அல்லாஹ்வின் திருப்பெயரால்…
கடந்த 22-08-2012 அன்று அதிரைநிருபரின் பங்களிப்பாளர் எங்கள் மூத்த சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களின் இல்லத்தில் மாலை 05:00 மணி முதல் 06:30 வரை நடைபெற்றது. இந்த அதிரை வலைஞர்கள் சந்திப்பில் அதிரை வலைத்தளங்களின் முக்கிய பங்களிப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களையும் அனுவபங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் மூத்த வலைஞர்கள் சகோதரர்கள் இபுராஹீம் அன்சாரி, அதிரை அஹமது, அதிரை ஜமீல் M.சாலிஹ், S.அலாவுதீன் இவர்களுடன் இணைந்து S.ஹமீத், சேக்கன்னா M.நிஜாம், A.R.ஹிதாயத்துல்லாஹ், ஹஸன், M.S.M.நெய்னா முஹம்மது, M.தாஜுதீன், L.M.S.அபூபக்கர்,
அபுஈஸா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மூத்த வலைஞர் சகோதரர் ஜமீல் அவர்கள் அதிரைநிருபர் மற்றும் அதிரை எக்ஸ்பிரஸ் தளங்களின் செயல்பாடுகள் பற்றி அனுபவப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை வழங்கியதோடு அல்லாமல், பத்திரிகைதுறை தொடர்பான அறிய பல தகவல்களை இளம் வலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அதிரை வலைஞர்களிடம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை மிக ஆழமாக எடுத்துரைத்தார்கள். அதிரைக்கு என்று ஓர் அச்சுப் பத்திரிக்கை உருவாக வேண்டும் என்று தனது கோரிக்கையை அதிரை வலைஞர்களிடம் வைத்தது, இதற்காக தானும் அதிரை அஹமது அவர்களும் பக்கபலமாக இருந்து முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னது இந்த சந்திப்பின் முக்கிய சிறப்பு என்று சொல்லலாம்.
மூத்த வலைஞர் சகோதரர் அதிரை அஹமது அவர்கள் தங்களின் கருத்தை மிகப் பொருமையாக எடுத்து வைத்தார்கள். ஊடகத்துறையில் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடாது, நிதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் ஏற்ற இதமான அறிவுரையை வழங்கினார்கள். மேலும் சில வருடங்களுக்கு முன்பு வலைஞர்களிடம் ஒற்றுமை ஏற்பட எடுக்கப்பட்ட முயற்சிகள் பற்றி பகிர்ந்து கொண்டார்கள்.
சகோதரர் MSM நெய்னா அவர்கள், எல்லோரும் தங்களின் இளம் வயதில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களை பதிவுகளாக எழுத வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர்கள் சகோதரர்கள் அதிரை அஹமது, இபுராஹீம் அன்சாரி, அலாவுதீன் மற்றும் அனைவரின் ஆக்கங்கள் மிக சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டினர். மேலும் அதிரைநிருபரில் வெளிவந்து எல்லோருடைய பாராட்டையும் பெற்ற சகோதரர் அலாவுதீன் அவர்கள் எழுதிய மிக பிரபலமான "கடன் வாங்கலாம் வாங்க" என்ற தொடர் பதிவையும், மூத்த சகோதரர் இபுறாஹீம் அன்சாரி அவர்களின் "மனுநீதி மனித குலத்துக்கு நீதியா?" அலசல் தொடர் பதிவையும் புத்தகமாக வெளியிட தகுதியானவை என்று மூத்த சகோதரர் ஜமீல் அவர்களும் இன்னும் பிற வலைஞர்களும் சிலாகித்து பாராட்டி சொன்னது முக்கிய சிறப்பம்சமாகும் என்று குறிப்பிட்டு சொல்லலாம்.
இந்த சந்திப்பின் நிகழ்வுகளை சிறிதாக தொகுக்கப்பட்ட கருத்துக்கள் யாவும் விவாதிக்கப்பட்டவைகளே அதிரை வலைத்தளங்களின் செயல்பாடுகளை மேன்படுத்துவதற்கும் புரிந்துணர்வை அதிகரிக்கவும் மட்டுமே அன்றி யாரையும் தாழ்த்தவோ அல்லது உயர்த்தவோ அல்ல.
மூத்த மற்றும் இளம் வலைஞர்களின் இந்த சந்திப்பு மொத்தத்தில் அனைவருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்தது என்று சொல்லலாம். இது போன்ற அதிரை வலைஞர்களின் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்றால் புரிந்துணர்வுகள் நம் வலைஞர்கள் மத்தியில் நிலைக்கும் என்று நம்பலாம் இன்ஷா அல்லாஹ்.
அதிரைநிருபர் குழு.
31 Responses So Far:
முதலில் வாழ்த்துக்கள் !
அப்படின்னா யு.ஏ.இ.ல் அதிரை வலைஞர்கள் சந்திப்பு வைச்சுக்கலாமா ?
//அப்படின்னா யு.ஏ.இ.ல் அதிரை வலைஞர்கள் சந்திப்பு வைச்சுக்கலாமா ?//
இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்; சிந்திக்கலாம்.
இவ்வரிய சந்திப்பில் ஊரில் இல்லாமற் போனது எனக்கு வருத்தமாக உள்ளது.
யு.ஏ.இ.ல் அதிரை வலைஞர்கள் சந்திப்பை நீங்கள் ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறையில் வைத்தால், என்னால் கலந்து கொள்ள இயலாது (இன்ஷா அல்லாஹ் அக்குறு விடுப்பில் தாயகம் செல்ல உள்ளேன்).
//இந்த சந்திப்பில் மூத்த வலைஞர்கள் அதிரை அஹமது, அதிரை ஜமீல் M.சாலிஹ், இபுராஹீம் அன்சாரி, S.அலாவுதீன் இவர்களுடன் இணைந்து M.S.M.நெய்னா முஹம்மது, அபுஈஸா, L.M.S.அபூபக்கர், A.R.ஹிதாயத்துல்லாஹ், சேக்கன்னா M.நிஜாம், ஹஸன், S.ஹமீத், M.தாஜுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.//
இவர்களில் மு.செ.மு.நெய்நா முஹம்மத், ஹஸன், எஸ்.ஹமீத் ஆகியோரைக் காண வேண்டும் என்ற என் நீண்ட நாள் விருப்பம் நிறைவேறுமா?இன்ஷா அல்லாஹ் ஹஜ்ஜுப் பெருநாளில் ஊரில் இருப்பார்களா?
புகைப்படத்திற்கு ஏற்றவாறு பெயரை வரிசைப்படுத்தினால் தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்..
//புகைப்படத்திற்கு ஏற்றவாறு பெயரை வரிசைப்படுத்தினால் தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்..//
ஆமாம்.
தவிர, நம்மால் கலந்துகொள்ள இயலாதது இழப்பே.
கலந்துகொண்டு சிறப்பித்த சகோதரர்களுக்கு வாழ்த்துகள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த முக்கிய சந்திப்பின் மூலம் மூத்த சகோதரர் இபுறாஹிம் அன்சாரி, ஜமீல் காக்கா, அலாவுதீன் காக்கா, எஸ்.ஹமீத் காக்கா மற்றும் நீண்ட நாட்களுக்குப்பின் சகோதரர்கள் சேக்கன்னா நிஜாம், அபு ஈஸா, தாஜுத்தீன், எல்.எம்.எஸ். அபுபக்கர், ஹிதாயத்துல்லாஹ், ஹசன் இவர்களை எல்லாம் ஒரே சந்திப்பில் தென்றல் வீசும் ஒரு அழகிய அந்தி மாலைப்பொழுதில் சந்தித்ததில் பெருமிதம் கொள்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்....
இது போன்ற சந்திப்புகள் அவ்வப்பொழுது நடத்தப்பட்டு நம் குறைகள் ஏதேனும் இருப்பின் களையப்பட வேண்டும். ஒரு நல்ல புரிந்துணர்வு நமக்குள் ஏற்பட வேண்டும். ஊடகத்துறையில் நாமெல்லாம் நல்ல முறையில் கால் பதித்து ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நம் மண் பண்பட வேண்டும். ஊரில் அமைதி நிலவ வேண்டும். அல்லாஹ்வின் நல்லருள் நம் மீது பொழியப்பட வேண்டும். இதுவே என் தனிப்பட்ட கருத்தாக இங்கு பதிய விரும்புகிறேன்.
இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் இனிய சலாமும், நல் வாழ்த்துக்களும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அதிரை அஹமது சாச்சாவை இங்கு குறிப்பிட விட்டு விட்டேன். பிழைப்பொருத்தருள்க....
//புகைப்படத்திற்கு ஏற்றவாறு பெயரை வரிசைப்படுத்தினால் தெரிந்த பெயர்களையும் தெரியாத முகங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்..//
done !
முதல் வரிசையிலிருந்து இடமிருந்து வலமாக அடுத்து இரண்டாவது வரிசையில் இடமிருந்து வலமாக என்று பங்கெடுத்தவர்களின் பெயர்கள் பதியப்பட்டுள்ளது.
ஏன்பா காக்காமார்களா...திருவள்ளுவர் கேள்வி ஞானம் வேண்டுமென்று சொன்னதால் சில கேள்விகள் கேட்கின்றேன்..
1) வலைஞர்கள் என்று பெயர் சூட்டியுள்ள நாம், ஏன் கூகுல் மச்சான் நமக்கு பரிசாக கொடுத்துள்ள "Google+ Hangouts" மூலம் வெளிநாட்டு வலை தலைகளையும் காணொளி கலந்துரையாடலுக்கு(video conferencing) இணைத்திருக்கக்கூடாது?
2) ஊருக்கு விடுப்பில் வந்திருக்கும் சில தலைகளையும் கூப்பிட மறந்துவிட்டதாக பெயர் தென்படாததால் தெரிகின்றது..
3) வலைஞர்கள் சந்திப்பு நடக்கவிருப்பதை தளத்தில் பதிவாக வெளியிடாவிட்டாலும், 'நமதூர் வலை தலைக'ளுக்கென்று மின்னஞ்சல் குழு ஏற்பாடு செய்து அதில் அறிவிப்பு செய்தால் ஊரில் இருக்கும் தள தலைகள் விடுபடபோவதுமில்லை, காணொளி கலந்துரையாடலுக்கு கலந்துகொல்பவர்களும் தயாராக இருப்பார்கள், எத்துனை பேர் இபுறாஹீம் மாமா வீட்டிற்கு தேங்காய்ப்பால்(ரொம்ப முக்கியம்) நோன்பு கஞ்சி அருந்த வருகின்றார்கலென்று தெரியுமல்லவா!
4) கலந்துரையாடலில் பேசப்பட்ட ஏதாவதொரு சிறப்பம்சத்தை(எ.கா.அதிரை நாளிதழ்) செயல்படுத்த இன்னும் ஒரு வருடம் ஏன் காத்திருக்க வேண்டும்?குழுமத்தில் கூடினால் எளிதாக முடியுமே.. சாப்பிட்டுவிட்டு எமிரேட்ஸ் விமானத்தை பிடித்ததும் அப்புறம் ஷேக் ஹேன்ட்(Shake Hand) பண்ணினதெல்லாம் மறந்துபோய் துபாய் ஷேக்கும், பேக்கும்தான் நியாபகத்திற்குவரும் என்பது நமக்குள் எழுதப்படாத விதி..
எனக்கு கேள்வி ஞானம் இருக்குன்னு இப்பவாச்சும் திருவள்ளுவரோ அல்லது காதை திருவிய தமிழ் வாத்தி'யாரோ அல்லது கவி.காகோ.சபீர் அபூ ஷாருக்கோ ஏற்றுக்கொள்ளவேண்டும்..இல்லாவிடில் ஏற்றுக்கொல்லாததிற்கும் கேள்வி கேட்பேன்..ஆம்..மா...
வலைஞர்கள் சந்திப்பு நல்ல சந்தோசமான விஷயம் ..
அதிரைக்கென ஒரு பத்திரிகை ..நல்ல முயற்சி ..
மீண்டும் சந்திப்பு நிகழுமானால் உள்ளூர் இளம் பத்திரிக்கையாளரையும்
அழைத்துக்கொள்ளுங்கள் ..எழுத்தின் மூலம்
உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் நாம் சந்திப்பின் மூலம்
மேலும் உறவை மேம்படுத்தி கொள்வது சந்தோஷமான விஷயம்
தொடரட்டும் நன்முயற்சி ...
அதிரை வலைதளங்கள் ..
.ஆசிரியர் நிறைந்த வகுப்பறை .
அதிரை வலைத்தளங்கள் ...
புத்திசாலிகளின் ஊர்வலம் ..
பாமரனின் வேடிக்கை ...
அதிரை வலைத்தளங்கள் ..
ஊருக்கே வைக்கும் பந்தி ..
வீட்டிற்கு மட்டும் ...!
அதிரை வலைத்தளங்கள் ...
தலைவர்களின் ஆர்ப்பாட்டம் ..
தொண்டனின் அமைதி ...
அதிரை வலைத்தளங்கள்
அறைக்குள் அதிரும் சப்தம் ..!
அதிரை வலைத்தளங்கள்
உலகிற்கே பிரகாசிக்கும் ஊடகம்
ஊருக்கு மட்டும் ..
என்று பிரகாசிக்கும் ..
வலைஞர்கள் சந்திப்பிற்கு பிறகோ ...!
சந்திப்பு நல்ல சந்தோசமான விஷயம் ..வலைஞர் சகோதரர் B,B,C, முஹம்மது கானுமே?
தம்பி மீராஷா கேட்கும் கேள்விகள் விவரமானதாக இருப்பதால் இந்த இரண்டாவது பின்னூட்டமும் அவருக்கு "ஆமாஞ்சாமி"தான்.
உப்பு பத்தலையோ !?
ஜாஸ்தியாயிடுச்சேன்னு சொல்லிடுவாங்களேன்னு குறைவா இருக்கேன்னு கேட்காமலிருக்க உப்பு போட்டோமா போடலையான்னு ஆளாலுக்கு சட்டியை உத்துப்பார்த்துட்டு உப்பு போடாம இருந்தா சரி...
எல்லாமே நல்ல குறிப்பு தான் நோட் செய்துக்குவோம்... வலையில் சிக்காமலா போயிடுவாங்க ! :)
புன்னகைக்கும்
பன்னிரன்டு,இதில்
ஆதி அன்சாரி காக்கா
இறுதி (ஈசா) அப்துல் காதர்
இவர்கள்
இன்று அறிந்த உள்ளங்கள்.
சங்கமித்த அனைத்து உயர் நல்லுள்ளங்களுக்கு வாழ்த்துக்களும், சலாமும்,
மேலும் அங்கு உதித்த நல்ல நிய்யத்துகள் நடைமுறைக்கு வர அவாவும், துஆவும்.
நன்மையான சந்திப்பு .....
அபு ஈசா நண்பன் அப்துல் காதர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி ...
அஸ்ஸலாமு அலைக்கும் காதர் ......நலம் நலமறிய ஆவல் .
அஸ்ஸலாமு அலைக்கும்,
இது போன்ற அமர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் வலைஞர்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும். இன்ஷா அல்லாஹ்...
முகம் தெரியாமல் பல நாட்கள் உரையாடிக் கொண்டிருந்தவர்களை அருகருகே சந்தித்து பேசியது கலந்துக்கொண்ட அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியே.
சகோதரர் மீராசா...
அஸ்ஸலாமு அலைக்கும்,
நீங்கள் அழகாக நகைச்சுவையாக கேள்வி கேட்டமைக்கு மிக்க நன்றி.. இந்த அமர்வை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். உங்களின் சில கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்.
இந்த அமர்வு மிக குறிகிய ஒரே நாளில் நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது, கிடைந்த குறைந்த பட்ச நேர அவகாசத்தை வைத்து அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நீங்கள் சொல்லும் google மாமா மச்சான்களின் உதவியை பயன்படுத்தியிருந்தாலும் அதற்கு நீண்ட திட்டமிடல், காலம் நேரம் அவசியம் என்பது உங்களுக்கு தெரியும் தானே... ஆனால் நிச்சயம் அது சாத்தியம்...
ஊரில் இருந்த மேலும் சில வலைஞர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது, சிலர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. விடுப்பில் வந்த தலைகள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. மேலும் ஒரிருவர் ஊரில் உள்ளார்கள் என்ற செய்தி அமர்வு நடைப்பெற்றிருக்கும் போதுதான் தெரியும் அவர்களும் ஊரில் உள்ளார்கள் என்று.
தற்போதிருக்கும் சூழலிலும்கூட புரிந்துணர்வு வலுபெற வேண்டும். ஒரு வலைத்தளத்தினருக்கு மற்றொரு வலைத்தளத்தினர் மேல் உள்ள வீண் சந்தேகங்கள் கலையப்பட வேண்டும். மேலும் வீண் சந்தேகங்கள் மற்றும் காழ்புணர்வு உண்டாக்குபவர்களை கண்டறிந்து அவர்களை ஓரேடியாக ஓரங்கட்டாமல் திருத்த முற்படவேண்டும். இதற்கு இது போன்ற அமர்வுகள் அவசியம் தேவை..
எல்லாவற்றிக்கு மேல் சரியான கொள்கை மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய commercially supported ஊடகம் மட்டுமே வலுவான ஊடகமாக உருவாக முடியும் என்பது என்னை போன்றவர்களின் நிலைபாடு அது அச்சு ஊடகமாக இருந்தாலுமே...
மாஷா அல்லாஹ் நம்மூர்லே இவ்வளவு பதிவர்கள் இருக்காங்களா, மேலும் சிலபேர் இங்கே இல்லை. பல பெரிய மூத்த பதிவர்களை அறியதந்தமைக்கு மகிழ்ச்சி, பதிவர்கள் பரந்த மனப்பான்மையும் தொலைநோக்கு பார்வையும் கொண்டவர்கள், எந்த நல்ல முடிவையும் நம்பிக்கையோடு செயல்படுத்த வல்லவர்கள், அதிரைப்பட்டினத்தில் அனைத்து பதிவர்களையும் இணைத்து அதிரை வலைபதிவர்கள் குழுமம் என்ற பெயரில் குழுமத்தை ஆரம்பித்து ஒரே மெயில் குரூப்பின் கீழ் கொண்டுவந்து(Email Group) Email Communication ஏற்பாடு செய்தால் நலம், இதன் மூலம் ஊரில் பல நல்ல காரியங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்...
// //அப்படின்னா யு.ஏ.இ.ல் அதிரை வலைஞர்கள் சந்திப்பு வைச்சுக்கலாமா//
இதையே அதிரைநிருபர் குழுமத்தினரிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன், கூடிய விரையில் நடக்கும் இன்ஷா அல்லாஹ்
//
- ஒரு வலைத்தளத்தினருக்கு மற்றொரு வலைத்தளத்தினர் மேல் உள்ள வீண் சந்தேகங்கள் கலையப்பட வேண்டும்.
- மேலும் சகபதிவர்கள், வலைத்தளங்கள் மீது வீண் சந்தேகங்களையும் மற்றும் காழ்ப்புணர்வுகளையும் உண்டாக்குபவர்களை கண்டறிந்து அவர்களை ஓரேடியாக ஓரங்கட்டாமல் அவர்களை திருத்த முற்படவேண்டும்.//
I fully agree with this !
இத்தகைய சகோதரர்களுக்கு புரிந்துணர்வுடனும் சகிப்புத்தன்மையுடன் கூடிய நல்லெண்ணங்கள் கொண்டவர்களாக இருக்க வல்லமை நிறைந்த அல்லாஹ் நல்லருள் புரிவானாக !
Good attempt.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இது போன்ற அமர்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டால் வலைஞர்கள் மற்றும் வலைத்தளங்களுக்கு மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட நல்ல வாய்ப்பாக அமையும். இன்ஷா அல்லாஹ்...
//அப்படின்னா யு.ஏ.இ.ல் அதிரை வலைஞர்கள் சந்திப்பு வைச்சுக்கலாமா//// WHY NOT..
தாஜுதீன் சொன்னது…
//இந்த அமர்வு மிக குறிகிய ஒரே நாளில் நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது, கிடைத்த குறைந்த பட்ச நேர அவகாசத்தை வைத்து ஏற்பாடு செய்யப்பட்டது//
ஓஹோ..நான் நினைத்தேன் இது வருடா வருடம் நடக்கும் நிகழ்சியல்லவா! அதனால் எப்படி விடுபட்டுபோனதென்று.
காரணம், சென்ற வருட ராமதானில் இதுபோல் ஒரு சந்திப்பு என் திருமணத்திற்கு ஓர் இரு நாட்களுக்கு முன்பும் நடைப்பெற்றதென்று நினைகின்றேன்..
அதன் தொடர்ச்சிதானே இதுவென்று எண்ணியதால் "ஏன் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை?" என்று தோன்றியது.. அவ்ளோத்தான்...
// விடுப்பில் வந்த தலைகள் என்று யாரை குறிப்பிடுகிறீர்கள்//
அவைகளில் சில:
கரீம் சாச்சா(அபூ சுஹைமா)
ரியாஸ் மச்சான்(அதிரை.இன்)
தம்பி முபீன்(பதிவர்)
வலைகலத்திற்கு இவர்களது பங்கு அதிகம் உண்டு என்பதால் எதிர்பார்த்தேன்.. ஆகையால்தான் மின்னஞ்சல் அழைப்பும் சிறப்பு என்றேன்..
நம்மவர்கள் சந்தித்துக்கொள்வது அத்தி பூத்தாற்போல் ஏற்படும் செயல் என்பதால் இன்ஷா அல்லாஹ் இனி வரும் ஹஜ்ஜு பெருநாளிலோ, நோன்பு பெருநாளிலோ நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்வோம்..
//இனி வரும் ஹஜ்ஜு பெருநாளிலோ//
இன்ஷா அல்லாஹ் அவ்வண்ணம் அமையுமானால் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்; இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளில் அடியேன் தாயகம் வர இருப்பதால், நீங்கள் குறிப்பிட்டவர்களில் அன்புத் தம்பிகள் அப்துல் கறீம், ரியாஸ் மற்றும் நான் முன்பு குறிப்பிட்ட அன்புச் சகோதரர்கள் மு.செ.மு. நெய்நா, ஷா.ஹமீத், ஹஸன் ஆகியோரை நான் காண பேரவாக் கொண்டுள்ளேன்.
அன்புத் தம்பி தாஜூத்தீன் (அதிரை நிருபர்):
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளி அவ்வண்ணம் கலந்துரையாடல் இருக்குமானால் முற்கூட்டியே பதிவர்கட்கு மின்மடலில் அறிவிப்புச் செய்து விட்டால், விடுப்பை ஆயத்தமாக்குவதற்கும்; பயணச்சீட்டு உறுதி செய்வதற்கும் வசதியாக அமையும் என்று கருதுகின்றேன்.
//அதிரைப்பட்டினத்தில் அனைத்து பதிவர்களையும் இணைத்து அதிரை வலைபதிவர்கள் குழுமம் என்ற பெயரில் குழுமத்தை ஆரம்பித்து ஒரே மெயில் குரூப்பின் கீழ் கொண்டுவந்து(Email Group) Email Communication ஏற்பாடு செய்தால் நலம், இதன் மூலம் ஊரில் பல நல்ல காரியங்கள் செயல்படுத்த ஏதுவாக இருக்கும், இன்ஷா அல்லாஹ்.//
அருமையான, ஆக்கபூர்வமான ஆலோசனை. சகோ.அப்துல் மாலிக் அவர்கள் எப்பொழுதும் எதிர்காலத் திட்டமிடல் சிந்தனை கொண்டவராக இருப்பதும், ஆதாரத்துடன் பேசும் திறன் உள்ளவராகவும் இருப்பதை அவர்களை நான் பல அமர்வுகளில் கண்டு கணித்துள்ளது, இன்று நிதர்சனமாகக் காணலாம். இந்த ஆலோசனையை இன்ஷா அல்லாஹ் செயல்படுத்தினால் பதிவர்கள் எல்லார்க்கும் ஒரே நேரத்தில் கிடைக்கும் தகவல் பரிமாற்றம்; அதனால் உருவாகாது ஏமாற்றம்!
வலை அறிஞர்களின் சந்திப்பு,மூத்த அறிஞர்களின் சிந்திப்பு,அனைவரது யோசனை,குறிப்பாக அஹமது சாச்சாவின் யோசனை,மற்றும் எல்லா பின்னூட்டங்களும் அருமை.அந்த யோசனைகளை செயல் படுத்த ஆரம்பித்து,இன்ஷா அல்லாஹ் எதிர்கால சந்ததியினரை விழிப்புணர்வு கொண்டவர்களாக ஆக்குவோம்,வல்ல ரஹ்மானின் துணை கொண்டு.
அமெரிக்காவில் வாழும் அன்புச் சகோதரர்கள்- பதிவர்கள்:
தலைத்தனையன்(முஹம்மத் தமீம்)
அர.அல. (அப்துல்லத்தீஃப்)
க்ரவுன்(முஹம்மத் தஸ்தகீர்)
தமிழூற்று அதிரை சித்திக்
கவிஞர் என்.ஷஃபா அத்
கனடா அபூபக்கர்
ஆகியோரைக் காண பேரவா. இருப்பினும் தாயகம் வர தாமதம் ஆகும் சூழ்நிலை இருப்பதால்,இன்ஷா அல்லாஹ், அங்கு இதுபோன்றதொரு கலந்துரையாடல் செய்து “காணொளி”யை அனுப்பி வைத்தால் நாங்களும் கேட்கலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
வலைஞர்கள் கரையோரம் மட்டுமே வலை வீசி கொண்டிருக்காமல் ஆழ் கடல் வரை சென்று அரிய முத்துக்களை அள்ளி வருவார்களென்று நம்புகிறேன்.
அப்தூல் காதிர்தான் அபூ ஈஸா என்பதை இப்போதுதான் அறிகிறேன். பல வருடங்களுக்குப் பின் ஊரில் சந்தித்துப் பேசிக்கொண்டேன்.
வலைஞர் சந்திப்பு நடக்க இருப்பதாக நிகழ்வு நாளன்றே அறிந்தேன். எனக்கு அழைப்பு இல்லாததாலும் வேறு பணிகள் இருந்ததாலும் கலந்து கொள்ள முடியவில்லை.
Post a Comment