Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 017 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2015 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பலவீனமான மற்றும் ஏழை, எளிய முஸ்லிம்களின் சிறப்பு:

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! (அல்குர்ஆன் : 18:28)

சொர்க்கவாசிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்ட நபி(ஸல்) அவர்கள், ஒவ்வொரு பலவீனரும், பலவீனர் என்று கருதப்படுபவரும் ஆவர். அல்லாஹ்வின் மீது ஒருவன் சத்தியம் கூறினால், அவனுக்கு அவன் உதவி புரிவான். நரகவாசிகளை உங்களுக்கு நான் அறவிக்கட்டுமா? கடின குணமுள்ளவன், கஞ்சன், பெருமை அடிப்பவன் ஆகியோர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹ்பு(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 252)

நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். தன் அருகில்  இருந்தவரிடம், 'இவர் விஷயமாக உன் கருத்து என்ன?' என்று கேட்டார்கள். 'இவர் மக்களில் பிரபல்யமானவர். அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர் பெண் கேட்டால், திருமணம் செய்து வைக்கப்படவும், பரிந்துரை செய்தால் பரிந்துரை ஏற்கப்படவும் தகுதியானவர்' என்று அருகில் இருந்தவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

பின்பு மற்றொருவர் நடந்து சென்றார். 'இவர் பற்றி உமது கருத்து என்ன?' என்று நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்தவரிடம் கேட்டார்கள். 'இறைத்தூதர் அவர்களே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவர். இவர் பெண் கேட்டால், திருமணம் செய்து வைக்கப்படாதிருக்கவும், பரிந்துரை செய்தால் பரிந்துரை ஏற்கப்படாதிருக்கவும், இவர் பேசினால் இவரது பேச்சைக் கேட்கப்படாதிருக்கவுமே தகுதியானவர்' என்று கூறினார். அப்போது நபி(ஸல்)  அவர்கள், 'முதல் நபர் போன்றவர்களால் பூமி நிரம்பி இருப்பதை விட, இவரே சிறந்தவர்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் அப்பாஸ் என்ற ஸஹ்ல் இப்னு ஸஹ்து ஸாஇதீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 253)

ஒருமுறை சொர்க்கமும், நரகமும் தர்க்கம் செய்து கொண்டன. ''என்னுள் கர்வம் கொண்டவர்களும், பெருமைக்காரர்களும் உள்ளனர்'' என நரகம் கூறியது. ''என்னுள் மனிதர்களில் பலவீனர்களும், அவர்களில் ஏழைகளும் உள்ளனர்'' என்று சொர்க்கம் கூறியது. அப்போது அல்லாஹ் ''சொர்க்கமாகிய நீ, எனது அருட்கொடையாகும். நான் நாடியவருக்கு உன் மூலம் அருள்புரிவேன். நரகமாகிய நீ, எனது வேதனையாகும். நான் நாடியவரை உன் மூலம் வேதனை செய்வேன். உங்கள் இருவரையும் நிரப்புவேன்'' என்று அவ்விரண்டுக்கும் இடையே தீர்ப்புக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 254)

"நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகளாவர். பணக்காரர்கள் (உள்ளே நுழைய) தடுக்கப்பட்டிருந்தனர். எனினும் நரகவாசிகள் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நான் நரகின் வாசலில் நின்றேன். அதில் நுழைந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களாவர்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸாமா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 258)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 அலாவுதீன்.S

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு