Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 039 8

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2016 | , ,


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . . 

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பணிவாக இருத்தல், இறைவிசுவாசிகளிடம் கனிவாக இருத்தல்:

உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக! (அல்குர்ஆன்: 26:215)

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள்தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாரளமானவன்: அறிந்தவன்.(அல்குர்ஆன்: 5:54)

நம்பிக்கை கொண்டாரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன்: 49:12)

அற்பமானவை தவிர பெரும் பாவங்களையும், வெட்கக் கேடானவற்றையும் யார் தவிர்த்துக் கொள்கிறாரோ உமது இறைவன் தாராளமாக மன்னிப்பவன். உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்குர்ஆன்:53:32)

''எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உறுதியாகப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று சொர்க்கவாசிகள் நரகவாசிகளிடம் கேட்பார்கள். அவர்கள் 'ஆம்' என்பர். ''அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் உள்ளது'' என்று அவர்களுக்கிடையே அறிவிப்பாளர் அறிவிப்பார். (அல்குர்ஆன்: 7:44)

அவர்களின் பார்வைகள் நரகவாசிகளை நோக்கித் திருப்பப்படும் போது எங்கள் இறைவாஎங்களை அநீதி இழைத்த கூட்டத்துடன் சேர்த்து விடாதே!” எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 7:47)
  
'நீங்கள் பணிவாக இருங்கள். ஒருவர் மற்றவரைவிட பெருமை கொள்ள வேண்டாம். ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்ய வேண்டாம்'' என அல்லாஹ் என்னிடம் இறைச்செய்தி அறிவித்தான்  என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: இயாழ் இப்னு ஹிமார்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 602)

'தர்மம் செய்வது சொத்தில் எதையும் குறைத்து விடாது. அல்லாஹ் ஓர் அடியானை மன்னிப்பதன் மூலம், பதவியை உயர்த்தாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ்வுக்கு ஒரு அடியான் பணிந்தால் அவனுக்குரிய தகுதியை அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 603)

''நபி(ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் எப்படி நடந்து கொள்வார்கள்? என, ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது.  தன் குடும்பத்தாருக்கு உதவி புரிவதில் நபி(ஸல்) அவர்கள் இருப்பார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் தொழுகைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஸ்வத் இப்னு யஸீத் (ரலி)     அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 606)
                                        
'நபி(ஸல்) அவர்கள் உணவு சாப்பிட்டால், மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள். ''உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூட, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதை சாப்பிடட்டும், ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள். உங்கள் உணவில் எதில் ''பரக்கத்'' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அனஸ் (ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 608)

'ஓர் ஆட்டின் காலின் கீழ் பகுதி, அல்லது தொடைப்பகுதி ஆகியவற்றை சமைத்து விருந்துக்கு என்னை அழைக்கப்பட்டாலும் நான் அதை ஏற்பேன். எனக்கு ஆட்டின் காலின் கீழ் பகுதியையோ, அல்லது தொடைப் பகுதியையோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 610)

'நபி(ஸல்) அவர்களிடம் ''அழ்பாஉ'' என்ற ஒட்டகை இருந்தது. அதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது. ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்து, அதை முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது. இதைக் கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் ''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 611)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

8 Responses So Far:

Unknown said...

ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது
" பெருமானாரின் குணம் எப்படி இருந்தது" ? என்று.

அதற்க்கு ஆயிஷா (ரலி) , " பெருமானாரின் குணமே குரான் ஆகத்தான் இருந்தது."என்றார்கள். அதிரை நிருபர் வலை தலமே இந்த தொடரில் தான் ஒரு உரோட்டமுள்ள விஷயங்கள் ( குரான் & ஹதீஸ் ) வாசகர்களுக்கு அள்ளித்தெளித்து அவர்களை மறுமையின் அருளை அடைய வழி நடத்திக்கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல.

அல்ஹம்து லில்லாஹ், அழகிய வசனங்களிலும் , அருமையான ஹதீஸ் தொகுப்பகளிளிருந்தும் முத்து, பவளம்,வைரம், மாணிக்கம், தங்கம் ,இவைகளெல்லாம் என்ன, ஒன்றுமே இல்லை மேலே கண்ட வசனங்களிலும், அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து சென்ற நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு முன்னால்.

எந்த வேதத்திற்கும் இல்லாத ஒரு முத்தாய்ப்பான வசனத்தை , அல்லாஹ் இதில் அருளினான் அதுதான் : "அல் யௌம அக்மல்து லகும் தீனக்கும் , வ அத்மம்து அலைக்கும் நி 'மத்தி வ ரளீத்து லகுமுல் இஸ்லாம தீனா"

பொருள் "இன்றோடு நான் இந்த மார்க்கத்தை பரிபூரண படுத்திவிட்டேன். என் அருட்கொடைகளை உங்கள்மீது பொழிந்துவிட்டேன். இந்த இஸ்லாமிய மார்க்கத்தையே நீங்கள் பின் பற்ற வேண்டிய மார்க்கமாக நான் அன்கீகரித்துக்கொண்டேன்." என்று ஒரு பொட்டுலடித்தார்பொன்ற வசனத்தை
வேறு எந்த மார்க்கத்திற்கும், எந்த வழி முறைக்கும் என்னிடம் அங்கீகாரம் இல்லை என்பதை அல்லாஹ் தெள்ளதெளிவாக சொல்லிவிட்டான்.

இந்த வசனம் இறங்கிய சமயம், உமர் (ரலி) , அவர்கள் , " நாங்கள் அறியாமையில் இருந்த கால கட்டங்களில் எங்களுக்கு இந்த வசனம் இறங்கியிருக்குமேயானால் அந்த நாளை நாங்கள் பெருனாலாகக்கொண்டாடியிருப்போம்" என்று சொன்னார்கள். அவ்வளவு ஒரு பெருமைவாய்ந்த வசனத்திற்கு சொந்தக்காரர்கள் நாம். தீனை முழுமைப்படுத்திய அல்லாஹ் துன்யாவை முழுமைப்படுத்தவில்லை என்று குரானில் கூறுகிறான் :

அந்தக்கால வாகன வசதிகளை பற்றி சொல்லும்போது, " இந்தக் குதிரை, கழுதை, கோவேறுக்கழுதை, இவைகளை நாம் உங்களுக்கு அலங்காரமாக படைத்திரிக்கின்றோம். இன்னும் நீங்கள் அறியாதவற்றை எல்லாம் படைக்கின்றோம் " என்று கூறுகின்றான்.

இவ்வுலகின் கண்டுபிடுப்புகளுக்கு முடிவே கிடையாது. அது கியாம நாள் வரை புதிது புதிதாக கண்டுபிடுப்புகள் வந்து கொண்டே இருக்கும் என்று அல்லாஹ் உலகின் முடிவற்ற தன்மையைச்சொல்கின்றான். இப்படி ஒவ்வரு விஷயமும் அல்லாஹ்வின் சொல்லாகவும், அவனின் வாக்காகவும் வந்த குரான் , எக்காலத்திலும், எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்கும் துணிந்து நின்று சவால் விடக்கூடிய ஒரு அற்ப்புதமாக அண்ணல் நபி (ஸல்) பெற்றுத்தந்து விட்டு சென்றிருக்கின்றார்கள்.

திருக்குரானின் பிரதி பலிப்பாகவே ரசூல் (ஸல்) வாழ்ந்து காட்டிச்சென்றிருக்கின்றார்கள். " என்னைப்பற்றி எந்த ஒரு செய்தி கிடைத்தாலும் அதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிவிடுங்கள் " என்று துணிந்து சொன்ன உலகின் ஒரே தலைவர் நம் பெருமானார் (ஸல்) அவர்கள் மட்டுமே.
உலகின் எந்த தலைவரின் வாழ்க்கையும் இப்படி பகிரங்கமாக தன் வாழ்க்கையை அடுத்தவருக்கு வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு தூய்மையானது அல்ல.

தான் வாழ்ந்து காட்டி அதை நடைமுறைப்படுத்தி தூய்மைப்படுத்தி விட்டுச்சென்ற அந்த பெருமானாரின் தூய, அப்பழுக்கற்ற, நேர்மையான, நீதியான , சுயநலமற்ற, வீரமான , தியாகமான, இறக்க குணம் கொண்ட, பாசம் கொண்ட , வாழ்க்கை வாழ்ந்து இவ்வுலகை விட்டுப்பிறிவோம்.

அல்லாஹ் நம் அனைவரையும், அவன் தூதர் காட்டிச்சென்ற வெளிச்சத்தில்
நடைபோட தௌபீக் செய்வானாக !

ஆமீன் ,
யாரப்பல் ஆலமீன்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

மாஷா அல்லாஹ் . பயனுள்ள தொடர். சகோதரர் அலாவுதீன் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தரும் திருமறையின் சிந்தனையைத் தூண்டும் வரிகள். நானிலம் போற்றும் நபி மொழிகள்.

sabeer.abushahruk said...

//''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது''//

தலைகனத்தையும் தற்பெருமையையும் தவிடுபொடியாக்கும் நபி மொழி.


ஜஸாக்கல்லாஹ் க்ஹைர், அலாவுதீன்.

Unknown said...

//''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது''//

தலைகனத்தையும் தற்பெருமையையும் தவிடுபொடியாக்கும் நபி மொழி.

சபீர் பொட்டுலடித்தார்ப்பொல் சொன்னாய்.
மேற்க்கண்ட இரண்டு குணங்களும் உள்ளவர்களை யோசிக்க வைக்கும்
அல்லாஹ்வின் கடமை.

அபு ஆசிப்.




தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அலாவுதீன் காக்கா,

ஜஸக்கல்லாஹ் ஹைர்.

//'நபி(ஸல்) அவர்கள் உணவு சாப்பிட்டால், மூன்று தடவை தன் கை விரல்களை சூப்புவார்கள். ''உங்களின் உணவில் ஒரு சிறு பகுதி கீழே விழுந்து விட்டால்கூட, அதில் உள்ள அசுத்தத்தை நீக்கி, அதை சாப்பிடட்டும், ஷைத்தானுக்கு அதை விட்டு விட வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்கள். மேலும் உணவுத்தட்டு வழித்து உண்ணப்பட வேண்டும் என்றுக் கட்டளையிட்டார்கள். உங்கள் உணவில் எதில் ''பரக்கத்'' உள்ளது என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 608)//

இது போன்று நல்லொழுக்கங்களை நினைவூட்டும் ஹதீஸ்கள் நிறைய பகிருங்கள் காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஷாக்கல்லாஹ் ஹைர் காக்கா

Shameed said...

//'ஓர் ஆட்டின் காலின் கீழ் பகுதி, அல்லது தொடைப்பகுதி ஆகியவற்றை சமைத்து விருந்துக்கு என்னை அழைக்கப்பட்டாலும் நான் அதை ஏற்பேன். எனக்கு ஆட்டின் காலின் கீழ் பகுதியையோ, அல்லது தொடைப் பகுதியையோ அன்பளிப்பாக கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 610)//

தலைகனத்தையும் தற்பெருமையையும் தவிடுபொடியாக்கும் நபி மொழி.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு