அளவற்ற
அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
முஸ்லிம்களை கண்ணியப்படுத்துதல், அவர்களின் உரிமைகளை வழங்குதல், அவர்கள் மீது கருணை, இரக்கம் கொள்ளுதல் பற்றி...:
நேர்வழி அல்லாஹ்வின் பொறுப்பாகும். கோணல் வழியும் உள்ளது.
அவன் நாடியிருந்தால் உங்கள் அனைவருக்கும் நேர் வழி காட்டியிருப்பான். (அல்குர்ஆன்: 16:9)
...“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது
பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன்
மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ
வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு
விதித்தோம்.
(அல்குர்ஆன்: 5:32)
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர
வேறில்லை, (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே
சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (அல்குர்ஆன் : 6:32)
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச்
சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும், தங்கக்
காப்புகளும், முத்தும் அவர்களுக்கு
அணிவிக்கப்படும், அங்கே
அவர்களின் ஆடை பட்டாகும். (அல்குர்ஆன் : 22:30)
'மக்களிடம்
ஒருவன் இரக்கம் காட்டவில்லையானால், அவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்''
என நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 227)
'உங்களில் ஒருவர் மக்களுக்கு தொழ வைத்தால்,அவர் (தொழுகையை) எளிதாக்கட்டும்! ஏனெனில் அவர்களில்
பலவீனர், நோயாளி, முதியவர் உள்ளனர். உங்களில் ஒருவர் தனித்துத் தொழுதால், தான் விரும்பியபடி தொழுகையை நீட்டிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 228)
''ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான். அவர் மற்றவருக்கு
அநீதி இழைக்க வேண்டாம். அவரை ஆதரவற்றவராக விட்டு விட வேண்டாம். தன் சகோதரனின் தேவையை
நிறைவேற்றுபவனாக ஒருவன் இருந்தால், அவனது தேவையில்
(உதவிட) அல்லாஹ் இருப்பான். ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை (இவ்வுலகில்) ஒருவன் நீக்கி வைத்தால், மறுமையில் பல கஷ்டங்களில், ஒரு கஷ்டத்தை அவனை விட்டும் அல்லாஹ் நீக்கி வைப்பான்.
ஒரு முஸ்லிமின் குறையை (இவ்வுலகில்) மறைத்தால், மறுமை நாளில், அல்லாஹ் அவனது குறையை மறைப்பான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு
உமர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 233)
'ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவருக்கு இவர்
மோசடி செய்யமாட்டார். அவரிடம் இவர் பொய் கூறமாட்டார். அவருக்கு இவர் உதவி செய்வதை விட்டு
விட மாட்டார். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்னொரு முஸ்லிம் மீது அவரது கண்ணியமும், அவரது சொத்தும், அவரது ரத்தமும் விலக்கப்பட்டதாகும். இறையச்சம் இங்கே
(இதயத்தில்) உள்ளது. ஒரு முஸ்லிமான சகோதரரை இழிவாக எண்ணுவதே, மனிதனுக்குத் தீமையால் போதுமானதாகும்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 234)
'நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்! (பொருளை வாங்கும்
எண்ணமில்லாமல்) பொருளின் விலையை ஏற்றி விடாதீர்கள்.
ஒருவர் மீது ஒருவர் கோபப்படாதீர்கள். புறக்கணிக்காதீர்கள், குறை பேசிக் கொள்ளாதீர்கள்.
உங்களில் ஒருவர், இன்னொருவார்
வாங்கும் பொருளை விலை பேச வேண்டாம். நீங்கள் அல்லாஹ்வின் அடியார்களாக சகோதரர்களாக ஆகி
விடுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு
முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதம் செய்யமாட்டான். அவனை இழிவுபடுத்திடமாட்டான்.
அவனுக்கு உதவி செய்வதை விட்டு விடமாட்டான். இறையச்சம் இங்கே உள்ளது'' என்று கூறி தன் நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காட்டிய
நபி(ஸல்) அவர்கள், ''ஒருவனின்
தீமையை கணக்கிடுவதில் முஸ்லிமான தன் சகோதரனை இழிவுபடுத்துவதும் அமையும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும்
இன்னொரு முஸ்லிம் மீது அவனது ரத்தம், அவனது சொத்து, அவனது கண்ணியம் விலக்கப்பட்டதாகும்'' என்றும்
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 235)
''தனக்கு
விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறைவிசுவாசியாக ஆக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 236)
'உன் சகோதரன் அநீதம் இழைப்பவனாயினும், அல்லது அநீதம் செய்யப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு
நீ உதவி செய் என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அநீதம் செய்யப்பட்டவனுக்கு நான்
உதவி செய்வேன். அநீதம் இழைப்பவனாக இருந்தால் அவனுக்கு எப்படி உதவுவேன்? என்று ஒருவர் கேட்டார். ''அநீதம் செய்வதிலிருந்து அவரை நீக்கு! அதுவே அவருக்கு
உதவி செய்வதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி, ).
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 237)
'ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் மீதுள்ள கடமை
ஐந்தாகும்:
1) ஸலாமிற்கு
பதில் கூறுவது 2) நோயாளியை நலம் விசாரிப்பது 3) ஜனாஸாவில் கலந்து கொள்வது 4) விருந்தை
ஏற்பது 5) தும்மியவருக்கு பதில் கூறுவது
என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,
முஸ்லிம்).
ஒரு முஸ்லிமின் கடமை ஆறாகும்.
அவரை நீ சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறு! உன்னை அவர் விருந்துக்கு அழைத்தால் அவருக்கு
பதில் கூறு! உன்னிடம் உபதேசம் செய்ய வேண்டினால், அவருக்கு நீ உபதேசம் செய்! தும்மியப்பின் அல்லாஹ்வை
புகழ்ந்தால் அவருக்கு நீ பதில் கூறு! அவர் நோயுற்றால் அவரை நலம் விசாரி. அவர் இறந்தால்
அவரை பின் தொடர்ந்து செல்! என்று உள்ளது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 238)
''நபி(ஸல்)
அவர்கள் ஏழு விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு விஷயங்களை விட்டும் எங்களை
தடுத்தார்கள். 'நோயாளியை
நலம் விசாரித்தல், ஜனாஸாவில்
கலந்து கொள்ளுதல், தும்மியவருக்கு
பதில் கூறுதல், சத்தியம்
செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்றுதல்,
அநீதம் செய்யப்பட்டவருக்கு உதவுதல், (விருந்துக்கு) அழைத்தவனுக்கு பதில் கூறுதல், ஸலாமிற்கு பதில் கூறுதல் என, எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
தங்க மோதிரங்கள் அணிவது, வெள்ளி பாத்திரத்தில் பருகுவது, பட்டு கலந்த சிவப்பு நிறத் துணி, பட்டு மற்றும் கித்தான் நூலால் உள்ள துணி, பட்டு அணிதல், கெட்டியான பட்டு, குறுக்கிலும், நெடுகிலும் பட்டு நூலால் நெய்யப்பட்ட துணி ஆகியவற்றை
விட்டும் எங்களைத் தடுத்தார்கள். (அறிவிப்பவர்: அபூ உமாரா என்ற பாரஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 239)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
அலாவுதீன் S.
5 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்,
அலாவுதீன் காக்கா,
சொல்லப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களும் இன்றைய சூழலுக்கு ஏற்றவகள். தகுதியான நேரத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.
//ஒரு முஸ்லிமின் கடமை ஆறாகும். அவரை நீ சந்தித்தால் அவருக்கு ஸலாம் கூறு! உன்னை அவர் விருந்துக்கு அழைத்தால் அவருக்கு பதில் கூறு! உன்னிடம் உபதேசம் செய்ய வேண்டினால், அவருக்கு நீ உபதேசம் செய்! தும்மியப்பின் அல்லாஹ்வை புகழ்ந்தால் அவருக்கு நீ பதில் கூறு! அவர் நோயுற்றால் அவரை நலம் விசாரி. அவர் இறந்தால் அவரை பின் தொடர்ந்து செல்! என்று உள்ளது.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 238)//
மாஷா அல்லாஹ் அருமயான நபிமொழிகள், இவைகள் அனைத்தையும் நம்மில் எத்தனை பேர் அன்றாடம் செய்கிறோம் என்பதை சீர் தூக்கி பார்க்கலாம்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்குரிய அலாவுதீன் காக்கா அவர்களை இ.அன்சாரி காக்கா வீட்டில் சந்தித்துவிட்டு.11.வது அருமருந்தை உட்கொண்டதும் இனம் புரியாத மகிழ்ச்சி.
// முஸ்லிம்களை கண்ணியப்படுத்துதல், அவர்களின் உரிமைகளை வழங்குதல், அவர்கள் மீது கருணை, இரக்கம் கொள்ளுதல் பற்றி...://
இன்று சமுதயாத்தில் சிலபேர் கண்ணிப்படுத்துதல் என்ற வார்த்தையெல்லாம் தாண்டி.தன் சுய நலனுக்காக.தரமான மார்க்கத்தை கற்று மக்களுக்கு போதிக்கக் கூடிய மார்க்க போதகர்களை. கேவலப் படுத்தி, இட்டுக்கட்டி கண்ணியக் குறைவாக நடத்தக் கூடிய மிருகங்களாக மாறி விட்டார்கள். என்பதுதான் வேதனைக்குரிய விசயம்.
இந்த அருமருந்தை நம் தற்காலத் தலைவர்களிடம் கொடுத்து பின்பற்றச் சொன்னால் தொண்டர்களிடம் மாற்றம் கிடைக்கும்.
நன்றி, அலாவுதீன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
பல வருடங்களுக்கு பின் உங்களை ஊரில் நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
Post a Comment