Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூணுக்கு வந்த டவுட்டு ! - ரிலாக்ஸ் ப்ளீஸ்... 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 13, 2014 | , ,

'ஹ‌லோ நாங்க‌ டாக் எஃப் எம்மிலிருந்து பேசுறோம்'

'அப்ப‌ வாயிலிருந்து பேச‌லையா..?'

'வார‌ம் நாங்க‌ ஒரு ந‌ம்ப‌ருக்கு போன் போடுவோம்'

'என் ந‌ம்ப‌ர் மொத்த‌ம் ப‌த்து ந‌ம்ப‌ர் வ‌ருமே நீங்க‌ ஒரு ந‌ம்ப‌ர்'ன்னு சொல்ற‌து த‌ப்பு '

'ஹ‌லோ நீங்க‌ எவ்ளோ பேசினாலும் பேசுங்க‌ உங்க‌ பேரு சொல்லுங்க‌?'

'என் பேரு மூணு '

'மூணுன்னு ஒரு பேரா?'

'ஆமா, அதுச‌ரி உங்க‌ எஃப் எம் எங்கிருக்கு?'

'துறைமுக‌ம் தெரியுமா? '

'முத‌ல்ல‌ துறையே தெரியாது அப்புற‌ம் அவ‌ரு முகத்த‌ மட்டும் எப்ப‌டிங்க‌ தெரியும்..'

'ஹ‌லோ ஹ‌லோ துறைமுக‌ங்கிற‌து போர்ட் '

'ஃபோர்ட்டுன்னா?'

'க‌ப்ப‌ல்லாம் வ‌ந்து நிற்குமே அங்க‌'

'க‌ட‌ல்லேர்ந்தா பேசுறீங்க‌? '

'இது ம‌ட்டும் தெரியுது'

'என‌க்கு எல்லாம் ந‌ல்லா தெரியும் இதோ எதிர்'ல‌ போற‌ ஆட்டோ, அதோ அங்...'

'ஹ‌லோ அந்த‌ தெரியுற‌த‌ கேட்க‌ல‌'

'ச‌ரி விடுங்க‌ உங்க‌ளுக்கு என்ன‌ வேனும்? '

'நாங்க‌ ஒரு கேள்வி கேட்போம் அதுக்கு நீங்க‌ ப‌தில் சொல்ல‌னும்'

'ச‌ரி கொஸ்டீன ஈஸியா கேளுங்க‌ இல்லாட்டி க‌ட‌வாய்ப்ப‌ல் தெரியுற‌ அள‌வுக்கு கொட்டாவி வ‌ரும் '

'காத்ம‌ண்டு இது எந்த‌ நாட்டோட‌ த‌லைந‌க‌ர்?'

'பேருலேயே ம‌ண்டு இருக்கிற‌த‌ பார்த்தா க‌டுமையான‌ ம‌ண்டுக‌ள் இருக்கிற‌ நாடாயிருக்கும்'

'பேர‌ சொல்லுங்க‌'

'அதான் மூணு 'ன்னு சொன்னேனே'

டூன் டூன் டூன் டூன் டூன் டூன்.....
____________________________

சிலநாட்களுக்கு முன்னர் அதிரைநிருப‌ரில் ஏதோ சீரியஸா பேசிகிட்டு இருந்தாங்களா அங்கே ஒரு பண்பலை வர்த்தக சேவை வானொலி டியூனிங்கில் கிராஸ் செய்தால் எப்படியிருக்கும் யோசனையிலிருந்தேனா அதான்... :)

அஹ்மது இர்ஷாத்
................................................................
Keep Smiling

6 Responses So Far:

sabeer.abushahruk said...

ஹாஹாஹா ஹிஹிஹி ஹூஹூஹூ ஹாஆஆஹ்... யபா...

கிடுகிடுன்னு வாசிச்சிக்கிட்டுப் போகும்போதே அடக்க முடியாத சிரிப்போடு யார் எழுதியதா இருக்கும்... அப்டீன்னு திங்க் பண்ணா கிரேஸி மோகனோ என்று சிலப்பமும் இல்ல எஸ் வி சேகர்டோய் என்று சில்லப்பமும் கொழம்பி ஜாயிரா இருப்பானோ என்கிற சந்தேகத்தோடு கடேய்சில பார்த்தா தம்பி இர்ஷாத்.

தாராளமா இந்த ஸ்க்ரிப்ட்டை வடிவேலுவுக்கு ஃபார்வேர்ட் பண்ணா அடுத்த காமெடி ட்றாக்கில் சேர்த்துவிடலாம்.

இப்டி அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி எங்கள் ஆரோக்யத்தைக் கூட்டுங்களேன்.

Shameed said...

ஹலோ இர்ஷாத் இப்போ நீங்க எங்கே இருக்கீங்க

Ebrahim Ansari said...

மாப்ளே என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?

போண்டா திண்டுக்கிட்டு இருக்காரு.

ZAKIR HUSSAIN said...

BIG FM பாலாஜியை நினைவுபடுத்திய அஹ்மது இர்ஷாத்

Ahamed irshad said...

மீள் பதிவு செய்தமைக்கு நன்றி... பின் குறிப்பையும் மீள் பதிவு செஞ்சுட்டீங்க :)

சபீர் காக்கா, இப்ராகிம் அன்சாரி காக்கா, சாகுல் காக்கா, ஜாகிர் காக்கா அனைவருக்கும் நன்றி...!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு