Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 038 7

அதிரைநிருபர் | May 13, 2016 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

 அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

மண்ணறைகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு  விரும்பத்தக்கதாகும்:

மண்ணறை என்றால் தர்கா என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.

‘தர்கா’ என்பது வேலை செய்ய விருப்பமில்லா சோம்பேறிகள் - தங்களின் வயிற்றை நிரப்புவதற்கு ‘தர்கா’ என்று அமைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். (இவர்களின் வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்)

‘தர்கா’ என்ற ஒன்றே நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கிடையாது.

‘’மண்ணறை’’ என்பது இறந்தவர்களை அடக்கம் செய்யும் பொதுவான இடம்.

அந்த நேரம் வரக்கூடியதே! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மண்ணறைகளில் உள்ளவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். (அல்குர்ஆன்: 22: 7)

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.(அல்குர்ஆன் : 70:43)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. (அல்குர்ஆன்: 102:1,2)

''மண்ணறைகளுக்கு  நபித்தோழர்கள் சென்றால், அவர்கள் (பின்வரும் துஆவை) கூறும்படி நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியாரி மினல்மூஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூன். அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியத.

துஆவின் பொருள்:
மூஃமினான, முஸ்லிமான மண்ணறைவாசிகளே! அல்லாஹ்வின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும்! நிச்சயமாக நாம் அல்லாஹ் நாடினால் உங்களைச் சந்திப்போம். அல்லாஹ்விடம் நமக்கும் உங்களுக்கும் ஈடேற்றத்தைக் கேட்கிறேன்.                                              

(அறிவிப்பவர்: புரைதா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 583)

'நபி(ஸல்) அவர்கள், மதீனாவில் உள்ள மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அவற்றைத் தன் முகத்தால் முன்னோக்கி  ''அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூரி யஹ்ஃபிருல்லாஹு லனா வலகும் அன்துஸ் ஸலஃபுனா வநஹ்னு பில் அஸரி'' என்று கூறினார்கள்.  

துஆவின் பொருள்:

மண்ணறைவாசிகளே! உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்! எங்களையும், உங்களையும் அல்லாஹ் மன்னிப்பானாக! நீங்கள், எங்களை முந்தி சென்றீர்கள்.நாங்கள் உங்களைப் பின் தொடர்வோம்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 584)

'உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். அவர் நல்லவராக இருந்தால், (நற்செயலை) அவர் அதிகமாக்கிக் கொள்ளக்கூடும். தீயவராக இருந்தால் (தவறுக்காக) பிழை பொறுக்கத் தேடக்கூடும்' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:

''உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வேண்டி அதைக் கேட்டு பிரார்த்திக்க வேண்டாம். அவர் மரணித்து விட்டால், அவரின் செயல் அறுந்து விடும். நிச்சயமாக மூஃமினுக்கு அவனது வயது நல்லதையே அதிகப்படுத்தும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 585)

'உங்களில் ஒருவர், தனக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக மரணத்தை விரும்ப வேண்டாம். அவருக்கு (மரணத்தை விரும்பும்) அவசியம் ஏற்பட்டால், 'இறைவா! உயிர் வாழ்வது, எனக்கு சிறப்பாக இருந்தால், என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு  சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்!'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 586)

பேணுதலாக இருத்தல், சந்தேகங்களை கைவிடுதல்:

நிச்சயமாக உமது இறைவன், கண்காணித்துக் கொண்டிருக்கிறான். (அல்குர்ஆன் : 89:14)

'நிச்சயமாக அனுமதிக்கப்பட்டது, தெளிவாக உள்ளது. நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் தெளிவாக உள்ளது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகமானவைகளும் உள்ளன. இவற்றை மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். சந்தேகமானவற்றை விட்டு ஒருவன் தவிர்ந்து கொண்டால், அவன் தன் மார்க்கத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டவராவார். சந்கேமானவற்றில் ஒருவன் மூழ்கிவிட்டால், அவன் தடுக்கப்பட்டவற்றிலும் மூழ்கி விடுவான். அவன்; வேலியைச் சுற்றி (ஆடுகளை) மேய்க்கும் மேய்ப்பாளன் போலாவான். அந்த வேலியையே அவை மேய்ந்து விடவும் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு வேலி உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வேலி என்பது, அவனது தடை செய்யப்பட்டவைகளாகும். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் 'இதயம்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நுஹ்மான் இப்னு பஷீர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 588)

'(ஒருமுறை) பாதை ஒன்றில் ஒரு பேரீத்தம் பழத்தை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள். ''தர்மப் பொருளாக இது இருக்கும் என நான் பயப்படாமல் இருந்தால், அதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 589)

''நற்செயல் புரிவது, நற்குணமாகும். குற்றமிழைப்பது, உன் உள்ளத்தில் உறுத்தலை ஏறப்படுத்தக் கூடியதாகும். மேலும் மக்கள் அதைப் பார்த்து விடுவதை நீ வெறுக்கக் கூடியதுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 590)
                                        
'நபி(ஸல்) அவர்களிடமிருந்து, ''உமக்கு சந்தேகமளிப்பதை விட்டு விடுவாயாக! உமக்கு  சந்தேகம் ஏற்படுத்தாத செயலின் பக்கம் (விரைவீராக!)'' என்ற வார்த்தையை மனனம் செய்து கொண்டேன். (அறிவிப்பவர்: ஹஸன் இப்னு அலீ (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 593)

குழப்பமான காலத்தில் தனித்திருப்பது:

எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன்(என்று நூஹு கூறினார்). (அல்குர்ஆன் : 51: 50,51)

'மலைகளில்  உச்சிக்கும் மழை பொழியும் இடங்களுக்கும் ஓட்டிச் செல்லும் ஆட்டு மந்தை ஒரு முஸ்லிமின் சிறந்த சொத்தாக ஆகிவிடும் காலம் ஏற்படும். அப்போது அவன்,தன் மார்க்கத்தைப் பேண வேண்டி குழப்பநிலைகளை விட்டும் ஓடி விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 599)

'அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும்  ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை என, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் தோழர்கள் ''நீங்களுமா?'' என்று கேட்டார்கள். ''ஆம், மக்காவாசிகளுக்காக (ஆடுகளை) சில வெள்ளிக் காசுக்கு கூலியாக நான் மேய்த்துள்ளேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 600)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

7 Responses So Far:

Shameed said...

அழகிய அருமருந்தை தொகுத்தளித்த அலாவுதீன் காக்கா பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சரியான நேரத்தில் சரியாக குர் ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் தொகுப்புகள்.

ஜஸக்கல்லாஹ் கைர்

//‘தர்கா’ என்பது வேலை செய்ய விருப்பமில்லா சோம்பேறிகள் - தங்களின் வயிற்றை நிரப்புவதற்கு ‘தர்கா’ என்று அமைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். (இவர்களின் வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்)//

உண்மை காக்கா.

மேலும், வெட்டி கவுரவத்தின் களமாகவே தர்காக்கள் உள்ளன..

Adirai pasanga😎 said...

அழகிய அருமருந்தை தொகுத்தளித்த அலாவுதீன் காக்கா பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக

ஜஜாகல்லாஹு கைரன்.

sabeer.abushahruk said...

அழகிய அருமருந்தை தொகுத்தளித்த அலாவுதீன் பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் புரிவானாக

ஜஜாகல்லாஹு கைரன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தர்ஹாவுக்கு எதிரான மண்ணறை பற்றிய நற்தொகுப்பு, ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா
-------------------------------------------------

ஜமாத்துல் ஆகிர் பிறை 30 ஹிஜ்ரி 1434

Unknown said...

நாளை மஹ்ஷருக்குண்டான அருமருந்தை பருகி நோய் நீங்கிக்கொண்டிருக்கின்றோம்,

மருந்தை தொடர்ந்து தரவும்.

எங்கள் நோய் தீரட்டும்.

இறைவன் அருள் கிட்டட்டும்.

ஆமீன்

அபு சிப்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு