக்களும்!துஆவும்!

sabeer.abushahruk said...

கடின உழைப்பு,நேர்மை, வெளிப்படையான அனுகுமுறை, தேர்ந்த அறிவு அகியவைக் கொண்டு செய்யும் எந்த பணியும் வெல்லும் என்பத்ற்கு அதிரை நிருபர் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

உம்மைப் போலவே நமதூரின் எல்லா வலைப்பூக்களும் வெற்றியடைந்து சேவை செய்ய என் துஆ.

அப்துல்மாலிக் said...

இன்னும் உழைக்கனும், என்றுமே திருப்தியடையக்கூடாது, தேடுதல் பசிதான் மேலும் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்லும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அப்துல்மாலிக் சொன்னது…
இன்னும் உழைக்கனும், என்றுமே திருப்தியடையக்கூடாது, தேடுதல் பசிதான் மேலும் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்லும்//

அஸ்ஸலாமு அலைக்கும், சரியாக சொன்னீர்கள் சகோதரர் மாலிக், நிச்சயம் தேடுதல் பசியே வெற்றிக்கு வழிவகுக்கும். இது அதிரைநிருபரில் தொடரும் என்று நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

காணவில்லை:

அமைதியாக அடிக்கும் அலைகளான அபு இபுறாகீமையும் ஆர்ப்பரித்து எழும் கிரவுனையும் கிச்சிகிச்சு மூட்டும் ஹமீதையையும் கிங் யாசிரையும் சாந்த சொரூபி அலாவுதீன் சாஹேபையும் சகலகலா வல்லவன் ஜாகிரையும் தலைப்புச் செய்தியில் காஆவில்லை.

கண்டெடுத்தோர் இங்கு விரட்டி விடவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அலைகள் மேல் கட்டுமரம் ஒன்று மிதக்கிறது அதனை கொஞ்சம் கரை ஒதுக்கி விட்டு வந்துடுறேனே... அதானே எல்லோருமா ஓட்டுப் பொட்டிய கண் விழித்து காவ காக்குற வேலைக்கு போயிட்டாங்கள நம்மவர்கள் ? ... நால்லா கேளுங்க காக்கா.. யாரையுமே கானோமே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று வாசித்ததில் நான் ரசித்தது !

உலகில் நான்கு வகையான மனிதர்கள்​தான் இருக்கிறார்கள் என்கிறது அரபு இலக்கியம்.

1. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவன் முட்டாள். அவனைவிட்டு விலகிவிடு!

2. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். அவன் எளியவன். அவனுக்கு கற்றுக்கொடு!

3. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு யாவும் தெரியும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. அவன் தூங்குகிறான். அவனை எழுப்பிவிடு!

4. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு எல்லாம் தெரியும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன்தான் அறிவில் சிறந்தவன். அவனைப் பின்தொடர்ந்து செல்!

sabeer.abushahruk said...

அப்ப முன்னாலே போங்களேன் அபு இபுறாகிம், தொடர்கிறோம்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதெப்படி கவிக் காக்கா, மூத்தோர் தம் நேர்முகம் முன்னிருக்க என்னைப் போன்றோர் பின் தொடர்வதுதானே பின்னால் வருபவர்களுக்கும் முன்னாலிருப்பவர்களைத் தொடரவைத்திட சாலச் சிறந்த செயலாகும்.

ஆதலால்...
நேர்கொண்ட பார்வை
சீரான மூச்சு
மழலையின் மொழி
இல்லாளின் மவுனம்

இனிமையே !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஆர்பரித்து எழும் சுனாமியோ, அடங்(க்)கி வாழும் பினாமியோ அல்ல.பூப்பறித்து, புன்னகைத்து போகும் தென்றல் என் குணம்.ஆனால் தீமை கண்டேழும் எரிமலை என்றாலும் சரியே! அன்பானவர்களின் தேடலில் நான் இருப்பதே! சந்தன மர நிழலில் வசிப்பதுபோல் என்னைச்சுற்றி மணம் வீசிக்கொண்டிருக்கு.அன்பின் தேடலுக்கு என்றும் அன்பு செலுத்துபவன் இவண் கிரவுன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா !
அதெப்படியப்பா ? வெகுண்டா சுனாமி பதுங்கினா பினாமியா !? கலக்கல் !

தேடும் வரை இருந்திடாதே !

பரீட்சைப் பேப்பரில் விடையாக இருந்திடு !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கேள்வியாகவே இருக்க ஆசை அப்பொழுதுதான் என்றும் கொக்கிபோல் தொக்கி(?) நிற்களாம். விடையாகிவிட்டால் உடனே விடைபெறவேண்டியதுதான். இது என் கேள்விஞானத்தால் தோன்றியதே!சரியா ?தவறா? என சான்றோர்கள் உங்களை போன்றோர்கள் சொல்லனும்.

Yasir said...

குறிக்கோள்களை வளர்த்து கொண்டு,நேர்மையான,தூய எண்ணத்துடன் எதையும் செய்தால் /ஆரம்பித்தால் அது வெற்றி பெறும் என்பதற்க்கு அதிரை நிருபரை தவிர எதையும் உதாரணம் காட்ட தேவை இல்லை...அதிரை நிருபர் பல்லாண்டு காலம் சிறப்பாக இப்பொழுது இருக்கும் சமுதாய அக்கறை உள்ள உத்வேகத்தோடு செயல்பட்டு - தொடங்கப்பட்டு, தொடங்க காத்திருக்கும் அதிரை வலைப்பூக்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது/ இனிமேலும் இருக்க வேண்டும் என்று துவா செய்தவானக...யாசிர்

Yasir said...

பணிப்பினையின் காரணமாகவும்...வீட்டில் இண்டெர்நெட் ஸ்ரைக்கும் செய்து விட்டதால் ...கருத்திட தாமதமாகிவிட்டது

Yasir said...

அபு இபுராஹிம் காக்கா..எங்கேயிருந்து இதெல்லாம் எடுக்குறீங்க....சிம்பிளி சூப்பர்...கவிக்காக்கா சொன்னதுபோல் முன்னால் போங்க....நான் கவிக்காக்காவிற்க்கு பின்னால் வருகிறேன்

அலாவுதீன்.S. said...

sabeer.abushahruk சொன்னது…
கடின உழைப்பு,நேர்மை, வெளிப்படையான அனுகுமுறை, தேர்ந்த அறிவு அகியவைக் கொண்டு செய்யும் எந்த பணியும் வெல்லும் என்பத்ற்கு அதிரை நிருபர் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

உம்மைப் போலவே நமதூரின் எல்லா வலைப்பூக்களும் வெற்றியடைந்து சேவை செய்ய என் துஆ.
****************************************************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

சகோ. சபீரின் கருத்தை வழிமொழிகிறேன்.

அதிரை அபூபக்கர் said...

மாசா அல்லாஹ் . தொடருங்கள் வெற்றியோடு இரண்டாம் ஆண்டை,

மற்றும் எனது சிறிய வேண்டுகோள், இதில் FOLLOWERS என்ற வசதியைவைத்தால் GOOGLE READER லும் படித்துக்கொள்ளலாம்.

அலாவுதீன்.S. said...

sabeer.abushahruk சொன்னது…
காணவில்லை:அலாவுதீன் தலைப்புச் செய்தியில் காஆவில்லை. கண்டெடுத்தோர் இங்கு விரட்டி விடவும்.
****************************************************************************************************************
சபீர் : தேர்தல் களத்தில் அனல் பறக்கும் விவாதத்தில் அனைவரும் இருந்தார்கள். இந்த தேர்தல் ஜூரம் சென்றபிறகு தலையை காட்டலாம் என்று இருந்து விட்டேன்.

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

கடந்த ஐந்து வருடமாக Web Designer துறையில் இருப்பவன் என்ற முறையில் அதிரை நிரூபர் தளத்தை மெருகூட்ட இன்ஷா அல்லாஹ் நானும் உதவ முன்வருகிறேன். அதே போல் மக்களால் இணைக்க ஆசைபடும் தளங்களையும் ஓன்று சேர்க்க முயற்சி எடுத்து ஒத்துவந்தால் லாஜிகலி, டெக்னிகலி சாத்தியம்தான்.மெண்டலி ஒத்துவந்தால்.

msm(mr)
meerashah rafia

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதே போல் மக்களால் இணைக்க ஆசைபடும் தளங்களையும் ஓன்று சேர்க்க முயற்சி எடுத்து ஒத்துவந்தால் லாஜிகலி, டெக்னிகலி சாத்தியம்தான்.மெண்டலி ஒத்துவந்தால்.//

அதனாலென்ன தம்பி MSM(r): லாஜிகளா ஸ்கிரிப்ட் எழுதிடலாம், டெக்னிகளா ப்ருவ் செய்திடலாமே ! ஏன் மெண்டலா ஒத்துழைக்கனும் ப்ரெய்ன் கட்டுக்குள் வைத்திருக்கும் மனங்கள் ஒத்துப்போனால் போகலாமே ஊர்கோலம் !

Meerashah Rafia said...

@ அபுஇபுறாஹீம்:
அதே.. அதே..
To achieve anything
Physical Distance is not a matter,if
Mental Distance narrowed in watever.

msm(mr)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Mental Distance narrowed in watever.//

சரியே !

இப்படிச் சொல்லவும் பெருந்தன்மையும் உள்ளார்ந்த அர்ப்பனிப்பும் வேண்டும் அதனை தம்பி உன்னிடமும் காண்கிறோம் !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//காணவில்லை//


அஸ்ஸலாமு அழைக்கும்

வேலை நிமித்தமாக கருத்திட்ட முடியவில்லை.கூடிய சீக்கிரம் கருத்து மழை பொழிய வருகின்றேன்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆகா ஒருவருஷம் ஆச்சா ! முகம் தெரியதவர்களையும் பிரிந்து இருந்தவர்களையும் அதிரை வாசிகளையும் பாசக் கயறு கொண்டு பிணைத்து தானும் வளர்ந்து மற்றவர்களையும் வளர்த்த அதிரை நிருபருக்கு வாழ்த்துக்கள் மேலும் வளர

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு