நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அம்மா! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, மே 08, 2016 | , , , , ,


ஆம்புலன்ஸிலிருந்து
அம்மாவை இறக்கி
ஆஸ்பத்திரியில்
சேர்த்துவிட்டு
காத்திருக்கலானேன்

சமீபகாலமாக
அவசர மருத்துவ உதவி
அடிக்கடி
அம்மாவுக்குத் தேவைப்படுகிறது

சுத்தம் செய்து
உடைகளைச் சரிசெய்து
வேதனை எதையும்
வெளிப்படுத்தாத
அம்மாவின் முகத்தைக் கண்டு
கலங்கி
செய்வதறியாது
இப்படி கொண்டு வந்து சேர்த்த பிறகே
ஆசுவாசப்பட முடியும்

உடல் வேதனையைவிட
கொடிய நோய் மறதி

பெற்று வளர்த்தப்
பிள்ளைகளைக்கூட
ஒரு நூலிழை தொடுப்பிலேயே
ஞாபகம் வைத்துக் கொள்ளும்
மறதி நோய்
முதுமையின் கொடுமைகளில் தலையாயது

படர்கை முற்றிலும் மறந்துவிட
தன்மையும் முன்னிலையும்கூட
தெட்டுத் தெறித்தே
நினைவில் வர
அயர்ச்சியான பார்வையில்
தெளிவில்லாத
தேடல் தவிக்கும்

அடித்துச் செல்லும்
வெள்ளத்தில்
கைகளால்
காற்றில் துலாவியபடி
இழுத்துச்செல்லப்படும் முதுமை
ஒரு
மரக்கிளையளவு ஞபகத்திற்காக
பரிதவிக்கும்

அம்மாவைப் பரிசோதித்த
மருத்துவர்
சோடியம் குறைபாட்டைச்
சுட்டிக்காட்டி மறதிநோயை
நியாயப்படுத்தி
அம்மாவைப் பார்க்க அனுமதிக்க

குளிரூட்டப்பட்ட அறையில்
அம்மா கிடத்தி வைக்கப்பட்டிருந்த
படுக்கையை அணுகி
மெலிதாகத் திறந்திருந்த
கண்களை உற்று நோக்கி
என் ஞாபகத்தைத்
திணிக்க முனைந்தபோது

மதியம் 2 மணிகூட ஆகிவிடாதபோதிலும்
சோடியம் தீர்ந்துபோன
மறதிநோய் பாதித்த
மூப்பெய்த
அம்மா முணுமுணுத்தது...
"சாப்ட்டியா?"

ZAKIR HUSSAIN
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

9 Responses So Far:

N. Fath huddeen சொன்னது…

நல்ல சுகத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்க அல்லாஹ்வே போதுமானவன்.
இந்த ALZAMIER மறதி நோய்க்கு சிறந்த மருந்தாக நமதூரில் இலகுவாகக் கிடைக்கும் "மட்டி" சொல்லப்படுகிறது. வயது மற்றும் செறிமானத் தன்மைகளை பார்த்து டாக்டரின் ஆலோசனைப் படி நடந்துகொள்ளவும்.

N. Fath huddeen சொன்னது…

Alzheimer = மறதி நோய்

Riyaz Ahamed சொன்னது…

சலாம்.மனசு வலிக்குது

crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும். மனசு வலிக்குது.அல்லாஹ் நம்மையாக்கித்தர போதுமானவன்!

sabeer.abushahruk சொன்னது…

எஞ்சோட்டு ஆட்கள் யாவருக்கும் வயதான அம்மா இருக்கிறார்கள்.

ஜாகிரின் வாட்ஸப் ஆங்கிலத்தகவல் என்னைப் பாதித்ததையே தமிழினேன்.

வாசிப்பில் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

Ebrahim Ansari சொன்னது…

கவிதையின் கடைவரியைக் கண்டேன்
காலமானேன்.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு