ஹிஜாப் ஒரு கவசம்!

அழகு...
ஓர் அழைப்பிதழ்!
முத்திரையிடு
முகவரியிடு - அன்றேல்
உரியவரைச் சென்று
சேராமல் போய்விடும்
ஊரில் போய்
சோரம் போய்விடும்

அழகு...
ஓர் அறுசுவையுணவு!
நாற்சந்தி தள்ளுவண்டிபோல்
திறந்து போடாமல்
நட்சத்திர அந்தஸ்த்தாக
மூடி வை  - தவறினால்
ஈயென மொய்க்கும் கண்கள்
ஈயென இளிப்பர் ஆண்கள்

அழகு...
ஓர் ஆச்சர்யக்குறி!
அற்ப இச்சைகளுக்கோ
அபிலாஷைகளுக்கோ
வளைந்து கொடுக்காதே - மீறினால்
வாழ்க்கையை அது
கேள்விக்குறியாக்கி
முற்றுப்புள்ளியில் முடித்துவிடும்!

அழகு...
ஓர் அடைமழை!
பருவம் தவறி பெய்தாலோ
அளவை மீறி பொழிந்தாலோ
பாழுங்கிணற்றில் வீணாகும்
பரம்பரை மானம் பறிபோகும்

அழகு
ஓர் அற்புத போதை
அனுமதிக்கப்பட்டவரே
அனுபவிக்க வேண்டும் - இல்லையேல்
கண்டவனும் கண்டு
போதை தலைக்கேறி
பைத்தியம் பிடித்துவிடும்

அழகு
ஓர் அருட்கொடை
பத்திரப்படுத்து!
பகிரங்கப்படுத்தி
பாவம் செய்தால்
படைத்தவனின்
கோபப்பார்வையால்
குலநாசம் உறுதி

சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

7 கருத்துகள்

Unknown சொன்னது…

Assalamu Alaikkum

Dear brother Mr. Sabeer AbuShahruk,
Beautiful advice for protecting the dignity of women!!!

Nowadays the dress code is advised even in the temples.
Actually the body of women is attractive to men(looking beautiful actually, but actually may not be beautiful).

B. Ahamed Ameen from Dubai.

Shameed சொன்னது…

கவிதை அழகு அழகு அழகு

Ebrahim Ansari சொன்னது…


பாடம் நடத்தும்போது படித்துக் காட்டப்பட்ட கவிதை. இந்தக் கவிதையே ஒரு அறுசுவை உணவு. அழகான உணர்வு.

சொக்கிப் போனேன். சுருண்டு விழுந்தேன் இந்தத் தேன்கிண்ணத்தில்.

sheikdawoodmohamedfarook சொன்னது…

பெண்ணின்அழகு மதுபோல் மதிமயக்கி போதை ஊட்டக்கூடியது. அது தகுந்த ஆடைக்குள் அடைக்கலம் புகுவது பாதுகாப்பை தரும். //அதைஅனுமதிக்கப்பட்டவரே அனுபவிக்கவேண்டும்.//நல்லவரி.

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும் இட மாற்றம் அதன் வேலை இப்படியே இருந்ததால் எதற்கும் கருத்திட முடியாத சூழல்!இப்பத்தான் கொஞ்சம் நேரம் கிடைக்கிறது. அழகு சிலவிசயம் வெளிக்காட்டுதலில் உள்ளது. இது மறைப்பதில் உள்ளது! மேனி மறைத்தல் என்பது ஒரு பெண்ணின் கண்ணியத்தை வெளிப்படுத்துகிறது. கொண்டவனுக்கு மட்டுமே காட்டப்படும் அழகே உன்னதம்,உரிமை அழகோ அழகு!

crown சொன்னது…

அழகு...
ஓர் ஆச்சர்யக்குறி!
அற்ப இச்சைகளுக்கோ
அபிலாஷைகளுக்கோ
வளைந்து கொடுக்காதே - மீறினால்
வாழ்க்கையை அது
கேள்விக்குறியாக்கி
முற்றுப்புள்ளியில் முடித்துவிடும்!
------------------------------------
மொத்தமும் இதில் சொல்லபட்டுவிட்டது! விட்டது என்பது இல்லாமல் முழுமையாக செதுக்கிவிட்ட சிற்பம் இந்த வரிகள்!

crown சொன்னது…

அழகு
ஓர் அருட்கொடை
பத்திரப்படுத்து!
பகிரங்கப்படுத்தி
பாவம் செய்தால்
படைத்தவனின்
கோபப்பார்வையால்
குலநாசம் உறுதி
--------------------------------------
அச்சமூட்டி எச்சரிக்கை! இது பெண்ணுக்கே சொல்லப்பட்டாலும் இது ஆணுக்கும் பொது விதியே!கவிஞருக்கு வாழ்த்துக்கள்!