எண்பதுகளில் சஊதியின் தலைநகர் ரியாதில் இருந்தபோது, நாங்கள் அமைத்த ஒரு சிறு அமைப்பான அதிரை நலச் சங்கத்திற்கு ஊரிலிருந்து விண்ணப்பம் ஒன்று வந்தது - கீழத் தெருவைச் சேர்ந்த அஹ்மது முஹிதீன் என்ற இளங்குருத்துக்குக் கண் பார்வை இழந்து போய்க்கொண்டிருப்பதாக. கமால் ஹுசைன், ஷரபுத்தீன் ஆகியோரின் தங்குமிடத்தில் ஒன்றுகூடினோம். அன்றையச் சூழ்நிலையில் பத்தாயிரம் சேர்ந்தது. உடனே அதை அனுப்பி, மேல்மருத்துவம் செய்யக் கோரினோம். பணத்தைப் பெற்றுக்கொண்டோர் செய்தார்கள் போலும். இறைவனின் நாட்டம் வேறு விதமாக இருந்துள்ளது; அச்சகோதரர் குணம் பெறவில்லை; கண் பார்வை அற்றவராகிவிட்டார்!
அவர்தான், நம்மூரின் ஆட்டோ விளம்பர மன்னன், 'அதிரையின் அற்புதம்', கீழத்தெரு அஹ்மது! இவருடைய கணீர்க்குரலை அதிரையின் தெருக்களில் கேட்கும்போது, காது கொடுத்துக் கேட்கவேண்டும் போல் இருக்கின்றது.
அதிரை பைத்துல்மாலின் நிரந்தர அறிவிப்பாளர் இவர். இவருக்கு பைத்துல்மால், 'வாழ்நாள் சாதனையாளர் விருது' இதுவரை கொடுத்திருப்பார்கள் என்றே நம்புகின்றேன்; எனக்குத் தெரியாது; கொடுத்திராவிட்டால், இனியாவது கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். எழுதிக் கொடுக்கும் விளம்பரத்தை வாசிக்கக் கேட்டு, அப்படியே மனத்தில் பதிய வைத்து, அட்சரம் மாறாமல் அதையே தனது கணீர்க் குரலில் ஊர் மக்கள் கேட்க உரத்துக் கூறுவார்.
பேரூராட்சியின் அடாவடி விளம்பரங்களும் இவர் மூலமே கொடுக்கப்படுகின்றன. வீட்டுவரி, தண்ணீர்வரி, சொத்துவரி என்று அதிரையின் குறிப்பிட்ட சில தெருவாசிகளிடமிருந்து மட்டும் கறக்கும் பணம் எங்கே செல்கின்றது என்று நமக்குத் தெரியாது. இதில், கொடுத்தவர்களே மீண்டும் கொடுக்கும் அப்பாவித்தனம் வேறு. மனிதர்களின் மறதியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் அலுவலர்களின் அடாவடித் தனம்!
ஒரு முறை என் வீட்டுக்கு இருவர் வந்து வீட்டுவரி கேட்டார்கள். கொடுத்ததும் கொடுக்காததும் எனக்குத் தெரியாது. அதனால், "லிஸ்ட்டைப் பார்த்து, எவ்வளவு என்று சொல்லுங்கள்" என்றேன். "போன தடவை எவ்வளவு கொடுத்தீர்களோ, அதுதான்" என்றார் வந்தவர் கூலாக. "அது எனக்குத் தெரியாது; கையிலிருக்கும் பட்டியலைப் பார்த்துச் சொல்லுங்கள்" என்றேன். தன் கையிலிருந்த பட்டியலில் தேடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு, இடையில் நான், "ஏன், இல்லையா?" என்று கேட்டபோது, "உங்க கீழ்புரம் லிஸ்ட் கொண்டுவரலீங்கோ" என்றார் அந்த 'அதிகாரி'. "பின்னே என்ன சிரைக்கவா வந்தாய்?" என்று கேட்கத் தோன்றியது; ஆனால், கேட்கவில்லை. அசடு வழியத் திரும்பிச் சென்றனர். வெளியில் சென்றிருந்த என் இல்லாள் திரும்பி வந்தபோது, நடந்ததைக் கூறினேன். "அதுதான் கட்டிவிட்டோமே!" என்று கூறி, பணம் கட்டிய ரசீதை எடுத்துக் காட்டினாள்.
சரி; இனி மற்ற ஆட்டோ விளம்பரங்களுக்கு வருவோம். அஹ்மதின் விளம்பரங்களுள் பெரும்பாலானவை, 'கமர்ஷியல்' விளம்பரங்கள்தாம். "லைலாத்தி, லைலாத்தி" - இது அடிக்கடிக் கேட்கும் விளம்பரம். 'சல்மான்ஸ்', 'லுக்மான்ஸ்' என்று கூறி, "உங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண ஆடைகளை வாங்கிச் செல்லுங்கள்" என்று அறிவிப்பார் அஹ்மது. "இலவசம், இலவசம், இலவசம்!" என்று கூறி, மக்களின் கவனத்தை ஈர்ப்பார். அதற்குப் பின்னணியில் செலவு இருக்கும்; அது வேறு கதை. அன்று காலை (29-07-2010) ஒரு புதிய அறிவிப்பு: "தமீம் இறைச்சிக் கடை!" இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம். ஏற்கனவே 'கொலஸ்ட்ரால்', BP என்று நோய்கள் கூடி இருக்கும்போது, இறைச்சி விற்பனையில் 'ப்ரமோஷன்' வேறா?
மக்களுக்குப் பயனுள்ள விளம்பரங்கள் ஒரு சில. ஆனால், அவற்றை மக்கள் எந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. 'ஷிஃபா' மருத்துவமனையின் சிறப்புச் சிகிச்சை அறிவிப்புகள், மாணவ மாணவிகளின் பள்ளிச் சீருடைகள் தயாரிப்பு, கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு முதலானவை.
விளம்பர அறிவிப்புகளுள், வட்டியை ஆதாரமாகக் கொண்ட வங்கிகள், இன்ஸ்யூரென்ஸ், மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும். "MGR ஐஸ்கிரீம்" வண்டி தவறாமல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து, பிள்ளைகளை அடம்பிடிக்க வைக்கும்.
வேண்டுமென்றே மக்களின் வெறுப்பைத் தேடிக்கொள்வதற்காக, பிறமத அன்பர்கள் சிலர் அம்பாசிடர் கார்களில் இடையிடையே நம் பகுதிக்குள் வந்து, தம்மைச் சார்ந்தோரின் மரண அறிவிப்புகளைச் செய்கின்றனர். இதில், நம்மூரின் சுற்று வட்டாரங்கள், பட்டுக்கோட்டை போன்ற இடங்களின் மாற்று மத அன்பர்கள் வந்து தொல்லை கொடுக்கின்றார்கள். தேவையற்ற இத்தகைய அறிவிப்புகள் அத்துமீறல்கள் என்பதை 'பேரூராட்சியின் ஆளுநர்கள்' சிந்திப்பார்களா?
நமதூர் ஆட்டோ விளம்பர நிலவரத்தை விரைவாக அலச நினைத்தபோது, எனது சிந்தனையில் வந்தவை இவைதாம். இதில், யாரையும் சாடுவதோ, அளவுக்கு மீறிப் புகழ்வதோ எனது நோக்கமன்று. பின்னூட்டமிடுபவர்களின் மனப்பாசறைகளில் இன்னும் ஏராளம் இருக்கலாம். பகிர்ந்துகொள்ளுங்கள், பார்ப்போம்.
அதிரை அஹ்மது
29.07.10
10 Responses So Far:
இது ஒரு மீள்பதிவு!
நமதூரை பொருத்தவரை பஞ்சாயத்து போர்டு எந்த வசூலாயிருந்தாலும் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.ஆம்.வசூலிக்க வருபவரிடம் போன தடவை கட்டிய கட்டண ரசீது அடிக்கட்டைய காட்ட சொல்ல வேண்டும்.அதை பார்த்து அதன்படி பணம் கட்டுதல்தான் நலம்..இல்லையென்றால் நாம் ஏமாற வேண்டி வரும்.
காரணம் தன் சொந்த செலவுக்கு பணம் தேவைபட்டால் அங்குள்ள ரசீது புக்கை லவட்டிகிட்டு வந்து வசூல் செய்யும் பேர்வழிகளும் வருவதுண்டாம்.
//MGRஐஸ்கிரீம்வண்டிதவறாமல்வொவ்வொருவெள்ளிகிழமையும்வருகிறது//அன்றுதான்முஸ்லிம்பள்ளிகளுக்குவிடுமுறை!மேலும்அந்தவண்டிகுளிர் காலங்களில்அடிக்கடிவருகிறது!எஸ்கிமோநாட்டில்ஐஸ்கிரீம்விற்கும்கெட்டிக்காரர்கள்!
'/'இன்றுமுதல்நோன்பு 27வரைதமிம் கடையில் இறைச்சிவிலைதள்ளுபடி// இதைகேட்டசெம்மறிஆடுகள்panicஆகி அச்சத்தில்உறைந்தன!.
சில நேரங்களில் விளம்பரம் என்ற பெயரில் காட்டுக்கத்தலாய் கத்தி எரிச்சலை உண்டுபண்ணிவிடுகின்றார்கள்
//இன்று முதல், நோன்பு 27 வரை சிறப்புத் தள்ளுபடியில் இறைச்சி விற்பனையாம்//
சிறப்பு தள்ளுபடியில் விட்டதை எல்லாம் நோன்பு பெருநாள் அன்று ரெக்கவர் செய்து விடுவார்கள்
//எந்தப்புடவைஎடுத்தாலும்எலுவதுரூவா!எந்தப்புடவைஎடுத்தாலும்எலுவதேரூவா!இல்லத்தரசிகளேஎழுந்துவாருங்கள்!குடும்பதலைவிகளே'குடு-குடு' எனவாருங்கள்.ஸாராமண்டபத்தில்ஸாரிதிருவிழா!''என்றவிளம்பரங்கள் நிறையவந்தது.ஆனால்ஒருகல்லூரியும்மேல்நிலைபள்ளிகள்பலவும்உள்ளஅதிரை நகரில் 'ஸாராமண்டபத்தில் புத்தககண்காட்சி! இன்று முதல்15நாள் வரை மட்டுமே.அடுக்கடுக்காய் புத்தகங்கள்! அடுக்கி வைத்து அழைக்கிறோம் விற்றுத் தீரு முன் விரைந்து வந்து வாங்குங்கள்!'' என்று ஒரு ஆட்டோ விளம்பரம்காதில்படவில்லையே?!
//இன்றுமுதல்நோன்பு 27வரை தமிம் கடையில் இறைச்சி விலை தள்ளுபடி// இந்தஆட்டோவிளம்பரத்தைகேட்டஆட்டுக்குட்டிகள்''அன்றேஇவர்கள் நம்மையும்கழுதையாக்கிஇருந்தால்நமக்குஇந்தக்கதிவருமா?'' என்றுதங்கள்கழுத்தில்போட்டவிதியேநொந்துகொண்டன.
//இன்றுமுதல்நோன்பு27வரைதமிம்கடையில்இறைச்சிவிலைதள்ளுபடி//ஆடுகழுத்தில்'கத்தி'வைதான்!ஆடு'கத்தி'யது!
Post a Comment