Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

18

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2014 | , , ,

தொடர் - பகுதி பதினெட்டு

ஒரு சிறிய இடைவேளையில் பாலஸ்தீனப் பகுதிகள் துருக்கியின் கைகளை விட்டுப் போய்விட்டு மீண்டும் துருக்கியின் கைகளுக்குள் வந்த செய்தியை கடந்த அத்தியாயத்தில் கண்டோம்.

அதே நேரம், பாலஸ்தீன ஆதிக்கப் போட்டியின் நாடகத்தில் தலை காட்டியது மட்டுமல்லாமல் பல அழிக்க முடியாத அடையாளங்களையும் விட்டுப் போன எகிப்தின் மன்னர் முகமது அலியின் வீரதீரங்களும் வெளிஉலகுக்கு- குறிப்பாக ஐரோப்பிய அரசுகளுக்குத் தெரிய ஆரம்பித்தன. அவரைக் கொஞ்சம் தலையில் தட்டி வைக்காவிட்டால் இன்னொரு சலாஹுதீன் உருவாகிவிடுவார் என்ற அச்சமும் துருக்கிக்கும் அதற்கு ஆதரவாக இந்த ஆதிக்கப் போட்டியில் தலைகாட்டிய பிரிட்டிஷ் அரசுக்கும் ஏற்பட்டது. 

திடீரென்று ஐரோப்பிய அரசுகளுக்கு பாலஸ்தீனத்தின் மீது ஒரு வித ஈர்ப்பு வர என்ன காரணம்? 

இடையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, பாலஸ்தீனை விட்டு வெளியேறிய யூதர்கள் பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் , ரஷ்யாவுக்கும் சென்றார்கள். யூதர்கள் எங்கே போனாலும் அங்கெல்லாம் அந்நாட்டின் ஆட்சியாளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் தங்களின் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வது அவர்களின் இரத்தத்தில் ஊறிய விஷயம்; விஷம். 

அதுமட்டுமல்லாமல், அவர்கள் சென்ற நாடுகளிலெல்லாம் தங்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக அரசின் அங்கங்களுக்கு பணத்தை தாராளமாக வாரி இறைத்தார்கள். விசாவுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே யூதர்கள்தானோ? உலக வரலாறு கணக்கிட்டுச் சொல்கிறது உலகிலேயே அரசு அதிகாரிகளை பணம் கொடுத்து வாங்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்களே யூதர்கள்தானாம். காரணம் அவர்களுக்குத் தேவை அது எந்த நாடாக இருந்தாலும் வாழ்வதற்கு ஒரு இடம். இதன் காரணமாக இவர்கள் குடியேறிய நாடுகளிலெல்லாம் சமுதாயத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

தனது நாடு பிடிக்கும் ஆசையின் அடிப்படைக் காரணத்தை மனதில் வைத்து யூதர்களை, ஆதரிக்கத் தொடங்கினார் ஒருவர் - அவர் ஒரு மாவீரர் - அவர் பெயர் நெப்போலியன். பிரான்சு நாட்டின் சர்வாதிகாரியாகத் திகழ்ந்த அதே நெப்போலியன்தான். குடியேற்ற உரிமை –வழிபாட்டு உரிமை ஆகியவை அனைத்தும் யூதர்களுக்கு வழங்கப் பட்டாலும் யூதர்களை National என்கிற அந்தஸ்து கொடுக்காமல் Aliens என்கிற பிற நாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்கள் என்கிற அந்தஸ்தையே நெப்போலியன் கொடுத்தார். 

ஆனாலும் அவர்களின் தாய்நாட்டைக் குறிப்பிடும்போது அவர்கள் பாலஸ்தீனர்கள் என்கிற தகவல் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டது. உண்மையில் யூதர்களை Stateless என்கிற அந்தஸ்திலேதான் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். யூதர்களை பாலஸ்தீனத்திலிருந்து வந்தவர்கள் என்று நெப்போலியனின் பிரான்சு அரசு குறிப்பிட்டது மனரீதியாக யூதர்களுக்கு ஒரு பலத்தைக் கொடுத்தது. தங்களுக்காக படைக்கப்பட்டதாக தங்களின் வேதங்கள் கூறுவதை பிரான்சு அரசாங்கம் ஆவணப் படுத்தி அங்கீகாரம் தந்ததாக யூதர்கள் உணர்ந்தார்கள். இந்தச் செயல் அவர்களுக்கு ஒரு மனத்தளவில் துணிச்சலைக் கொடுத்தது. 

உலகில் தாங்கள் உதைபடாத இடங்களே இல்லை என்ற நிலையில் அன்னியர் என்றாவது நெப்போலியன் தந்த அடைக்கலம் ஒருபுறம் ; அந்த அடைக்கலத்தின் பின்னணியில் தங்களுக்கும் ஒரு நாடு உலகில் உண்டு என்று ஒரு வலுவான நாடு ஒப்புக் கொண்ட நிலை ஒருபுறமாக யூதர்கள் தங்களின் மகிழ்ச்சிப் பக்கத்தை திறந்து வைத்தார்கள். 

அதே நேரம் நெப்போலியனுக்கும் ஒரு உள் நோக்கம் இருந்தது. அது என்னவோ தெரியவில்லை ஜெருசலத்தின் மீது அனைவருக்கும் காரணங்கள் நிரம்பிய காதல் என்றால் நெப்போலியனுக்கு ஏக்ர் என்கிற சிரியாவின் பகுதியைச் சேர்ந்த ஒரு கோட்டையின் மீது ஆசை. ( இந்த ஏக்ர் பற்றி சிலுவைப் போர்கள் பற்றி நாம் படித்த போது பார்த்து இருக்கிறோம். சலாஹுதீன் அய்யூபி அவர்கள் ஒரு கட்டத்தில் இந்தக் கேட்டையை விட்டுக் கொடுத்து கிருத்துவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துள்ளார் என்று பார்த்து இருக்கிறோம் ) 

இந்த ஏக்ர் கோட்டையை வெற்றி கொள்வதற்கு நெப்போலியனுக்கு ஏதோ ஒரு திட்டம் இருந்தது. அந்த திட்டம் மற்றும் ஆசையின் அடிப்படை ஜெருசலம்தான். ஏக்ர் கோட்டையை முதலில் கைப்பற்றி அங்கு இடத்தைப் பிடித்துவிட்டால் ஜெருசலத்தின் மடத்தையும் சுலபமாகப் பிடித்து பிரான்சுடன் இணைத்துக் கொள்ளலாம் என்பது நெப்போலியனின் நினைப்பு. 

தனது இந்த ஆசைக்கு யூதர்கள் உதவுவார்கள் என்பது நெப்போலியன் போட்ட கணக்கு. இதற்காக யூதர்களுக்கும் நெப்போலியனுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் கணக்கு இன்றைய அரசியல் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு கூட்டணி போல ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. என்னவென்றால் சிரியா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் தன்மைகளை அறிந்த யூதர்கள் நெப்போலியனுக்கு படையெடுப்புக்கு உதவ வேண்டும்; அதற்கு பதிலாக அவர்களது சொந்த நிலத்தை துருக்கியர்களிடமிருந்து மீட்டுத்தர நெப்போலியன் உதவுவார் என்பதே அந்தத் தொகுதி உடன்பாடு. உண்மையில் ஜெருசலம் மீட்கப்பட்டால் அங்கு யூதர்களை குடியமர்த்திவிட்டு அதை பிரான்சின் கட்டுப் பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமென்பதே நெப்போலியனின் உள்மனதில் அடித்துக் கொண்டிருந்த ஆசை அலைகள்.

ஆகவே, பாலஸ்தீனம் யூதர்களின் சொந்த நிலம் என்பதும் அதை மீட்டு உலகெங்கும் சிதறிக் கிடக்கும் அவர்களை தங்களது சொந்த நிலத்தில் குடியமர்த்த வேண்டும் என்கிற கருத்துகளுக்கான அரிச்சுவடிக்கு ஆனா ஆவன்னா போட்டது நெப்போலியனின் பிரான்சு அரசு.

நெப்போலியன் திட்டமிட்டபடி, சிரியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளின் மீது படையெடுத்து ஏக்ர் கோட்டையைக் கைப்பற்ற வந்தார். யூதர்களுக்கு நெப்போலியன் போட்ட பிஸ்கட்டுத் துண்டுகளுக்கு வாலாட்டி, அவரது படையில் பல ஆயிரம் யூதர்களும் அணிவகுத்து வந்தனர். அவர்கள் எதிர்த்து நின்றது யாரை? எந்த துருக்கிய அரசு யூதர்களுக்குத் துன்பம் வந்த நேரத்தில் அவர்களை அரவணைத்துக் காப்பாற்றியதோ அந்தத் துருக்கிய அரசை.

என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு; உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உணடல்லவா? துருக்கி அரசு தனக்கு ஆதரவு கேட்டு பிரிட்டனை அணுகியது. 

ஒரு புறம் நெப்போலியன் – யூதக் கூட்டணி அடங்கிய தேசிய ஜனநாயக முன்னணி ; மறுபுறம் துருக்கி மற்றும் பிரிட்டிஷ் படைகள் அடங்கிய ஐக்கிய முன்னணி. போரின் விளைவு துரோகிகளுக்குத் தோல்வி. நெஞ்சை நிமிர்த்திவந்த மாவீரன் நெப்போலியன் சூடு கண்ட பூனையாக வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது. பாலஸ்தீனத்தின் இந்த வரலாற்றில் இப்போதுதான் பிரிட்டனின் தோற்றத்தை (Appearance) நாம் குறிப்பிட்டு இருக்கிறோம்.

ஆம்! இந்த நெடிய வரலாற்றின் சகுனியாகவும் சூத்திரதாரியாகவும் இனி மாற இருக்கிற பிரிட்டன் இப்போது நெப்போலியனைத் தோற்கடிக்கவே துருக்கிக்குத் துணை நின்றது. நெப்போலியனை வென்று வீழ்த்தியும் காட்டியது. 

தோற்று பிரான்சுக்கு ஓடிய நெப்போலியனுக்கு இனி சிரியாவும் ஏகர் கோட்டையும் ஒரு நிறைவேறாத கனவாகத் தோன்றியது. அதனால் அவர் இதுவரை யூதர்களுக்கு செய்துவந்த உதவிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. ஆகவே யூதர்களின் நிலைமை ‘ உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா’ என்கிற நிலைமைதான். 

அடுத்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு எங்கே போகலாமென்று எண்ணி இருந்த யூதர்களின் இரத்தம் ரஷ்யாவிலும் சிந்தப் பட வேண்டுமென்பது இறைவன் அவர்களுக்கு விதித்திருந்தவிதியோ என்னவோ ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னர்களின் இளவரசர் ரஷ்யாவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் யூதர்கள் வந்து குடியேறி விவசாயத்தை வளப்படுத்த வரலாமென்று அழைப்பு விடுத்தார். 

இப்படி ரஷ்யாவும் யூதர்களை அழைக்கக் காரணமும் உள்நோக்கமும் இருந்தது. அந்த உள்நோக்கமும் வேறொன்றுமல்ல. ஜெருசலம்தான். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி உலகின் ஒவ்வொரு நாடும் ஜெருசலத்தை தங்களுடன் இணைத்துவைத்துக் கொள்ளவேண்டுமென்று ஆசைப்பட்டன. காரணம் உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஜெருசலம் என்பது ஒரு வாடாத மலர். அந்த மலரைத் தங்களின் மகுடத்தில் சூட்டிக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களின் அரசியல் சதுரங்கத்தின் காய்களை நகர்த்தின.

இந்த வரலாற்றில் இப்போது யூதர்களை அரவணைப்பது ரஷ்யர்களின் காலம். தங்களது இராணுவத்தின் ஒரு படைப் பரிவுக்கு இஸ்ரேல் இராணுவப் படைப்பிரிவு என்று பெயரிட்டு அதற்கான பேட்ஜ்களை தங்களின் சட்டைப் பைகளின் மேல் குத்தி அழகு பார்த்தார்கள். அவர்களின் ஒரு படைப் பரிவின் தலைவருக்கும் அந்தப் பெயரை சூட்டி மகிழ்ந்தார்கள். அதோடு நிற்காமல் துருக்கியின் வசம் இருந்த பாலஸ்தீனம் உட்பட்ட பகுதிகளை தங்களின் ரஷ்ய சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொள்ள இரண்டு போர்களை நடத்தினார்கள்.

இந்தப் போர்களில் ரஷ்யர்களுக்கு யூதர்கள் வால் பிடித்தார்கள்; துருக்கியர்களுக்கெதிராக வாளெடுத்தார்கள்; தோள்கொடுத்தார்கள். ஆனால் கி.பி. 1768 முதல் 1774 வரை நடந்த போரிலும் அதன்பின் 1787 முதல் 1792 வரை நடைபெற்ற இருபோர்களிலும் துரதிஷ்டவசமாக துருக்கியர்கள் ரஷ்யாவுக்குத் தோல்வியையே கொடுத்தார்கள். தோள் கொடுத்து வாளெடுத்த யூதர்கள் துவண்டதே மிச்சம். அதுமட்டும் மிச்சமல்ல அதற்கடுத்து ரஷ்யா வழங்கிய மறக்க முடியாத மரணப்பரிசுகளும் யூதர்களின் வரலாற்றில் மிச்சம்தான். 

நெப்போலியனுடனும் ரஷ்யாவுடனும் யூதர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு துருக்கியர்களை எதிர்த்துப் படை நடத்தியதால் யூதர்களின் துரோகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. இவ்வளவு நன்றி கெட்ட ஜென்மங்களா இவர்களென்ற நினைப்பு ஒட்டு மொத்த அரபு சமுதாயத்திடம் வேரூன்றியது. வெறுப்புணர்வுகள் விதை போடாமலேயே வளர்ந்தது. 

இறைவன் தனது திருமறையில் இவர்கள் செய்த நன்றிகெட்ட தனங்களின் பட்டியலை பாருக்கு அறிவிக்கிறான். எத்தனயோ நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளை திருமறை வரிசையாக எடுத்து வைக்கிறது.

“நாம் நமது வேதத்தில் இஸ்ராயீலின் வழித் தோன்றல்களுக்கு ‘ திண்ணமாக நீங்கள் பூமியில் இருதடவை பெரும் குழப்பம் விளைவிப்பீர்கள் ‘ என்றும் பெரிதும் அக்கிரமம் புரிவீர்களென்றும் முன்பே அறிவித்திருந்தோம் இவ்வாறு குழப்பத்திற்கான முதல் சந்தப்பம் வந்தபோது மிகவும் சக்திவாய்ந்த நம்முடைய அடிமைகளை உங்களுக்கு எதிராக நாம் எழச் செய்தோம். அவர்கள் உங்கள் நாட்டில் ஊடுருவி , எல்லாத்திசைகளிலும் பகுதிகளிலும் பரவினார்கள். இது நிறைவேற்றப் படவேண்டிய வாக்குறுதியாகவே இருந்தது. அதன் பின்னர் அவர்களை வெற்றி கொள்ளும் வாய்ப்பினை உங்களுக்கு நாம் வழங்கினோம். மேலும் பொருள் , செல்வங்கள், மக்கள் செல்வங்கள் மூலமும் உங்களுக்கு உதவி செய்தோம் . நீங்கள் நன்மை செய்த போது அது உங்களுக்கு நன்மையாக இருந்தது. தீமை செய்தபோது அது உங்களுக்குத் தீமையாக இருந்தது. பிறகு , இரண்டாவது சந்தர்ப்பம் வந்தபோது, வேறு பகைவர்களை உங்கள் மீது நாம் சாட்டினோம்- அவர்கள் உங்கள் முகங்களை உருக்குலைத்திட வேண்டும்; மேலும், முந்தைய பகைவர்கள் எவ்வாறு (பைத்துல் முக்கத்தஸ்) பள்ளியில் நுழைந்தார்களோ அவ்வாறு இவர்களும் அங்கே நுழைந்து தங்கள் கைக்கு எட்டியவைகளை எல்லாம் அழித்துவிட வேண்டுமென்பதற்காக . நாமும் மீண்டும் உங்களை தண்டிப்போம். மேலும், நன்றி கொன்ற மக்களுக்காக நரகத்தை சிறையாக நாம் ஆக்கி வைத்துள்ளோம்" (பனு இஸ்ராயீல் அத்தியாயம் 17 : 4- 7 ) என்று இறைவன் திருமறையில் கூறுகிறான்.

நவீன வரலாற்று காலத்தில் கூட யூதர்கள் திருந்தவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான் மேலே நாம் குறிப்பிட்ட நெப்போலியன் மற்றும் ரஷ்யர்களுடன் கூட்டணி வைத்து, துருக்கியர்களுக்கெதிராக அணிவகுத்தது.

மேலும் யூதர்களின் இயல்பான துரோகம் அவர்களைத் துரத்தித் துரத்தி அடித்தது. துருக்கியுடன் ஏற்பட்ட போரின் தோல்விகளுக்குப் பிறகு ரஷ்யர்கள் யூதர்களை எக்ஸ்ட்ரா லக்கேஜாக எண்ணினார்கள். வெறுப்புக் காட்டத்தொடங்கினார்கள். அத்துடன் இந்த யூதர்கள்தான் இயேசு கிறிஸ்துவைக் கொன்ற கொலைகாரர்கள் என்ற வெறுப்பும் ரஷ்ய மக்களிடம் பரவலாகப் பரவியது. 

அத்துடன் இன்னொரு அரசியல் நிகழ்வாக போலந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்த சமயத்தில் போலந்து நாட்டின் பல பகுதிகளை யூதர்கள் விலைக்கு வாங்கினார்கள். அகதிகளாக வந்தவர்கள் தங்களுடன் இருந்து பிரிந்த நாட்டின் பகுதிகளை விலைக்கு வாங்கியதும் ரஷ்யர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'வந்தா வரத்தார்கள் என்ற பிளவு மனப்பான்மை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.

மேலும் எவ்வளவுதான் ரஷ்யர்கள் புகலிடம் கொடுத்து வைத்திருந்தாலும் தங்களை ரஷ்யர்கள் என்று சொல்லிக் கொள்ள யூதர்கள் வெட்கப்பட்ட நிகழ்வுகளையும் ரஷ்யர்கள் கவனித்தார்கள். யூதர்களை விரட்டியடிக்க காலத்தை எதிர்நோக்கி கத்திகளை தீட்டி வைத்து இருந்தார்கள். யூதர்களை அழித்தொழிக்க சந்தர்ப்ப எப்போது வருமென்று எதிர்நோக்கிய நேரத்தில் , ரஷ்யாவின் அலெக்சாந்தர்- இரண்டு என்ற ஜார் மன்னர் யாராலோ கொலை செய்யப்பட்டார். இந்தக் இந்தக் கொலைச் சதிக்கு யூதர்களும் உடந்தை என்ற வதந்தி ஊரெங்கும் பரவியது. 

முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது டில்லியில் சீக்கியர்கள் எவ்வாறு சூறையாடப்பட்டார்களோ அவ்வாறே யூதக் குடியிருப்புகள் நொறுக்கப்பட்டன. யூதர்கள் கூட்டம் கூட்டமாக கண்ட இடங்களிலெல்லாம் வெட்டபட்டார்கள்; வேட்டையாடபட்டார்கள். யூதப் பிணங்கள் குவியத் தொடங்கின. பிணங்களை எடுத்து புதைக்கக்கூட ரஷ்ய மக்களுக்கு மனம் வரவில்லை. 

இப்படி பலநாட்டு மக்களின் கரங்களிலும் சிக்கி சீரழிந்த இந்த யூத இனத்துக்கும் அந்த இனத்தின் மீது கூட அனுதாபமும் இரக்கமும் காட்டும் எண்ணம் படைத்த நடுநிலை நாடுகளுக்கும் யூதர்களுக்கென்று ஒரு நாடு இருந்தால் அவர்கள் வாழ்ந்து கொள்வார்களே என்ற எண்ணம் மேலோங்கத் தொடங்கியது. யூதர்கள் பக்கம் அனுதாப அலை அடிக்கத் தொடங்கியது. சட்டத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கபட்டாலும் அனுதாபப்பட்டு பால் குடமும் பன்னீர் குடமும் எடுத்து, அங்கப் பிதிஷ்டமும் செய்து, மண்சோறு சாப்பிட்டு, ஆணி செருப்பு போட்டு நடந்து அனுதாபம் காட்டும் மக்கள் எங்கும் இருக்கவே செய்கிறார்கள். இப்படி ஒரு அனுதாபத்தை யூதர்கள் தங்கள் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கினார்கள். 

இன்ஷா அல்லாஹ் தொடரும். 

=========================================================
( நன்றி : குர் ஆனில் ஜெருசலம் இம்ரான் என். ஹுசைன் பக்கம் 58).

இபுராஹிம் அன்சாரி

18 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

Assalamu alaikkum

E. A. Kaka neenga yutha tholai uriththu varinchu kattiya 18
mudichchu piramandam.

ZAKIR HUSSAIN said...

நீங்கள் ஒவ்வொரு அத்யாயமும் எழுதும்போது எனக்கு ஏற்படும் ஆச்சரியம் ' படித்தது வணிகவியல்..எப்படி இவ்வளவு சரித்திர விசயங்களை கோர்வையாக சொல்ல முடிகிறது" என்பதுதான்.

உங்கள் திறமைக்கான பாராட்டுகள் படைத்த இறைவனையே சாரும்.

sheikdawoodmohamedfarook said...

//அனுதாபபட்டுபால்குடம்பன்னீர்குடம்எடுத்துஅங்கபிரஷ்டமும்செய்து.....//அப்புடின்னாஇங்கேநடந்ததெல்லாம்அங்கேந்துஏறக்குமதிசெஞ்ச சரக்குதானா?நான்சொந்தசரக்குன்னுலோநெனெச்சேன்!ஏமாத்திபுட்டானுகளே!பாவிபசங்க.அவன்நல்லாஇருப்பானா?

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய காக்கா,

எத்துணை சரித்திரச் சம்பவங்களை உள்ளடக்கியது பாலஸ்தீன வரலாறு என்கிற ஆச்சர்யப்படத்தக்க உண்மை, தாங்கள் சொல்லும் வரை எனக்குத் தெரியாது!

எத்தனையோ கிளைகளில் கட்டுரைப் பயணித்தாலும் மையக் கருத்தையும் பேசுபொருளையும் நெருங்கியே இருக்குமாறு எழுதிச் செல்வது, அதுவும் அநாயசமாக, கைதேர்ந்த எழுத்தாளருக்கான லட்சணம்.

நீங்கள் எப்பவோ எழுத்துப் பணிக்கு வந்திருக்க வேண்டும். பரவாயில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகள் நீங்கள் எழுதாதவற்றையெல்லாம் இனி எழுதத் தோதாக ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அல்லாஹ் தங்களுக்குத் தருவானாகவும்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

(இந்த அற்புதமான ஆராய்ச்சித் தொடரை வெளிக்கொணர்ந்த அதிரை நிருபருக்கும் பாராட்டுகள்)

sabeer.abushahruk said...

//உலகில் தாங்கள் உதைபடாத இடங்களே இல்லை //

யூதர்களை நாம் வெறுத்தாலும் அழிந்து போகட்டும் என்று சாபமிட்டாலும் ஒரு விஷயத்தில் அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.

எவ்வளவு அடி உதை வாங்கினாலும் வாழைபோல வெட்ட வெட்ட வளர்ந்து இப்போது ஸ்திரமான ஒரு நிலையில் இருப்பதற்கு அசாத்தியமான ஒரு திறமை வேண்டும்.

"ஏமாற்றியல்லவா தழைத்தார்கள்!" என்று குற்றம் சொன்னாலும்,

"நீ ஏன் ஏமாந்தாய்?" என்று கேட்கத் தோன்றும் அல்லவா?

sabeer.abushahruk said...

இவ்வார அத்தியாயத்தில் குர் ஆன் வசனத்தை சரியான இடத்தில் உள் நுழைத்திருப்பத்கு பாராட்டத் தக்கது

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்!

ஆர்வமிருந்தால் இலகுவாகப் படிக்க இயன்ற பாடம் வரலாறு.

சமைக்கும்போது கொஞ்சம் ஜாகீர் மசாலா, கொஞ்சம் கிரவுனின் சூத்திரம், பிறகு பகிரும்போது அலங்கரிக்க சபீர் பிராண்ட் டெகரேஷன் இருந்தால் சுவை கூடும்.

தவிரவும் சிறுவயதிலிருந்தே வரலாற்றுப் பாடத்தில் ஈடுபாடு. புகுமுக வகுப்பில் வரலாற்றுப் பாடத்தில் Distinction.

எல்லாவற்றையும்விட நீங்கள் அனைவரும் ஊட்டும் ( நெறியாளரின் குங்குமப் பூ போட்ட ) ஆர்வப்பால். இவற்றைக் குடித்தால் இரவு விழித்துக் கூட எழுத முடிகிறதே. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

தம்பி சபீர்!
தாங்கள் குறிப்பிட்டிருப்பது உண்மை. யூதர்களின் சரித்திரம் படித்தால் ஏற்படும் ஆச்சரியம் எப்படி இவர்களால் வெட்ட வெட்ட தழைக்க முடிகிறது விரட்ட விரட்ட நுழைய முடிகிறது என்பதுதான்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயம் உங்களின் சிந்தனைக்கு இன்னும் தீனி போடும்.

sheikdawoodmohamedfarook said...

கிறிஸ்துவைகொன்றயூதர்களைகிறிஸ்துவநாடானபிரிட்டன்அமெரிக்கா போன்றநாடுகள்ஏன்அவர்களைசெல்லப்பிள்ளகலைபோல்தொட்டில்கட்டி ''ஆராறோஆரிறரோ''பாடுகிறது?

sheikdawoodmohamedfarook said...

//நெறியாளரின்குங்குமப்பூபோட்டஆர்வப்பால்//மைத்துனர்இனா.ஆனா.சொன்னது. ஆறுமாசவயத்துபுள்ளேகாரிக்குத்தான் குங்குமப்பூபோட்டுபால்கொடுப்பாங்க! அப்பத்தான்பொறக்குபுள்ளேசெவப்பாபொறக்குமாம்!. இப்போஆம்புளைக்குமாஅந்தப்பால்கொடுக்குறாங்க?

Ebrahim Ansari said...

//கிறிஸ்துவைகொன்றயூதர்களைகிறிஸ்துவநாடானபிரிட்டன்அமெரிக்கா போன்றநாடுகள்ஏன்அவர்களைசெல்லப்பிள்ளகலைபோல்தொட்டில்கட்டி ''ஆராறோஆரிறரோ''பாடுகிறது?//

தொடர் தொடரும்போது பதிலைத் தெரிந்து கொள்ளலாம் மச்சான்.

crown said...


இந்தப் போர்களில் ரஷ்யர்களுக்கு யூதர்கள் வால் பிடித்தார்கள்; துருக்கியர்களுக்கெதிராக வாளெடுத்தார்கள்; தோள்கொடுத்தார்கள். ஆனால் கி.பி. 1768 முதல் 1774 வரை நடந்த போரிலும் அதன்பின் 1787 முதல் 1792 வரை நடைபெற்ற இருபோர்களிலும் துரதிஷ்டவசமாக துருக்கியர்கள் ரஷ்யாவுக்குத் தோல்வியையே கொடுத்தார்கள். தோள் கொடுத்து வாளெடுத்த யூதர்கள் துவண்டதே மிச்சம். அதுமட்டும் மிச்சமல்ல அதற்கடுத்து ரஷ்யா வழங்கிய மறக்க முடியாத மரணப்பரிசுகளும் யூதர்களின் வரலாற்றில் மிச்சம்தான்.
------------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இங்கே வரலாற்றை சொல்லிவரும் போதே வார்தை சொல் சிலம்பம் எடுத்து வரலாறு சிலபஸில் பாடம் எடுத்திருக்கிறார்கள்!அ.இ காக்கா!

crown said...

அத்துடன் இன்னொரு அரசியல் நிகழ்வாக போலந்து நாடு ரஷ்யாவிலிருந்து பிரிந்த சமயத்தில் போலந்து நாட்டின் பல பகுதிகளை யூதர்கள் விலைக்கு வாங்கினார்கள். அகதிகளாக வந்தவர்கள் தங்களுடன் இருந்து பிரிந்த நாட்டின் பகுதிகளை விலைக்கு வாங்கியதும் ரஷ்யர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. 'வந்தா வரத்தார்கள் என்ற பிளவு மனப்பான்மை அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது.
---------------------------------------------------------------------------
போலந்தை பி(பொ)ளந்து அதை விலைக்கு வாங்கியதால் ரஷ்யாவின் பகையை வாங்க முடிந்தது!காக்கா! பொளந்து கட்டுரீங்க!!!!!!!!!!

crown said...

யூதர்கள் பக்கம் அனுதாப அலை அடிக்கத் தொடங்கியது. சட்டத்தால் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கபட்டாலும் அனுதாபப்பட்டு பால் குடமும் பன்னீர் குடமும் எடுத்து, அங்கப் பிதிஷ்டமும் செய்து, மண்சோறு சாப்பிட்டு, ஆணி செருப்பு போட்டு நடந்து அனுதாபம் காட்டும் மக்கள் எங்கும் இருக்கவே செய்கிறார்கள். இப்படி ஒரு அனுதாபத்தை யூதர்கள் தங்கள் கணக்கில் வரவு வைக்கத் தொடங்கினார்கள்.

------------------------------------------------------------
இந்த பன்னீரால்தான் பால் விலையும் பாழாய் போனது!இருந்தாலும் மாக்கள் பால் குடமும் பன்னீர் குடமும் எடுத்து, அங்கப் பிதிஷ்டமும் செய்து, மண்சோறு சாப்பிட்டு, ஆணி செருப்பு போட்டு நடந்து அனுதாபம் காட்டும் கூட்டம் என்றும் மாறவில்லை! அழகாய் எடுத்து கையாளப்பட்டுள்ள உதாரணங்கள். காக்கா! வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

தம்பி கிரவுன்!

வ அலைக்குமுஸ் சலாம்.

போலந்து - பிளந்து ஆஹா! எழுதும்போது எனக்குத் தோன்றாமல் போச்சே!

தங்களின் கருத்துரைகள் இந்தப் பதிவை அலங்கரிக்கின்றன.

தம்பி எல் எம் எஸ் அபூபக்கர் அவர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு கருத்துரை இட்டு இருக்கிறார்கள். உடல்நலம்பெற அனைவரும் து ஆச் செய்வோமாக!

N. Fath huddeen said...

தமிழ் ஹிந்து: பிறவிப் பகைவர்கள் – பாலஸ்தீனம், இஸ்ரேல்

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-7/article6652539.ece?widget-art=four-rel


என்ற கட்டுரை ஒரு வாரமாக எழுதப்படுகிறது. பெரும்பாலான வாசகர்கள் எதிர்ப்பு குரல் தான் கொடுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதப்படும் ஒரு கட்டுரை. வரலாறு என்று சொன்னால் அபத்தம். அங்கே WAR CRIMINALS என்று தேடப்பட்டவர்களை எல்லாம் மாவீரர்களாக சித்தரித்து எழுதப்படுகிறது. இதே நேரத்தில் சமரசத்திலும் (போர்க்களத்தின் செய்திகள் BY: V.S.முகம்மத் அமீன் http://samarasam.net/issue/01-15_Nov_14/#35) இந்த வரலாறு எழுதப்பட்டு வருகிறது. ஆக ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இந்த வரலாறு வந்து கொண்டு இருக்கிறது (சற்று மாற்று கண்ணோட்டத்துடன்). ஆகவே தமிழ் ஹிந்து வில் எழுதப்படும் கட்டுரைக்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிய வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
THANKS WASSALAM.

Ebrahim Ansari said...

/என்ற கட்டுரை ஒரு வாரமாக எழுதப்படுகிறது. பெரும்பாலான வாசகர்கள் எதிர்ப்பு குரல் தான் கொடுத்துள்ளனர். உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதப்படும் ஒரு கட்டுரை. வரலாறு என்று சொன்னால் அபத்தம். அங்கே WAR CRIMINALS என்று தேடப்பட்டவர்களை எல்லாம் மாவீரர்களாக சித்தரித்து எழுதப்படுகிறது. இதே நேரத்தில் சமரசத்திலும் (போர்க்களத்தின் செய்திகள் BY: V.S.முகம்மத் அமீன் http://samarasam.net/issue/01-15_Nov_14/#35) இந்த வரலாறு எழுதப்பட்டு வருகிறது. ஆக ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இந்த வரலாறு வந்து கொண்டு இருக்கிறது (சற்று மாற்று கண்ணோட்டத்துடன்). ஆகவே தமிழ் ஹிந்து வில் எழுதப்படும் கட்டுரைக்கு நீங்கள் உங்கள் கருத்துக்களை பதிய வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். //

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,

நான் ஹிந்து கட்டுரைகளை இன்னும் படிக்கவில்லை. நான் எனது பாணியில் எழுதுகிறேன். ஹிந்துக்கு உள்நோக்கங்கள் இருக்கலாம். நமக்கு அப்படி இல்லை.

மேலும் ஹிந்துவுக்கு உங்களைப் போன்றவர்கள் எதிர்த்து கருத்துத் தெரிவித்தால் நலம். எனக்கு நேரம் பிரச்னை.

Ebrahim Ansari said...

ஹிந்து கட்டுரை ஒருவாரமாகத்தான் வருகிறது. அதிரை நிருபரில் பதினெட்டு வாரங்களாக வந்து கொண்டு இருக்கிறது. இன்ஷா அல்லாஹ் இன்னும் பதினெட்டு வாரங்கள் வரும்.

N. Fath huddeen said...
This comment has been removed by the author.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு