ஆம்... உண்மை சம்பவம்..
மனது மிகவும் இறுக்கமாக இருந்தது யாருக்காவது இன்று உதவ வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..
நேற்று லுஹர் தொழுகை ஜமாத்துடன் தொழ இயலவில்லை. தனியாக தொழ நான் வசிக்கும் பள்ளிவாசலுக்கு சென்றேன். பொருளாதார தேவையுடைய நபர் ஒருவரை தொழும் முன் கண்டேன். தொழுதபின் அவருக்கு ஏதாவது பண உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தொகையும் மனதில் எண்ணினேன்.
தொழுத பின் பார்த்தேன், அந்த தேவையுடைய நபர் இல்லை. அவரை அடிக்கடி நான் வசிக்கும் பகுதியில் கண்டிருக்கிறேன், ஆனால் அவரின் அலைபேசி எண் எனக்கு தெரியாது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நம்முடைய எண்ணம் நிறைவேறவில்லை என்று..
இருப்பினும் உடனே.. அல்லாஹ்விடம் கையேந்தினேன், "நான் நிய்யத் செய்த உதவி தொகையை தேவையுடைய யாரையாவது எனக்கு அடையாளம் காட்டு யா.. ரப்பே.. " என்று பிரார்த்தனை செய்து மீண்டும் பள்ளிவாசல் உள்ளே சென்றேன்..
அங்கு..
நான் ஒரு வருடத்திற்கு மேல் கண்டு வரும் முதியவர். ஒரே ஒரு ஆடையில் மட்டுமே அவரை கண்டிருக்கிறேன்.. பார்க்கும்போதெல்லாம் அல்குர்ஆன் ஓதியவராக இருப்பார். 5 வேலை தொழுபவர், யாரிடமும் யாசகம் கேட்க மாட்டார், வீண் பேச்சு பேசமாட்டார், புன்னகை தழும்பும் முகம், இரு சக்கர மிதி வண்டி ஓட்டுவார், தொழில்
ஏதும் செய்யாதவர், அவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதி. இவரை கானும்போது சிரியாவின் நம் மக்கள் கஷ்டங்கள் வந்து கண்கலங்க செய்யும்.
உதவும் முன் நிய்யத் செய்யவேண்டும், இந்த உதவி தேவையுடையவருக்கு சென்றடைய வேண்டும் என்ற படிப்பினையை உணர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..
குறிப்பு: நான் பெற்ற படிப்பினையை உங்களுக்கு பகிர்வதற்காக மட்டுமே இந்த பதிவு.
Thajudeen
0 Responses So Far:
Post a Comment