(*) பண்டிகை காலத்தில்
பாலகர் சிலருக்கும்
பெண்டிர் பலருக்கும்
பிடித்தது மருதாணி..
(*) ஐவிரல் தூணுடை
மாடத்தின் கூடத்தில்
அழகுற இடப்படும்
கோலமே மருதாணி..
(*) எவரது வீட்டினில்
மருதாணி இருக்கிறதோ...
அவரது வீட்டுக்கே
அனைவரும் ஏகுவர்..
(*) பறித்தலும்... இலைதரம்
பிரித்தலும்.... முடிந்தபின்
அரைத்தலும்... என்பதில்
அத்துணை ஆனந்தம்.
(*) இலையுடன் புளியும்
இட்டு அரைப்பதும்
தைலமும் சிறிது
தெளித்து அரைப்பதுமாக..
(*) இங்ஙணம் பலவகை
இன்பங்கள் கொடுத்திடும்
அங்ஙணம் அழகாய்
அரைத்த மருதாணி..
(*) செடியினில் பறிப்பதும்
செறிவுடன் அரைப்பதும்
அடியோடு இல்லாது
அழிந்ததை காணீரோ..!!
(*) அங்காடி கடைகளில்
அழகிய கோன்களில்
மங்கையர் விரும்பிடும்
மருதாணி கிடைக்குமாம்..
(*) ஒவ்வாது சிலருக்கு..
உருப்படியாய் வந்தாலும்
வெவ்வேறு நிறமாகும்
வெவ்வேறு தோலுக்கு..
(*) ஆயத்த மருதாணி
அரிப்பினை உண்டாக்கும்..
தீபட்ட இடம்போல
தழும்பினை உருவாக்கும்..
(*) உடம்பினில் மாறுதல்
உருவாதல் ஒருரகம்..
ஊடக பக்கத்தில்
புரளியோ பலரகம்..
(*) மருத்துவ குணமுள்ள
மருதாணி எனும்பெயரில்
உறுத்திடும் ஒருவகை
பசையுள்ள கூம்புகளில்
(*) வண்ணம் கிடைத்திடலாம்
வகைவகையாய் வரைந்திடலாம்..
சின்ன துளைவழியே
பெரிய துயர்வரலாம்..
(*) உண்மை பலன்கிடைக்க
சிறிதாய் முயன்றிடுவோம்.
பண்டைய வழியினிலே
பறித்து அரைத்திடுவோம்.
(*) அரைத்த பசையெடுத்து
கூம்பு செய்திடுவோம்..
நினைத்த வடிவங்களை
நிரப்பி மகிழ்ந்திடுவோம்!!
~அதிரை என்.ஷஃபாத்
19 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தம்பி வார்தை சித்தன் ஷபாதின் மருதாணி ஊர்வலம் இங்கே தமிழை அச்சாணிக்காலத்திற்கே இட்டு செல்லும் அழகிய எழுதோவியம். இனி வருவோம் ஒவ்வொன்றாக முதலில் என்றும் தமிழை இளமையாக இனிமையாக வடிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
ஐவிரல் தூணுடை
மாடத்தின் கூடத்தில்
அழகுற இடப்படும்
கோலமே மருதாணி.
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்னே கற்பனை!!!!ஐந்துவிரல்களும் தூணாகவும்,அதன் மாடத்தின்கூடத்தில்(உள்ளங்கையில்)அழாய் இடப்படும் கோலமே மருதாணி!தோடுத்திருகாணி சரியா திருகா இருக்கா?இல்லை திருகி இருக்கா?னு பார்க்காத மங்கயர்கூட திருனாளாம் பெருனாளைக்கு மருதாணி இல்லாதிருப்பதில்லை!
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ ,
மாஷா அல்லாஹ் !
பெண்களுக்கு ஆறுதலாகவும் அருமையாகவும் இப்படி ஒரு விளக்கமான கவிதை வடித்து உள்ளங்களை குளிரவைத்த சகோதரா தொடர்ந்து எழுதுங்கள் நீடுழி..
ஜசாக்கல்லாஹ் ஹைர் !
எவரது வீட்டினில்
மருதாணி இருக்கிறதோ...
அவரது வீட்டுக்கே
அனைவரும் ஏகுவர்..
-----------------------------------------------
ஆமாம்! மருதாணி கொள்ளையில் வளரும் வீட்டுக்கு
பெரியதோரு ஊர்வலமே நடந்திடும் இயல்பாக!அன்று கிடைத்த மருதாணியை நினைத்து பெரிதாஇனி ஏதும் சாதிக்கவேண்டியதில்லை எனும் நினைப்பில் சிறுமியர் மனம் மகிழ்வில் திளைப்பர்!
பறித்தலும்... இலைதரம்
பிரித்தலும்.... முடிந்தபின்
அரைத்தலும்... என்பதில்
அத்துணை ஆனந்தம்.
---------------------------------------------
இப்படியாக கவனமாய் பறித்து, பூச்சிகடி இல்லாத இலையாக பிரித்து, தேவையானவை வைத்து பக்குவமாய் அரைத்து எடுப்பதில் இருக்கும் ஆனந்தம்! இன்று ????? ஆயத்த(ரெடிமிக்ஸ்)பொடியில் இல்லாமல் போனது!-
--------------------தம்பி இப்படி மருதாணியை பக்குவமாய் அரைத்து குழைப்பது போல் மிருதுவாக தமிழை அழகாய் குழைத்து இப்படி கவிதை புனைந்துள்ளாய் எனக்கும் நிறைய கற்று தருவாயா?
இலையுடன் புளியும்
இட்டு அரைப்பதும்
தைலமும் சிறிது
தெளித்து அரைப்பதுமாக..
(*) இங்ஙணம் பலவகை
இன்பங்கள் கொடுத்திடும்
அங்ஙணம் அழகாய்
அரைத்த மருதாணி..
(*) செடியினில் பறிப்பதும்
செறிவுடன் அரைப்பதும்
அடியோடு இல்லாது
அழிந்ததை காணீரோ..!!
அங்காடி கடைகளில்
அழகிய கோன்களில்
மங்கையர் விரும்பிடும்
மருதாணி கிடைக்குமாம்..
(*) ஒவ்வாது சிலருக்கு..
உருப்படியாய் வந்தாலும்
வெவ்வேறு நிறமாகும்
வெவ்வேறு தோலுக்கு..
(*) ஆயத்த மருதாணி
அரிப்பினை உண்டாக்கும்..
தீபட்ட இடம்போல
தழும்பினை உருவாக்கும்..
(*) உடம்பினில் மாறுதல்
உருவாதல் ஒருரகம்..
ஊடக பக்கத்தில்
புரளியோ பலரகம்..
------------------------------------------------------------
இவ்வாறக பக்குவமாய் அரைத்தெடுக்கப்பட்ட மருதாணி எனும் இயற்கை முறை மறந்து கடையில் கிடைக்கும் சரக்காய் போன செயற்கை மருதாணி பலருக்கு அலர்சியெனும் நோயாகவும்.சருமத்தில் படரும் தோல் நோயாகவும் இருப்பது ஒருபக்கம். ஆங்கே கையில் வர்ணம் பூசும் இந்த பூச்சு கலவையை சில மதசாயம் எண்ணும் காவி வர்ணாசிரம சிந்தையின் மூலம் வதந்தி(தீ) எனும் தீயினை பரப்பி நம் மக்களின் சந்தோசம் பொசுங்க தம் ஊடகமெனும் பூச்சாண்டியை வைத்து நம் மக்களிடையே பேதியை கிளப்பி குளிர்காய்கிறார்கள்.
இப்படி சின்ன துளை வழியாக பெரிய துயர்""(தம்பி அருமை! இது எனக்கு கைபர் கணவாய் வழி வந்த பெரிய துயரான பிராமினிய நோய்தான் நினைவிற்கு வருகிறது)
இதுபோல் பல நோய்கள் நம்மை அனுகாதிருக்க தம்பி சொல்றத கொஞ்சம் கேளுங்க!
உண்மை பலன்கிடைக்க
சிறிதாய் முயன்றிடுவோம்.
பண்டைய வழியினிலே
பறித்து அரைத்திடுவோம்.
(*) அரைத்த பசையெடுத்து
கூம்பு செய்திடுவோம்..
நினைத்த வடிவங்களை
நிரப்பி மகிழ்ந்திடுவோம்!!
-----------------------------------------
தம்பி! நீ மருதாணி கவிதை மூலம் வொவ்வொரு விரலுக்கும் மோதிரமல்ல தங்க கிரீடமே அணிவித்துள்ளாய். இனி மறுத்தாளும் நீ அஸ்டவதானிதான்!வாழ்த்துக்கள்.
"பச்சை பொய்யை அரைத்து நம் முகத்தில் பூச நினைத்வர்களின் சாயம் வெளுத்துபோனதால் வெக்கத்தில் காவிமுகம் சிவப்பாய் போனதோ?
தம்பி ஷஃபாத் என்னமா கொஞ்சு விளையாடுகிறது தமிழ் உன் கவிதையில் ..மாஷா அல்லாஹ் என்ன திறமை....செயற்க்கை மருதாணியின் கேடுகளையும்,இயற்க்கை மருதாணியின் சிறப்புகளையும் சின்னக்கவிதையில் விலாவரியாக புரியும்படி செய்து இருக்கின்றாய்
//சின்ன துளைவழியே
பெரிய துயர்வரலாம்.// வாவ்
கொடுத்து கொடுத்து சிவந்த கைன்னு சொல்லுவாங்களே அதுதான் இதுவா ?
மருதாணியிட்டு இட்டு சிவந்த கை ! :)
ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கத்தான் கிரவ்ன் இருக்கானே ! அதனால் தேன் குடிக்க வண்டுகளுக்கு பாடம் எடுத்திருக்கே(டா)ப்பா ! :)
ச்செக்கச் செவேலெனச் சிவந்திருக்கு இப்பதிவு.
வாழ்த்துகள் ஷஃபாத்.
//ச்செக்கச் செவேலெனச் சிவந்திருக்கு //
இவ்வளவு சீக்கிரம் விரலை மடக்கிட்ட எப்புடி !?
To Bro அதிரை என்.ஷஃபாத்...
உங்கள் தமிழ்த்திறமை கண்டு நான் வியக்கிறேன். இருப்பினும் கிரவுன் பக்கத்தில் இருப்பதால் திறமைக்கு குறைவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் தமிழின் வீச்சு இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.
செக்கச் சிவந்த கரங்களால்
....செம்மொழிப் பிழியும் செழுமை
மிக்க மகிழ்ச்சி தருவதில்
....மிஞ்சிட முடியாப் புலமை!
மருதானியின் சி(வ)றப்பை ...
கவியால் கலக்கியது மிக அருமை
மருவன்டிக்............சூப்பர்
வாசிப்பிற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!!
அன்புடன்,
ஷஃபாத்
இவ்வளவு மருத்துவமும், அழகும் மெருகூட்ட பயன்படும் மருதாணியை போடாதீங்க என்று பீதிய கிளப்பிட்டாய்ங்க இந்த படுவா ராஸ்கோலு மீடியாக்கள்.. வார்த்தை கோர்வை அழகு சகோ... வாழ்த்துக்கள்
Post a Comment