நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மலையடிவாரத்தில் ஒரு மலர்ச் சோலை... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, நவம்பர் 30, 2014 | , ,


ஆண்டுத்  தேர்வை  முடித்த  நாங்கள்
ஆர்வத்  தோடே   எதிர்பார்த்துத்
தூண்டிக்  கொண்டே  இருந்த  ஊட்டித்
துரிதப்  பயணம்  மேற்கொண்டோம்!

சின்னப்  பிள்ளைக்  கூட்டத் தோடு
‘சிக்சிக்’  என்று  புகைவண்டி
முன்னும்  பின்னும்  எஞ்சின்  கோர்த்து
முன்னே  றிற்று  மலைமேலே!

கண்ணுக்  கினிய  இயற்கை  எழிலின்
காட்சிகள்  எல்லாம்  பாதையிலே
எண்ணக்  குறையா  அளவில்  எங்கள்
இதயம்  மகிழச்  செய்தனவே!

கூட்டிக்  கொண்டே  மலைமேல்  ஏறிக்
கூவிச்  சென்ற  புகைவண்டி
ஊட்டிஸ்  டேஷன்  வரவே  எம்மை
உவகை  கொள்ளச்  செய்ததுவே!

கண்ணைக்  கவரும்  மலர்க்கண்  காட்சி
கண்டு  மகிழ்ந்தோம்  ஊட்டியிலே
வண்ணக்  கலவைத்  தூரிகை  கொண்டு
வல்லோன்  வரைந்த  படமாகும்!

வீட்டை  நினைத்தோம்  எம்மை  மறந்தோம்
வெளிச்சம்  குறைந்த  நேரத்தில்
ஊட்டியை  விட்டுப்  புகைவண்  டியிலே
உடனே  ஏறிப்  புறப்பட்டோம்!

அதிரை அஹ்மது

5 Responses So Far:

sheikdawoodmohamedfarook சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sheikdawoodmohamedfarook சொன்னது…

ஊட்டிமலர்த்தோட்டம்கண்ணுக்குகுளிர்ச்சியைஊட்டியது;மனதுக்குமகிழ்சியைஊட்டியது.

லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…

Masha Allah
Iraivanin arutkodaiyaiyum thangal sent vantha pathaiyaiyum varuniththathu yengal manathai makilchchiyal malara seikintrana.

sheikdawoodmohamedfarook சொன்னது…

அரும்புபாட்டுஒருகரும்புபாட்டு!நாவுக்குவிருந்தது!ஒருbaட்டில்மலைத்தேன் குடித்ததுபோல்இருந்தது!

sabeer.abushahruk சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பாப்பா பாட்டு ரொம்ப டாப்பா இருக்கு காக்கா.

எனக்கும் ஊட்டி நினைவுகளை மீண்டும் ஊட்டி விட்டது.

வெயில் நாட்களில் ஊரைவிட்டுத் தப்பித்து மலை ராணி ரயிலில் பயணித்த மகிழ்வான தருணங்கள் அலைமோதுகின்றன.

அழகான பாடல்!

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Google+

g+