வலைத்தளத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் சவாலும் எதிர் சவாலும் ஒரு முஸ்லிமை பார்த்து இன்னொரு முஸ்லிம் நீ முஸ்லிமே இல்லை என்பதும் அவர் இவரை பார்த்து நீ வழிகேட்டில் இருக்கின்றாய் என்று வசைபாடுவதும் வாடிக்கையாய் போச்சு என்னதான் நடக்குது என்று கொஞ்சம் ஆழ்ந்து படித்துப் பார்த்தால் மிஞ்சுவது குழப்பம்தான் ஆகையால் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க வலைத்தளத்தில் இருந்து பழமொழிகளை கா.பே. (தி.கூ பாஷையில்) செய்து சின்ன சின்னதாய் சிவப்பு வண்ணம் கொடுத்து பிரச்சாரம் செய்துள்ளேன்.
நொங்கு தின்னவன் போயிட்டான்
நொங்கை எப்படி நோண்டாமல் திங்க முடியும்
குமறுன்னு இல்லாம வாக்கப்பட்டேன்
மலடுன்னு இல்லாம பிள்ளப் பெத்துக்கிட்டேன்
அதுக்கு மேல ஒண்ணுமில்ல
அதுக்கு மேல ஒண்ணுமில்லன்னு சொல்லிப்புட்டு காலம் பூரா ஏதாவது சொல்லி கிட்டேதானே`இருக்கீங்க
எட்டி எட்டிப் பாத்தவளுக்கு
எட்டுப் பணியாரம்
மூட்டுத் தேயச் சுட்டவளுக்கு
மூணு பணியாரம்
ஒருவேலை மூட்டு தேய சுட்டவளுக்கு ஸுகர் கம்ப்ளைன்ட் இருக்குமோ!
வட்டிக்கு வாங்கி அட்டிகை வாங்கினாளாம்
அட்டிகையை வித்து வட்டி கட்டினாளாம்
வட்டியின் கொடுமையை வட்டியும் மொதலுமா சொல்லிட்டாங்க
கழுதையின் கோபம்
கத்துனா தீரும்
கழுதைக்கு சொன்ன மாதிரி மனுசனுக்கும் ஒரு வழி சொல்லிருங்களேன்
கழுதப் புண்ணுக்கு
தெருப் புழுதிதான் மருந்து
அரசு மருத்துவமனையை போல் கால்நடை மருத்துவமனையும் டாக்டர் இல்லாமல் பூட்டியோ இருக்குமோ!
அயிரைமீனுக்கு எதுக்கு
விலாங்கு மீன் சேட்டை
எந்த மீனோட சேட்டையும் அதிராம்பட்டினத்தில் செல்லாது!
கழுத்துப் பிடி கொடுத்தாலும்
எழுத்துப் பிடி கொடுக்காதே
இது படிச்சவங்களுக்கு. கைநாட்டுக்கு யாராச்சும் ஒரு பழமொழி சொல்லுங்களேன்
நார்த்தங்காய்க்குப் போடுகிற உப்பும்,
நாத்தனாருக்குப் போடுகிற சோறும் வீண்போகாது
சோறு மட்டும் போட்டா பத்தாது கொஞ்சம் மீனானமும் ஊத்துங்கோ!
குறத்தி பிள்ளை பெற்றாளாம்
குறவன் மருந்து சாப்பிட்டானாம்
என்ன டாஸ் மாக் மருந்தா ?
தூக்கணாங்குருவி குரங்குக்குப்
புத்தி சொல்லியதாம்
குருவி எப்படி பேசும் என்று லாஜிக் பேசிராதிய
நிலம் இல்லையென்று
முற்றத்தை உழுதானாம்
இருந்த விளை நிலத்தை எல்லாம் மனைக்கட்டு போட்டா அப்பறம் எங்க இருந்துவரும் நிலம் உழுவதற்கு
பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில்
ஏறித்தான் ஆகவேண்டும்
ஓ இதைதான் வைத்துளே புளியை கரைக்குதுன்னு சொல்றாங்களா!
கடல் மீனுக்கு கண்ணுல சூடு
ஆனா தமிழ் நாட்டிலே மீன் பிடிக்க போறவங்களையும் சுடுறாங்களே
பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்
அதாங்க தொலைநோக்கு பார்வை
Sஹமீது
5 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்
Sஹமீது அருமையான பிரச்சாரம்
பழ மொழிக்கு பதிலாக புதிய மொழிகள் எழுதினால் நன்றாக இருக்கும் நொங்கு படத்தை கானவில்லையே
சாதாரண பழமொழிகள் ஹமீதாக்கப்பட்டு தித்திப்பான பழமொழிகளாகச் சுவைக்கின்றன.
சூப்பர் கலக்கல்ஸ்?
ட்விட்டர் பாணி கமெண்ட்ஸ் அப்ளாஸை அல்ல்லுது.
ஹமீது,
நீங்க அப்பவே அப்டி,
இப்ப சொல்லவா வேணும்?
ஆஹா ஒஹோ.ரொம்ப நன்னா இருக்கு.
கொடுவா மீன் ஆனம் ஊத்தி சாப்பிட்டுவிட்டு நார்த்தங்காய் சர்பத் குடித்தது போல் இருக்கு.
Post a Comment