Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தா (த்) தா வின் தொப்பி அட்வைஸ்...! 1

அதிரைநிருபர் பதிப்பகம் | November 11, 2014 | , , , , ,

(அப்பா பகலுணவு சாப்பிட்டபின் பரிமாறியவற்றை அப்புறப்படுத்த பேரன் வருகிறார்) 

பேரன்: அப்பா நல்லா சாப்பிடீங்களா.....? பொறிச்சமீனெல்லாம் அப்படீயே இரிக்கிது.........?

அப்பா: அல்ஹம்துலில்லாஹ்! நல்லா சாப்புட்டேன், பொறிச்சா மீனெல்லாம் அப்டீத்தான் இரிக்கும்... ஓடாது. நீங்க வெரசா அந்தவிசிறியை எடுத்து தாங்கம்மா. (பேரன் சிறிது நேரத்தில் விசிறியுடன் வர ) 

தொடர்ந்து...

அப்பா: என்னா நீங்க இந்நேரத்துல வூட்ல இரிக்கிரிய..

பேரன்: இன்னக்கி ஸ்கூல் லீவுப்பா... அதான்... நா வீசிவுடட்டுமா....?

அப்பா: அப்பாமேலே உங்களுக்கு ரொம்ப வொஹ்ப்புதான் சரி வீசுங்க (மனதிற்குள் புள்ளக்கி லீவு அதுவுமா காசு மொடயாயிருக்கும்)... அன்னக்கி உங்கள வெரட்டிவுட்டது தலைல தொப்பி இல்லைண்டுதானாம் அந்த தம்பி சொன்னுச்சு.அது உங்க குத்தம்தானே...?

பேரன்: தொப்பி போடாட்டி தேவலாம்னு சொல்றாங்களே....

அப்பா: சும்மா பத்தியத்துக்கு கேட்டமாரி தேவலாம்னு சொல்லாதிய.. போட்டா எந்த கேடுமில்லையே... சங்கைதானே.... ஏன்னா.... நாம இந்த ஊர்ல பெரும்பாலாயிருந்தாலும், இந்த நாட்டுல சிறுபான்மையா இருக்கிறோம். மேலும், இந்த ஒலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதத்துக்கும் ஒரு அடையாளமுண்டு. அது மாதிரி ஒலகத்துல நம்ம முஸ்லிம்களை எங்கேப்பாத்தாலும் பொதுவா தலைய மூடித்தான் பாக்கிறோம்.அப்புறம் தொழுகைக்கு முன் உங்களை சங்கையாக்கிக் கொள்ளுங்கன்னும் சொல்றாங்க..!

தொப்பி போடறதால சங்கை இரிக்கிதா..? இல்லையா..? ஒரு சபைக்கிப் போனாலும் நமக்கும் அழகு... சபைக்கும் அழகுதானே.... தொழுகையில் எல்லோரும் ஒரே மாதிரியா தலையை மூடி இருக்கும்போது ஒரு அந்துசு இரிக்கிதா..? இல்லையா..? நா ஒன்னும் தொப்பிக் கடைக்கு வக்காலத்தா பெசுறேண்டு நினைக்காதியோ... ஒருத்தன உன்னுடைய மதம் என்னாண்டு கேட்டா ஒடனே சொல்லிடுவான். நா இன்ன மதம்னு. ஆனா இந்த யஹூதி மட்டும் நாம எல்லாம் மனுசர்கள்தானென்று மழுப்புவான். அவன் ஒரு நாசுவக்கிண்ணி மாதிரி தொப்பி போட்டிருப்பான்.

அதைப் பார்த்து நாம அடையாளம் கண்டுக்கலாம். எதுக்கு நா சொல்றேண்டா அவனவனுக்கு ஒரு அடையாளம் இருக்கும்போது, உண்மையான ஒசத்தியும், கண்ணியமான நம்ம இஸ்லாத்தில் இருக்கும் நாம் ஒரு முஸ்லிம் என்று தெரியப்படுத்துவது தவறல்லவே....? தொப்பி கட்டாயமல்லதான் ஒத்துக்கிறேன். ஆனா நம்ம ஒடம்புக்கு பிரதானமா உள்ள தலைய மூடுவதில் நிறைய சௌகரியம் ஈக்கிரதொட, தீமையில்லதானே.... ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு தலையை மூடி நிக்கிம்போது ஒரே சீராக கண்ணியமாக தெரியலையா..?

பேரன்: என்ன அப்பா சங்கையா உடுப்பு உடுத்துரதும் அப்படித்தானே...

அப்பா: ஆமா ! இப்ப நாம உடுத்துற வேட்டி ராஹத்தானதா, இல்ல பேன்ட் ராஹத்தா..?

பேரன்: வேட்டிதானப்பா ராஹத்தானது.

அப்பா: ஆங்.. அப்புடி ராஹத்தான வேட்டி உடுத்துரவ.... ஏறப்புலான்ல பயணம் போம்போது எப்போதும் உடுத்துரமாதிரி வேட்டியை உடுத்திக்கிட்டு ப்ளேன்ல ஏறுனா இறக்கியா உட்டுருவாணுவ... இல்லையே..... பின்னே எதுக்கு பினாயில் விக்கிரவனாட்டம் பேன்ட் போடணும். ஏனுண்டு கேட்டா அது போகிற எடத்துக்கும் போரவளுக்கும் அந்துசுன்டுதானே...? அதுபோலத்தான் சங்கையான எடத்துல நாமும் சங்கையா நடந்துக்கிடணும்.

பேரன்: நீங்க இப்படி சொல்ரியலே.... அரபு தேசங்களான, எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், இன்னும் பல முஸ்லிம்களெல்லாம் தொப்பியில்லாமதானே தொழுவுறாங்க......?

அப்பா: ஆமா, அதான் ரொம்ப நிம்மதியா இறிக்கிறாங்க... இப்போ நீங்க ஒரு இந்திய முஸ்லிம்னு அவங்கள்ட சொல்லிப் பாருங்க ஒரு ஏளனமா பாப்பாங்க. நாம ஒரு முஸ்லிம்னு சொல்லிப்புட்டு என் வாப்பா, உம்மா கூட முஸ்லீம்னு சொன்னியண்டா அப்டீயே வாயப்பொலந்துடு வாங்க காரணம் அங்கே அவளவு லேடுபாடு.... அட இங்கே தா பாருங்க.... தொப்பி ஒரு கட்டாயமில்லை என்று என்னக்கி நமக்கு தெரிய வந்துச்சோ ஒரு பெருநாளைக்கு பதிலா ரெண்டு, மூணு பெருநாள் வருது. நமக்கென்று 10, 12 எம்.எல்.ஏ வரை இருந்தது ஒன்னுமில்லாம போச்சு... சரியா... !!

அப்புறம் இன்னொன்னு சொல்றேன், மொதல்ல, நம்மூர் பக்கம் டீ.வி சனியன் ஒவ்வொரு வூட்லேயும் தல காட்ட ஆரம்பிக்கும்போது, ஆலிம்சாமார்கள் டீ.வி இருக்கிற வூடா போய் இந்த முசீபத்த வூட்ல வைக்காதியனு கால்ல உழுவாத கொறையா கெஞ்சினாங்களே அப்ப.... டீ.வி பாக்ககூடாதுனு நபி சொன்னாங்களா என்று திருப்பிக் கேட்டாங்க நம்ம ஜனங்கள். இப்ப பாருங்கள் வூட்டுலேந்து பள்ளியாசளுக்கு போறது என்னமோ 4 வது, 5 வது வார்டு பக்கம் போற மாதிரில இருக்குது. 

நடு கூடத்துல இருந்து குரான் ஓதிக்கிட்டு இருந்த வூட்டுல நாடகத்துல சாமிக்கி பூஜை நடக்கிற மணி சத்தம் கேக்குது. இன்னொரு வூட்டுல அடுப்படிக்கி போன ராத்தாவை, 'ஆதி வந்துட்டான் வெரசா வந்து பாரு' என்று தங்கச்சிக்காரி கூப்புடுறா. இதெல்லாம் தேவையா..? இப்ப இருந்துக்கிட்டு டீ.வி பாத்து பொம்புள எல்லாம் வீனாப்போச்சுண்டு அடிச்சிக்கிரியலே... புரியுதா அன்னக்கி ஆலிம்சா எவ்வளவு தொல நோக்கோட கெஞ்சினது.

அதனால நம்ம ரசூலுல்லாஹ் அவர்கள் பேணிய எதிலும் இம்மியளவு பிசகு இருக்காது. தெரிஞ்சிக்கோங்கோ. நன்மையே.. மொத்தத்துல சொல்றாயிருந்தா.... ஒருத்தன் ஒரு காரியத்துல இறங்கும் போது இது நம் நபி வழிக்கு பொருந்துமா என்று நெனச்சு இறங்கினான் என்றால் அவனுக்கு எந்த சேதாரமும் இல்லை. நஷ்டவாளி என்று ஒருவனை பார்க்க நேர்ந்தால் ஏதோ ஒரு வழியில் நபிவழி பேனாதவனாக இருப்பான். [அஷர் பாங்கு ஒலிக்கிறது]

பேரன்: அப்பா... பாங்கு சொல்லுறாக...... நா போவட்டா.... போவட்டா... போவட்டாப்பா..

அப்பா: கேக்குறது வெளங்குது.... இந்தாங்க பணம். தொழுவிட்டு போய் கபாப்  வங்கி தின்னுங்க. [அப்பா அஷர் தொழுகைக்கு தயார் ஆகிறார்கள்]

மேலும்...

அப்பா: சரி, பாங்கு சொல்லிட்டாக ஒரு ஆபத்திலிருந்து தொப்பியைக் கொண்டு அல்லாஹ் காப்பாத்துனுத இன்னொரு நாளைக்கி சொல்றேன்.

ZAEISA

1 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

//நாசுவக்கிண்ணி//

இந்த வார்த்தை எப்படி இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்.?... Shaving Foam & Shaving Gelவந்தபிறகும் ஞாபகம் வைத்திருப்பது அதிசயம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு