Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பொறியியல் பட்டதாரி திருடனாக பிடிபட்டார் - கல்வியும் சமுகமும்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2014 | , , , , , ,

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சீனியய்யா சுந்தர் (28). எலக்டிரிக்கல் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்த பி.டெக் மாணவர். இவர் வேலை தேடி ஐதராபாத் வந்தார். அமீர் பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அதடு என்ற சினிமா படத்தை பார்த்தார். அதில் வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிப்பது எப்படி என்பதை அறிந்தார்.

அதன் மூலம் கட்டிங் பிளேயர் மூலம் பூட்டி கிடக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தான். குறிப்பாக அவர் லேப்–டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், நகைகள் என கைக்குள் அடங்கும் பொருட்களையே கொள்ளையடித்து வந்தான். கடந்த 1½ ஆண்டில் மட்டும் இவன் 35 வீடுகளில் கொள்ளையடித்து உள்ளான்.

தனலட்சுமி சர்க்கிள் பகுதியில் நேற்று இவன் லேப்–டாப் ஒன்றுடன் சென்றான். அவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் அவனிடம் பூட்டுகளை உடைக்கும் கட்டிங்பிளேயர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சந்தேகத்தின் பேரில் அவனை கைது செய்த போலீசார் அவன் தங்கிய வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 59 லேப்–டாப் இருந்தது. அதனையும் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.

திருடிய பொருட்களை அவன் தனது உறவினர்களிடமே விற்பனை செய்து உள்ளான். ஜாலி வாழ்க்கைகாக திருட்டில் ஈடுபட்டதாக சீனியய்யா சுந்தர் தெரிவித்தான்.

இப்படியாக - மாலை மலர் செய்தி

சிந்திக்க !

மேற்கண்ட செய்தியில் கண்ட இன்றைய நடப்புகள் போன்றே நிறைய பட்டதாரி இளைஞர்கள் பலர் படித்து வேலை இல்லாததால் தங்கள் வயிற்று பசிக்காகவும் தினசரி வாழ்க்கைக்காகவும் திருடர்களாகவும் இன்ன பிற குற்றவாளிகளாகவும் மாறிவரும் அவலம் இந்தியாவில் அரங்கேறி வருகிறது.

சிறு வயதில் இருந்து நன்றாக படிக்க வைத்து பல லட்சங்களுக்கு மேல் செலவழித்து ஒரு இஞ்சினிரியராக அந்த இளைஞரை ஆளாக்கிய பெற்றோர் இன்று திருடனாக தன்மகனை பார்க்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.

இது போன்று வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் பலர் தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக பல குற்ற செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்தியாவில் நடக்கும் பல சைபர் க்ரைம் குற்றங்கள், ஏ டி எம் கொள்ளைகள், பேங்க் கொள்ளைகள், வெடிகுண்டு தயாரித்தல், போதை மருந்துகள் கடத்தல் போன்ற பல கொடிய குற்றங்களை வேலையில்லா பட்டதாரிகள் தான் பெரும்பாலும் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதனை வைத்து பார்க்கும் போது வேலையில்லா அப்பாவி பட்டதாரிகளுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது அரசாங்கத்தின் கடமை.

மேலும் ஒரு நல்ல கல்வி அந்த மாணவருக்கு திருடுவது தவறு என்று உணர்த்தவில்லை. இன்றைய கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மதிப்பெண்கள் மட்டுமே மையமாக வைத்து பாடம் நடத்துகின்றன. இதனால் மாணவர்கள் அந்த மதிப்பெண்களையே முறைகேடாக பெறுவதற்கு முயற்சிகின்றனர்.

"ஐந்தில் வலையாதது ஐம்பதில் வலையாது" என்றதொரு பழமொழியை கேள்பட்டிருப்போம். இப்படி படிக்கும் காலத்திலேயே முறைகேடாக மதிப்பெண்கள் பெற நினைக்கும் மாணவன் பிற்காலத்தில் எப்படி நேர்மையாக சம்பாதிக்க நினைப்பான். 

"ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாது" என்பார்கள் அதுபோல மதிப்பெண்களை மையமாக வைத்துக்கொண்டு படித்து வெளியில் வரும் மாணவர்கள் சாதிப்பது கடினமே. இப்படி  தான் அந்த இளைஞருக்கு தவறு எது நல்லது எது என்று படிக்கும் பருவத்திலேயே அவரது கல்வி உணர்தியிருந்தால் இவர் இப்படி ஒரு திருடனாக மாறியிருக்கமாட்டார்.

அந்த இளைஞரும் தன் படிப்புக்கு ஏற்ற வேலை தான் வேண்டும் என்றில்லாமல் தினசரி செலவிற்காக வேறு ஒரு கிடைத்த வேலை செய்திருக்காலாம். அதை விட்டுவிட்டு திருடனாக மாறி தனக்கும் தன் குடும்பத்துக்கும் தான் படித்த கல்லூரிக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய விசயம் இன்னொன்றும் உள்ளது. ஒரு சினிமா ஒரு இஞ்சினியரை திருடனாக மாற்றியுள்ளது. இது போன்று பல சினிமாக்கள் மற்றும் சீரியல்களினால் இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்கள் பல தவறுகளை செய்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை!

நூருல் இப்னு ஜஹபர் அலி
நன்றி : அதிரைபிறை

2 Responses So Far:

Shameed said...

பொறியியல் பட்டதாரி போலீஸ் பொறியில் சிக்கிக்கொண்டார்!

sabeer.abushahruk said...

//பொறியியல் பட்டதாரி போலீஸ் பொறியில் சிக்கிக்கொண்டார்!//

பொறிச்சி எடுத்துருவாங்களே???

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு