Friday, January 10, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மற்றும் 3 21

ZAKIR HUSSAIN | September 18, 2014 | , , , ,

வீணாய்ப்போன சுதந்திரம்

சமீபத்தில் கடந்துபோன இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒவ்வொரு வாட்ஸப், இமெயில் எல்லாமே மிகவும் க்ரியேட்டிவ் ஆக இருந்தது. இந்திய சுதந்திரம் என்று தெரிந்தும் சிலர் நான் தமிழன்டா என மார்தட்டி மெஸ்ஸேஜ் அனுப்பினார்கள். [ சுதந்திர தினம் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும் என நினைக்கிறேன். ].

இப்போதெல்லாம் எது தேசபக்தி எது வெட்டிபந்தா என்ற வேறுபாடே தெரியாமல் போய்விட்டது.

எனக்கு வந்த மெஸ்ஸேஜ் எல்லாமே ஒரு விசயத்தை அதிகம் சொன்னது. ஹாட்மெயிலை கண்டுபிடித்தது இந்தியன் , நாசாவில் வேலை பார்ப்பவர்களில் அதிக சதவீதம் இந்தியர்கள், இந்தியர்கள் அதிகம் ப்ரோஃபசனிலிசம் சார்ந்த [மருத்துவம் , ஏவியானிக் , ஏரோநாட்டிக்கல் என் ஜினீயரிங் , பார்மாசூட்டிக்கல்] துறைகளில் சாதிக்கிறார்கள் என்று சிலிப்பினாலும்...ஒரு புறம் வளர்ச்சி மறுபுறம் கட்டி / காயம் என்பது உயிரைப்பலி வாங்கி விடாதா என்பது தான் முக்கியம்.


உலகத்தின் பல இடங்களில் இலைகளை ஆடைகளாக உடுத்திய காலத்தில் நாம் "நாலந்தா' பல்கலைக்கழகம் நடத்தியவர்கள் என்று பெருமை பேசுகிறோம்.

இதுவரை நாம் பெற்ற கல்வி நாம் எப்படி "ஒன்னுக்கு" போற விசயத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்று கூட சொல்லித்தரவில்லை. இந்தியாவில் மட்டும் 682 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இருபது மில்லியன் மாணவர்கள் ஒரு வருடத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். [அப்படி யென்றால் ஒவ்வொரு வருடமும் குறைந்து 19 மில்லியன்பேர் பட்டம் பெருகிறார்கள். ] இன்னும் நவீன நகரம் எனும் நம் சென்னை / மும்பை போன்ற நகரங்களில் மலக்கழிவை மனிதனே சுத்தம் செய்யும் அவலம் இன்னும் எந்த கேனயனான அரசியல் வாதியாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராக்கெட் சைன்ஸில் நாம் என்ன சாதித்திருக்கிறோம் என்று பீத்தி புண்ணியமில்லை. அன்றாடம் எல்லோரும் செய்யும்  ஒரு டாய்லெட் பிரச்சினையை சரி படுத்த முடியாமல் நாமும் பெருமையாக இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்று மார்தட்டுகிறோம்.

படித்தவன் , படிக்காதவன் யாராக இருந்தாலும் நம் கண் முன்னே நடக்கும் அனியாயங்களுக்காகவும் சுகாதாரக்கேட்டுக்காகவும் தன்னால் முடிந்த எந்த முயற்சியும் எடுக்காமல் டெய்லி "மல்லிப்பூ மாதிரி இட்லிக்கும் ,புதினா / தேங்காய் சட்னி எந்த கடையில் நன்றாக கிடைக்கும்.....காபி எந்த கடையில் 'திக்' ஆக போட்ட்டுத் தர்ராணுக என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்... அதெல்லாம் செறித்த பிறகு ஒரு இடம் தேவைப்படுமே...அதற்காக அரசாங்கமோ , அல்லது நாமோ என்ன செய்து இருக்கிறோம் என்று தெரியாமலே 67 வருடத்தை ஓட்டி விட்டோம்.

தடுக்கி விழுந்தால் ரெஸ்டாரன்ட் மயமாக இருக்கும் இப்போதைய ஊர்களில் டாய்லெட் என்பது நிச்சயம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் or Rules of Local government இல்லாததால் தான் கண்ட நாதாரிகளும் கண்ட இடத்தில் சூடு சுரணை இல்லாமல் வேட்டியை தூக்குவதும் / சேலையை தூக்குவதும் நடக்கிறது.  சுகாதாரத்துறை எப்போதும் உள்ளாட்சி மன்றத்துக்குள் வருகிறது...பிறகு ஏன் கட்டப்படும் அனைத்து உணவகங்களுக்கும் டாய்லெட் கட்டப்படவேண்டும் / அது சுத்தமாக இருக்க வேண்டும் என்ற விதிப்பாடு இல்லாமல் இருக்கிறது. அப்படி சட்டம் இல்லை என்றால் அந்த சட்டத்தை உருவாக்க வேண்டியதுதானே உள்ளாட்சி மன்றங்களின் கடமை.


அரசியல் வாதிகள் "மினிஸ்டர் ஒயிட்" ட்டில் சட்டை போட்டால் மட்டும் போதாது. நம்மை சுற்றி இருக்கும் ஊரும் நாடும் உறுப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.

எனக்கு பக்தி வந்து விட்டது உடனே கடவுளை வணங்க வேண்டும் என்று யாரும் அவசரப்படுப்படுவதில்லை... ஆனால் நான் டாய்லெட்டைப யன்படுத்த வேண்டும் எனும் பிரச்சினை ஒவ்வொருவருக்கும் உண்டு.

அப்படியே ஒழுங்காக அரசாங்கம் கட்டிக் கொடுத்தாலும் அதை பாதுகாப்புடனும் சுத்தமாகவும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவில் வசிக்கும் இந்தியர்களிடம் அதிகமாக இல்லை. எல்லா வற்றிலும் வெத்திலை எச்சிலும் , ஃப்ளஸ் அவுட் செய்யாமல் வரும் புத்தியும் சுற்றிலும் அடைக்கப்பட்ட டாய்லெட்டில் , சுருட்டு / பீடி / சிகரெட் பிடித்து அடுத்தவன் உள்ளே நுழையும்போது அவஸ்தைப்படுவானே என்ற எண்ணம் இந்த அறிவு கெட்டவர்களிடம் சுத்தமாக கிடையாது.

இன்னும் இருக்கிறது. நன்றாக தொழில் நடக்கும் இடங்களில் பெரிய அளவில் குப்பையை காலா காலமாக கொட்டுவது. அதற்காக டெய்லி பணம் எண்ணும் அந்த தொழிலதிபர்கள் [ ? ] எதையும் கேட்காமல் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருப்பது.

இதெல்லாம் பார்க்கும் போது நாம் சுதந்திரம் அடைந்ததில்  இதுவரை என்ன சாதித்திருக்கிறோம் என்றுதான் கேட்கதோணுகிறது. படிக்கும் மாணவன் கூட ஒரு வருடம் விட்டு அடுத்த வருடம் வரும்போது ஒரு முன்னேற்றத்தை காண்பிக்காவிட்டால் நாம் கோபப்படுகிறோம். 67 வருடம்...அனியாயமாக அடிப்படை வசதிகளை கூட சரி செய்யாத மக்களையும் , அரசாங்கத்தையும் வைத்துக்கொண்டு வாட்ஸப்பிலும் , இமெயிலிலும் 'நானும் இந்தியன்...அதற்காக பெருமைப்படுகிறேன் ' என்பதில் அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதில் மறுப்பு சொல்பவர்கள் 'இந்தியா பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு..கன்ட்ரோல் செய்வது கஷ்டம் என்றால்..ஒரு கேள்வி இருக்கிறது. இந்தக்கேள்வி முன்னால் ஜனாதிபதி அபுல்கலாம் கேட்ட கேள்வி.

போகிற இடமெல்லாம் குப்பைய வீசி விட்டு செல்லும் இந்தியர்கள் எப்படி வெளிநாடு வந்தால் அவ்வளவு டிசிப்லினாக நடக்கிறார்கள்.. தண்டனை பயம்!!'




மெஷின் கதை

ஒரு மெஷின் அப்போதுதான் பிறந்ததாம்.... உடனே பேட்ரியாடிக் [paediatric] மெஷின் வந்து கை கால் எல்லாவற்றையும் செக் செய்து தாய் மெஷினிடம் சொன்னதாம். ' இந்த மெஷினில் பழுதில்லை"...தந்தை மெஷின் சந்தோசம் அடைந்து ஸ்வீட் எல்லாம் வாங்கி வந்திருந்த அத்தனை மெஷினிக்கும் கொடுத்ததாம்.

கால ஓட்டத்தில் மற்ற மெஷினுடன் போட்டி போடநிறைய மெஷின் உள்ள பள்ளிக்கூடத்தில் அந்த புது மெஷினை சேர்த்தார்களாம். அந்த புது மெஷினும் நன்றாக படித்துக்கொண்டிருக்கும்போது "மற்ற மெஷினெல்லாம் வெளிநாட்டில் நல்லா வேலைசெஞ்சி காசு அனுப்புது ' என்ற ப்ரோக்ராமிங்கில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். வெளிநாட்டிலிருந்து அந்த மெஷின் சம்பாதித்து காசு அனுப்பும்போதெல்லாம் அந்த மெஷினிடம் கேட்டுத்தான் மற்ற மெஷின் எல்லாம் நடந்ததாம்.

கால ஓட்டத்தில் மெஷினின் ப்ரொடக்டிவிட்டியை மிஞ்சும் சின்ன மெஷின் எல்லாம் வந்து விட்டதால்..அந்த மெஷின் பணம் தரும்போது மட்டும் அந்த மெஷினுக்கு தற்காலிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாம். 

பிற்காலத்தில் மாடல் பழசாக போய்விட்டதால் ' இந்த மெஷின் சொல்வதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவருமா என பல சின்ன மெஷின் களும் அந்த மெயின் மெஷினின்  துணை மெஷினும் "கருத்து" சொல்ல ஆரம்பித்ததாம்.

நன்றாக ரன்னிங் கண்டிசனில் இருக்கும்போது இருந்த முக்கியத்துவம் தனக்கு இல்லை என்று அந்த மெஷின் கவலைப்பட்டதாம். மெஷின் தானே தேவை இல்லாமல் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அந்த மெஷினுக்கு தெரிய வில்லையாம். நம்முடன் சேர்ந்த மனுஃபேக்சரிங் தேதியில் வெளியான பல மெஷின் கள் டிஃபெக்ட் இருந்ததால் பல மெஷின் களை மற்ற மெஷின் கள் ஏன் மதிக்க வில்லை என்று எண்ணிப்பார்க்க அந்த மெஷினுக்கு தெரிய வில்லையாம். காரணம் டிஃபெக்ட் அல்ல சம்பாத்யம் தான் என்று புரிய வில்லையாம்.

இந்த எண்ணம் எதுவும் இல்லாமல் இப்போதைக்கும் பல புதிய மெஷின் கள் வழக்கம்போல் ஏதோ ஒரு புள்ளியை நோக்கி வழக்கம் போல் ஓடிக்கொண்டுதான் இருக்கிறாம். நாமும் ஒரு நாள் பழைய மாடல் ஆகி விடுவோம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லாமல்.

இந்த மெஷின் எழுதுவது யாருக்கும் புரிகிறதோ இல்லையோ நிச்சயம் இதை இப்போதைக்கு படித்துக்கொண்டிருக்கும் மெஷினுக்கு புரியும் என நினைக்கிறேன்.

ZAKIR HUSSAIN

21 Responses So Far:

Ebrahim Ansari said...

இதைப் படித்ததும் என் மனதில் எழுந்த எண்ணம்
நான் நினைப்பது சரியாக இருக்குமானால் தம்பி ஜாகிர் எழுதிய எழுத்துக்களிலேயே இதுதான் இவருடைய மாஸ்டர் பீஸ் என்பதுதான்.

இதுவும் போக பேருந்துகளில் பயணிக்கும்போது பெற்ற தாய் மரணித்துவிட்ட செய்தியைச் சொல்ல வருகிற அலைபேசி அழைப்பைக் கூட அட்டென் செய்ய முடியாத அளவுக்கு காத்து கிழியப் பாடும் " ஊரோரம் வேப்ப மரம் " போன்ற உதவாக்கரைப் பாடல்கள் .

ஒரு ஐந்து வருடமாகப் பார்க்கிறேன். ஒரு பெண் ஒரு தட்டில் சில கருசமணிகளை ஒரு சில்க் துண்டின் மேல் வைத்துக் கொண்டு தனது கல்யாணத்துக்குக் காசு கேட்கிறாள்.

அண்மையில் இந்தியாவில் எடுத்த ஒரு சர்வே அதிகம் இலஞ்சம் கேட்கும் துறை யாவை என்று அறிவித்தது. காவல்துறைதான் இதில் தலைமை வகித்து தங்கபதக்கத்தை தட்டிச் செல்கிறது . .

அதற்கு அடுத்த நிலையில் நிற்பது பிரேக் இல்லாத வண்டிகளுக்குக் கூட நற்சான்றிதழ் வழங்கும் ஆர் டி ஒ அலுவலகங்கள் .

மூன்றாவது இடம் சந்தேகமே இல்லாமல் தலைமைச்செயலகம்.

நாட்டை இந்த நிலையில் வைத்திருக்கும் தலைவர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வெட்கப்படவேண்டும். அதற்கு முன் அவர்களைத் தலைவர்கள் என்று சொல்லும் நாம் தலை குனிய வேண்டும்.

செருப்பையும் விளக்குமாற்றையும் சாணியில் நனைத்து அடித்தது போல இருக்கிறது இந்தப் பதிவு.

Ebrahim Ansari said...

இந்தியாவில் கழிப்பிடங்களைப் பற்றி ரஷ்யப் பிரதமர் குருஷேவ் மற்றும் ஜவகர்லால் நேரு காலத்திலேயே ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு.

அது

நேரு பிரதமராக இருந்த காலத்தில் குருஷேவ் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

ஒருநாள் காலை நேருவும் குருசேவும் ஒரு காரில் ஏறி டில்லியை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வரலாமென்று ஹாயாகக் கிளம்பினார்கள்.

அப்படி ரவுண்டு அடிக்கும்போது தலைநகர் எங்கும் வெட்ட வெளிகளில் , ரயில்வே தண்ட வாளங்களில் மக்கள் பீடியையும் பற்ற வைத்துக் கொண்டு அருகருகே அமர்ந்து காலைக் கடன்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்த குருசேவ் நேருவை நையாண்டி செய்தார். என்ன நாட்டை இப்படி வைத்திருக்கிறீர்கள் என்று கேலி பேசினார். நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை தலையைத் தொங்கப் போட்டார்.

அதற்கு அடுத்த வருடம் நேரு ரஷ்யாவுக்கு சென்றார்.

மாஸ்கோவில் ஒருநாள் காலை நேருவும் குருசேவும் வால்கிங்க் வந்து கொண்டிருந்த போது ஒரு வயல் வெளியில் ஒருவர் உட்கார்ந்து காலைக் கடன்களைக் கழித்துக் கொண்டிருந்தார்.

இப்போது இது நேருவுடைய டர்ன்.

குருசேவைப் பார்த்து கேலி சிரிப்பு சிரித்தார். எனது நாட்டை கேலி செய்தீர்களே உங்கள் நாட்டில் என்ன வாழ்கிறது என்று குருசேவிடம் கேட்டார்.

உடனே குருசேவ் எடுத்தார் வயர்லெஸ்சை. காவல்துறை உயர் அதிகாரியை அழைத்து இன்ன இடத்தில் ஒருவன் இப்படி ஒரு வேலையைச் செய்து கொண்டு இருக்கிறான். அவனை அண்டர்வியருடன் பிடித்து இழுத்துக் கொண்டு உடனே கிரவுளின் மாளிகைக்கு வா என்று உத்தரவிட்டார்.

நேருவும் குருசேவும் கிரவுளின் மாளிகைக்கு நடந்து வரும் முன்பே அந்த அசிங்கம் செய்த நபர் இழுத்துவரப்பட்டிருந்தார்.

கொண்டு வாருங்கள் அவனை என்று குருசேவ் உத்தரவிட்டார்.

காவலர்கள் அவனைக் கொண்டு வந்தார்கள்.

அவர்?

ரஷ்யாவுக்கான இந்தியத் தூதரகத்தின் தலைமை அதிகாரி.

Unknown said...

படத்தில் பைக் வேகமா ஒட்ரங்க, தல முடி பின்னாடி நீளமா வைக்றாங்க, அரைகுறை டிரெஸ் போடுறாங்க,காதல் கதை மையமா வைக்கிராங்க நாங்களும் செய்யுறோம்.சுத்தமாக(|) நடிகர்கள்,நடிகை(குறிப்பாக) படத்தில் காட்டுங்க நாங்களும் இருக்கிறோம்(நாயகன் –கமல் ஸ்டைலில் படிக்கவும்) இப்படிக்கு தமிழ்நாடு மட்டும்

sheikdawoodmohamedfarook said...

'காணிநிலம்வேண்டும்!பாராசக்திகாணிநிலம்வேண்டும்! அந்தகாணிநிலத்திடையை ஓர்மாளிகை கட்டித்தர வேண்டும்'' என்றுஇன்னும்எதைஎதையோபராசக்தியிடம்கேட்டபாரதியார் காணிநிலத்தில்கட்டிய மாளிகையில் ஒரு கக்கூஸ்கூட கட்டி கேட்கவில்லையே!அவரும்பாண்டிச்சேரி கடல்கரையில் இருந்து விட்டுகடல்நீரில்கழுவிஇருப்பாரோ?

sabeer.abushahruk said...

ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்படும் ஞாயமான ஆதங்கம். கொஞ்சம் தூக்கலாகவே 'கப்'படித்தாலும் மிகவும் அத்தியாவசியமான சுட்டல்.

ஜாகிர்,

சுதந்திரத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாததல்ல. ஆரம்பத்தில் "ஆடுவோம் பள்ளு பாடுவோம் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்" என்று.

அதற்குப் பிறகு கைதிகளை விடுவிக்க, கொடியேற்ற, மிட்டாய் வழங்க, சிறப்புத் திரைப்படங்கள் காட்ட, நடிகைகளப் பேட்டி காண என்று ஒரு மார்க்கமாக சுதந்திரத்தைப் பேணி காட்கத்தானே செய்கிறோம்!

(மெரினா கடற்கரைக்குச் சமீபத்தில் சென்றபோது 'இலவச பொது கழிப்பிடத்தில் ஒன்னுக்கு உட போனபோது அங்கு நிலவிய சுத்தமும் சுகாதாரமும் கண்டு உண்மையிலேயே வியந்தேன். அட பரவால்லயே என்று உள்ளே போனால் எந்த பொதுஜனமோ கதவின் உட்புறம் கழிசடை படமும் எழுத்தும் எழுதி அவன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டதை அறிந்து கோபம் வந்தது. இவனுக்கு சுதந்திரம் தேவையா செருப்படி தேவையா)

இப்னு அப்துல் ரஜாக் said...

எதார்த்தம் உணர்த்தும் அசத்தாலான மெஷின் கதை.அருமை
இந்த மெஷினுக்கு புரிகிறது.

sabeer.abushahruk said...

மெஷின் கதை "சின்னப்புள்ளத்தனாவுல இருக்கு" என்று நினைத்து படித்துக் கொண்டே வந்தால்... கடைசியில் வச்சேடாப்பா ஆப்பு.

இப்படிக்கு மெஷின் என்று எழுதியவனும் வாசித்து முடிப்பவர்களும் சொல்லிக் கொள்ளலாம்.

(ஏண்டா இப்டி எல்லா மெஷினையும் பயம் காட்றே)

sheikdawoodmohamedfarook said...

//அந்தமெசின்பணம்கொடுக்கும்போதுஅந்தமெசினுக்குதற்காலிக முக்கியத்துவம்தான்கொடுக்கப்பட்டதாம்//சிலபுத்திசாலிமெசின்கள்''கொடுக்கப்படும்''முக்கியத்துவம்''தற்காலிகமானது''என்றுஅறிந்துஉஸாரானபோது சில பஞ்சாயத்து பேசும் நாட்டாமை மெசின்கள் இடையே குறுக்கிட்டு அட்வைஸ் சாவிகொடுத்து' மூளைசலவை' 'செய்ததாம். மூளைக்கு பரிகாரம்பார்த்தநாட்டாமைமெசின்இப்போஇல்லே.ஆனால்மூளையை சலவைக்குகொடுத்தமெசின்கள்''கூண்டில்அடைபட்டகாக்கச்சிபோல் உண்ணாமல் திண்ணாமல் உறங்கி போய் உடம் பெல்லாம் ஒட்டி ஓடாகி பள்ளிவாசல்திண்னையிலும்பெட்டிக்கடைகட்டிலிலும்ஒக்காந்துகடந்து போனவசந்தகாலத்தைமீண்டும்அசைபோடுகிறதாம்.இப்போதுஅவைகள் பழையமெசின்கள்மட்டுஅல்லபழையதையும்அசைபோடமட்டும்தெரிந்த புதிய மெசின்கள்.

Unknown said...

ஜாஹிர் காக்காவின் உண்மையான ஆதங்கம், எபோதோ போட வேண்டிய சாலைகள்,பாலங்கள் என இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் ஊழல் இல்லாமல் இருக்குமா? முதலில் அது ஒழிய வேண்டும்.

இந்தியா சுதந்திரத்திற்கு பின்பு வரை ஏழை நாடுகளாக இருந்ததெல்லாம் வல்லரசு நாடுகளுக்கு நிகராகிவிட்டன. நாம் இன்னும் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

2020 ம் வரப்போகிறது. ம்ஹூம் கனவு கனவாகவே ஆகிவிடும்போல


Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Zakir Hussain,

The article shows the irresponsible tendencies of Indian government towards its citizens. Generally few individuals are having self control and discipline. It seems people use the freedom of India to indulge as they wish without any self control and discipline.

Lets remember that the freedom and democratic government is of the people and by the people for the people. The law and order are not necessary for an individual lonely living in the world, but law and order is vital when so many individuals want to run their lives without frictions and fights. Each one is having responsibilities to behave socially responsible.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai.

Shameed said...

சுதந்திரம் கிடைத்ததில் நம் இந்தியர்களுக்கெல்லாம் ஒரு சுதந்திரம் என்ன வென்றால் எல்லா இடத்திலும் சுதந்திரமா ஒன்னுக்கு ரெண்டுக்கு போகலாம்

Shameed said...

சமிபத்தில் நான் ஊர் சென்றிருந்தபோது கொடைக்கானல் சென்றேன் அங்கு திபெத்தியன் ஹோட்டல் உள்ளே சென்றதும் பாத்ரூம் எங்கே என்று கேட்டேன் இந்த ஹோட்டலில் பாத்ரூம் இல்லை என்று பதில் வந்தது அடப்பாவிகளா இன்புட் கொடுக்குறீங்க அவுட் புட்டுக்கு வழியில்லாமல் ஹோட்டல் கட்டி வச்சி இருக்காங்களே என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டு அந்த குளிரில் அடக்க முடியாமல் மரத்தடி ஓரமா நானும் என் நாட்டு சுததிரத்தை பயன்படுத்தி கொண்டேன்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஜாஹிர் காக்காவின் ஹைஜீனிக் பற்றி கூறும் முத்தான ஆக்கம் இது.

செவ்வாக்கிரகத்தை சுற்ற புறப்பட்ட மங்கள்யான் விண்கலம் பற்றி அங்கலாய்த்து உள்ளுக்குள் மகிழும் நாம் தினம்,தினம் தெருவில், ஊரில் நம்மை சுற்றி வரும் அந்த சாக்கடை பன்றிகளையும், பெருச்சாலிகளினால் வரும் கேடுகளையை, நோய்நொடிகளையும் கண்டுகொள்வதில்லை.

Unknown said...

Assalamu Alaikkum

The short story of machines, for the machines by the machine is really funny and insightful.

A normal stupid machine will need to experience the pain to become better. But a smart and intelligence machine learns from others' experience and avoid the pain before it occurs !!!.

B. Ahamed Ameen from Dubai.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

'அசத்தல்' அசத்தால்தான் 'காக்கா'...

மெஷின் பிறந்து வளர்ந்து தேய்ந்த.... வரலாறு... அருமையோ அருமை !

அலைபேசியில் அழைத்த சிலர், இதை எழுதன மெஷினைப் பத்திதான் பேச்சு... ரோபோவா'ன்னு கேட்கவும் செய்தனர்...

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

//செருப்பையும் விளக்குமாற்றையும் சாணியில் நனைத்து அடித்தது போல இருக்கிறது இந்தப் பதிவு. //

இந்த பதிவை எழுத எடுத்த முயற்சி வெற்றியடைந்ததாக நினைக்கிறேன். உங்கள் பாராட்டு இன்னும் எழுதத்தூண்டும்.

To Sabeer,

//கைதிகளை விடுவிக்க, கொடியேற்ற, மிட்டாய் வழங்க, சிறப்புத் திரைப்படங்கள் காட்ட, நடிகைகளப் பேட்டி காண என்று ஒரு மார்க்கமாக சுதந்திரத்தைப் பேணி காட்கத்தானே செய்கிறோம்!//

டெலிவிசன் சேனல் நடத்தும் எருமை மாடுகள் ஏன் சம்பந்தம் இல்லாத நடிகைகளை வைத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள் என்று சொல்லலாமா பாஸ்...

//மெஷின் கதை "சின்னப்புள்ளத்தனாவுல இருக்கு" என்று நினைத்து படித்துக் கொண்டே வந்தால்... கடைசியில் வச்சேடாப்பா ஆப்பு.//

உண்மை சொன்னேன் பாஸ்...


அன்புமிக்க எஸ் முஹம்மது பாரூக் மாமா அவர்களுக்கு...

நீங்கள் எழுதிய மெஷின் கதையின் எக்ஸ்டென்சன் நான் எழுத விட்டது.

To Bro Ahmed Ameen,

/./.Lets remember that the freedom and democratic government is of the people and by the people for the people.//

The last word ' For the People " become 'For the Politician" They have changed so long ago.

To Bro Shahul,

//திபெத்தியன் ஹோட்டல் உள்ளே சென்றதும் பாத்ரூம் எங்கே என்று கேட்டேன் இந்த ஹோட்டலில் பாத்ரூம் இல்லை ன்று பதில் வந்தது//

இதைத்தான் நான் சொல்கிறேன். ஏன் இது போல் ஹோட்டல்களை நடத்த விடாமல் தடுக்க 67 வருடமாக ஒரு சட்டம் கூட இயற்றமுடியவில்லை.

To bro MSM Naina Mohamed,

//அந்த சாக்கடை பன்றிகளையும், பெருச்சாலிகளினால் வரும் கேடுகளையை, நோய்நொடிகளையும்//

இதைக்கூட இந்தியாவின் பெருமைகள் என்று சில டெலிவிசன் சேனல்கள் பேசக்கூடும் அதற்கும் கை தட்ட சில பேர் அந்த சேனல் செட்களில் காத்திருப்பார்கள். கிடைக்கும் பஜ்ஜி / வடை ..காஃபிக்காக எதற்கு வேண்டுமானாலும் கைதட்டும் அல்லக்கைகள் இப்போது அதிகம் உருவாகிவிட்டது.

To M.Naina Thambi,

அலைபேசியில் அழைத்த சிலர், இதை எழுதன மெஷினைப் பத்திதான் பேச்சு... ரோபோவா'ன்னு கேட்கவும் செய்தனர்...

வேலைகள் அதிகம் ஆகி விட்டதால் எனக்கே நான் ரோபோ மாதிரி ஆகிவிடுவோமோ எனும் பயம் இருக்கிறது.

To Bro Jafar Hasan,

//2020 ம் வரப்போகிறது. ம்ஹூம் கனவு கனவாகவே ஆகிவிடும்போல//

We can definitly do something about it. Start to inform authorities whenever there is a threat to Public health.

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர் ஹுசேன் !

ஒரு விஷயம் காலை வேளை மனதில் படுகிறது. அதை அனைவருடனும் பகிர விரும்புகிறேன்.

இந்தத் தளத்தில் பதிவுகளைத் தரும் நான் உட்பட அனைவரும் - ஏதாவது ஒரு செய்தியை அல்லது வரலாற்று சம்பவங்களைப் பிடித்துக் கொண்டு அவரை விவரிக்கிறோம் / விளக்குகிறோம்/ வர்ணிக்கிறோம். .

முழுக்க முழுக்க கிரியேட்டிவிட்டி என்கிற அம்சத்தை உனது பதிவுகளில்தான் பார்க்கிறோம். - கவிஞர்கள் இதற்கு விதிவிலக்கு.

அறுபத்தியேழு ஆண்டுகளாக யாருக்கும் ஏற்படாத உனது சுய சிந்தனையின் விளைவுதான் இந்தப் பதிவு.

இந்தப் பதிவின் நகல்களை எடுத்து - குறிப்பாக அந்த கக்கூஸ் பகுதியை - முதலமைச்சரின் தனி செல்லுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர்களுக்கும் - மாநகராட்சி மேயர்களுக்கும் - பேரூராட்சித் தலைவர்களுக்கும் - உறுப்பினர்களுக்கும் அனுப்ப வேண்டும்.

முதலாவதாக பட்டுக்கோட்டை நகரமன்றத்துக்கும் தஞ்சாவூர் நகர மன்றத்துக்கும் அனுப்ப வேண்டும். பட்டுக் கோட்டையில் அதிரைக்குரிய பஸ் நிற்கும் இடத்தில் ஆரம்பிக்கிற அந்த வாடை அதிரை வந்து வீட்டில் ஊதுபத்தி கொளுத்திவைக்கிரவரையில் தீர்வதில்லை.

கட்டணக் கழிப்பிடம் என்று சொல்லி காசு வாங்குகிறார்கள். அதன் கதவுகள் கூட நொண்டிக் கோடு விளையாடுகின்றன. உள்ளே சென்றால் ஒரு குவளை கூட இல்லை.

பம்பாய் மாநகரில் இதற்காக ஒரு முஸ்லிம் அறக்கட்டளையினர் சொந்த செலவில் கட்டணமின்றி நன்கு பராமரிக்கப்படுகிற கழிப்பிடங்களைக் கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதையும் பாராட்ட வேண்டும்.

தாயை தண்ணீர் எடுக்கும் இடத்தில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டியது இல்லை என்று ஒரு சொலவடை உண்டு .

அதே போல் ஒவ்வொருவர் வீட்டின் கழிப்பறைகளைப் பார்த்தே அவ்வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்கும் தரத்துக்கான மார்க் போடலாம் என்பதையும் இனி சேர்த்துக் கொள்ளலாம்.

தலை நகர் டில்லிக்கு சென்னையிலிருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரசில் பயணம் செய்தால் விடிகாலை பரிதாபாத் என்ற ஸ்டேஷன் வரும். அப்போது நாம் பர்த்திலிருந்து எழுந்து உட்கார்ந்து காலைவேளையில் டில்லியைக் காணலாம் என்றால் - புது டில்லி ஸ்டேஷன் வரை ஆண்களும் பெண்களும் கூட கூட்டம் கூட்டமாக வழி நெடுக உள்ள இரயில்வே இருப்புப்பாதை எங்கும் இந்தக் காட்சிகள் - கைகளில் செம்புகளுடன்.

இதுவே இந்தியாவின் அடையாளம்.

பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று சொல்லிக் கொள்ள தகுதி இருக்கிறதா? வேதனை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று சொல்லிக் கொள்ள தகுதி இருக்கிறதா? வேதனை//

இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளலாம்...

'பார்'குள்ளே உள்ள நாடு எங்கள் தமிழ்னாடுன்னும் - இலவச இணைப்பாக

sheikdawoodmohamedfarook said...

//ஒவ்வொருவர்வீட்டின்கழிப்பறைகளைபார்த்தேவீட்டில்வசிக்கும் குடும்பத்தின் தரத்துக்கும் மார்க்போடலாம்// மைத்துனர் இப்ராஹிம்அன்சாரி சொன்னது. ஒருநாள்எனக்குமிகநெருக்கமானவர்ஒருவர்வீட்டிற்க்குபோனேன். நம்பர்ஒன்னுக்குபோகவேண்டியநிலைவந்தது.''பாத்ரூம்எங்கே?''என்று கேட்டேன்.காட்டினார்கள்.உள்ளேசென்றுபார்த்தபோதுஎனக்கேஆச்சரியம். அவ்வளவுசுத்தம்,'அங்கேயேசோறுபோட்டுசாப்பிடலாம்''போல்இருந்தது.வெளியேவந்துபாராட்டினேன் ''டீபோட்டுஅங்கேவைத்திருக்கிறேன்.குடியுங்கள்''என்றுடைனிங் டேபிளை காட்டினார்கள். உக்காந்துசாப்பிடும்போதுடேபிள்மேல்ஒருசின்ன மண்குவியல்இருந்தது.''ஏன்இங்கேமண்குவியல்இருக்கிறது?''என்றேன். 'எங்கூட்டுபிள்ளைநம்பர்டூஅங்கேதான்போகும்.''பேலாதே!பேலாதே''என்று எத்தனைதடவைசொன்னாலும்கேப்பேனங்குது.எல்லாத்தையும்ஒரேடியாசாயந்திரம் அள்ளிக்கிடலாண்டு மண்ணை போட்டு மூடிவச்சு ஈக்கிறேன்'' அம்மையார்சொன்னார்கள்.இதுதான்சிலவீடுகளில்சுத்தமான'பாத்ரூம் ரஹசியம்'.

அப்துல்மாலிக் said...

Excellent article with extraordinary skills, well done kakka

Yasir said...

ஒவ்வொரு ஊரிலும் நோட்டீஸாக அச்சிடப்பட்டு கொடுக்கப்பட வேண்டும் இந்த ஆக்கத்தை
ஆளும் வர்க்கமும், பயனாளர்களும் தூய்மையை உணர்ந்தால்தான்
இந்தியா உருப்படும்.கக்கூஸ் இல்லாத நாட்டில் எவ்வளவு முன்னேற்றம் வந்தாலும்
பயன்படுத்தியபின் எறியும் டாய்லெட் பேப்பரை போல பயனற்றதாகவே இருக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.