Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மாமழை... மாநகர்! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | December 02, 2015 | , , , ,

தத்தளிக்கிறது என்
தலைநகர்
தவிதவிக்கிறது என்
தமிழினம்

குடியிருப்புகளுக்குள் புகுந்தும்
குடிசைகளை விழுங்கியும்
குடிகெடுக்கிறது கனமழை,
குடிக்க மட்டும்
குவளை நீர்கூட
குடத்தில் இல்லை

தார்ச்சாலையெல்லாம்
நீர்ச்சாலையாகிவிட
மிதக்கிறது மாநகர்

வருடம் முழுதும்
வறண்டுகிடந்த
வாய்க்கால்களும் கால்வாய்களும்
குளங்களும் குட்டைகளும்
ஏரிகளும் ஆறுகளும்
தாகம் தீரக்
குடித்து முடித்து
கொப்பளித்த தண்ணீரில்
குலைகிறது தலைநகர்

நகரை
நீர் வார்த்து மூழ்கடித்தபின்
நிவாரணம் எனும் பெயரில்
நிர்வாணப் படுத்தும்
நிர்வாகம்

வடிகால்களைச் சீரமைத்து
நீர்நிலைகளைத் தூர்வாரி
தமிழகத்தைத் தயார்படுத்தத்
தவறிய அரசாங்கம்
சோற்றுப்பொட்டங்களைக் கொண்டு
ஓட்டுவங்கியைத் தக்க வைக்கும்

தண்ணீர்ப் பற்றாக்குறையில்
தகித்திருந்த தமிழகம்
உபரிநீரை வெளியேற்றும்
உதவாக்கரை நிர்வாகம்
உச்சகட்டச் சீர்கேடு

போக்குவரத்துத் துண்டிக்கப்பட
போசனத்துக்கு வழியில்லையே
வான் வழி மீட்புக்குழு
ஏன் வரவில்லை

பேரிடர் மேலாண்மைப் படை
தயார் நிலையில் உள்ளனவாம்
பிணங்களைப் பொருக்கவா

தலைவர்கள்
'வலியுறுத்திக் கொள்வதில்'
சோலியாயிருக்க
தொண்டர்கள் மீள
வழி மூடிக்கிடக்க
விழி நீரும் சேர்ந்தே
வெள்ளமாய் ஓடுகிறது

நீர்மேலாண்மை
மழைநீர் சேகரிப்பு
எல்லாம்
ஏட்டுச்சுரைக்காயாக
ஏமாற்ற...

தமிழகம் எப்போதும்
தள்ளாடியே சீவிக்கிறது
'தண்ணி'யில் அல்லது
தண்ணீரில்!

அல்லாஹ் காப்பாற்று!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

12 Responses So Far:

Iqbal M. Salih said...

யா அல்லாஹ்! நீயே காப்பாற்றுபவன்.
அவர்களைக் காப்பாற்றுவாயாக!

"அறிவின் தென்றலாம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! எங்களுக்காக மழையைப் பொழிந்தருள்! அது எங்களின் மீதல்ல! அது எங்களின் சுற்றுப்புறங்களில் உள்ள மலைகளின் மீதும் மானாவாரி நிலங்களின் மீதும் நிலத்தில் நிலைத்திருக்கும் மரங்கள் மீதும் இன்னும் நிரையக் காத்திருக்கும் நீர்நிலைகள் மீதும் மற்றும் நீர்நிலைகள் பாய்ந்தோடும் பள்ளத்தாக்குகள் மீதும் உன் அருள்மழையைப் பொழியச் செய்வாயாக! தயை கூர்ந்து எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே!' என்று மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள்."

நாமும் நபிவழிப்படிப் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ்!

Unknown said...

சென்னைக்கு நேர்ந்த வெள்ளச் சோதனை!!!
மதம் மாச்சர்யம் கட்சிகள் தாண்டி மனிதம் கொள்ளப் போதனை!!!

Unknown said...

We are observing raw humanity in action in Chennai that moves every heart to help and support each other from the disaster. May God Almighty help and save you all.

Unknown said...

Water everywhere in Chennai!!! Heart wrecking huge crisis. Flood water is chest level flowing. Rescue operation is risky and challenge!!! May Allah save the poor souls.

crown said...

குடியிருப்புகளுக்குள் புகுந்தும்
குடிசைகளை விழுங்கியும்
குடிகெடுக்கிறது கனமழை,
குடிக்க மட்டும்
குவளை நீர்கூட
குடத்தில் இல்லை
--------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். நெஞ்செல்லாம் அடைக்கிறது. கண்ணீர் திரை இடுகிறது!,

crown said...

பேரிடர் மேலாண்மைப் படை
தயார் நிலையில் உள்ளனவாம்
பிணங்களைப் பொருக்கவா
-----------------------------------------------------------------
பிணம்தின்னி கழுகுகளாய் அரசியல் கேடிகள்!

crown said...

தமிழகம் எப்போதும்
தள்ளாடியே சீவிக்கிறது
'தண்ணி'யில் அல்லது
தண்ணீரில்!

அல்லாஹ் காப்பாற்று!
-----------------------------------------------------
அல்லாஹ் காப்பாற்று!

Ebrahim Ansari said...

சமூக நல ஆர்வலர்களும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் பல வருடங்களாகத் தலை தலை என்று அடித்துக் கொண்டு எச்சரித்தவைகளை காற்றில் பறக்கவிட்ட ஆட்சியாளர்களால் இன்று தலைநகரின் சாதாரண க்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

நீர்நிலைகளை கபளீகரம் செய்ய புதுப்புது வார்த்தைகளைக் கண்டுபிடித்து கட்டடங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். ஏரிப் புறம்போக்கு, குளத்துப் புறம்போக்கு, நீர் வெளியேறும் நிலப் புறம்போக்கு, நீர் உள்வாங்கும் நிலப் புறம்போக்கு ,வாய்க்கால் புறம்போக்கு, வடிகால் புறம்போக்கு என்றெல்லாம் புதிய பெயர்கள் சூட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன.

ஏரிகள் மண் மேடாகவும் புதர்கள் மண்டிய திட்டுதீவுகளாகவும் காட்சியளித்தன. அம்மையாருக்காக மண்சோறு சாப்பிட்ட அமைச்சர்கள் இதை கவனிக்கவில்லை; அய்யாவுக்காக ஆர்ப்பரித்தவர்கள் இந்த ஆபத்தை உணரவில்லை. விளைவு ? இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இறைவா ! இவர்களை மன்னித்துவிடு. இவர்கள் செய்த அட்டூழியத்துக்காக ஏழைகளை இம்சை படுத்திவிடாதே எங்கள் இறைவா என்று இறைஞ்ச வேண்டியவர்களாக இருக்கிறோம். காரணம் இன்னும் மூன்று நாட்கள் ஆபத்தாக உணரவேண்டிய அளவு வானிலை அறிக்கையும் வானிலையும் எச்சரிக்கை செய்கின்றன.

சென்னையில் பாதி அழிந்தபிறகுதான் விசாகபட்டினத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கப்பல் படை காப்பாற்றுவதற்காக பாதி தூரம்வரை வந்து கொண்டு இருக்கிறதாம். முழு சென்னையும் அழிந்த பிறகு நிச்சயம் வந்து விடுவார்கள் என்று நம்பலாம்.

crown said...

சென்னையில் பாதி அழிந்தபிறகுதான் விசாகபட்டினத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கப்பல் படை காப்பாற்றுவதற்காக பாதி தூரம்வரை வந்து கொண்டு இருக்கிறதாம். முழு சென்னையும் அழிந்த பிறகு நிச்சயம் வந்து விடுவார்கள் என்று நம்பலாம்.
-----------------------------------------------------------------------------------------------
வி'சாக"பட்டினத்திலிருந்து, மீதியும் சென்னை பட்டினத்தில் சாக'வைத்த பின் தான் வருவார்கள்
கப்பல் படை!அது வந்து எச்சியவரும் 'சாக'பாடை சுமக்குமோ கப்பல் படை! நாளை படைத்தவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்!
----------------------------------------------------------------------------------------

N. Fath huddeen said...

வரலாறு காணாத மழைப்பதிவை நூலிழையில் தவறவிட்ட சென்னை

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article7936658.எசே

சென்னையில் 2015 நவம்பர் மாதத்துகான மழைப்பதிவு 1049.3 மிமீ பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 1088.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

நினைக்கவே அச்சமாக உள்ளது.

படைத்தவனைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது.

ஆகவே, நாம் எல்லோரும் அவர்களுக்காக துஆ செய்வோம்.

அறிவியல் முன்னேற்றம் இல்லாத 1918-ல் அவ்வளவாக பாதிப்பு இல்லை.
ஆனால், அறிவியல் முன்னேற்றம் கண்ட 2015-ல் கடுமையான பாதிப்பு.

மனிதன் எவ்வளவு பலஹீனமானவன்.

இறைவா சென்னை மக்களை மன்னித்து அவர்களை காப்பாற்று யா ரப்பே!

அதிரை.மெய்சா said...

தத்தளிக்கிறது தலைநகர்
தக்க சமயத்தில் உதவுவது
மனிதாபிமானக் கடமை

இயற்கைச் சீற்றத்தை
இறுக்கிப் பிடித்து நிறுத்த
எவராலும் முடியாதுதான்

ஆனால்

இருப்பவர்கள்
இடமளித்து உணவளித்து
இயன்றவரை
இருகரம் கொண்டு
இறுக்கிப் பிடிப்பது
ஒவ்வொரு மனிதனின் கடமையே .

பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனைவரும் துவா செய்வோம்.
பரந்த நோக்குடன் இந்நேரத்தில் இக்கவிதை எழுதி
பலரது மனதிலும் உதவும் எண்ணத்தை தூண்டிய
நண்பன் சபீருக்கு நன்றி.

Ebrahim Ansari said...

யா அல்லாஹ் ! நாங்கள் உன்னையே வணங்குகிறோம்! உன்னிடமே நல்லுதவி நாடுகிறோம்! நீ எங்களுக்கு நேரான வழியைக் காட்டியருள்வாயாக!
என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை உன்னைத் தொழுது பிரார்த்திக்கிறோம்.
எங்களது ஏழைச் சகோதர சகோதரிகள் இருக்க இடம் இல்லாமல் உண்ண உணவு இல்லாமல் தவிக்கும் நிலை ஒரு சோதனையாக ஏற்பட்டுவிட்டது .
துன்பத்தில் உழலும் அவர்களை நீயும் உனது அருட்தூதரும் சொன்ன வழியில் அரவணைக்க எங்களால் இயன்ற வழிகளில் எல்லாம் எங்களது தோழர்கள் இயக்க வேற்றுமைகளை எல்லாம் மறந்துவிட்டு இடுப்பளவு வெள்ளத்தில் தலைகளில் உணவு மூட்டைகளைச் சுமந்து சென்று பணியாற்றுகிறார்கள்.
தங்களின் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் பலர் தன்னார்வமாக இந்தப் பணிக்கு மாவட்டங்களிலிருந்தெல்லாம் தங்களது பெயர்களைப் பதிவு செய்கிறார்கள்.
நீ வழங்கிய பொருட்செல்வம் என்னும் பரக்கத்தை நீ வற்புறுத்திய சதக்காவின் அடிப்படையில் பலர் இந்த நற்பணிக்காக பல செல்வந்தர்கள் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இருக்க இடம் இன்றி அவதிக்குள்ளாகும் அனைவருக்காகவும் அனைத்து ஜமாத்துக்களும் உனது பள்ளிவாசலைத் திறந்து வைத்திருக்கிறார்கள்.
இவ்வளவு மனிதநேயத்துடன் நாங்கள் பணியாற்றும்போது எங்கள் உள்ளத்தில் நிழலாடும் கேள்வி , சில பேசத்தெரியாதவர்கள் பேசியது போல் மாட்டுக்கறி சாப்பிட்ட காரணத்துக்காக எங்களை பாகிஸ்தானுக்குப் போங்கள் என்று சொன்னார்களே அவர்கள் எல்லாம் இந்த பேரழிவில் துயர்துடைக்கப் பணியாற்றாமல் - பங்கெடுக்காமல் எங்கே போய் படுத்திருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியவில்லை இறைவா!
எங்களைத் தீவிரவாதி என்றார்கள். எங்களுக்கு வாடகைக்கு வீடுதர மறுத்தார்கள். விமானநிலையங்களில் எங்களை இரண்டு முறை சோதித்தார்கள். ஆனாலும் நாங்கள்தான் உனது கருணையின் பிரதிநிதிகளாக இங்கு பம்பரமாகச் சுழன்று தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். மனிதப் பிறவி எடுத்ததன் பயனை மக்கள் சேவையில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
வரலாறு காணாத இந்த துயர சம்பவத்தில் துயர் துடைக்கும் அனைவருக்கும் உனது அருள்வளத்தை வழங்கிடுவாயாக யா அல்லாஹ்!
உனது சோதனையாக இந்த நிகழ்வு இருக்குமானால் போதும் எங்கள் இறைவனே! எங்கள் தரப்பில் தவறு இருக்குமானால் எங்களை மன்னித்து விடு இறைவா! எங்களையும் உனது அனைத்து படைப்பினங்களையும் இன மத பேதமின்றி காப்பாற்று எல்லாம் வல்லோனே!
( முகநூலில் எனது பதிவு )

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு