அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
மரணத்தை நினைவு கூறல், மேலெண்ணங்களை குறைத்தல்:
அல்லாஹ் கூறுகிறான்:
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 3:185)
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்: நுட்பமானவன். (அல்குர்ஆன்: 31:34)
மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 16: 61)
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டடைந்தவர்கள். (அல்குர்ஆன்: 63:9)
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்!‘’ இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே’’ என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன்: 63:10)
அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 63:11)
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது ‘’என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தைதான். அவன் அதைக் கூறுகிறான் அவர்கள் உயிர்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. (அல்குர்ஆன்: 23:99,100)
ஸூர் ஊதப்படும் போது அவர்களிடையே அந்நாளில் எந்த உறவுகளும் இருக்காது. ஒருவரையொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 23:101)
எவரது எடைகள் கனமாகி விட்டனவோ அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 23:102)
எவரது எடைகள் இலேசாகி விட்டனவோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டமிழைத்தனர். நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:103)
அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:104)
“எனது வசனங்கள் உங்களுக்குக் கூறப்படவில்லையா? அதை நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டு இருந்தீர்கள்” (என்று கூறப்படும்) (அல்குர்ஆன்: 23:105)
“எங்கள் இறைவா! எங்கள் துர்ப்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. நாங்கள் வழி தவறிய கூட்டமாக இருந்தோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 23:106)
“எங்கள் இறைவா! இங்கிருந்து எங்களை வெளியேற்றி விடு! நாங்கள் பழைய நிலைக்குத் திரும்பினால் நாங்கள் அநீதி இழைத்தவர்கள்” என்றும் கூறுவார்கள்). (அல்குர்ஆன்: 23:107)
“இங்கேயே சிறுமையடையுங்கள்! என்னிடம் பேசாதீர்கள்! என்று அவன் கூறுவான்.(அல்குர்ஆன்: 23:108)
“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எங்களை மன்னித்து அருள் புரிவாயாக! நீ கருணையாளர்களில் சிறந்தவன்” என்று எனது அடியார்களில் ஒரு சாரார் கூறி வந்தனர்.(அல்குர்ஆன்: 23:109)
எனது நினைவை விட்டும் உங்களை மறக்கச் செய்யும் அளவுக்கு அவர்களைக் கேலிப் பொருளாகக் கருதினீர்கள். அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள். (அல்குர்ஆன்: 23:110)
அவர்கள் சகித்துக் கொண்டதால் இன்று அவர்களுக்கு நான் பரிசளித்தேன். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன்: 23:111)
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்பான். (அல்குர்ஆன்: 23:112)
“ஓரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் வாழ்ந்தோம். கணக்கிடுவோரிடம் விசாரிப்பாயாக! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 23:113)
“குறைவாகவே வாழ்ந்தீர்கள். இதை அறிந்தவர்களாக நீங்கள் இருந்திருக்கக் கூடாதா?” என்று அவன் கூறுவான். (அல்குர்ஆன்: 23:114)
‘உங்களை வீணாகப் படைத்துள்ளோம்’ என்றும் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்படமாட்டீர்கள்’ என்றும் நினைத்தும் விட்டீர்களா? (அல்குர்ஆன்: 23:115)
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவாலும், (இறைவனிடமிருந்து) இறங்கிய உண்மையினாலும் பணியும் நேரம் அவர்களுக்கு வரவில்லையா? அதற்கு முன்னர் வேதங்கள் கொடுக்கப்பட்டோரைப் போல் அவர்கள் ஆகாமல் இருப்பதற்கும் நேரம் வரவில்லையா? காலம் நீண்டு விட்டதால் அவர்களின் உள்ளங்கள் இறுகி விட்டன. அவர்களில் அதிகமானோர் குற்றவாளிகள். (அல்குர்ஆன்: 57:16)
'என் தோள்பட்டைகளைப் பிடித்துக் கொண்டு, ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீ இந்த உலகில் இருந்து கொள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். எனவே, நீ மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல்நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 574)
''ஒரு பொருளில் வஸிய்யத் (மரண சாசனம்) செய்ய வேண்டிய ஒரு முஸ்லிமான மனிதனுக்கு, தன் வஸியத்தை தன்னிடம் எழுதி வைத்துக் கொள்ளாமல் இரண்டு இரவுகள் வரை கழிக்க உரிமை இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.(புகாரி)
முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் மூன்று இரவு வரை என உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நான் கேட்டதிலிருந்து எந்த இரவும் என்னிடம் வஸியத்தை பதிவு செய்தே தவிர கழிந்ததில்லை என்றும் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 575)
'நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை ஒரு சதுரமான கட்டம் போட்டார்கள். அதன் நடுவில் அதைத் தாண்டிச் செல்லும் ஒரு கோட்டைப் போட்டார்கள். நடுவில் உள்ள கோட்டின் ஓரத்திலிருந்து நடுக்கோட்டை நோக்கி சிறுசிறு கோடுகளைப் போட்டார்கள். உடனே ''இதுதான் மனிதன். சுற்றி உள்ள கோடு அவனது தவணையாகும். கட்டத்தினை விட்டும் வெளியேறி உள்ள இந்தக் கோடு தான், அவனது மேலெண்ண ஆசைகளாகும். இந்த சிறிய கோடுகள் அவனுக்கு ஏற்படும் சோதனைகளாகும். இது (ஒரு சோதனை) அவனை விட்டுவிட்டாலும் இது (அடுத்தது) அவனைப் பிடித்துக் கொள்ளும். இது (மற்றொரு சோதனை) அவனை விட்டு விட்டாலும், இது (அதற்கடுத்த சோதனை) அவனைப் பிடித்துக் கொள்ளும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
இது தான் அந்த கட்டத்தின் தோற்றமாகும் :
(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 577)
'இன்பங்களைத் தகர்த்து எறியக் கூடியதை (அதாவது மரணத்தை) நினைவு கூர்வதை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 579)
நபி(ஸல்) அவர்கள் இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்றதும் எழுபவர்களாக இருந்தார்கள். ஒருமுறை “மனிதர்களே! அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். பூகம்பம் அடுத்து பூகம்பம் என அதிர்ச்சி வந்து விட்டது. மரணம், தான் சார்ந்துள்ள (ஆபத்துகளு)டன் வந்து விட்டது. மரணம், தான் சார்ந்துள்ள (ஆபத்து)டன் வந்து விட்டது”. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபை இப்னு கஹ்பு(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 580)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.
13 Responses So Far:
ஈமானை வேரூன்ற வைக்கும் அழகிய திரு வசனங்கள்
உலகில் மனிதனை ஆசை என்னும் போதை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைக்கின்றது என்பதை எளிய முறையில் விளக்கி இருக்கின்றார்கள்.
அண்ணல் நபி (ஸல்).
அல்லாஹ் தந்த தவனையோ ஒன்று. மனிதனின் ஆசைக்கு அளவில்லை. அந்த அளவற்ற ஆசைதான் சோதனைக்கு வித்து.
நீ கொடுத்ததற்கே நன்றிசொல்ல முடியவில்லை இன்னும். இனி அடுத்தடுத்து கேட்பதற்கு அஞ்சுதே என் உள்ளம்.
யா அல்லாஹ் எங்களை நீ தந்ததைக்கொண்டு பொருந்தி வாழக்கூடிய பொருமையாளிகள் கூடத்தில் சேர்ப்பாயாக !
ஆமீன்.
அபு ஆசிப்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா... !
படம் போட்டு பாடம் நடத்தியிருக்கிறீர்கள் !
மரணம் !
முன்பதிவு செய்யப்பட்ட பயணம்...
நேரம் குறிக்கப்படாத !
பயணப் பதற்றம் !
மரணம் : நேரம் குறிப்பிடப்படாத பயணம்
கண்டிப்பாக பயணித்தே ஆகவேண்டிய பயணம்
வழிகாட்டுதல் இல்லாத பயணம்
துணை இல்லாத பயணம்
மண்ணுலகின் முடிவான விண்ணுலகின் ஆரம்பமான பயணம்.
மண்ணறையின் கேள்விகளை துவக்கும் பயணம்
சுவனமோ நரகமோ தீர்மானிக்கும் பயணம்
மண்ணுலகின் தூக்கத்தை கலைத்து, விண்ணுலகின் விழிப்பை
ஏற்ப்படுத்தும் பயணம்
மொத்தத்தில் அல்லாஹ்வை நாம் எதிர்கொள்ள நம்மை அழைத்துச்செல்லும் பயணம்.
யா அல்லாஹ் எங்களின் இப்பயணம் ஆரம்பத்திலும், முடிவிலும் வெற்றியான பயணமாக ஆக்கி அருள்வாயாக!
ஆமீன்
அபு ஆசிப்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா.
யா அல்லாஹ் எங்களின் இப்பயணம் ஆரம்பத்திலும், முடிவிலும் வெற்றியான பயணமாக ஆக்கி அருள்வாயாக!
-------------------------------------------------------------------
ஜமாத்துல் ஆகிர் பிறை 22
ஹிஜ்ரி 1434
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா... !
நிம்மதியான வாழ்விற்கும் நிரந்தர அமைதிக்கும் திருகுர்ஆனும் நபிவழியும் மட்டுமே அருமருந்து என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்
-------------------------
இம்ரான்.M.யூஸுப்
Jasaakallaah khair Alaudeen,
From
Sabeer
Zakir
Iqbal
Riyaz
Noorani
Ginger tea
Heavy rain from Kuala lumpur
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த வாரம் தொகுத்தளிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள், உண்மையில் உள்ளத்தை நடுநடுங்க வைக்கிறது.
நல்ல ஞாபகமூட்டல் காக்கா.. ஜஸக்கல்லாஹ் ஹைர்.
தொடருங்கள்...
sabeer.abushahruk சொன்னது…
Jasaakallaah khair Alaudeen,
From
//Sabeer
Zakir
Iqbal
Riyaz
Noorani
Ginger tea
Heavy rain from Kuala lumpur//
மழை விட்டதும் துருயான் பழம் சாப்பிட போய் இருப்பிகளே !
நல்ல ஞாபகமூட்டல் காக்கா.. ஜஸக்கல்லாஹ் ஹைர்.
மழை விட்டதும் துருயான் பழம் சாப்பிட போய் இருப்பிகளே !
தெரியாமதான் கேட்கிறேன்.
துருயான் பழம் என்றால் என்ன ?
கொஞ்சம் விளக்குங்க தம்பி .
அபு ஆசிப்.
Reply வெள்ளி, மே 03, 2013 10:15:00
Abdul Khadir Khadir சொன்னது…
//தெரியாமதான் கேட்கிறேன்.
துருயான் பழம் என்றால் என்ன ?
கொஞ்சம் விளக்குங்க தம்பி .//
அபு ஆசிப்.
துருயான் பழம் நம்ம ஊர் பலா பழத்தை விட சிறிதாக இருக்கும் முதன் முதலில் சாப்பிடும் போது குமட்டல் வரும் காரணம் அதன் மனம்(செடியன் குளத்து மேட்டு வாடை ) ஒரு முறை ருசித்துவிட்டால் அதன் ருசி வாழ் நாளில் மறக்க முடியாது .குற்றால சீசனில் இதை பார்க்கலாம் விலையை கேட்டால் தலை சுற்றும் .இந்த பழத்தின் சிறப்பு ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்குமாம்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!
Post a Comment