கேள்வி - எத்தைனையோ பேரிடர் இந்தியாவில் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு வந்து இருக்கிறது, அப்போது எல்லாம் இந்த அளவிற்கு இஸ்லாமிய இயக்கம் பங்கு கொள்ளவில்லையே இப்போது பங்கு கொள்வதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறது?
பதில் : அவ்வாறு இல்லை, விளக்கமாக சொல்வதுயென்றால் நாம் வரலாற்றில் சில குறிப்புகள் எடுத்து சொல்லலாம்.
சுதந்திர இந்தியாவில் இஸ்லாமியர்கள் பங்கு.
இந்தியச் சுதந்திரத்திற்கு தனது சதவிகிதத்தையும் மிஞ்சும் விதத்தில் உயிர்களையும் உடமைகளையும் தியாகம் செய்த இஸ்லாமிய சமுதாயம் இன்று அரசியல் காரணத்திற்காக வரலாறுகள் மாற்றப்பட்டு இன்று சில பாசிச தேச துரோகிகளின் சூழ்ச்சியில் நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்டு இரண்டாம்தர குடிமக்களை விடத் தரம் தாழ்த்தப்பட்டவர்களாக, தேசவிரோதிகளாக சித்தரிக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ளோம். எங்கள் வரலாற்றை நாங்கள் ஆதாரத்துடன் சொல்லவந்தாலும் காது கொடுத்து கேட்க கூட மக்கள் தயார் நிலையில் இல்லாத அளவிற்கு ஊடகம் இஸ்லாமியர்களை பற்றி தவறான பிம்பத்தை கொடுத்தது. பாடப்புத்தகத்தில் கொடூரமானவர்களாக சித்தரிக்கபட்டோம். (டாட் )
சுனாமி பேரிடர்
சுனாமியின் போது நாகப்பட்டிணத்தில் முதல் முதலில் பள்ளிவாசல் திறந்து அங்கு அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாக இருக்க உதவியது இஸ்லாமியர்கள்.
மேலும் முதல் கட்ட மீட்புப் பணியில் குளச்சல் - சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் தீவிரமாக இறங்கியவர்களில் முஸ்லிம்கள் முன்னிலையில் இருந்தனர். இதை ஆவணப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூட ஊடகம் உதவ வில்லை.
அன்று சமூக வலைத்தளங்கள் இல்லாததால் இஸ்லாமியர்கள் சேவை வெளியில் தெரியவில்லை.
குஜராத் பூகம்பம்.
குஜராத் பூகம்பம் தமிழகத்தில் இருந்து அப்போது ஒருங்கிணைந்த இஸ்லமிய அமைப்புகள் தமிழக இஸ்லாமியர்கள் சார்பாக 10 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள்.
மேலும் தமிழக இஸ்லாமியர்கள் சார்பாக மீட்பு குழு குஜராத் சென்று உணவு - உடை - இரத்தம் என்று பல உதவிகளை செய்தது. அன்று சமூக வலைத்தளங்கள் இல்லாததால் இஸ்லாமியர்கள் சேவை வெளியில் தெரியவில்லை.
இன்று - தமிழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிடர் வெள்ளம்.
இன்று சமூக வலைத்தளங்கள் மூலம் நாங்கள் எங்களுடிய மகத்தான சேவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உள்ளோம்.
உங்கள் எண்ணங்களில் இஸ்லாமியர்கள் பற்றி இருக்கும் தவறான பிம்பத்தை உடைத்து இருக்கிறோம். அதற்கு களத்தில் இருக்கும் சகோதரர்கள் மட்டும் காரணம் இல்லை, அதை படம் பிடித்து பகிரும் நண்பர்களின் சமுக வலைத்தளங்கள் காரணம்.
சமுக ஊடகத்தில் பகிர்வதால் வேறு வழியே இல்லாமல் இன்று ஊடகம் சொல்ல கூடிய கட்டாயத்தில் இருக்கிறது.
மேலும் இஸ்லாமிர்கள் தமிழகத்தில் பல சேவைகளை சத்தமே இல்லாமல் செய்து வருகிறார்கள். இனி அவர்கள் செய்யும் ஒவ்வொரு சேவையும் வெளி உலகத்திற்கு கொண்டு வருவோம் காது கொடுத்து மட்டும் கேளுங்கள். அதற்கு சிலருக்கு பொறுமை வேண்டும்.
இன்று கூட பல ஊடகம் தீவிரவாதி என்றால் தீவிரவாதம் செய்பவனை தீவிரவாதி என்று சொல்லாமல் இஸ்லாம், முஸ்லிம் என்று சொல்வார்கள், களத்தில் சேவை செய்யும் இன்று எங்கள் இஸ்லாமிய சமுதாயத்தை தன்னார்வத் தொண்டர்கள் சேவை என்றே சொல்கிறார்கள். ( வேதனை )
மேலும் இஸ்லாமியர்கள் எந்த நோக்கத்திற்கும் சேவை செய்யவில்லை. எங்கள் தலைவர் வழிக்காட்டி 1437 வருடத்திற்கு முன்பு முகம்மது நபி அவர்கள் கூற்றுக்கு ஏற்ப செய்கிறோம்.
இனியும் செய்வோம்.
யூசுப் ரியாஸ்
4 Responses So Far:
அஸ்ஸலாமுலைக்கும்.பேரிடர் வந்ததும் யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள் பேரிடரில் நம்மவர் ஆற்றிய தொண்டினை! மாற்று மத சகோதரியின் குழந்தைக்கு பேரிடும் போதே தெரிந்திருக்கும் பேரிடரில் எல்லா இடரையும் புறந்தள்ளி சகோகதர,சகோதரிகள் ஆற்றிய தொண்டு! வரலாற்றை நினைவூட்டும் ஆக்கம்!
கையுறை அணிந்து
கழிவகற்றும் சகோதரனே! – உன்
நன்மாராயப் பலகையில்
மெய்யுரை எழுதுகிறாய் நீ!
செத்த பிராணிகள்
சீரழிந்த குப்பைகள்
சாக்கடை சகதிகள்
துர்நாற்ற வீச்சம்
இவை யாவும் – உன்
ஆவேச வீரியத்தின் முன்
வெறும் துச்சம்
சான்றோன் என கேட்டதைவிட
தன் மகனை
சமுதாயக் காவலன் என
சகமனிதன் கூறுவதை கேட்டு
ஈன்ற தாய் உனைப் பார்த்து
பெரிதுவப்பாள்
இளைஞனே! - உன்
கையில் இருப்பது
துடைப்பம் அல்ல….
எதிர்கால விடியலின் அமரதீபம்!
குப்பைகளை அகற்ற - நீ
குனியும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சன்றோ நிமிர்கிறது!
உன் கால்களில் சேத்துப்புண்.
அது
எதிர்கால இந்தியாவின்
இறையாண்மை தூண்
உன்
அழகிய கைகளில்
அழுகிய கழிவுகள்.
சாக்கடை அசுத்தம் - உன்
மேனியில் மட்டும்தான்
சகோதரா - உன்
உள்ளத்தில் அல்ல..
சகதியில் உழலும்
உன் தேகம் – அது
சன்மார்க்கத்தின்பால்
நீ கொண்ட நேசம்
கூலி இன்றி
நீ செய்யும் களப்பணிக்கு
கூலி அங்குண்டு இங்கல்ல.
அப்துல் கையூம்
[சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதி – நபிகள் நாயகம்]
மாஷா அல்லாஹ் தம்பி யூசுப் ரியாஸ். அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். முந்தைய பேரிடர்களில் நேரடியாக பங்குகொண்டவர்களுக்கு தெரியும் இஸ்லாமியர்களின் பணிகள் குறித்து. ஆனால் அவை வெளிச்சத்திற்கு வராததற்கு காரணமும் மறக்கப்பட்டதன் காரணமும் அவை யார் பார்வைக்கும் சென்று சேராததே!
இறுதியாக முடித்த விதம் அருமை. வாழ்த்துகள்
//இஸ்லாமியர்கள் எந்த நோக்கத்திற்கும் சேவை செய்யவில்லை. எங்கள் தலைவர் வழிக்காட்டி 1437 வருடத்திற்கு முன்பு முகம்மது நபி அவர்கள் கூற்றுக்கு ஏற்ப செய்கிறோம். //
உண்மையை உரைத்தீர்கள்!
நன்றி, வாழ்த்துகள்!
Post a Comment