தொடர் : பகுதி பதினேழு
கடந்த அத்தியாயத்தை நிறைவு செய்யும்போது அடுத்த காட்சி மாற்றங்கள் என்று குறிப்பிட்டோம். உண்மையில் அவை காட்சிகளை மட்டும் மாற்றவில்லை ஆட்சியையும் மாற்றியது. ஆட்சிமாற்றம் என்றால் உஸ்மானியா துருக்கிய ஆட்சி மாற்றப்பட்டது என்கிறீர்களா என்று கேட்பீர்கள். ஆமாம்! அதுதான் உண்மை! 1830 – ஆம் ஆண்டு, முகமது அலி என்கிற எகிப்திய மன்னர் தனது ஆட்சியை விரிவு படுத்துவதற்காக எடுத்த ஒரு படையெடுப்பு பாலஸ்தீனத்தை துருக்கியர்களிடமிருந்து பறித்து எகிப்தின் சரித்திரத்தில் ஏற்றமிகு இடம் வகிக்கும் ஒரு மன்னராக குறிப்பிடப்படும் முகமது அலி (Muhammad Ali Pasha al-Mas'ud ibn Agha ) அவர்களின் ஆட்சியின் கீழ் ஒரு எட்டு ஆண்டுகள் உட்பட்டு இருந்தது.
பாலஸ்தீனத்தின் மீது அனைத்து நாடுகளுக்கும் ஒருவித ஈர்ப்பு - காதல் என்று கூடச் சொல்லலாம் - இருந்தது என்றும் நாம் சொல்லலாம். ஏறக் குறைய நானூறு ஆண்டுகள் உஸ்மானியா துருக்கியப் பேரசின் ஒரு அங்கமாகத் பாலஸ்தீனம் திகழ்ந்தது . அதாவது 1517 ஆண்டு முதல் 1918 வரை உஸ்மானியா துருக்கியின் ஒரு அலங்காரமாகத் திகழ்ந்த பாலஸ்தீனப் பகுதி காரமாகத் தொடங்கிய முகமது அலி அவர்களின் தனது அரசை விரிவு படுத்தும் முயற்சியின் வெற்றியின் விளைவாக, இடையில் 1831 முதல் 1840 வரை உஸ்மானியா துருக்கியின் அரசிடமிருந்து தற்காலிகமாக பறிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது என்பதையும் நாம் வரலாற்றில் காண்கிறோம்.
1840 க்குப் பிறகு மீண்டும் உஸ்மானியா துருக்கி அரசிடமே கன்றுக் குட்டி தாயிடம் துள்ளி ஓடுவதுபோல் துள்ளிச் சென்றது பாலஸ்தீனம். தான் கைப்பற்றிய பகுதியை அப்படித் தாரைவார்த்த முகமது அலி என்று இந்த அத்தியாயத்தில் நாம் வரைந்து காட்டப் போகும் இன்னொரு மாவீரனின் வரலாறு ஒன்றும் சாதாரணமானதல்ல. ஆனாலும் முதன் முதலாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளும் பாலஸ்தீனம் மற்றும் அதனை சுற்றி இருந்த சிரியா லெபனான் எகிப்து ஆகிய நாடுகளின் அரசியல், ஆட்சி மற்றும் ஆளும் பகுதிகளின் மீது ஆசைப்பட்டதால் அதனுடைய விளைவாக மீண்டும் துருக்கியிடம் பாலஸ்தீனத்தை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் முகமது அலி. எகிப்திலும் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளிலும் பல விந்தைகளையும் வித்தைகளையும் செய்த வரலாற்றின் வீரத் திருமகன்களில் ஒருவராகிய முகமது அலி அவர்களை வரலாற்றின் பக்கங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன.
அவற்றை ஒரு சுற்று பார்ப்பதற்கு முன், எந்த நாடாக இருந்தாலும் பாலஸ்தீனத்தை தங்களுடன் இணைத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்பது எல்லா நாடுகளின் ஆசையாகவும் இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு வகையில் பார்த்தால் பாலஸ்தீனம் என்ற நாடு தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் அளவுக்குக் கூட இருக்காது. லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூட்டில் காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நாம் வசிக்கும் அறையில் இருந்து ஒரு காரில் கிளம்பினால், லெபனான் நாட்டின் எல்லாப்பகுதிகளையும் சுற்றித் தடம் பதித்து விட்டு இரவு இஷா தொழுவதற்குள் பெய்ரூட்டில் இருக்கும். நமது அறைக்கு திரும்பி வந்துவிட இயலும் என்பது சொந்த அனுபவம்.
ஏறக்குறைய அதே அளவு எல்லைப் பரப்பளவுகளைக் கொண்ட சின்னஞ்சிறு நாடுதான் பாலஸ்தீனமும். ஆனாலும் இந்த நாட்டை தங்களின் அரசியல் அமைப்பில் இடம்பெறச் செய்து கொள்வது பல நாடுகளுக்கு ஒரு கெளரவமாக இருந்தது. பல பணக்காரர்கள் தாங்கள் அணிந்து இருக்கும் கோட்டில் ஒரு தங்கச் சங்கிலியை கோர்த்து அணிந்து கொள்வார்களே அதே போலத்தான் பாலஸ்தீனமும் உலகோரால் கருதப்பட்டது.
ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். உலகெங்கும் குறிப்பாக ஐரோப்பாவில் யூதர்களுக்கெதிரான இயக்கங்களும் வெறுப்பான செயல்களும் கூட்டுக் கொலைகளும் அரங்கேறிக் கொண்டிருந்த நேரத்தில் உஸ்மானிய துருக்கிய அரசாக இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து இடைக் காலத்தில் கைப்பற்றிய முகமது அலி அவர்களுடைய ஆட்சியாக இருந்தாலும் சரி பாலஸ்தீனத்தில் யூதர்களின் நிலைமைகளில் அரசியல் ரீதியாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை; அவர்களது சுதந்திரமான நடவடிக்கைகளில் இந்த அரசுகள் கைவைத்துப் பறிக்கவில்லை.
ஆனால், அதே நேரம் ட்ஜ்வி உடைய சம்பவத்துக்குப் பிறகும் ஐரோப்பாவில் தொடர்ந்து தங்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துப் படுவதையும் கவனித்த யூதர்களில் ஒரு பகுதியினர் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேறவும் செய்தார்கள் என்பதையும் நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தான் பாலஸ்தீனத்தை ஆண்ட குறுகிய காலத்திலும் மதச் சகிப்புதன்மையுடன் நடந்து கொண்டார் முகமது அலி என்பதை அறிகிறோம். முஸ்லிம்கள், கிருத்தவர்கள், யூதர்கள் என்கிற எவ்விதப் பாகுபாடுமின்றி தனது ஆட்சிக் காலத்தில் மதச்சார்பின்மைக் கொள்கையை கடைபிடித்தார் மன்னர் முஹமது அலி.
பாலஸ்தீன மண்ணின் முக்கிய அம்சம் அங்கிருந்த புனித ஜெருசலம் மட்டுமல்ல; அந்த மண்ணின் விவசாய வளமும்தான். இன்றும் கூட இஸ்ரேலின் பிடியில் இருக்கும் பாலஸ்தீனின் பாகுதிகளில் விவசாயம் பேணி வளர்க்கப்படுகிறது. புதிய புதிய ஆய்வுகள் அங்கிருந்து அறிமுகப்படுத்தபட்டு உலக நாடுகள் அவற்றை கடைப் பிடிக்கின்றன என்பதை அறிகிறோம். விதையில்லாத பழ வகைகள் போன்ற ஆய்வுகள் அங்கிருந்துதான் வெளிப்பட்டு இன்று அவற்றிற்கான உலகக் காப்பீட்டு உரிமைகள் யூதர்களிடம்தான் இருக்கின்றன என்பதையும் நாம் மனதில் நிருத்திக் கொள்ள வேண்டும். இன்று இஸ்ரேலின் விவசாய வளர்ச்சிக்கு விதை ஊன்றியவர் முகமது அலி என்பதுதான் நாம் இங்கு குறிப்பிட விரும்பும் வரலாற்றுச் செய்தியாகும். மரம் வைத்து தண்ணீர் விட்டவன் ஒருத்தன் அதன் பலனை அனுபவிப்பவன் இன்னொருத்தன் என்பதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கிறது.
பாலஸ்தீனப் பகுதிளில் யூதர்கள் விவசாயப் பண்ணைகள் அமைத்தது போக எஞ்சி இருந்த ஏராளமான மலடாகப் போடப்பட்ட தரிசு நிலங்களை கண்டறிந்து ‘சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாமல் ஏர் நடத்தி கண்மாய்க் கரையை உசத்திக் கட்டி கரும்புக் கொல்லையும் வாய்க்கால் வெட்டி சம்பாப்பயிரை பறிச்சு நட்டு தகுந்த முறையில் தண்ணீர் விட்டு’ விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முகமது அலி அவர்கள் உத்தரவிட்டு அந்தப் பணிகளை நிறைவேற்றினார். பயிர் சுழற்சி முறையும் ஏற்ற மண்ணுக்கு ஏற்ற பயிரிடுதல் போன்ற முறைகளையும் முகமது அலி அறிமுகப்படுத்தினார். பெருநிலக் கிழார்களானாலும் சிறு விவசாயிகளானாலும் நில உடைமையை சமத்துவமாக்கப்பட்டது. அனைவருக்கும் சமமான உரிமையும் அரசின் ஆதரவும் வழங்கப்பட்டது. இன்றைக்குப் பேச்சளவில் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளின் முதுகெலும்புகளை ஒடிக்கும் வண்ணம் காவிரிப் படுக்கையை பாலைவனமாக்கும் பன்னாட்டுத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கும் பலியாக்குகிறார்களே என்கிற ஆதங்கத்தையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
விவசாயத்தில் மட்டுமல்ல கல்வி வளர்ச்சியிலும் தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளை உயர்த்திக் காட்டுவதில் முகமது அலி அவர்கள் சளைத்தவராக இல்லை என்று அவரது சாதனைப் பட்டியல் நீளுகிறது. ஆரம்பக் கல்வியில் தொடங்கி பல்கலைக் கழகப் படிப்புவரை அவற்றின் அவசியத்தை உணர்ந்து கல்வி வளர்ச்சிக்காக தேவையான அரசின் உதவிகளை செய்வதில் முகமது அலி முன்னணியில் நின்று இருக்கிறார். வாள் முனையில் மட்டும் அவர் சாதிக்கவில்லை பேனா முனையிலும் அவர் சாதித்து இருக்கிறார். கற்றாரைக் காமுற்று உலகெங்கிலுமிருந்து அறிஞர்களை தனது ஆட்சிப் பகுதிகளுக்கு வரவழைத்து பாடம் கேட்பதிலாகட்டும் உலகப் பல்கலைக் கழகங்களுக்கு தந்து மாணவர்களை அரசு உதவியுடன் அனுப்பி வைத்து பயிற்றுவிப்பதிலாகட்டும் முகமது அலி அவர்கள் சிறந்த பணி ஆற்றியிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் வரைந்து காட்டுகிறார்கள்.
நிலச் சீர்திருத்தங்கள், கல்வி வளர்ச்சி, தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புக்கள், உற்பத்தி ஆகிய துறைகளில் சிறந்த ஆட்சியைத் தந்து கொண்டிருந்த முகமது அலி அவர்களின் ஒரு இடைக்கால வசந்தம், மீண்டும் அந்தப் பகுதிகளை உஸ்மானியா துருக்கி அரசு கைப்பற்றியதன் மூலம் நின்று போனது. முகமது அலி அவர்களின் வரலாறும் ஒரு நீண்ட நெடிய வரலாறுதான். அவருடைய வரலாற்றில் பிரான்சின் சர்வாதிகாரியாக இருந்த நெப்போலியன் , ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் அரசுகளின் வரலாறுகளும் கலந்து இருக்கிறது. இந்தப் பேசு பொருளில் அவைகளைப் பற்றி அதிகம் விவரிக்க வேண்டியதில்லை என்பதால் முகமது அலி என்ற ஒரு மக்கள் நலம் பேணும் மன்னரும் தனது வளையாத செங்கோலால் பாலஸ்தீனத்தை நுகர்ந்து இருக்கிறார் என்பதை மட்டும் சொல்லிச் செல்வோம். ஆக, 1840 ஆம் ஆண்டு மீண்டும் உஸ்மானிய துருக்கிய ஆட்சி பாலஸ்தீனத்தில் ஏற்பட்டது.
இடையில் ஆட்சி பறிபோய் மீண்டும் துருக்கிய ஆட்சி ஏற்பட்டதும் இதற்கு முதலில் யூதர்கள் அனுபவித்த முழுமையான சுதந்திரத்தை அவர்களால் உணர முடியவில்லை. துருக்கிய அரசும் யூதர்களின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து அவர்களைப் பொருத்தவரை சற்று கவனமான அரசியல் கொள்கைகளை ஆராய ஆரம்பித்தது. இடையில் முகமது அலி உடைய ஆட்சி ஏற்பட்ட போதே யூதர்கள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் சில உரசல்கள் வேறுபாடுகள் ஏற்பட்டன. இவற்றை அரபு இனத்தோரும் உணரத் தலைப் பட்டனர். அரபு இனத்தோர் இடையே யூதர்களைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. ஆகவே தட்டிக் கேட்க ஆளில்லாத இடத்தில் தம்பி சண்டப் பிரசண்டன் என்பார்களே அவ்விதம் யூதர்கள் போட்ட ஆட்டங்கள் மற்றும் காய் நகர்த்தல்கள் துருக்கிய அரசு முதல் அரபு இன மக்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தன. துருக்கிய அரசு முன்பு ‘கதவைத் திறந்து வை! காற்று வரும்’ என்ற கொள்கையைப் பின்பற்றியது போல் இப்போது பின்பற்றத் தயாராக இல்லை. நெருக்கடிகள் உண்டாயின. இதை யூதர்களும் உணர்ந்தார்கள். பாலஸ்தீனத்தில் இடையில் முகமது அலி உடைய ஆட்சி ஏற்பட்டு மீண்டும் துருக்கிய ஆட்சி ஏற்பட்டதன் விளைவு இது.
பாலஸ்தீனத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் கண்கள் திறக்கத் தொடங்கின. யூதர்கள் தங்களையும் தங்களது செல்வங்களை எப்படி எல்லாம் சுரண்டி சூறையாடி இருக்கிறார்கள் என்பதை தாமதமாக ஆனாலும் இப்போது உணரத் தொடங்கினார்கள்.
வரலாற்று ஆசிரியர் ஹசன் தாபித் என்பவர் யூதர்கள், முஸ்லிம்களுக்கு மூட்டைப் பூச்சியாய் இழைத்த தொல்லைகளை விவரிக்கிறார். முஸ்லிம்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதிகளின் நிலங்களை எல்லாம் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்தேனும் அபகரித்துக் கொண்டது -அநியாயமான வட்டிக்குப் பணம் கொடுத்து அதற்கான பண பரிவர்த்தனைப் பத்திரங்களில் கடுமையான விதிகளைப் புகுத்தி எழுதி பணத்தை திருப்பித்தர அவகாசம் தராமல் அபகரிப்பது - அரபு இன சிறுவர்களையும் சிறுமிகளையும் கொத்தடிமைகளாய் விவசாயம் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வது - முஸ்லிம்களின் சிறு குறு பெருந்தொழில்களுக்குப் போட்டியாக ஒப்பந்தங்களை இலஞ்சம் கொடுத்துப் பெற்று வாழ்வாதாரங்களைப் பறிப்பது - ஏற்றுமதி உட்பட்ட வணிகங்களில் முஸ்லிம்களின் தொழில்களை நஷ்டம் அடையச் செய்ய திட்டமிட்டு விலைகளை கூட்டிக் குறைத்து சதிகளை அரங்கேற்றுவது - முஸ்லிம்களை சமூகத்தில் தாழ்ந்தவர்களாக கருத்தும் மனப்பான்மை - முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தங்களது வீடுகளை அடைத்து சாத்தி துக்க தினங்களாக அனுசரிக்கும் அதிகபட்ச இனத்திமிர் ஆகியவற்றை ஹசன் தாபித் குறிப்பிடுகிறார்.
இவற்றை முஸ்லிம்கள் இப்போதுதான் உணரத் தொடங்கினர். எல்லாவற்றுக்கும் மேலாக தங்களின் வழிபாட்டு இடங்களில் பெருமானார் (ஸல்) அவர்களையும் கலிபாக்களையும் சஹாபாக்களையும் இழிவு படுத்திப் பேசுவதையும் வழக்கமாகவும் கொண்டிருந்தார்கள் என்பதை முஸ்லிம்களும் துருக்கிய அரசும் கோபமாக உணரத் தொடங்கியது.
இதே துருக்கிய அரசுதான், வேலியில் போன யூத ஓணானைத் தூக்கி தனது மடியில் போட்டுக் கொண்டது என்பதையும் வானத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கியது என்பதையும் நாம் இந்தக் கட்டத்தில் நினைவு கொள்வோம்.
யூதர்கள் முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்குறிய துணிவு யூதர்களுக்கு வருவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்து இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. ஹஜரத் உமர் ரலி அவர்கள் காலத்தில் வெல்லப்பட்ட பாலஸ்தீனத்தில் - சலாஹுதீன் (ரலி) அவர்களால் வெற்றிகரமாக ஆளப்பட்ட பாலஸ்தீனத்தில் - தாங்களாவே வெளியேறிய யூதர்களை துருக்கிய அரசு , கப்பல் அனுப்பி வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்து அவர்களுக்கு சமமான அந்தஸ்தும் சுதந்திரமும் கொடுத்ததின் விளைவை அரபு உலகம் தாமதமாகப் புரிந்து கொண்டது.
அதே நேரம் கொடிய வட்டிக்கு யூதர்களிடமிருந்து கடன் வாங்கும் நிலையிலும் அதற்காக தங்களின் நிலங்களை இழக்கும் நிலையிலும் தங்களின் குழந்தைகளை யூதர்களின் வீடுகளுக்கு எடுபிடி வேலைகளுக்கு அனுப்பும் இழிவான நிலையிலும்தான் ஆண்டாண்டுகாலமாக பாலஸ்தீன மண்ணை ஆண்ட முஸ்லிம்கள் இருந்தார்கள் என்பதையும் வேதனையுடன் குறித்துக் கொள்ள வேண்டும். எங்கெங்கிருந்தோ உயிருக்கு பயந்து ஓடிவந்த யூதர்கள் கொழித்தார்கள் ; மண்ணை ஆண்ட மைந்தர்களை பலவகைகளிலும் அழித்தார்கள்.
அதைவிட வேதனையான இன்னொரு விஷயம் என்னவென்றால்,
யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் துருக்கி அனுமதித்த காலத்தில் குடியேறியவர்கள் பத்திலிருந்து பனிரெண்டாயிரம் பேர்கள்தான். இந்த எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது. இப்படி யூதக் குடியேற்றங்கள் ஏற்றம் கண்டுகொண்டே போவதை ஏதோ எறும்புக் கூட்டங்கள் தங்கள் தலைகளில் தேங்காய்ப்பூவை சுமந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சீட்டாடிக் கொண்டு இருந்தது பாலஸ்தீனத்து அரபு இனம்.
நிலம் போன்ற வாழ்வாதாரங்களை வாழ்க்கைச் செலவுக்காக யூதர்களிடம் தொலைத்து விட்டு ஆட்டுக் கறியும் மாட்டுக் கறியும் வாங்கி ருசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே அரபுகள் பொழுது போக்கினார்கள். ஒரு இனம் தன் தலையில் தானே எப்படி மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பதை பாலஸ்தீனத்தில் அன்று வாழ்ந்த முஸ்லிம்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். அவைகள் வெறும் படம் அல்ல; பாடம். அப்படிப் பார்த்தால் இன்று அவர்கள் அனுபவிக்கும் அனைத்து இன்னல்களுக்கும் அவர்கள் அருகதையானவர்களே.
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
இபுராஹிம் அன்சாரி
19 Responses So Far:
அஸ்ஸலாமுஅலைக்கும்.வரலாற்று நீறூற்று இ.அ.காக்கா! நம் மண்ணில் ஊறிய அறிவுச்சுனை!இவருஎழுத்துக்கு இவர் எழுத்தே இணை!அல்லாஹ் நிற்பான் துணை! இந்த தூணை சாய்க்க சில கரையான்கள் முயல்கிறது! அல்லாஹ் துணை இருக்கும் வரை அது நடவாது!
லெபனான் நாட்டின் எல்லாப்பகுதிகளையும் சுற்றித் தடம் பதித்து விட்டு இரவு இஷா தொழுவதற்குள் பெய்ரூட்டில் இருக்கும். நமது அறைக்கு திரும்பி வந்துவிட இயலும் என்பது சொந்த அனுபவம்.
-----------------------------------------------------------------------------------
எல்லா ரூட்டும் அத்துப்படி அது எப்படி? சிலர் பொய் ரூட்டு போடுவார்கள் ! நீங்கள் மெய்ரூட் போடுகிறீர்கள்! நீரூற்று போல வந்து விழும் எழுத்தும் அது பீட் ரூட் ஹல்வா போல மணக்க மணக்க இருப்பதுவும்! உங்க கை ரூட்டே தனிதான் போங்க!
இன்றைக்குப் பேச்சளவில் விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளின் முதுகெலும்புகளை ஒடிக்கும் வண்ணம் காவிரிப் படுக்கையை பாலைவனமாக்கும் பன்னாட்டுத் திட்டங்களுக்கும் உலக வங்கியின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கும் பலியாக்குகிறார்களே என்கிற ஆதங்கத்தையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
---------------------------------------------------------------
நம் நாட்டில் விவசாயம் அது விச அரசியல் சாயம்! அது வெளுத்து நாளாகிவிட்டது! காவிரி படுகையில் உலக வங்கி கால் "படுகையில்"இனி அந்த ஆறு எழுந்தே ஓடமுடியாமல் படுத்த படுக்கையில் தான் இருக்கனும்! இதில் அரசியல் வாதி பலரின் கை'யும் படுகையில் அந்த படுகை பாவம் என்ன செய்ய முடியும்???
அவ்விதம் யூதர்கள் போட்ட ஆட்டங்கள் மற்றும் காய் நகர்த்தல்கள் துருக்கிய அரசு முதல் அரபு இன மக்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தன. துருக்கிய அரசு முன்பு ‘கதவைத் திறந்து வை! காற்று வரும்’ என்ற கொள்கையைப் பின்பற்றியது போல் இப்போது பின்பற்றத் தயாராக இல்லை.
---------------------------------------------------------------------------
இப்படி அரபுகள் மயங்கி சாமி ஆட்டம் போட்டதால் பிரமாதமாய் "பேராந்தம் போடும் பிரமானந்தம்
யூதர்களுக்கு!கதவை திறந்து வழி விட்டவர்களுக்கு இன்று காற்று வரமுடியாத படி உலகமே கதவடைத்து விட்டது!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பிற்குரிய காக்கா,
அற்புதமான இந்தத் தொடரின் அழுத்தமான மற்றுமோர் அத்தியாயம். ஈடு கொடுக்கச் சிரமப்படும் வேகத்தில் இழுத்துச் செல்கிறது எழுத்து. சம்பவங்களை விவரிக்கும் வேகம் வாசிப்பில் சுவை சேர்க்கிறது.
ஒவ்வொரு நீங்கள் எடுத்துக்கொள்ளும் சிரத்தையும் அதனாலான சிரமங்களும் நினைத்துப் பார்க்கையில் வியப்பாயிருக்கிறது.
மாஷா அல்லாஹ்!
பாலஸ்தீனத்தின் தொடர்புடைய வரலாற்றைப் பார்த்தவண்ணம் நிகழ்காலங்களைச் சமீபிக்கிறதோ தொடர் என்று எண்ணும் அளவிற்கு பாலஸ்தீனத்தின்
மையம் நோக்கிச் செல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா!
பாலஸ்தீனத்தில் - தாங்களாவே வெளியேறிய யூதர்களை துருக்கிய அரசு , கப்பல் அனுப்பி வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து வந்து அவர்களுக்கு சமமான அந்தஸ்தும் சுதந்திரமும் கொடுத்ததின் விளைவை அரபு உலகம் தாமதமாகப் புரிந்து கொண்டது.
----------------------------------------------------
இப்படி யோசிக்காமல் வெற்றிலை பாக்கு வைத்து அழத்ததால் தான் ' நமக்கு வெற்றி (இல்)லை என கைகட்டி நமது சமூகமே பாக்கு"ம் வண்ணம் நம்மை அந்த யூத நாயகள் எல்லாரும் பாக்கும் படி வெட்டி சாய்கிறது! சமாதனாம் எனும் வெள்ளை கொடி இல்லாததால் மென்று துப்பும் வெத்திலை எச்சில் போல் நம் இனசெங்குறுதி இன்னும் அந்த மண்ணில் பாய்கிறது!
யூதர்களை பாலஸ்தீனத்துக்குள் துருக்கி அனுமதித்த காலத்தில் குடியேறியவர்கள் பத்திலிருந்து பனிரெண்டாயிரம் பேர்கள்தான். இந்த எண்ணிக்கை வெகுவிரைவில் ஒரு இலட்சத்தைத் தாண்டியது.
-------------------------------------------------
அவர்கள் லட்சியமாய் திட்டமிட்டு அவர்களை இலச்சமாக அதிகரித்துக்கொண்டார்கள்! நாம் அலட்சியத்தால் அல்லோல பட்டோம் படுகிறோம்! இது யாவும் பாடம்! இன்னும் பட்டும் திருந்தல! காக்கா வரும் சமூகத்துக்கு உங்களின் எழுத்து ஒரு பொக்கிசம்! அல்லாவிடம் இதற்குண்டான கூலி உண்டு! தொடரட்டும் உங்கள் சமூகப்பணி! அல்லாஹ் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தருவானாக ஆமீன்!
எங்கள் இதயத்தின் இரு பகுதிகளான எங்களின் கவிதைத் துறையின் காவல்துறைத் தலைவர்களே. தம்பி சபீர் ! தம்பி கிரவுன்!
வ அலைக்குமுஸ்ஸலாம்.
தங்களிருவரின் பாராட்டும் வரிகளுக்கு ஜசக் அல்லாஹ் ஹைரன்.
தம்பி சபீர்!
தாங்கள் சொல்வது சரிதான். நிகழ்காலத்தை நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். இருந்தாலும் இன்னும் சில நிலையங்களில் நின்று வர வேண்டி இருக்கிறது. முதல் உலகப்போர், ஹிட்லர் நிகழ்த்திய படுகொலைகள், இரண்டாம் உலகப் போர், யாசர் அரபாத், ஹமாஸ், ஆகியவை அந்த நிலையங்கள். இன்ஷா அல்லாஹ் து ஆச் செய்யுங்கள்.
கிட்டுமா கிரவுனின் கருத்துக்கள் என்று ஏங்கி இருந்த எனக்கு திகட்டும் அளவுக்கு கருத்து மழைத்துளிகள். அந்த வரிகள் என்னையும் என் எழுத்தையும் வளர்க்கும்.
//இருந்தாலும் இன்னும் சில நிலையங்களில் நின்று வர வேண்டி இருக்கிறது. //
காக்கா,
அத்துணை நிலையங்களிலும் அருமையான மொழியில் அருசுவை கண்டிப்பாகக் கிடைக்கும்.
புதுக்கல்லூரி விடுமுறையில் டே எக்ஸ்ப்ரெஸ்ஸில் எக்மோரிலிருந்து தஞ்சை செல்லும்வரை எல்லா நிலையங்களிலும் அவதானிக்க விதவிதமான சுவாரஸ்யங்கள் காத்திருக்கும்.
தொடரும் என்று தவிக்கவிடாத சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் புது நாவல்கள் கையிலிருந்தும் ஜன்னல் வழியாக நிலையங்கள் ஈர்க்கும். நீண்ட பயணங்களில்கூட தூக்கம் வராத அந்த கல்லூரி காலங்களைத் தங்கள் "நிலையங்கள்" என்னும் வார்த்தை நினைவு படுத்தியது.
நிலையங்களில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
//சமாதனாம் எனும் வெள்ளை கொடி இல்லாததால் மென்று துப்பும் வெத்திலை எச்சில் போல் நம் இனசெங்குறுதி இன்னும் அந்த மண்ணில் பாய்கிறது!//
அப்ளாஸ், க்ரவ்ன்!
கவிதையை உரைநடை வடிவில் சொன்னாலும், இது கவிதைக்குண்டான குணம் உடையது!
ஏனெனில்,
"Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility."- williyam wordsworth.
கவனித்தீர்களா? உம் வார்த்தை ஜாலம் கவிதையே!
தம்பி. இப்னு அப்துர்ரஸாக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த அற்புதமான அத்தியாயத்திற்கு கருத்திடாமலும் காக்காவுக்காக வழக்கம்போல் து ஆ கேட்காமல் எப்படி உங்களைக் கட்டிப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவன் என்கிற முறையில் கேட்கிறேன், வந்து சேருங்கள்.
//நிலம்போன்றவாழ்வாதாரங்களைவாழ்க்கைசெலவுக்காகயூதர்களிடம் தொலைத்துவிட்டுஆட்டுக்கறியும்மாட்டுக்கறியும் வாங்கி ருசித்து ருசித்து சாப்பிட்டுவிட்டுஅரபுகள்பொழுதுபோக்கினார்கள்//நான்இதைவண்மையாக மறுக்கிறேன்.அவர்களும்மூளையேகசக்கி யோசிக்கவேக்கவேசெய்தார்கள்! ''ஒரேஆட்டுக்கறியும்மாட்டுக்கறியும்சாப்பிட்டுநாக்குசெத்துபோச்சு! கொக்குகறி,காடேகறி,செரவிகறிஎல்லாம்எங்கேகெடைக்கும்?''என்று விசாரிச்சுகிட்டுதான்இருந்தாங்கோ!'யென்றுஒருபொஸ்தகத்தில்படித்தேன்.
//பாலஸ்தீனத்தில்வாழ்ந்தமுஸ்லிம்கள்யூதர்களைஅனுமதித்தது தவறு''என்றுஇப்போத்தான்உணாரதொடங்கிஇருக்கிறார்கள்.// ஆட்டுக்கறியும்மாட்டுக்கறியும்முடிந்தமட்டும்உள்ளேதள்ளிவிட்டுஹாயா தூங்கிகொண்டிருந்தவர்களின்தூக்கத்தைஇந்த'வந்தா-வரத்தார்' கெடுத்தால்சும்மாஇருக்கமுடியுமா?''அடஹராமீ!யாருடாநீ?'என்று கெட்டவார்தைகள்சொல்லிநம்மஊரில்திட்டுவார்கள்.ஏதோஅவர்கள் கொஞ்சம்தேவலே!இவ்வளவுநாள்செய்யாதயோசனையைமட்டும்இப்போ. செய்திருக்கிறார்கள்.யோசனைசெய்யதூண்டியயூதர்களைபாராட்டாமல் இருக்கமுடியாது.
/பாஜர்தொழுகைக்குபிறகிலிருந்துஇஷாதொழுகைவரையிலானஇடை வெளிநேரத்தில்சுற்றிபார்த்துவிடக்கூடியபாவக்காய்அளவுள்ளநாட்டில் இவ்வளவுசிக்கல்நிறைந்தசரித்திரமா?!படிக்கும்போதுAlfred Hitch Hock டைரக்சனில்தயாரானதிகில்ஊட்டும்ஹாலிவுட்படம்போல்இருக்கிறது! இவற்றைஎல்லாம்செவ்விஅருமையும்பாராமல்கருமமேகண்ணாகிதிரட்டி தந்தமைத்துனர்இனா.ஆனா.அவர்களுக்குபூமாலைகழுத்தில்போட வேண்டும்.இதுபூ பூக்கும் மழை காலம்! மாலை தொடுத்து கையில் எடுத்து ஒருமாலைநேரம்வீடுவருவேன்.[''முத்துப்பேட்டையில்கொடுவாமீனுவிலைசல்லிசாகிடைக்கிறது''என்று இங்கேஒரேபேச்சாஇருக்கே!நெசந்தானா?]
//புதுக்கல்லூரி விடுமுறையில் டே எக்ஸ்ப்ரெஸ்ஸில் எக்மோரிலிருந்து தஞ்சை செல்லும்வரை எல்லா நிலையங்களிலும் அவதானிக்க விதவிதமான சுவாரஸ்யங்கள் காத்திருக்கும்//
தம்பி சபீர் அவர்களுக்கு,
உண்மைதான்.
நானும் மாணவப் பருவத்தில் வாணியம்பாடி போன்ற தூரத்தில் இருந்த ஊரில் படித்தவன் என்ற முறைகளை இவைகளை அனுபவித்து இருக்கிறேன்.
மொத்தம் மூன்று ரயில்களில் ஏற வேண்டும். அதிரை டூ விழுப்புரம் , விழுப்புரம் டூ காட்பாடி பின் காட்பாடி டூ வாணியம்பாடி. திருவாரூரில் கூத்தாநல்லூர் நண்பர்களும் கடலூரில் பரங்கிப் பேட்டை நண்பர்களும் இணைந்து கொள்ள பாட்டும் மிமிக்ரியும் சிரிப்பும். .
அழியாத கோலங்கள்.
//கவிதையை உரைநடை வடிவில் சொன்னாலும், இது கவிதைக்குண்டான குணம் உடையது!//
ஆயிரம் முறை ஆமாம் போடுகிறேன்.
தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை அன்புடனும் உரிமையுடனும் வரவேற்கிறேன்.
//இதே துருக்கிய அரசுதான், வேலியில் போன யூத ஓணானைத் தூக்கி தனது மடியில்
போட்டுக் கொண்டது என்பதையும் வானத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கியது
என்பதையும் நாம் இந்தக் கட்டத்தில் நினைவு கொள்வோம். //
இது ரத்த சம்பந்தமான நோயா?.....
இதைத்தான் இப்போது பல அரபு நாடுகளும் செய்கிறது.
முதலில் யூத நட்பு...பின் யூத அடிமை..மானங்கெட்ட ஜென்மங்கள்.
sabeer.abushahruk சொன்னது…
தம்பி. இப்னு அப்துர்ரஸாக்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்த அற்புதமான அத்தியாயத்திற்கு கருத்திடாமலும் காக்காவுக்காக வழக்கம்போல் து ஆ கேட்காமல் எப்படி உங்களைக் கட்டிப்போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
உங்கள் கருத்துகளைத் தொடர்ந்து வாசிப்பவன் என்கிற முறையில் கேட்கிறேன், வந்து சேருங்கள்.
-------------------------------------------------------
Ebrahim Ansari சொன்னது…
//கவிதையை உரைநடை வடிவில் சொன்னாலும், இது கவிதைக்குண்டான குணம் உடையது!//
ஆயிரம் முறை ஆமாம் போடுகிறேன்.
தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களை அன்புடனும் உரிமையுடனும் வரவேற்கிறேன்.
------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.பணி நிமித்தமாய் வெளி மா நிலம் சென்றுள்ளார் என் சகோதரர்!
Post a Comment