Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஈத் பெருநாள் - ஓர் இஸ்லாமியப் பார்வை 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 17, 2012 | , , ,



பண்டிகை, கொண்டாட்டம் என்பது மனித வாழ்வில் இயற்கையாகவே பதியப்பட்ட ஒன்றாய் இருக்கிறது.. எல்லா மனிதர்களுமே  ஒரு தினத்தினை சிறப்பானதாக்கி  கொண்டாடிவருவதும்  வாடிக்கையாய் உள்ளது.

பொதுவாக இன்று உலகத்தில் பண்டிகை, கொண்ட்டாட்டம் என்பது உலக சம்பந்தப்பட்ட  விஷயங்களுக்காகவே  நடைபெறுகிறது. உதாரணமாக  வருடப்பிறப்பு, அறுவடைத்திருநாள், பருவநிலை மாற்றத்திற்கு  விழா, ஆசிரியர் தினம், சுதந்திரதினம்  என அடுக்கிக்கொண்டே  போகலாம். பெரும்பாலும்  அதுபோன்ற விழாக்களில்  மதம் சார்ந்த பண்டிகைகள் இருப்பதையும்  காணமுடிகிறது . இவற்றில் இஸ்லாமியர்களின்  பண்டிகை முற்றிலுமாக வேறுபடுகிறது.

இன்று முஸ்லிம்கள் மத்தியில் மற்ற கலாச்சாரங்களின்  பாதிப்பால்  ஏராளமான  பண்டிகைகளும் , சடங்குகளும் மலிந்துள்ளன.  ”ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பண்டிகை உள்ளது, இது உங்களுடைய (முஸ்லிம்களுடைய) பண்டிகை என்று நபி (ஸல்) அவர்கள், இரண்டு ஈத் பெருநாட்களை சுட்டிக் காட்டியுள்ளதை  கவனத்தில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

முஸ்லீம்களுக்கு ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளும்   ஈதுல் அழ்ஹா எனும் ஹஜ் பெருநாளையும்   தவிர வேறேதும் கொண்டாடும் வகையில் பண்டிகைகளோ அல்லது தினங்களோ கிடையாது என்பதை பின் வரும் ஹதீஸ் வலுவாக எடுத்துரைக்கிறது .

நபி (ஸல்) அவர்கள் மதீனா சென்றிருந்தபோது  அங்குள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட இரு தினங்கள் விளையாட்டிலும், கொண்டாட்டங்களிலும்  கழித்தனர். அப்போது  நபி (ஸல்) அவர்கள் அந்த நாட்களைப்  பற்றிக் கேட்டார்கள். அதற்கவர்கள், “நாங்கள் ஜாஹிலிய்யா காலத்திலிருந்தே  இதுபோன்ற விழாக்களில்  ஈடுபடுவது வழக்கம்"  என பதிலுரைத்தனர். நபியவர்கள்  சொன்னார்கள்  "அல்லாஹ் உங்களுக்கு இவைகளை விட மிக சிறப்பான ( ஃபித்ர் மற்றும் அழ்ஹா ) தினங்களை கொடுத்திருக்கிறான்  என்று.     (அறிவிப்பாளர்   அனஸ் (ரலி) நூல்  - அபுதாவூத் )
இவ்வாறு நமக்கு வழங்கப்பட்டுள்ள  ஈத் பெருநாள்களின்  போது நாம் பின்பற்ற  வேண்டிய பண்புகள் பற்றி நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகிறது. நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த  வழிமுறையினை  பின்பற்றுவது முஸ்லிமாகிய நம் அனைவர் மீதும் தலையாய கடமையுமாகிறது .

குளிப்பு:  பெருநாளன்று  தொழுகைக்கு செல்வதற்கு முன் குளிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது . சயீத் இப்ன் ஜுபைர் அவர்கள் ," பெருநாளன்று  மூன்று விசயங்கள் ஸுன்னத்துகளாக கருதப்படும் அவையானது, 

1) (தொழுகைக்காக ) நடந்துசெல்வது .
2) குளிப்பது 
3) தொழுகைக்கு செல்லும் முன் சிற்றுண்டி அருந்துவது.” என அறிவிக்கிறார்கள் .

தொழுககைக்கு முன் உணவு:  ஈது பெருநாளன்று யாரும் நோன்பு நோற்கக்கூடாது , நோன்பு காலம் முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும்  பொருட்டும் ,  அந்நாளில் அனைவரும் உண்டு மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்கான அடையாளமாகவும் பெருநாளன்று காலை தொழுகைக்கு முன்பாக சிற்றுண்டி அருந்தவேண்டுமென்பது  அவசியமாகிறது .
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக  புஹாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்,

"நபி (ஸல்) அவர்கள் ஈதுல் ஃபித்ர் தினத்தன்று காலையில் சில பேரீத்தம் பழங்களையாவது சாப்பிடாமல்  வெளியே செல்லமாட்டார்கள், மேலும் அவர்கள் பேரீத்தம்பழங்களை  ஒற்றைப்படையில் சாப்பிடுவார்கள்" என நமக்கு சொல்கிறது . (ஹஜ் பெருநாள் தினத்தன்று தொழுகைக்கு பின் உணவருந்துவது  நபிவழி )

தக்பிர் முழக்கம் : தக்பீர் முழங்குவது என்பது பின்பற்ற வேண்டிய சுன்னத்களில் மிகவும் அவசியமானதாயிருக்கிறது  ஏனெனில் அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான் ,

”..............................(நோன்பின் ) எண்ணிக்கையை நீங்கள் நிறைவு செய்வதற்காகவும் , அல்லாஹ் உங்களை நேரிய வழியில் செலுத்தியதற்காகவும்  நீங்கள் அவனுடைய மேன்மையைப்  போற்றி அவனுக்கு நன்றி பாராட்டுவதற்காகவுமே (இவ்வழி உங்களுக்கு காண்பிக்கப்படுகிறது  !) 2:185

எனவே பெருநாளன்று  தக்பீர் முழங்குவது அவசியமாகிறது. பிறை பார்த்ததிலிருந்து  இமாம் தொழுகையை முன்னிருத்தும் நேரம் வரையிலும் தக்பீர் சொல்வதற்குரிய  நேரமாக கருதப்படுகிறது. . 

அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் , லாயிலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து ( அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ்வைத்தவிர  வேறெந்தக் கடவுளுமில்லை ,அல்லாஹ் மிகப் பெரியவன் , அல்லாஹ் மிகப் பெரியவன் மேலும் அவனுக்கே புகழனைத்தும் ).

ஆடை அலங்காரம்: 

”ஒருமுறை உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில்  செல்லும் போது ஓர் உயர் ரக ஆடை (மேலங்கி) ஒன்று விற்பனைக்காக இருந்தது. ,அது பட்டுத்துணியால் ஆனது. இதனை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வாங்குமாறும், அந்த ஆடையை ஈத் தினத்தன்றும் மற்றும் அயல்நாட்டு தூதர்களை சந்திக்கும் போதும் உபயோகிக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கிய போது , நபியவர்கள்  " இது மறுமையில்  எந்த பங்கும் கிடைக்காத மனிதர் உடுப்பது " என மறுத்துவிட்டார்கள்  .  
( அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: புஹாரி)

உமர் (ரலி) அவர்களின் , ஒருவரின் தோற்றத்தினை  செம்மைப்படுத்தும்  யோசனையினை   அங்கீகரித்த நபியவர்கள்  பட்டுத்துணிக்குத் தடைவிதித்தார்கள். .

நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த  சிறந்த ஆடையையே ஈத் தினத்தன்றும் ஜும்ஆ தினங்களிலும் அணிந்ததாக  ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  .
ஆக நம்முடைய உடைத்தேர்வுகளில்  மிகுந்த கவனமாயிருத்தல்  வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரையில்  தொழுகைக்காக வெளியே செல்ல நேருமாயின் அலங்காரங்களைத் தவிர்த்தல் வேண்டும். . நாம் வெளியே செல்வது இறைவனைத் தொழவே ஆகையினால் மிகக் கவனமாயிருத்தல்  உகந்தது.  

ஒருவழி சென்று மறுவழி வருதல் :

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வதும், பாங்கு , இகாமத் ஏதுமின்றி தொழுவதும் , பிறகு தொழுகை முடிந்து வேறு வழியில் வீடு திரும்புவதையும்  வழக்கமாய் கொண்டிருந்தார்கள்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும்  ஹதீஸில், “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈத் தொழுகைக்காக சென்றுவர இருவேறு பாதைகளை உபயோகிப்பார்கள் ” என்று குறிப்பிடுகிறார்  . இந்த முறையையும் நாம் பின்பற்றுதல் வேண்டும்;

வல்ல இறைவன் நமக்களித்த இந்த ஈத் திருநாளில் அவனது தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகளைப்  பின்ற்றி , ஈகைத் திருநாளின் நோக்கத்தையும்  பொருளையும்  உணர்ந்து சிறப்பாக கொண்டாடி ஏக இறைவனின் உவப்பை பெறுவோம் !

ரஃபீக் சுலைமான்
புதுசுரபி

7 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அல்ஹம்துலில்லாஹ், நமது சகோதரர்களின் எழுத்து மார்க்க பனிகளுக்கு அதிமாக பயன்பட அல்லாஹ் அருள் புரிவானாக.

மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், சகோதரியே தொடர் என்ன ஆனது ? பேறுபெற்ற பெண்மணிகள் தொடர் இன்னும் வரவேண்டி இருக்கிறதே! படிக்கட்டுகள் முடிந்து விட்டதா ?

நாங்கள் தொடர்ந்து படித்து வந்த கட்டுரைகள் வரவில்லையே ஏன் ?

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், உங்கள் அனைவருக்கும் வேலைகளுக்கு நடுவே இந்த சேவையை செய்கிறீர்கள் இருந்தாலும் எங்களின் எதிர்பார்ப்புகளை தூண்டி விட்ட இவ்வகையான தொடர்களை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

சகோதரர்களே: என் கருத்தை அதிரைநிருபருக்கு ஈமெயில் மூலமாக எழுதிக் கேட்டிருப்பேன், எங்களைப் போன்றே மற்ற சகோதர சகோதரிகளுக்கும் இதே எண்ணங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் பொதுவில் காருத்தாக பதிந்து இருக்கிறேன்.

ZAKIR HUSSAIN said...

Va alaikumsalam..Sister Ameena.A.

'படிக்கட்டுகள்" தொடர் இன்னும் முடியவில்லை. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இதுவரை நான் எழுதியது வாசகர்களை இதுபோன்ற விசயத்தை கிரகித்துக்கொள்ள தயார் படுத்திய பதிவுகள்தான்.

இன்னும் எழுத விசயங்கள் நிறைய இருக்கிறது. இந்த பதிவு எழுதும் விசயத்தில் எனக்கும் அதிரை நிருபர் வலைப்பூ நெறியாளருக்கும் ஒரு உடன்பாடு 15 நாளைக்கு ஒரு எபிசோட் என்பதே. இருப்பினும் இந்த முறை நோன்பு / நான் அவசரமாக ஊர்போய் வந்த விசயங்கள் கொஞ்சம் தாமதமாகி விட்டது. இருப்பினும் இந்த பெருநாள் லீவில் நான் எழுதுகிறேன். நீங்கள் எல்லோரும் தரும் ஊக்கம் இன்னும் நல்ல விசயங்களை யோசித்து எழுதவைக்கிறது.

Anonymous said...

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அன்புச் சகோதரி அவர்களுக்கு:

அதிரைநிருபர் வலைத்தளம் மற்றும் அதன் பங்களிப்பாளர்கள் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்.

சகோதரியே தொடர் : சகோதரர் அலாவுதீன் அவர்கள் நீண்ட விடுப்பில் ஊர் சென்றுவிட்டு சமீபத்தில்தான் திரும்பியிருக்கிறார்கள் நிச்சயம் அதன் அடுத்தடுத்த பதிவுகளை தொடர்வார்கள் இன்ஷா அல்லாஹ்!

பேறு பெற்ற பெண்மனிகள் தொடர் : இன்னும் நிறைய இருக்கிறது தட்டச்சு செய்து பதிவுக்குள் கொண்டுவர தாமதமே, அல்ஹம்துலில்லாஹ் தற்போது அதன் soft copy கிடைத்திருக்கிறது ஈத்க்கு பிறகு தொடர்ந்து வெளிவரும் இன்ஷா அல்லாஹ்.

படிக்கட்டுகள் தொடர் : சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் விளக்கம் பதிந்திருக்கிறார்கள்.

தொடர்கள் நிறைய இருக்கின்றன, தினம் ஒரு பதிவு என்ற நெறியுடன் இருப்பதால் தாமதமாக வாய்ப்புகள் ஏற்படுகிறது இனி இதனை தளர்த்தி சூழலுக்கு ஏற்ப பதிவுகளை அதிகரிக்க இயன்ற வரை செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

தாங்கள் அனுப்பித் தரும் தனி மின்னஞ்சல்கள் அனைத்துமே எங்களுக்கு ஊட்டச்சத்து!

அல்ஹம்துலில்லாஹ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மார்க்க விஷயங்களில் அவையவைகளை எப்படி செய்ய வேண்டும் என்று நினைவூட்டலும் அதற்காக சிரத்தை எடுத்து பதிவுகள் எழுதி மற்ற சகோதரர்களுக்கு ஞாபகப்படுத்துவதும் நற்காரியமே !

பகிர்வுக்கு நன்றி!

sabeer.abushahruk said...

மார்க்க விஷயங்களில் அவையவைகளை எப்படி செய்ய வேண்டும் என்று நினைவூட்டலும் அதற்காக சிரத்தை எடுத்து பதிவுகள் எழுதி மற்ற சகோதரர்களுக்கு ஞாபகப்படுத்துவதும் நற்காரியமே !

பகிர்வுக்கு நன்றி!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மார்க்க விஷயங்களில் அவையவைகளை எப்படி செய்ய வேண்டும் என்று நினைவூட்டலும் அதற்காக சிரத்தை எடுத்து பதிவுகள் எழுதி மற்ற சகோதரர்களுக்கு ஞாபகப்படுத்துவதும் நற்காரியமே !
பகிர்வுக்கு நன்றி!

புதுசுரபி said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு