Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தண்ணீர்... ! 25

அதிரைநிருபர் | May 30, 2016 | , ,

நீ அதிசயம் மட்டுமல்ல ...
ஆச்சரியமான ஆசான் ....
                                                                                                   
உன் நேர்மையான பாதை வழி எங்கும் இன்பமே ....
உன் பாகுபாடில்லாத அனுகுமுறை யால்
நீ போகும், நிற்கும் ,நடக்கும்,ஓடும் இடமெல்லாம் சுகமே ....

நீ பார்க்காத பள்ளம் எங்குமில்லை
அதனால் நீ தளர்வதுமில்லை
பள்ளத்தை நிறைத்து பொங்கி எழும்
உன் வேகம் உணர்த்தும் உத்வேகம், பாய்ச்சிடுமே புத்துணர்ச்சி ....


சுத்தத் தங்கமாக வலம் வந்து
மற்றவர்களின் மாசுக்களை சுமந்து செல்லும்
நீ உண்மையில் ஒரு சீர்திருத்தவாதி .....
அழுத்தமாக நீ செய்யும் தியாகம் ....நன்மையின் உச்சம் ..

நீ பயணித்த பாதையில்தான்
உயிரினம் வாழுமிடம் அமைத்தது ...
உன் வருகையால் அடைந்த தைரியம்...அளவிடற்கரியது ...

உன் சலசலப்பில் நாங்கள்
உன்னை பருகினோம் ,
உன்னில் நீந்தினோம் ,
உன்னில் பயணித்தோம் ,
உன் வரவால் பயிரிட்டோம் ...
உன்னால் நாங்கள் அடையும் சுகம் ...விவரிக்கமுடியதது ...


உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்.... எப்படிச் சொல்வேன் ?...

நீ பாய்ந்த பிரதேசங்களில் எல்லாம்
தரை நிலமாக இருந்தவை எல்லாம்
பூஞ்சோலை யாய் மாறியது ....
உயிரினம் சுவாசிக்க ....புசிக்க .....
மட்டுமல்ல ..ரசிக்க வும் !!!!

ஆனால்..........?

நீ பயணித்த வழியில் வாழுமிடம்
அமைத்த உயிரினம் .....

உன் வழியை ,
உன் பாதையை ,
சில மாதங்கள் நீ தங்குமிடத்தை எல்லாவற்றையும்
உயிரினங்கள் அடைத்து கூடு கட்டிகொண்டன .....

உன் வரவை அவர்களே (உயிரினங்கள் ) தடுத்து கொண்டார்கள் ..
இழப்பு ....யாருக்கு ?...
நீரின்றி அமையாது உலகம் .......

சிந்திப்போமா?.....நாளை விடியலுக்கு .....

-அப்துல் ரஹ்மான்
--harmys--

25 Responses So Far:

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கவிதாகம் தீர்க்க வந்த தண்ணீர் இந்த கவிதை. வழக்கம் போல் பளிச், இதம் எல்லாம் தாங்கிவந்துள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.
நீர் யார்? திரவமாய் வந்த வரமா?
உயிருக்கு உரமாய் வந்த ஆதாரமா? இல்லை ஆகாரமா?
நீர் நீ யார்? யார் நீ யாக இருந்தாலும், நீ இன்றி நாங்கள் இல்லை!
நீ ஈரம்மிக்கவன். ஆனால் மனித வரண்ட புத்தியோ ஈரம் இல்லாது உலர்ந்து போகிறது. அவர்களின் சண்டையில் இந்த புவி அள்ளவா வரண்டு போகிறது?. நீர் உயிருக்கும், பயிருக்கும் ஆதாரமாய் இருப்பதால் வரம்பு மீரும் சிலர் வரப்பு கட்டி தானே உன்னை எடுத்துக்கொள்வதால் தானோ? சில நேரம் நீ சினம் கொண்டு பிரம் பெடுத்து, சுனாமியாய் வந்து பிணம் தின்னு கிறாயோ?
நீரே வேண்டாம் நீ ஈரம் மிக்கவன்!. மனிதர்கள் போல் நீ ஈரம் அற்றவன் இல்லை!
நீ நீடூடி வாழ அல்லாஹ்வை வேண்டுகிறேன் இதுவும் உன் நலம் கருதி அல்ல,
என் நலம் கருதும் சுயனலம்!.
நீர் இன்றி அமையாது உலகு என்பது அறிந்தவன் நான் அள்ளவா?
நீரே நீ நீடூடி வாழ வாழ்த்துகிறேன்.

Anonymous said...

உலக தண்ணீர் தினத்தில் HARMYS அப்துர் ரஹ்மான் வடித்துள்ள கவிதை மட்டுமல்ல.

தம்பி கிரவுனின் பின்னூட்டமும் கவிதையிலேயே அமைந்திருப்பது சிறப்பாக இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

-இபுராஹீம் அன்சாரி

Abdul Razik said...

நீ மிக இறக்கமுள்ளவன் தாழ்வுகளை சரி செய்கிறாய்
விலை மதிக்க முடியா உயிறின் மூச்சு உன்னையே கூப்பிடுகிறது
மயங்கிய மனிதனை திடப்படுத்துகிறாய் கழிவுகளை அகற்றி
பூமியை பசுமையாக்குகிறாய் என்று எண்ணிலடங்கா கவி வார்த்தைகளை தண்ணீருக்காக அள்ளி கொட்டலாம். கவிதை எழுத தெறியாத என்னை கூட எழுத வைத்த தண்ணீருக்கும் இக்கவிதையை எழுதிய அசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அங்கே (!?)
திருட அழைக்கும் அழகு அப்படின்னு - கவிக்கோ எழுதினார் !

இங்கே !
அழகியலை அழகாகச் சொல்லும் அப்துர்ரஹ்மானின் கவிதைகள் யாவும் அழகியலே !

கிரவ்னு.. கவிதைன்னாதான் வருவே.. அதனாலே ஒரு கவிதை...

கிரவ்ன் உரை
வீச்சு மடக்கி
உறங்குகிறது
உறையில் !
:(

ஏன்(டா)ப்பா ?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தண்ணீரின் தன்மை மென்மையாய் கவித்த விதம் இனிமை!

வளர்ச்சி அடிப்படையில் உலகமே சுருங்கிவிட்டது என்கிறார்கள். அதற்கு போட்டியாய் நீனும் உன் வருகையை சுருக்கிக் கொண்டது ஏனோ!

Anonymous said...

மறக்காமல் தண்ணீர் தினத் அன்று அருமையான கவிதை எழுதிவிட்டார். நாம் தண்ணீரை பற்றி எழுத்திக்கொண்டும்,சொல்லிக்கொண்டும் போகலாம் ஆனால் அதை யாரும் கடைபிடிப்பதில்லை.

தண்ணீருடைய அருமைகள் மக்களுக்கு தெரிவதில்லை,அறிவதில்லை. அப்படி அறிந்திருந்தால் தண்ணீர் தினமே தேவை இல்லை. இந்த கவிதையை படித்தாவது உணரட்டும் மக்கள்.

Shameed said...

கவிதை ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது

crown said...

உலக தண்ணீர் தினத்தில் HARMYS அப்துர் ரஹ்மான் வடித்துள்ள கவிதை மட்டுமல்ல.

தம்பி கிரவுனின் பின்னூட்டமும் கவிதையிலேயே அமைந்திருப்பது சிறப்பாக இருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

-இபுராஹீம் அன்சாரி.
----------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தண்ணீர் சூழ்ந்த பெரும்கடலாய் எழுத்தாற்றல் பெற்ற உங்களை போல் சகோ.சபீர்காக்காவைப்போல்,கலாம் காக்காவைப்போல் இன்னும் பல அறிஞர்களின் ஆற்றலில் சிறு துளிதான் நான் இங்கே சிந்திவிட்டு சென்றேன் அது கவிதை என்று போற்றியது உங்களின் பெருந்தன்மை.உங்களைப்போல் உள்ளவர்களின் ஆக்கங்களை படிப்பதால் இன்னும் என் சிற்றறிவு நீர்த்து விட வில்லை என்பதற்கு இந்த நீர் பற்றிய என் கருத்து.

crown said...

கிரவ்ன் உரை
வீச்சு மடக்கி
உறங்குகிறது
உறையில் !
:(

ஏன்(டா)ப்பா ?
---------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒன்றும் அறிவு வாள் அல்ல! துருபிடித்த வாள்!. இங்கே கருத்து சொல்லிவிட்டு சென்றாலும் சிலர் இவன் வாள் ,வாள் நு கத்துவானே? இதெல்லாம் ஒரு கருத்தா என என் காதில் விழுவது போல் கேட்கிறதே! உங்களுக்கு கேட்கவில்லையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///அஸ்ஸலாமு அலைக்கும். நான் ஒன்றும் அறிவு வாள் அல்ல! துருபிடித்த வாள்!. இங்கே கருத்து சொல்லிவிட்டு சென்றாலும் சிலர் இவன் வாள் ,வாள் நு கத்துவானே? இதெல்லாம் ஒரு கருத்தா என என் காதில் விழுவது போல் கேட்கிறதே! உங்களுக்கு கேட்கவில்லையா?///

கிரவ்ன்(னு):

அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

அப்படியேதும் எங்களது காதுகளில் விழவில்லை அப்படி இருந்தால் காட்டு நானும் ஒரு காட்டு காட்டுகிறேன் அவய்ங்களை !!?

"வாள்"ஐப் பிடித்துக் கொண்டு தண்ணீருக்கு அடியில் சொல்லியிருந்தால் காற்று முட்டை முட்டியாகத்தான் வந்திருக்கும் !

என்ன(டா)ப்பா விக்கல் வர்ர மாதிரி சொல்லிட்டே...

இரு இரு தண்ணீர் குடிச்சுக்கிறேன்...

Anonymous said...

அன்பு நண்பர்களே!

உலக தண்ணீர் தினத்தில் நான் படித்த ஒரு கவிதையை நீங்களும் சுவைப்பதற்காக சமர்ப்பிக்கிறேன்.

தந்தை தந்த ஒரு துளி நீரில் உருவானேன்
தாயின் தண்ணீர் குடத்தில் தரித்திருந்தேன்
உடல் நெடுக ஓடிய உதிரமும் தண்ணீர்
நாவு ருசிதத முதல் சொட்டு தேனும் நீர்

மார்பில் முட்டி முட்டி குடித்த பாலும் நீர்
வளர்ந்த நாட்களில் குடித்ததும் நீர்
உணவின் உற்பத்தியில் உறைந்ததும் நீர்
சிந்திய வியர்வை நீர் வாழ்வை உயர்த்தியது

தும்மிய நீர் நோயின் அறிகுறி போக்கியது
புறத்தூய்மை நீரால் அமைந்தது

நான்
சிந்திய கண்ணீர் ஆசுவாசப்படுத்தியது

எனக்காக
சிந்தப்பட்ட கண்ணீர் ஆறுதல் படுத்தியது

என்னுள் உருவான நீர் பெற்றவனாக்கியது
அழைப்பு வந்த பிறகு அடிக்கழுவியதும் நீர்
குழிவெட்டும் நேரத்தில் கொப்புளித்ததும் நீர்
அடங்கு குழி சடங்குகளும் மண்மூடி

பிரண்டை செடி நட்டு
ஆளுக்கொரு சொம்பு நீரை
விரல்களால் விரவி ஊற்றியே முடிந்தது.
முதலும் நீர்தான்! முடிவும் நீரேதான்.!

- அபு அஷ்ரப்.

இபுராஹீம் அன்சாரி

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சுட்டெரிக்கும் கோடையில் குளு குளு நீரோடை உள்ளம் குளிர.
சகோ.அப்துர் ரஹ்மான்.வாழ்த்துக்கள்.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டேயிருக்க அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர்.

மனிதனுக்கான நீரை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இவ்வாறான செயற்பாடுகளால் நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் இன்று நீர் தொடர்பான நோய்களால் வளர்முக நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் எனத் தெரிவிக்கப்படுகிறது ஆராய்ச்சி மையம்.

தொழிற்சாலைகள் தமது கழிவுகளை ஆறுகள், குளங்களில் கொட்டுவதால் இரசாயன மாற்றமேற்பட்டு நீரின் தன்மை மாற்றமடைகிறது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கின்றது. நீர் வளப்பாதுகாப்பை வலுப்படுத்தவும் அதை மக்களிடம் உணர்த்தவுமென 'உலக நீர் தினம்' ஒரு தினத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கமைய 1993 முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 22இல் இத்தினம்(World water day) கடைபிடிக்கப்படுகின்றது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டியதும் நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் தார்மீகக் கடமையாகும்.

நீரே! உல‌கில் முக்கால் பாக‌ம்
நீதான்!
ஆயினும்
நீ கிடைக்க‌வில்லை என்றுதான்
உல‌க‌மே மூக்கால் அழுகிற‌து!

நீ குதித்தால் அலை!
கொதித்தால் சுனாமி!

அணைக்க‌ட்டுமா என்று நீ
எங்க‌ளை நோக்கி
ஆவ‌லோடு வ‌ரும் வ‌ழியில்
அணைக்க‌ட்டுக்க‌ளைக் க‌ட்டி உனது
ஆசையையும், பாச‌த்தையும்
கெடுக்கிறார்க‌ள்
அண்டை மாநில‌த்தார்!

நீரின்றி அமையாது இவ்வுல‌கு!...அந்த‌
நினைவிருந்தால்
எங்க‌ளோடு குல‌வு!

வானிலிருந்து நீ
வாராத‌ ப‌ருவ‌த்தில்
தானாய் எங்க‌ள் விழிக‌ளில்
தாரைத் தாரையாய் க‌ண்ணீர் ம‌ழை!

ம‌லையில் பிற‌ந்து, ந‌தியில் ஓடி
க‌ட‌லில் ச‌ங்க‌மிக்கும் நீ
ம‌னித‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளில்
ச‌ங்க‌மிப்ப‌து எப்போது?

Yasir said...

கவிதையின் மூலம் எப்படி உங்களால் மென்மையான உணர்வுகளை படிப்பவர்களின் உள்ளங்களிருந்து கொண்டுவரமுடிகிறோதோ....அருமை சகோ.கவிதையை படிக்கும்போது...துள்ளி ஓடும் சில்லென்ற நீரோடையில் காலை நினைத்துக்கொண்டு ஐபோனில் அங்கிரிபேர்டு விளையாடுவது போன்ற சந்தோஷம்

Yasir said...

அதிரை தென்றல் உங்கள் ஆக்கத்திற்க்காக ரொம்ப ஏக்கமாக காத்திருக்கின்றோம்

Yasir said...

முடிசூடிய பல்மொழி வித்தகரே, கிரவுனே....உங்கள் வருகையும் உங்கள் எழுத்தும் எங்களை ஒரு கை பார்க்கிறது...

Anonymous said...

யாரைப் பாராட்டுவதென்றுத் தெரியவில்லை:

எனினும், அப்துர் ரஹ்மானிடம்தான் முதல் துளி யென்பதால்

//உன் பருவ காலங்களில் நீ
வரும் வழியெல்லாம் உன்னுடன் நீ
அழைத்து வரும் துள்ளல் தரும் இதம்//

அக்மார்க் அப்துர் ரஹ்மான்தனம்.

//நீர் யார்? திரவமாய் வந்த வரமா?
உயிருக்கு உரமாய் வந்த ஆதாரமா? இல்லை ஆகாரமா? //

இது கிரவுனுரை. வாய்க்கப்பெற்ற ஹர்மீஸ் லக்கி.

//கிரவ்ன் உரை
வீச்சு மடக்கி
உறங்குகிறது
உறையில்//

அபு இபுறாஹிமின் ஏக்கமே அதிரை நிருபருடையதும்.

//நீ மிக இறக்கமுள்ளவன் தாழ்வுகளை சரி செய்கிறாய்//

அப்துல் ராஸிக்கின் வர்ணனை

//வளர்ச்சி அடிப்படையில் உலகமே சுருங்கிவிட்டது என்கிறார்கள். அதற்கு போட்டியாய் நீனும் உன் வருகையை சுருக்கிக் கொண்டது ஏனோ! //

எம் ஹெச் ஜே, என்னவொரு சிந்தணை!!!

//முதலும் நீர்தான்! முடிவும் நீரேதான்//

அன்சாரி காக்கா பகிர்ந்தது

//அணைக்க‌ட்டுமா என்று நீ
எங்க‌ளை நோக்கி
ஆவ‌லோடு வ‌ரும் வ‌ழியில்
அணைக்க‌ட்டுக்க‌ளைக் க‌ட்டி உனது
ஆசையையும், பாச‌த்தையும்
கெடுக்கிறார்க‌ள்
அண்டை மாநில‌த்தார்! //

இர்ஃபான் சி.எம்.ப்பி. யின் வார்த்தை ஜாலத்தோடான ஆதங்கம்

என எத்தனை அழகான பின்னுட்டங்கள். இனி என்னுது,

உண்ணீர் உண்ணீரென ஊட்டாதார் தம்மனையில்
உண்ணாமை கோடி யுறும்.( குறல்)
தண்ணீர் தன்னீரென தரமாட்டான் மாநிலத்தில்
தங்காமை கோடி யுறும்

மழைநீர் இறங்கி
இலைதழை நனைத்து
விளைநீர் ஆகும்வரை
வழியெல்லாம் மாந்தர்
அதைக்
குடிநீராகவும்
குளிநீராகவும்
கொண்டாடுவர்.

அல்லாஹ் அருளிய
அமுதமாம் தண்ணீரை
அப்துர் ரஹ்மான்
அள்ளித்தந்த விதமருமை.

Sabeer Ahmed

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நீரிண்றி அமையாது உலகு என்பார்கள்
வல்ல அல்லாஹ் வழங்கிய தண்ணீரின் மகத்துவத்தைப்பற்றி
அழகிய கவிதை!
அழகிய படங்கள்!

சகோ. அப்துல் ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்!

அலாவுதீன்.S. said...

///crown சொன்னது…
கிரவ்ன் உரை
வீச்சு மடக்கி
உறங்குகிறது
உறையில் !/// அறிவு வாள் அல்ல! துருபிடித்த வாள்!.

அன்புச்சகோதரர் தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நீண்ட.. . . மாதங்களுக்குப் பிறகு தங்களின் கருத்தை இந்தப்பதிவில் பார்க்கிறேன்.(தாங்கள் வேலை பளுவில் மூழ்கி இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்).

அறிவு வாள்! என்றும் துருபிடிப்பதில்லை. தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

crown said...

Yasir சொன்னது…

முடிசூடிய பல்மொழி வித்தகரே, கிரவுனே....உங்கள் வருகையும் உங்கள் எழுத்தும் எங்களை ஒரு கை பார்க்கிறது...
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு பெட்டகமே! அன்பிற்கும் அதீத நட்பிற்கும் அதன் வழியாய் என் சிற்றறிவை பெரிதென போற்றும் எண்ணம் மெய்யாக அல்லாஹ்வை வேண்டுகிறேன் நீங்களும் வேண்டவும்.

crown said...

Sabeer Ahmed:
//நீர் யார்? திரவமாய் வந்த வரமா?
உயிருக்கு உரமாய் வந்த ஆதாரமா? இல்லை ஆகாரமா? //

இது கிரவுனுரை. வாய்க்கப்பெற்ற ஹர்மீஸ் லக்கி.
--------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கவி வேந்தே! உங்கள் கவிதையில்லாமல் என் மனம் புலுக்கத்தின் வெப்பத்தில் வெந்து தனியாமல் காத்து கிடக்க! நீங்களோ அப்துற்றஹ்மான் அதிஸ்டம் பெற்றவர் என்றது அன்பினால் வந்த வெளிப்பாடு. ஆனால் நான் உங்கள் அன்பை பெற்றதும் அப்துற்றஹ்மானின் நட்பை பெற்றதும் நான் தான் கொடுத்து வைத்தவன்.அல்ஹம்துலில்லாஹ்.

crown said...

அலாவுதீன்.S. சொன்னது…

///crown சொன்னது…
கிரவ்ன் உரை
வீச்சு மடக்கி
உறங்குகிறது
உறையில் !/// அறிவு வாள் அல்ல! துருபிடித்த வாள்!.

அன்புச்சகோதரர் தஸ்தகீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நீண்ட.. . . மாதங்களுக்குப் பிறகு தங்களின் கருத்தை இந்தப்பதிவில் பார்க்கிறேன்.(தாங்கள் வேலை பளுவில் மூழ்கி இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்).

அறிவு வாள்! என்றும் துருபிடிப்பதில்லை. தங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
-----------------------------------------------------
வலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) சகோதரரே! உங்கள் அன்பினாலும்.அறிவா(ள்)ளும் என்னை அறிவு வாள் என்கிறீர்கள் ஆதற்கு தகுதியானவனாக என்னை மாற்றி கொள்ள ஆசை படுகிறேன். ஆனாலும் பல பெரும் "தலை"கள் இருக்க நான் சிறிய வால் மட்டும் தான்.

Unknown said...

நன்றி மீண்டும் படித்து கருத்து இட்டவர்களுக்கு ...........

habeb hb said...

தண்ணீர் அது ஒரு விலையில்லா பொக்கிஷம் தாஹம் தீர்க்கும் வர பிரசாதம்

அப்துல்மாலிக் said...

தண்ணீரின் தேவையையும், அதன் போக்கை தின நாளோடும், வாழ்வோடும் ஒன்றி சொல்லப்பட்ட விதம் வரிகள் அருமை, வாழ்த்துக்கள் சகோ

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு