Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 058 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

பள்ளிவாசல்களுக்கு நடந்து செல்வதின் சிறப்பு

''பள்ளிவாசலில் காலையில் அல்லது மாலையில் ஒருவர் இருந்தால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் காலையிலும், மாலையிலும் வரவேற்பை ஏற்பாடு செய்வான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1053)

''மக்களில் கூலி அதிகம் பெறுபவர், தொழுகைக்காக வெகுதூரம் நடந்து வருபவர்தான். இன்னும் அவர்களில் அதிக தூரம் நடந்து வருபவர் தான், தொழுகையை இமாமுடன் தொழுவதற்காக எதிர்பார்த்திருப்பவர், தனித்து தொழுது விட்டு, பின்னர் தூங்கி விடுபவரை விட கூலி அதிகம் பெறுபவராவார் என்று நபி(ஸல்)கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1057)

''பள்ளிவாசல்களுக்கு இருளில் நடந்து செல்பவர்களுக்கு, மறுமை நாளில் முழுமையான ஒளி உண்டு என சுபச் செய்தி கூறுங்கள்  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1058)

''ஒன்றின் மூலம் குற்றங்களை அல்லாஹ் அழித்து விடுவான். பதவிகளை அதன் மூலம் உயர்த்துவான். அதை உங்களுக்கு நான் அறிவிக்கலாமா?'' என்று தோழர்களிடம் நபி(ஸல்) கேட்டார்கள். ''இறைத்தூதர் அவர்களே! சரி'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். ''உளுவை சிரமமான காலங்களிலும் முழுமையாகச் செய்வது, பள்ளிவாசல்கள் பக்கம் அதிகம் நடந்து செல்வது, தொழுகைக்குப்பின் மறு தொழுகையை எதிர்பார்ப்பது. இவைதான் பாதுகாப்பானது. இவைதான் பாதுகாப்பானது என்று   நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1059)

''பள்ளிவாசல்களுடன் அதிக தொடர்புடையவராக ஒருவரை நீங்கள் கண்டால் அவருக்கு ''இறை நம்பிக்கை உண்டு'' என சாட்சி கூறுங்கள். ''அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய வேண்டியவன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகைiயைப் பேணி ஜகாத்  கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர எவரையும் பயப்படாத அவர்கள் தான். இவர்களே நேர்வழி பெற்றவர்களில் உள்ளவர்களாவர் என்று அல்லாஹ் (அல்குர்ஆன் 9:18ல்) கூறி உள்ளான். என நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1060)

தொழுகையை எதிர்பார்த்திருப்பதின் சிறப்பு

''உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்தவராக இருக்கும் காலம் எல்லாம் அவர் தொழுகையில் இருந்தவராவார். (பள்ளிவாசலை விட்டும்) தன் குடும்பத்தாரிடம் அவர் திரும்புவதை தொழுகையைத் தவிர அவரைத் தடுக்கவில்லை என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1061)

''உங்களில் ஒருவர், தான் தொழுத இடத்திலேயே உளு முறியாதவராக இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் (அவருக்காக)  பிரார்த்திக்கின்றனர். இறைவா! அவரை மன்னிப்பாயாக! இறைவா! அவருக்கு அருள்புரிவாயாக!" என்று  கூறுவர், என்று நபி(ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்(புகாரி)(ரியாளுஸ்ஸாலிஹீன்: 1062)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா? (அல்குர்ஆன்: 88:1)

அந்நாளில் சில முகங்கள் பணிவுடன் இருக்கும். (அல்குர்ஆன்: 88:2)

அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன. (அல்குர்ஆன்: 88:3)

சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும். (அல்குர்ஆன்: 88:4)

கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும். (அல்குர்ஆன்: 88:5)

முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை. (அல்குர்ஆன்: 88:6)

அது கொழுக்க வைக்காது: பசியையும் நீக்காது. (அல்குர்ஆன்: 88:7)

அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும். (அல்குர்ஆன்: 88:8)

தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும். (அல்குர்ஆன்: 88:9)

உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும். (அல்குர்ஆன்: 88:10)

அங்கே அவை வீணானதைச் செவியுறாது. (அல்குர்ஆன்: 88:11)

அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு. (அல்குர்ஆன்: 88:12)

அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன. (அல்குர்ஆன்: 88:13)

குவளைகள் வைக்கப்பட்டிருக்கும். (அல்குர்ஆன்: 88:14)

வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன. (அல்குர்ஆன்: 88:15)

விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு. (அல்குர்ஆன்: 88:16)

ஓட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 88:17)

வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? (அல்குர்ஆன்: 88:18)

மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன? (அல்குர்ஆன்: 88:19)

பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?) (அல்குர்ஆன்: 88:20)

எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே) நீர் அறிவுரை கூறுபவரே. (அல்குர்ஆன்: 88:21)

அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர். (அல்குர்ஆன்: 88:22)

புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவன் தவிர. (அல்குர்ஆன்: 88:23)

அவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான். (அல்குர்ஆன்: 88:24)

அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது. (அல்குர்ஆன்: 88:25)

பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது. (அல்குர்ஆன்: 88:26)
(அல்குர்ஆன்:88:1- 26 அல்காஷியா சுற்றி - வளைப்பது)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் S.

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பள்ளிவாசல் பக்கம் சதா காலமும் தொடர்பு இருக்க வழி தந்த, அலாவுதீன் காக்கா, ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Shameed said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் அலாவுதீன் காகா

sabeer.abushahruk said...

கலவையான பதிவுகளுக்கிடையே உன் அருமருந்து நின்று நிதானிக்க ஓர் உபகாரம்.

நன்றி அலாவுதீன்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒவ்வொரு வெள்ளியும் நீங்கள் செய்யும் இந்த உபகாரம் மனதைத் தூய்மைப் படுத்தும் மருந்தாகத் திகழ்கிறது.

ஜசாக் அல்லாஹ் ஹைர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

இதயத்துக்கு இதமானது,அருமருந்தானது குரான்-ஹதீஸ் தொகுப்பு.நன்றி அலாவுதீன் காக்கா

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Yasir said...

இதயத்துக்கு இதமானது,அருமருந்தானது குரான்-ஹதீஸ் தொகுப்பு.நன்றி அலாவுதீன் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு