Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

டிஸெம்பர் 6 !
(நிர்வாண பாரதம்!)
7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 06, 2015 | , , , ,


நினைக்கும் போதெல்லாம்
பதைக்கிறது நெஞ்சம்
நிலைத்த மஸ்ஜிதை
குலைத்த நாளெண்ணி

இந்திய இறையாண்மை
இயலாமல் வீழ்ந்த நாள்
மதச் சார்பற்ற அரசின்
மானம் போன நாள்

இந்திய உள்ளம் துடிதுடிக்க
இறை யில்லம் இடிக்கப்பட
இரட்டை வேட அரசாங்கத்தை
இனங்கண்டு கொண்ட நாள்

கடப்பாறை ஏந்தி கரசேவகன்கள்
தடுப்பாரே இன்றி தகர்த்தனன்
காக்கிச்சட்டை காவல்துறையோ
காவிச்சட்டையின் ஏவல்துறையானது

மகாத்மாவை சுட்டதற்குப் பிறகு
மஸ்ஜிதை உடைத்துத்தான்
மறுபடியும் தலைகுணிந்தது பாரதம்
உலகே சிரித்தது; உமிழ்ந்தது

மதச்சார்பற்ற போர்வை
கிழித்தெரியப்பட
இந்துத் தீவிரவாதிகள்
இந்தியாவை நிர்வாணப் படுத்தினர்

நாட்டுக்காக தாம் வாழும்
வீட்டையே தியாகம் செய்யும்
வரலாறு சொல்லும் இஸ்லாமியர்
இறையில்லம் இழந்தும் பொறுத்தனர்

எப்படியெல்லாம் இழுத்துப் பிடித்தும்
எல்லா ஓட்டை வழியாகவும்
நழுவிச் சென்றது நாட்டின்
நீதியும் நியாயமும்

இருப்பதை இல்லையென்றும்
இல்லாததை உண்மையென்றும்
திரித்துச் சொல்லும் இந்திய வரலாறு
டிஸம்பர் 6ஐ - இந்துக்களின்
ஜனவரி 26 என புணிதப்படுத்தும்

நடப்பது நன்றாகவே நடக்கிறது
என்னும் கொள்கைவாதிகளுக்கு
நரக நெருப்பைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்
தீர்ப்புநாள் வரும்வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

7 Responses So Far:

Ebrahim Ansari said...

ஒரு துண்டு ஈரல் ...
கஃபதுல்லாஹ்வைத் தகர்த்தெறிய
அப்ரஹா கொண்டுவந்த யானைப்படை
அபாஃபீல் பறவைகளின் கல்வீச்சில்
சிதறுண்டு போனது!
இஸ்ரேலியர்களின்
நாசகார குண்டுகளுக்கு
நெஞ்சைக்காட்டி
பைத்துல் முகத்தசை
காப்பாற்றிக்கொண்டிருக்கிறது
பாலஸ்தீனியர்களின் கல்வீச்சு!
பாபர் மஸ்ஜிதின் உயிரோட்டமான
வரலாற்று வடிவத்தை
மண்ணோடு மண்ணாக்கிய
கொடியவர்களின் கடப்பாறைகளை
முறித்துப்போட
எங்களிடம்
கைகளும் இல்லை!
கற்களும் இல்லை!
காந்தி பிறந்த தேசம் என்பதால்
அகிம்சையின் கூட்டில்தான்
அடைக்கலமானோம்!
அதுவும்கூட
கோட்சேக்களின் கூடாரம் என்பதை
இப்போதுதான் கண்டுகொண்டோம்!
கல்லறைகளில்தான் இருட்டிருக்கும்
என நினைத்திருந்தோம்!
நீதித்துறையே கல்லறைக்குள்தான் என்பதை
இப்போதுதான் தெரிந்துகொண்டோம்!
அரசமரத்து கட்டபஞ்சாயத்துகளுக்கு
அலகாபாத்துதான் உச்சநீதிமன்றம்!
அங்கே -
மினாராவின் புறாக்களுக்கு
பூணூல்கள்
வாஸ்து சாஸ்திரம்
கற்றுத்தருகின்றன!
நிஜத்தைவிட நிழலே கனமென்று
தராசுத்தூக்கிகள் கணித்துச் சொல்கின்றன!
அன்று -
சுலைமான் நபியின் அரசவையில்
உயிர் தப்பிய குழந்தை - இன்று
மூன்று துண்டுகளாய்
வெட்டி வீசப்பட்டிருக்கிறது!
பெற்றவளிடமிருந்தே
பிள்ளையை பறித்து
துண்டு போட்டவர்கள்
ஒரு துண்டு ஈரலை
பெற்றவளுக்கும்
தரச்சொல்லியிருக்கிறார்கள்!
"நிச்சயமாக -
பொறுமையாளர்களுடன்
இறைவன் இருக்கிறான்" என்பதால்
பாய்மார்கள் எல்லாம்
தாய்மார்களாக இருக்கிறோம்!
"இறைவன் யாரையும் பெறவுமில்லை
யாரால் பெறப்படவும் இல்லை" என்பதில்
உறுதியாகவும் இருக்கிறோம்!
அதனால்தான் -
பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவனின்
பிறந்த இடத்தைத்தேடி அலையும்
பரிதாபம் எங்களுக்கில்லை!
கல்லறைகளையும்
கழிவறைகளையும் தவிர
அகிலத்தின் அத்தனை இடங்களும்
அல்லாஹ்வைத் தொழும்
இடங்கள்தான் என்பதால்
அயோத்தியும் எங்களுக்கு
தொழுகை முசல்லாதான்!
இறுதித் தீர்ப்புநாளின் அதிபதியும்
அவனே என்பதால்
அவன் தீர்ப்பு மட்டுமே
எங்களுக்கு உயிர்!
மற்றவையெல்லாம் ..... !!?
................. அபூஹாஷிமா

Unknown said...

மாஷாஅல்லாஹ் கவிதை தான் அருமை என்றால் பின்னூட்ட கவிதையோ மிக அருமை!!

crown said...

"இறைவன் யாரையும் பெறவுமில்லை
யாரால் பெறப்படவும் இல்லை" என்பதில்
உறுதியாகவும் இருக்கிறோம்!
அதனால்தான் -
பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவனின்
பிறந்த இடத்தைத்தேடி அலையும்
பரிதாபம் எங்களுக்கில்லை!
------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.உண்மை கூட்டத்தின் உன்னத நிலை!மாசா அல்லாஹ்.!

crown said...

கல்லறைகளையும்
கழிவறைகளையும் தவிர
அகிலத்தின் அத்தனை இடங்களும்
அல்லாஹ்வைத் தொழும்
இடங்கள்தான் என்பதால்
அயோத்தியும் எங்களுக்கு
தொழுகை முசல்லாதான்!
இறுதித் தீர்ப்புநாளின் அதிபதியும்
அவனே என்பதால்
அவன் தீர்ப்பு மட்டுமே
எங்களுக்கு உயிர்!
மற்றவையெல்லாம் ..... !!?
--------------------------------------------------------------
நிச்சயமாக அல்லாஹ்வின் தீர்ப்பே இறுதியும்,உறுதியும்

crown said...

நீதித்துறையை
நிதித்துரைகளும் சாதிக்கறைகளும்
கட்டுப்படுத்தி வைக்கட்டும்
தேவைக ளற்றவனின்
தீர்ப்புநாள் வரும்வரை!
----------------------------------------------------------------
அல்லாஹ் போதுமானவன்!

sabeer.abushahruk said...

//அவன் தீர்ப்பு மட்டுமே
எங்களுக்கு உயிர்!
மற்றவையெல்லாம் ..... !!?//

ஞாயமான கோபம்!

அதிரை.மெய்சா said...

இந்த டிசம்பர் 6 ஆறாய் பெருக்கெடுத்து
ஆதிக்க சக்திகளை மழை வெள்ளம்
அச்சுறுத்தி விட்டது.

அத்தோடு உன் கவிதை
ஆரிக்கிடந்த ரணவடுக்களை
ஆழமாய் புண்படுத்தி
ஆராத தழும்பாய் நெஞ்சை
புண்படுத்தி விட்டது

நீதி நிச்சயம் வெல்லும்
நம்பிக்கையுடன் தொடர்ந்து
போராடுவோம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு