'வாவன்னா' குடும்பத்தைச் சேர்ந்த 'ஆவ்மி ஹாஜியார்' என்ற அஹ்மது முஹிதீன் ஹாஜியார் பாய்மரக் கப்பலுக்குச் சொந்தக்காரராகிப் பன்னாட்டு வணிகம் செய்த தனவந்தர். பெரும்பாலும் அவரது கப்பல் உள்நாட்டுத் துறைமுகங்களிலும், இலங்கையிலும், சிலபோது அரபு நாடுகளுக்கும் சென்று வணிகம் செய்யும் வழக்கம். இவ்வாறான பயணங்களுள் ஒன்றில், அப்போது அவர் தனது வணிகக் குழுவுடன் மக்காவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தார்.
"முதலாளி! காற்று திசை மாறி அடிக்குது!" என்று குரல் கொடுத்த கப்பலோட்டியை நெருங்கிச் சென்ற ஹாஜியார், "கொஞ்ச நேரம் கப்பலை அதன் போக்கில் ஓடவிடு" என்று ஆணை பிறப்பித்தார். கப்பலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தேயிலைப் பொட்டலங்கள் அடங்கிய கள்ளிப் பெட்டிகள் மாலுமிக்குப் பாரமாகத் தெரிந்தது. வெள்ளையர்கள் அமெரிக்கத துறைமுகம் ஒன்றில் செய்தது போன்று, ('Boston Tea Party' ) அவற்றைக் கடலில் தள்ளிவிடலாமா என்றுகூட எண்ணினார் மாலுமி. முதலாளிக்கு பயந்து, அவ்வாறு செய்யவில்லை. சற்று நேரத்தில் அவர், "அந்தோ.... கோட்டைப்பட்டினத்து தர்ஹா தெரியுது" என்று உணர்ச்சிப் பெருக்கில் கூவினார்.
"ஓட்டு அந்தப் பக்கம்!" என்ற முதலாளியின் ஆணைக்கொப்ப, மாலுமி தன தலைப்பாகையை இறுகக் கட்டிக்கொண்டு கண்ணில் தென்பட்ட கரையை நோக்கிக் கப்பலைச் செலுத்தினார். ஒருவாறாக, பத்திரமாகப் பயணக் குழுவினர் கரையை அடைந்து, தரையில் கால் வைத்தபோது, "வாங்க, வாங்க" என்ற வரவேற்புக் குரல்களைக் கேட்டு வியந்து நின்றனர்! அவர்கள் அந்த ஊர்த் தலைவர்கள் என்பது பிறகுதான் தெரிந்தது. 'எல்லாம் இறைவன் செயல்' என்பதை உணர்ந்துகொண்ட ஹாஜியார், அவ்வூர்க்காரர்களின் வீடுகளில் நடந்த விருந்தோம்பலில் திக்குமுக்காடிப் போனார்.
ஹாஜியாரின் பார்வை எதையோ தேடிக்கொண்டிருந்ததை உணர்ந்த தலைவர் ஒருவர், "என்ன ஹாஜியார்!?" என்றார். "தேத்தண்ணியைத் தேடுறேன்" என்ற ஹாஜியாரிடம், "அது என்னது தேத்தண்ணி?!" என்றார் முன்னவர். "அது, நான் அரபு நாட்டில் இருந்தபோது அரபிகளோடு சாப்பிடும்போது மறவாமல் குடிக்கும் 'சுலைமானி' என்ற பானம்" என்று விளக்கிய ஹாஜியாரிடம், "அப்படி ஒரு சாமான் எங்களுக்குத் தெரியாது" என்று கைவிரித்தனர் அங்கிருந்தோர்.
"கப்பலில் இருக்கும் கள்ளிப் பெட்டி ஒன்றைத் திறந்து எடுத்து வா" என்ற ஹாஜியாரின் கட்டளையைச் செவியேற்று, அவரின் பணியாட்கள் சற்று நேரத்தில் தேயிலைப் பாக்கெட்டுகளை எடுத்துவந்தனர். சிறிது நேரத்தில் 'சுலைமானி' தயாராயிற்று. அனைவரும் அந்த அரிய பானத்தை அருந்தி மகிழ்ந்தனர்.
ஓரிரு நாட்கள் அங்கே தங்கி ஓய்வெடுத்த பின்னர், அந்த ஊர்க்காரர்களிடம் பயண வழிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஹாஜியாரும் அவருடைய பயணக் குழுவும் சொந்த ஊரான அதிரைக்கு விரைந்தனர். "அல்லாடே காவலா போய்ட்டு வாங்க ஹாஜியாரே!" என்று கோட்டைப்பட்டினத்தார் வழியனுப்பிவைத்தனர்.
'கோட்டைப்பட்டினத்துக்குத் தெரியாதது நம்மூருக்கும் புதிதுதான்' என்று சிந்தித்த அஹ்மது முஹிதீன் ஹாஜியார், இன்று நாம் கணினி மென்பொருள்களை ஊரில் அறிமுகம் செய்வது போன்று, அன்று அதிரையில் அறிமுகம் செய்து வைத்ததுதான் 'தேயிலை' என்ற அற்புதப் பொருள்.
- அதிரை அஹ்மது
13 Responses So Far:
நல்ல சுவையான (புதுத்)தகவல்...
உம்மா தேத்தண்ணி குடிச்சுட்டுபோங்கம்மான்னு சொன்ன போதெல்லாம் அதன் அருமை தெரியலை.... இங்கே வந்து ஆஃபீஸில் குப்பை கொட்டும்போதுதான் அட ஒரு தேத்தண்ணி குடிச்சா நல்லாயிருக்குமேன்னு மனசு தேடுமே அப்போதான் தேத்தண்ணி(யின்) அருமை தெரியும் !
எங்க அலுவலகத்தில் 14 வருடமாக ஒருவர் தேத்தண்ணி மட்டுமே போட்டு பரிமாறுவது அவரின் வேலை என்னமோ தெரியலை எத்தனையோ பேரை மாத்தி பார்த்தாச்சு அவர் போட்டுத் தரும் தேத்தண்ணிக்கு மட்டும் ஒருடேஸ்ட் (என்னடா இவனும் ஜாஹிர் காக்காவின் வித்தியாசானமான்வய்ங்க லிஸ்டில் சேர்த்திடலாம்னு சொல்லாமலிருந்தாலலின்னும் தேத்தண்ணி அனுபவம் நிறைய இருக்கு...)
வேலை தேடி என்னிடம் வரும் பயோடேட்டாவில் இப்படியும் பார்த்திருக்கேன்... அரபி சுலைமானி, இந்தியன் சுலைமானி, இங்கிலீஸ் டீ போடத்தெரியும் என்றும் ! அது மட்டுமா சிலர் காஃபி மேக்கிங் மெஷின் ஆப்ரேஷன் இப்படியெல்லாம் !
அதிரைக்கு தேத்தண்ணி வந்த கதை (வரலாறு) நகைச்சுவைவுடன் தித்திப்பாக இருந்தது. சுக்கு (இஞ்சி)போட்டு மேலும் சுவையூட்டியது நம்மக்கள் தனே! இபொழுது அரபு மக்களும் (ஜிஞ்ஜிபீ)அதங்க இஞ்சி போட்டு சய் குடிக்கிறார்கள்.
சுலைமானி டீ, என்றவுடன் கவண்ன கடை டீ, நூர் லாட்ஜ் கடை டீ, கமால் கடை டீ என்பதுபோல் இதுவும் ஒன்று என்று நினைத்து இருந்தேன், அரபு தேசத்திற்கு வந்த பிற்குதான் தெறிந்தது அது இவர்களின் கட்டன் சாய் என்று.
அஸ்ஸலாமு அலைக்கும் இதிலிருந்து தெரிவது யாதெனில் அஹ்மது முஹிதீன் ஹாஜியார் அவர்கள் அறிமுகப்படுத்தும் வரை நம்மவர்கள் தேயிலையை முன்பே அறிந்ததேயி(இல்)ல்லை,தேத்தனி குடிததேயில்லை,
என்பதுதான் . அவர்கள் அறிய தந்ததன் விலை நித்தம் தேத்தனி இல்லாத இல்லமே இல்லை.
எத்தனையோ பேர் எது எதற்கோ கடன் பட்டிருக்கிறார்கள், ஆனால் நானோ இந்த பதிவினை தந்திருக்கும் காக்கா அவர்களுக்கு ஒரு இஞ்சி தேத்தண்ணி கடன் பட்டு போனேனே!!!
இப்பவெல்லாம், தேத்தண்ணி என்றாலே முதலில் சட்டென நினைவில் வருவது என் கடன் தான். வரலாறாக்க விடமாட்டேன். ஊத்திக்கொடுத்தேத் தீருவேன் என்ற உறுதியோடும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் காக்கா என்ற அபிப்பிராயத்தோடும் வஸ்ஸலாம்.
. . டீ.அதிரையில் அறிமுகமான அற்புதமான பொருளென்பது அகமதாக்கா சொல்லித்தான் தெரிகிறது.அருமை தகவல்கள்.
. . எவ்வளவு தாகமான நேரத்திலும் எந்த உடல் நிலையிலும் டீ யை குடித்துப் பாருங்கள் அதன் மகத்துவமே தனி.எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற சூடான் சூப்பரான பானமே அது.
"சுவையான" செய்தி...சுறுசுறுப்பைத் தந்தது..
சுலைமானி தான் தேத்தண்ணி யா? அந்த சுலைமானி ல பால் ஊத்தி, பால் டீ போடலாம்-னு முதன் முதல்-ல ட்ரை பண்ணியது யாரா இருக்கும் ? :)
அஸ்ஸலாமு அலைக்கும்.
அஹமது சாச்சாவின் பதிவு மிக அருமை. அன்றாட வாழ்வில் டீயின் முக்கியத்துவம் எப்படி ஆகிவிட்டதென்றால் உணவு+உடை+இருப்பிடம்+டீ என்று தனக்குத்தானே ஒரு தன்னிகரில்லா இடத்தை நம் அன்றாட வாழ்வில் டீ இடம் பிடித்து விட்டது.
கண்டிப்பாக நான் பணி செய்யும் கம்பெனியில் காலையில் இரண்டு தடவை மற்றும் சாங்காலம் இரண்டு தடவை டீ குடிக்க வேண்டும். என்ன தான் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் அந்த நேரம் வரும் பொழுது தலைக்குள் அலாரம் அடிப்பது போல் அடித்து நம்மை டீயின் பக்கம் திசை திருப்பும்.
கம்பெனி கேண்டீனில் ஒரு சவுதிக்காரர் வந்து ஒரு சுலைமானி வேண்டும் என்று கேட்டார். நானும் கொஞ்சம் நக்கலாக அவருடைய பாணியில் சுலைமானி வித் மில்க் (அதாங்க பால் டீ) என்று கேட்டேன் (தம்பி இர்ஷாத் பாணியில்). உடனே அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
அதுவும் இஞ்சி போட்டு (சின்னகாக்கா ரூம்லெ முந்தி தர்ர மாதிரி) டீயெல்லாம் குடிச்சா அன்னக்கி பூரா ஒடம்புலெ அறிவிக்கப்படாத பெருநா கொண்டாடுன மாதிரி தான் போங்கெ....
வரட்டுங்களா.....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
தேத்தனி மட்டுமே குடித்து உயிர்வாழும் மக்கள் நிறைய உண்டு, அதுவும் நம்மூர்லே சொந்தம், தெரிந்த வீடுகளுக்கு சென்றால் தேத்தணி தந்தே அன்றைய சாப்பாட்டை மறக்கடித்தும், அளவுக்கதிகமா குடித்து வாந்தி வந்தாலும் வாந்திய எடுத்துட்டு அப்புறமா குடிச்சிட்டுத்தான் போவனும் என்று சொல்லுமளவுக்கு நம் மக்களீடையே இந்த தேத்தனி குடிகொண்டிருக்கு என்பது மறுக்கமுடியாத உண்மை..
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல தகவல் பதிவு. இந்த பதிவை படித்தவுடனே தேத்தண்ணி குடித்த உணர்வு.
இரச்சானத்துடன் சாப்பிடும் விருந்துக்கு பிறகு அருந்தும் சுலைமானியின் ருசியே தனிதான்.
கட்டுரை இஞ்சி போட்டு சுலைமானி குடித்த டேஸ்ட்...வரலாறை அறிந்து கொள்வது கடமை அது தேத்தணியாக இருந்தால் கூட...நன்றி காக்கா
டி கண்டு பிடித்த அந்த நம் மூத்தோருக்கு நம் துவா உரித்தாகட்டும்.பால் போடாத அந்த தேநீர் ஒரு மருந்து.அருமை
தேதண்ணி நம்மோ ஊருக்கு எந்த வருஷம் வந்தது?
Post a Comment