"வாடா" இங்கே, நோன்பு கஞ்சி(யும்) கீழே ! - பேசும் படம்...
அதிரையில் ரமளான், அது என்றுமே பொற்காலம் ! என ஏங்க வைக்கும் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களுக்கு கண்ணுக்குள் எட்டும் வலைப்பூக்களெல்லாம் தங்களின் படைப்புகளாக நோன்பு கஞ்சியையும் பதிவுகளாக பதிந்தும் வருகின்றனர்...
அட ! நாமும் "வாடா" இங்கே நோன்பு கஞ்சி ! என்று ஒரு போர்டு போட்டுடலாமான்னு யோசனையில் இருக்கும்போது... நம் அதிரைநிருபரின் மூன்றாம் கண் அதிரை வாடாவோடும் நோன்பு கஞ்சியோடும் கொஞ்சியதையும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை...
"வாடா" என்றதும் உடனே அங்கே ஆஜரானதையும் கிளிக்கிக் கொண்டு வந்து உங்களின் பார்வைக்கு(ம்) பரவசத்திற்கும்...
குறிப்பு : நோன்பு வைத்திருப்பவர்கள் தயை கூர்ந்து நோன்பு துறந்த பின்னர் சாப்பிடவும் (!!!!!!! இதென்ன எங்களுக்கு தெரியாதான்னு கேட்டுறாதீங்க ப்ளீஸ்)
புதையுண்ட இறால்களை தேட ஒரு படையே கிளம்புகிறது !
இன்னொரு புளிய மரமா !?
S.ஹமீது
(அதிரையிலிருந்து)
21 Responses So Far:
"வாடா இங்கே"
இப்படி போர்டு போட்டால் பெரியவர்களின் ஆதரவு இருக்காதே, போர்டெ மாத்த சொல்லி நம்மலெ கஞ்சி காய்ச்சுவாங்களே!
வாடா அவர்களோடும் கஞ்சியோடும் வாங்க வந்த பிஞ்சுகளின் கண்களோடும் உங்க மூன்றாம் கண் கொஞ்சுவது கண் கொள்ளா காட்சி. சூப்பரு!
”வாடா இங்கே” என்றழைத்ததோ
வாடா அங்கே; அதனாற்றான்
நீ வரும்வரை நான் இல்லை;
நானிருக்கும் வரை நீ இல்லை!
காணத்தேடுகின்றன் என் கண்கள்
வாடாவைத் தேடியது உன் காமிரா கண்கள்
என்று நேரில் சந்திப்போமோ
அன்று வரை உன்றன் காமிரா கண்களில்
உன்னை நான் காண்கின்றேன்
வாடா ..
ஸ்பெசல் வாடா ரெண்டு ராலு
உள்ளிடம் கூடுதலாவச்சு சுட்ட மாதிரி
தெரியுது ...நோம்பு கஞ்சியில் பிச்சு போட்டு
கஞ்சியோடு குடித்த ஞாபகம் ..பார்த்ததும் வருகிறது
நோன்பு நாளில் இப்படி பெரிய சைசில் வாடா படம் இவ்வளவு துல்லியமாக போடுவது பாவம் நு 'பத்வா" யாரும் கொடுக்கலையா?...வேனும்னா நான் 'பத்வா" கமிட்டிக்கு ரெக்கமன்ட் செய்ரேன்.
நம் மனதையும் சேர்த்து கொலுவி இழுக்கும் வாடா கம்பி. இரால் வளைந்து படுத்திருந்தாலும் மனசை நிமிர வைக்கும். அலுமினியப்பாத்திரத்தில் குச்சி தட்டி சத்தம் போடும் பிள்ளைப்பருவம். சின்ன வயதில் எப்போதும் இருந்த இடம்....தூரத்தில் உடன் இருந்த நண்பர் இர்ஃபானின் முகம் அத்தனை போட்டோவும் தருவது......ஏக்கம்.
வாடா என்று அழைத்து,
வாடா கொடுத்தாலும்
போடா என்று சொல்ல மாட்டான்
அதிரை பட்டினத்து மகன்.
(வாடாவின் உள்ளடத்தில் TUNA FISH துனா மீனை வைத்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்)
அஸ்ஸலாமுஅலைக்கும்.
பீடா போட்டு சுகம் கண்டோர் ஆங்காங்கே காணீர்
சோடா குடிக்காத அரசியல் மேடைப்பேச்சாளர்
உண்டோ கூறுவீர்!
கடா திண்ணாத விடாகண்ட(ன்) இசுலாமியன்
இருக்காலாம்.
ஆனால் வாடா திண்ன வேனாம்(வொன்னா) என்றால்
வாடாத அதிரை மைந்தனும் உண்டோ?
அருமையான படபிடிப்பு.காமிராகவிஞர் நோம்பிலும் பசியை தூண்டிவிட்டார்! நோன்பு விருந்தும் நல்ல ரசனை விருதும் கொடுக்கலாம் போங்க!
"வாட" வை காண வந்த அனைவரையும் வாங்க வாங்க (வாடவை )என்று வரவேற்கின்றேன்
ZAKIR HUSSAIN சொன்னது…
//நோன்பு நாளில் இப்படி பெரிய சைசில் வாடா படம் இவ்வளவு துல்லியமாக போடுவது பாவம் நு 'பத்வா" யாரும் கொடுக்கலையா?...வேனும்னா நான் 'பத்வா" கமிட்டிக்கு ரெக்கமன்ட் செய்ரேன்.//
இப்படி எல்லாம் ரெக்கமன்ட் செய்தால் வாட கடைகாரர்கள் கொதிக்கும் எண்ணெயுடன் சாலை மறியலில் ஈடு படுவார்கள் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//காணத்தேடுகின்றன் என் கண்கள்
வாடாவைத் தேடியது உன் காமிரா கண்கள்
என்று நேரில் சந்திப்போமோ
அன்று வரை உன்றன் காமிரா கண்களில்
உன்னை நான் காண்கின்றேன்//
நேரில் காண முடியாத ஏக்கத்தின் தாக்கம் கவிதையில் தெரிகின்றது
இன்ஷா அல்லாஹ் ஆண்டவன் நாடினால் நேரில் சந்திப்போம்
அர அல சொன்னது…
//(வாடாவின் உள்ளடத்தில் TUNA FISH துனா மீனை வைத்து செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்)//
இது இததான் நேற்று நோன்புதிரந்தபோது சாப்பிட்டோம்
கடஅவுட் வைக்குமளவுக்கு பிரமாண்டமாகவும் பிரமாதமாகவும் வந்திருக்கிறது ஹமீது சுட்ட வாடா.
எப்பவோ எழுதியது:
//விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்//
ஹமீத் காக்கா,
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்க வீட்டு அருகில் வாங்கிய முதல் படத்தில் இருக்கும் 5 ரூவா வாடா நல்ல ருசி. :)
காக்கா இப்படி வாடாவை ஜூம் பண்ணி காட்டி வாட்டி எடுக்கிறீங்களே காக்கா...விட்டுட்டு சாப்பிடதிய..வயிறு வலிக்கும் :)..
// படத்தில் இருக்கும் 5 ரூவா// ஒரு வாடா 5 ரூபாயா...?? என்ன சொல்றீங்க...நான் 2 அல்லது 3ரூ என்று நினைத்திருந்தேன்
புளிய மரம் பசுமையாக இருக்கின்றது...சுத்தி மேடை எதுவும் கட்டிடாமே பார்த்துக்கொள்ளவேண்டும்
வாடாவுக்கு பெண்பால் என்ன? வாடி யா?
நாகூர் நடையழகு
முத்துப்பேட்டை முக அழகு
அதிரை ஆடையழகு
என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்; நிதர்சனமாகக் காண்கின்றேன்!
என்னமா ட்ரஸ் பண்ணௌகின்றார்கள் நம்ம பசங்க; இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேர்த்தியான டிசைன்களில் சட்டைகள் கிடைக்கின்றன!
ஹ்யூமர்- நகைச்சுவைக்கும், காஸ்ட்யூம்- உடை தெரிவு செய்தல் ஆகியவற்றில் நம் அதிரை பசங்க பலே கில்லாடிகள். பெருநாளைக்கு ஷா.ஹமீதின் காமிராச் சுட்டும் விழிச் சுடரை ஒரு ரவுண்ட்ச் அப் செய்து கொண்டால் நான் சொல்லும் உண்மை உங்கள் காமிராக்களில் வண்ணமயமாக வந்து விழும் பாருங்களேன்.
அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
நாகூர் நடையழகு
முத்துப்பேட்டை முக அழகு
அதிரை ஆடையழகு
என்று சொல்லக் கேட்டிருக்கின்றேன்; நிதர்சனமாகக் காண்கின்றேன்!
என்னமா ட்ரஸ் பண்ணௌகின்றார்கள் நம்ம பசங்க; இவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு நேர்த்தியான டிசைன்களில் சட்டைகள் கிடைக்கின்றன!
ஹ்யூமர்- நகைச்சுவைக்கும், காஸ்ட்யூம்- உடை தெரிவு செய்தல் ஆகியவற்றில் நம் அதிரை பசங்க பலே கில்லாடிகள். பெருநாளைக்கு ஷா.ஹமீதின் காமிராச் சுட்டும் விழிச் சுடரை ஒரு ரவுண்ட்ச் அப் செய்து கொண்டால் நான் சொல்லும் உண்மை உங்கள் காமிராக்களில் வண்ணமயமாக வந்து விழும் பாருங்களேன்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஆடை இல்லாதவன் அரை மனிதன். நல்ல ஆடை கொண்டவன் அதிரை மைந்தன்.
ஷாகுல் ! நீ அதிரையில் எனக்கு வாங்கி வந்த வாடாக்களில் இங்கு கதாநாயகன் அந்தஸ்து பெற்ற வாடாவும் ஒன்றுதானே! அதை நான் சாப்பிடவில்லை. பலபேர் கண பட்டது அது.
Could anyone know why is it called VAADAA
Post a Comment