Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் !? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | December 13, 2015 | ,

ஒரு காலத்தில் கிராமங்களில் மட்டுமல்லாது மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய பெரிய ஊர்களிலும் நகரங்ககிலும் கூட ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் வளர்ப்பு பிராணிகளாய் ஆடு, பசுமாடு, எருமைமாடு, கோழி, சேவல், வாத்து, வான்கோழி, கிண்ணிக்கோழி, பச்சைக்கிளி, மைனா, முயல் என வகைவகையான பிராணிகள் பறவை இனங்களென்று வளர்க்கப்பட்டு வந்தது. அந்த பிராணிகளுக்கும் ஒரு பாதுகாப்பாகவும், புகழிடமாகவும் இருந்தது. இந்த வாயில்லா ஜீவன்களை வெறும் வளர்ப்பு பிராணிகளாய் மட்டும் கருதாமல் அந்த வீட்டின் உறுப்பினர்களில் ஒருவர் போல நினைத்து பாதுகாத்து வளர்க்கப்பட்டது.

ஒரு நேரத்தில் தெருப்பகுதியை கடந்து செல்லும்போது ஏதாவது ஒரு வளர்ப்புப் பிராணிகளின் சப்தம் நம் செவிகளுக்கு கேட்கும். ஆளில்லாத வீடுகளிலும் இந்தப் பிராணிகளின் சப்தத்தில் வீட்டில் ஆள் இருப்பது போலத்தோன்றும்.

இந்தப் பிராணிகளுக்கும் தன்பிள்ளைகளுக்கு பெயர் வைத்து அழைப்பது போல் பெயர்வைத்து அழைப்பதும் உண்டு. காலை மாலை என உணவுகளையும் மறக்காமல் கொடுத்து தம் மனிதாபிமானத்தை ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் செய்து அந்தப் பிராணிகளிடம் அன்பு காட்டி வந்தனர். இன்னும் சொல்லப் போனால் கிளி, மைனா போன்ற சில பறவை இனங்கள் நாம் பேசும் மொழியினை கூர்ந்து கவனித்து தினமும் செவிகொடுத்து கேட்டு வருவதால் நம்மோடு சேர்ந்து அப்பிராணிகளும் பேசுவதை கேட்க இனிமையாய் இருக்கும்

இந்த செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்க்கென்று வீட்டுப் பின்புறப் பகுதிகளில் மாட்டுக் கொட்டகை, ஆடு கட்டிப் போடுவதற்கென்று தனி இடம், கோழியை பாதுகாக்க கோழிக் கூடு, மற்ற பறவை,கிளிகளுக்கென தனி கூண்டு அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன

சிலவளர்ப்பு ஆடு மாடுகள் காலையில் வீட்டை விட்டுச் சென்றால் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விட்டு மாலைப் பொழுது ஆனதும் தனது சொந்தவீட்டுக்குத் திரும்பி வருவது போல வீடு வந்து சேர்ந்துவிடும்.. வீட்டில் வளர்க்கும்போது அந்தப் பிராணிகளுக்கு பாதுகாப்பும் சுதந்திரமும் இருந்தன. அப்பகுதிகளில் வசிப்போருக்குக் கூட இன்னார் வீட்டு மாடு, ஆடு என அடையாளம் அறிந்து கொள்வதால் யாரும் அந்த வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில்லை. ஆகவே அதற்க்கு அதிகப்பாதுகாப்பாக இருந்தது.

ஐந்தறிவைக் கொண்ட படைப்பினங்களாக இருந்தாலும் தமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களிடம் அன்பொழுக பழகிவரும்பிராணிகளாய் இருந்தது. நன்றியை தன் சமிக்கையாலும், சைகையாலும் தனக்கே உரித்தான சப்த ஒலியாலும் காண்பித்து வந்தது.

உதாரணத்திற்கு சொல்லப் போனால் அறிமுகம் இல்லாதவர்கள் யாராவது வீட்டிற்குள் வந்தால் தனது குரலை உயர்த்தி தனக்கே உரித்தான ஓசையை எழுப்பி நம்மை உஷார் படுத்திவிடும். விஷ ஜந்துக்கள் ஏதும் தமது கண்களுக்கு தென்பட்டாலும் சரி, இரவில் திருடர்களோ, மற்ற ஏதாவது விபரீத நிகழ்வுகள் நடந்தாலோ இந்த வளர்ப்புப் பிராணிகள் எழுப்பும் சப்தத்தினால் தான் அறிந்திட முடியும்.

இப்படி எத்தனையோ வகையில் நமக்கு பக்க துணையாக இருந்து வந்த இந்த செல்லப் பிராணிகளின் நிலைமை இப்போது பரிதாபத்திற்க்குரியவையாக மாறிவருகின்றது. நாளுக்கு நாள் வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. இந்தப் பிராணிகளை இப்போது வீட்டில் வளர்ப்பதை அசிங்கமாக கூட கருதுகின்றனர். . நாகரீகத்தின் முன்னேற்றத்தில் மூழ்கியிருக்கும் இந்தக் காலத்தில் இத்தகைய பிராணிகளை வளர்க்க இப்போது அதிகபட்சம் அக்கறை காட்டுவதில்லை. யாரும் விரும்புவதில்லை என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கின்றது.

ஒருகாலத்தில் நமக்கு உதவியாகவும், துணையாகவும் இருந்த இந்தச் செல்லப் பிராணிகளை மீண்டும் வளர்க்கத்துவங்குவோம். அதற்க்கு மீண்டும் வாழ்வளிப்போமாக !!!

அதிரை மெய்சா 

6 Responses So Far:

sabeer.abushahruk said...

மெய்சா,

தேவைக்காக என்றில்லாமல் நான், சந்தோஷத்திற்காக, பண்டு பொன்வண்டு வளர்த்திருக்கிறேன்.

ரெட்டைக்கிளி தீப்பிட்டியில் வீடு ஒதுக்கி வளர்த்தால் ரப்பர் முட்டையிடும்.

அப்புறம் பசங்களோடு மரம் ஏறி பிடிச்ச பச்சைக்கிளி கொஞ்சகாலம். அப்புறம் முயல்!

அந்த பொற்காலத்தை நினைவு படுத்திவிட்டாய்.

நன்றி.

sabeer.abushahruk said...

ஆங்... மறந்துட்டேன்.

மின்மினிப்பூச்சிகளும் வளர்த்திருக்கிறேன்(!)

Ebrahim Ansari said...

எங்களுடைய சின்ன வயதில் கோழிகள்தான் வீட்டுப் பிராணிகள்.

நாட்டுக் கோழி முட்டைக் குருமா; வெந்தய ஆணம் எல்லாம் நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை குடும்பத்துடன் அறந்தாங்கிக்குப் போய்விட்டு மறுநாள் காலையில் வந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது மூன்று கோழிகளை கீரிப்பிள்ளை கடித்துக் குதறிப் போட்டிருந்ததைப் பார்த்து விட்டு எனது தாயார் கதறி அழுதது நினைவில் நிற்கிறது.

வீட்டில் கோழிவளர்ப்பது இப்போது வழக்கொழிந்து போய்விட்டதே!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். செல்லபிராணி இப்ப தலைமுறைக்கு செல்லா பிராணியாகி இல்லா பிராணியாகிவிட்டது!ஒருகாலத்தில் வீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்ல பிராணி!எனக்கும் இருந்திருக்கு ஒரு கோழி!பெரும் பிரட்சனை கீறிதான்! அதற்காகவே கோழிவளர்ப்பு நின்று போனது! வீட்டின் கொல்லைப்புறத்தில் இலந்தை மரத்தில் வந்து சேரும் பொண்வண்டு தீப்பெட்டிக்குள் இலைகொடுத்து வளர்த்ததுண்டு!வாரம் தோறும் சகோ.மைய்சா வித்தியாசமானவற்றை எழுதிவருகிறார். பாரட்டுக்கள்!

அதிரை.மெய்சா said...

கருத்துக்கள் பதிந்து ஊக்குவித்த நண்பன் சபீர், இப்றாகீம் அன்சாரி காக்கா, சகோ. க்ரவுன் அனைவர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

sheikdawoodmohamedfarook said...

பசைக்கிளிமைனாமுயல்மான்போன்றகட்டுவாழ்பிராணிகளை வீட்டில் வளர்ப்பதுகூடாது என்று ஆலிம்கள் சொன்னார்கள்.அது அவைகளின் சுதந்திரவாழ்க்கையும்உணர்வுகளையும்கட்டுபடுத்தும் செயலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு