ஓடை
ஆறுகளின் ஓரத்தில் கிழிந்து போன
ஆடைகள்போல் வரப்புகளை உடைத்துக் கொண்டு
மாறுபட ஓடிவரும் ஓடை கள்தாம்
மக்கள்வாழ் தரைகளையே குளிர வைக்கும்
சோறுதரும் நெல்வயலைப் பசுமை யாக்கும்
சோலைகளைக் கண்குளிரப் பார்க்க வைக்கும்
வேறுபடும் விலங்கினங்கள் பறவைக் கூட்டம்
விருப்பமுடன் நீர்பருகி மகிழச் செய்யும்.
அதிரை அஹ்மத்




1 Responses So Far:
அழகிய ஓடை !
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...
பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.