அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கடற்'கரை'த் தெரு சகோதரர்களுக்கு,
இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இதன் விளைவு சாதகமா பாதகமா என்பதைப் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இனியும் தாமதித்தால் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும்.
நான் அதிரை வாசி. கடற்'கரை'த்தெரு என் பிறப்பிடம். வளர்ந்தது படித்தது என்று என் சிறு பிராயத்து மற்றும் இளமைக் காலத்து சந்தோஷங்கள் எல்லாம் எனக்கு அள்ளித் தந்தது கடற்'கரை'த் தெருவின் பாரம்பர்யம் மிக்க வாழ்க்கை முறை.
ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் யாரையும் விட்டுக் கொடுக்காமல் ஒன்று சேர்ந்து கொள்ளும் ஒற்றுமை; யாரையும் ஏமாற்றத் தெரியாமல் உழைப்பைக் கொண்டு மட்டுமே உயரும் ஆண்மை மிக்க ஆண்கள்; புறத்து ஆண்களால் அதிகம் அறியப்படாத மார்க்கம் பேணும் பெண்கள், மொத்த தெருவும் ஒரே குடும்பம் என்னும் பாங்கினாலான அன்பு, பாசம், தோழமை. சகோதரத் தெருக்களுக்குத் தீய சக்திகளால் ஏதும் பிரச்னை என்றால் ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் துணிவு என்று மகிழ்ச்சியான சமூக அமைப்பு என்றுமே நம் தெருவை சிறப்பாகவும் வித்தியாசப்படுத்தியும் காட்டும். இத்தனை சிறப்பு வாய்ந்த நம் தெருவின் அவமானமாகச் சின்னமாக, பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வைத்திருக்கும் விஷயத்தைப்பற்றிதான் இக்கடிதம்.
என் சிறுபிராயத்தில் நம் தெருவில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் முக்கியமானவை இரயில் நிலையம், கடற்'கரை', கஸ்டம்ஸ் கட்டடங்கள், உப்பளங்கள், ஏரி, ஏரியின் வடிகால்களான சிற்றோடைகள், குளங்கள், புளிய மர மேடைகள், பள்ளிவாசல் மற்றும் தர்ஹா.
மற்ற விஷயங்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசலாம். ஏனெனில், இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்த தர்ஹாவைப்பற்றி மட்டும் பேசவே இதை இந்தச் சமயத்தில் எழுதுகிறேன்.
சொல்வதற்கு சற்று மிகையே என்றாலும், அரேபியாவின் ஜாஹிலியாவைப் போன்றே என் வயதையொத்த பலரது அதிரை தினங்கள் கழிந்தன. என் பிள்ளைப்பிராயத்து நினைவுகள் என்றுமே என்னிடம் பசுமையாக நினைவில் நிற்கும். ஹந்தூரி காலம் வந்துவிட்டால் தெருவே கலை கட்டும். நம் தெருவுக்கு இது மூன்றாவது பெருநாளோ என்று சொல்லும் அளவுக்கு ஹந்தூரி ஏற்பாடுகள் மிக சிரத்தையாக மேற்கொள்ளப்படும். ஹந்தூரி படு விமர்சையாக அமைய வேண்டும் என்கிற ஆசை நம் தெரு வாசிகள் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்து இருக்கும்.
கொடிமரம் ஏற்றும் நாளிலிருந்து கூட்டு இரவு வரை நம் தெருவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழ்ந்து போவார்கள். ஏதோ அல்லாஹ்வின் கட்டளையை இனிதே நிறைவேற்றிவிட்டதுபோல் திருப்தி மனதில் நிலவும். வாப்பா உம்மா மற்றும் உஸ்தாது கற்றுத் தந்த மார்க்கத்தில், வேறு எந்த மதத்திற்கும் குறைவில்லாத அளவுக்கு கேளிக்கைகளும் கூத்தும் கும்மாளமும் நம் தெருவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்தேறும்.
எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை எனக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாகத்தான் பட்டன. பெரியவர்கள் வழியைப் பின்பற்றுதலே இஸ்லாம் என்று மூளைச் சலவை செய்யப்பட்ட சந்ததியாகவே நாங்கள் வளர்க்கப்பட்டோம். காலங்கள் செல்லச் செல்ல் நான் வளர என்னோடு சேர்ந்த இயல்பாகவே அறிவும் வளர்ந்தது. மொழிபெயர்க்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் தொகுப்புகள் வாசிக்கக் கிடைத்தன. ஏன் எதற்கு என்று கேள்விகள் பிறந்தன. எல்லாவற்றிலும் இணைவைப்பின் தீமை பற்றி மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது. தர்ஹா இணைவைப்பின் அடையாளம் என்பது விளங்கிற்று. எனக்குத் தெரிந்ததை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சுலபமாக எத்தி வைத்து அவர்களிடம் மாற்றம் கொணற முடிந்தது. ஆனால், வயதில் மூத்தவர்களில் பலர் தர்ஹா கலாச்சாரத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை. அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மார்க்க கிரியையாகவே கண்டனர். அதனால், அறியாமல் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். கால ஓட்டத்தில் ஹந்தூரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக இல்லாமல் போகவில்லை.
பெருத்த வணிகமாகிவிட்ட நாகூர் அஜ்மீர் போன்ற தர்ஹாக்களை அனுகுவதே பெரும் சவாலாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஒரு சமுதாயச் சீர்திருத்தத்திற்கான புரட்சி வித்தாக நம் தெருவின் ஹந்தூரியை நடத்த விடாமல் நிறுத்த வேண்டும். முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதற்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்க வேண்டும்.
என் சகோதரா, ஹந்தூரி ஒரு இஸ்லாமியச் சமூகத்தின் கலாச்சாரச் சீர்கேடு என்பதை அறிந்து கொள். கேளிக்கைகளின்மீதான மனிதனின் இச்சையை வெளிப்படுத்தும் ஒரு அலங்கோலம் ஹந்தூரி. ஒரு சில சுயநலமிகளின் பொருளாதாரத் தேவைகளுக்காக நடத்தப்படும் நாடகம் ஹந்தூரி. நரக நெருப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹந்தூரியிலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.
அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது
முகவரி தவறிய கடிதமே
தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை – நீ
தீர்ப்பவன் இடமே கேட்கவும்!
அன்புடன்,
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
19 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புடன் சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் என்பதுடன் அன்புடன் செ. இ. மு. வகையறாவின் இப்ராஹீம் அன்சாரி என்பதையும் சேர்த்துக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வரிகள் அனைத்தும் எனது உணர்வுகளுமே.
கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் கந்தூரி....அமீரக கடற்க்கரை தெரு அமைப்பு இதனை வன்மையாக எதிர்த்து அறிக்கையும்/தகவலும் கடற்க்கரைத் தெரு சங்கத்திற்க்கு அனுப்பிவிட்டார்கள்....பெருபான்மையான மக்கள் எதிர்த்தும்...ஒரு சில உள்தெரு / வெளிதெரு அன்னக்காவடிகளின் தயவினால் இந்த அனாச்சாரியம் அரங்கேறுகின்றது..அல்லாஹ் தான் இவர்களை திருத்தணும்.....என் எண்ணத்தையும் பிரதி பலித்தமைக்கு நன்றி காக்கா..இச்செயல் அடியோடு அழிந்து போகும் காலம் வெகு விரைவில் இல்லை...
இந்த வருஷ கந்தூரிக்கு சந்தனம் பூச கந்தூரி கமிட்டியை சார்ந்த அனைவரையும் உள்ளே அனுப்புங்கள் அடுத்தவருஷம் கந்தூரி எடுக்க ஆள் இருக்காது
Assalamu Alaikkum
There is nothing impossible for harmoniously united minds !!!. But it is the rarest and most sought after thing nowadays.
May Allah guide us to the straight path.
B. Ahamed Ameen from Dubai.
இதுவும் ஒரு ட்ரண்தான்...என்ன கொஞ்சம் அநியாயத்துக்கு நால் பட்ட ட்ரண்ட் ஆகிவிட்டது. புதிய சமுதாயம் ஒதுங்க ஆரம்பித்து விட்டது. கந்தூரியில் கொஞ்சம் காசு பார்க்கும் கூட்டம் மட்டும் அவுலியாக்கள் பேரைச்சொல்லி ஒப்பேத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கந்தூரி எடுப்பதை ஆதரிக்கும் கூட்டம் நாளடைவில் WINDOW Xp மாதிரி அப்டேட் கிடைக்காமல் வழக்கொழிந்து போய்விடுவார்கள். அதுவரை இப்படி நாம் காட்டுக்கத்து கத்த வேண்டிவரும்.
இதில் கொடுமை என்னவென்றால் நாம் எழுதும் இந்த விசயங்களை படிக்கும் அளவுக்கு இந்த கந்தூரி பார்ட்டிகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்கள் கிடையாது.
இன்னும் இவர்கள் எல்லோரும் பேப்பர் என்பது மீடியா / ஜர்னலிசம் சம்பந்தப்பட்டது என நம்புவதில்லை.
இன்னும் பேப்பர் என்பதை மெதுவடையில் உள்ள எண்ணையை ஒத்தி எடுக்கும் சமாச்சாரமாகவே பார்க்கிறார்கள் [ யாரும் அவசரப்பட்டு ' இதை நோட்டீசாக அடித்து வெளியிடலாமே என நினைக்கலாம் ]
Tuan Haji Shahul...
உங்கள் கமென்ட் ஸ்டார் கமென்ட்.
கந்தூரிகளில் பெரும்பாலும் 'ஜொல்' பார்ட்டிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இவர்கள் எல்லோரும் டான்ஸ்காரிகளுக்கு செய்யும் சேவையை சொந்த பந்தத்துக்கு கூட செய்ய மாட்டார்கள்.
தொழுகை இருக்காது.. மற்ற மதத்தினரை நாம் சவுன்ட் ஸ்பீக்கர் கட்டி பள்ளிவாசல் பக்கத்தில் கத்தாதீர்கள் என்று சொல்லுமுன் நம் சகோதரர்களை இத்தனை நாள் திருத்த தவறி விட்டோம்.
//இதில் கொடுமை என்னவென்றால் நாம் எழுதும் இந்த விசயங்களை படிக்கும் அளவுக்கு இந்த கந்தூரி பார்ட்டிகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்கள் கிடையாது. //
வாசிக்கத் தெரிந்த அன்பர்களுக்கு !
தெருவை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பவர்கள் அப்பட்டமாக எதிர்க்கிறார்கள், ஊரில் தெருவுக்குள்ளேயே இருக்கும் சகோதரர்கள் முயன்றால் அதிரடியாக இதனை தடுத்து நிறுத்த இயலும்...
இந்த கடிதத்தின் முதல் இரண்டு பத்தியில் சுத்தி வைத்திருக்கும் 'கெத்து' இன்னும் சோடை போகவில்லைன்னு நிருபிக்க இது ஒரு நல்ல தருணம்.
சிந்தியுங்கள் இன்ஷா அல்லாஹ் !
அறியாப் பருவத்தில் அன்று நாமும் செய்த தவறுதான். அன்று மார்க்கக் கல்வியுடன் மூட நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஷிர்க்கான விசயங்களையும் புகுத்தி நம்மை வழிகேடளுக்கு உற்படுத்தி இருந்தார்கள். நாம் அது மகாபாவமென அறிந்து மார்க்கத்தில் ஓரளவு தெளிவு பெற்று அந்த ஷிர்க்கான செயலிலிருந்து விடுபட்டு வந்துவிட்டோம் இப்போது இந்த ஷிர்க்கை செய்பவர்களுக்கும் இது தவறு என்று அறிந்தவையே.. தனது சுயநலத்திற்காகவும், போட்டியின் காரணமாகவும் தான் இதை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எதுஎப்படியோ அநாகரீகமான இந்த செயலால் நமது சமூகம் சீர்கேடலையே சந்திக்கும்படி இருக்கும். ஆகவே இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பான கந்தூரி கன்றாவி தடுத்து நிறுத்தப் படவேண்டியவையே
//இன்னும் பேப்பர் என்பதை மெதுவடையில் உள்ள எண்ணையை ஒத்தி எடுக்கும் சமாச்சாரமாகவே பார்க்கிறார்கள் //
Haaahhhhhhh. This is Zakir. ]
ஒரு சுவர் இடைவெளியில் அல்லாஹ்வின் இல்லம் கட்டப்பட்டிருக்கு, இகாமத் சொன்னவுடன் அந்த ஏரியா கந்தூரி நிர்வாகம் அப்படியே பள்ளிக்கு தொழ போகுமா என்ற சந்தேகம் இருக்கும்வரை முடிவுசெய்துக்கவேண்டியதுதான் ஒரு சிலருக்கு இதுதான் பொலப்பே என்பது. எதையாவது ஆதாரம் காமிச்சாலும் இப்போ முளைச்ச காலான் போங்கப்பா பாரம்பரியத்தை நாங்க நிறைவேற்றனும்னு வரிஞ்சிக்கட்டிக்கிட்டு செய்வாங்க…
//இந்தக்கடிதத்தின்முதல்இரண்டுபகுதியில் சுத்திவைத்திருக்கும்'கெத்து'// தம்பிநெய்னால்தம்பிஅபுஇப்ராஹீம்சொன்னது. 'கெத்து'என்றால்என்ன?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் SMF காக்கா...
இந்த பதிவுக் 'கடித'த்தில் பெருமையுடன் சொல்லப்பட்டிருக்கும் கடற்கரைத் தெருவுக்கே உண்டான 'கெத்து (எல்லா விடயத்திற்கும்) ஒன்றாக கச்சல் கட்டும் சகோதரர்கள், மனத்தளவில் ஒதுக்கி விட்டதாக சொல்லும் ஊரிலிருக்கும் கடற்கரைத் தெரு சகோதரர்கள் சட்டபூர்வமாக தடுத்து நிறுத்த களத்தில் இறங்கலாமே !
கடுதாசி எழுதுன காக்காவுடைய ஆதங்கமும் இதுபோன்றதுதானே...!
வெளியிலிருந்து கொண்டு வெட்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக நேருக்கு நேர் சந்திக்கும் 'திடமு'ள்ள சகோதரர்கள் தர்காவைச் சுற்றி இருக்கத்தானே செய்கிறார்கள் அவர்கள் முயற்சிக்கலாமே...
இன்னுமொன்றையும் ஃபேஸ்புக்கில் உலாவருவதைக் காண முடிந்தது... மற்ற தெருவாசிகளை கந்தூரிக்கு வர வேண்டாம் என்ற வேண்கோளடங்கிய வாசகம்...!
இந்த வருடம் கடற்கரைத் தெருவில் கந்தூரி இல்லை என்று சகோதரர்கள் இணைந்து அறிவிப்பு செய்யலாமே இன்ஷா அல்லாஹ் !
ஃபாரூக் மாமா / அபு இபு,
தெருவுக்குள் ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் கந்தூரிக்கு எதிரானவர்களே அதிகம் உள்ளனர் என்பது தெளிவாகும். பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சிறு குழு மட்டுமே இந்த அனாச்சாரத்தை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. அதற்கு சுயநலமும் வருமானமும் மட்டுமே காரணமேயன்றி மார்க்க விழிப்புணர்வற்ற தன்மையல்ல.
என் ஆதங்கம் என்னவெனில், நான் வேறு எந்தத் தெருவோடும் ஒப்பீடு செய்யாமல் கடற்கரைத் தெருவின் உண்மையான ரோஷமான ஜனங்களின் பாரம்பர்ய சிறப்பு அம்சங்களைக் கோடிட்டுக் காட்டி, அத்தகைய சிறப்பிற்கு ஊறு விளைவிக்கும் தர்ஹா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்களேன் என்று கேட்டுள்ளேன். அப்படிச் செய்ய நம் தெரு வாசிகளுக்கு அதே "கெத்து" வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.
அதே சமயம், சும்மா வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பவர்கள் தவிற, கந்தூரிக் கழிசடைஐக் குற்றம் சொல்லும் ஒவ்வொரு தெருவும் கூட்டம் கூட்டி கந்தூரிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி அதை வெளிப்படையாக அறிவிக்கவும் அந்தந்த தெருவாசிகள் (குறிப்பாக பெண்கள்) அந்த நாசமாப்போற கந்தூரிக்குப் போகாமல் தடுக்கவும்
நம் ஊரின்
ஒவ்வொரு தெருவாசிகளுக்கும்
குறைந்தபட்ச ரோஷமாவது வேண்டும்
என்பதும் என் சாடலே.
சுருக்கமாகச் சொல்வதென்றால்:
கடற்கரைத்த்கெரு வாசிகளே:
சனியன் பிடித்த கந்தூரி வேண்டாம்.
எதிர்க்கும் கடற்கரைத்தெரு வாசிகளே மற்றும் ஏனைய தெரு வாசிகளே: கந்தூரியைப் புறக்கணியுங்கள்: ஊர்வலம் உங்கள் தெருவுக்குள் வராமல் தடுங்கள், கந்தூரி காலம் வரை பெண்களை மஃரிபுக்குப் பிறகு செளியே அனுப்பவே அனுப்பாதீர்கள்.
(முடியலையா... பொத்திக்கிட்டு ஏதாவது வடிவேலு காமெடியோ மார்க்க விவாதங்ஐயோ போய் பாருங்கள்)
அஸ்ஸலாமு அலைக்கும்.கேளிக்கை,கூத்து மற்றும் இறைவணக்கத்திற்கான எதிர் வணக்கம் ,இறைவனுக்கு இணை வைத்தல் எல்லாவற்றையும் மண்ணறைக்குள் போவதற்குள் மாற்றிக்கொள் என மண்ணின் மைந்தனின் கோரிக்கை! ஆனால் பாவத்தூரிகை கொண்டு கேளிக்கை சித்திரம் செய்து கந்தூரிக்கு கைகோர்க்கும் கையல்லாம் யார்,யாரிடமோ கைகேந்தி தன் வயிற்றை நிரப்பிகொள்வதாலுமே இன்னும் இந்த கேட் கெட்ட செயலுக்கு துணை போகிறார்கள்.மரணம் சுவைக்கும் முன் இதிலிருந்து நீங்கி பயன் பெறுங்கள்!
கேடு கெட்ட செயல் என படிக்கவும்!
Shameed சொன்னது…
இந்த வருஷ கந்தூரிக்கு சந்தனம் பூச கந்தூரி கமிட்டியை சார்ந்த அனைவரையும் உள்ளே அனுப்புங்கள் அடுத்தவருஷம் கந்தூரி எடுக்க ஆள் இருக்காது
--------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சூப்பர் சாகுல் காக்கா!
Post a Comment