Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

கடமையான தொழுகைகளை பேணுதலின் கட்டளை!

‘’தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் : 2:238 அல்பகரா - அந்த மாடு)

''செயல்களில் மிகச் சிறந்தது எது? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ''உரிய நேரத்தில் தொழுவது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''பின்பு எது?'' என்று கேட்டேன். ''பெற்றோருக்கு நலம் பேணுதல்'' என்று கூறினார்கள். பின்பு எது? என்று கேட்டேன். ''அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1074)

''ஒரு மனிதனுக்கும், இணை வைத்தலுக்கும் இடையே வேறுபாடு, தொழுகையை விடுவதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1078)

''நமக்கும் (முஸ்லிமல்லாத) அவர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் தொழுகை தான். அதை விட்டவர், இறை மறுப்பாளர் ஆகிறார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1079)

'' மறுமை நாளில் ஓர் அடியான் அவனின் செயல் பற்றி கணக்குக் கேட்கப்படுவதில் முதன்மையானது, தொழுகைதான். அது சீராக இருந்தால் அவர் வெற்றி பெற்று, நல்லவராகி விட்டார். அது கெட்டு விட்டால், அவர் கவலையும், துயரமும் அடைந்தவராவார். அவரது கடமையான தொழுகையில் ஏதும் குறை இருந்தால், ''என் அடியானிடம் உபரியான நன்மை உண்டா? என்று பாருங்கள்'' என, அல்லாஹ் கூறுவான். கடமையான தொழுகையில் உள்ள குறைகள் அதன் மூலம் நிறைவு செய்யப்படும். பின்பு இது மாதிரியே மற்ற செயல்களும் ஆகும் என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1081)

முதல் வரிசையின் சிறப்பு  

''நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''வானவர்கள் தங்களின் இறைவன் முன் அணிவகுத்தது போல் நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா?'' என்று கூறினார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே! வானவர்கள் தங்கள் இறைவன் முன் எப்படி அணி வகுத்து நிற்பர்? என்று கேட்டோம். ''அவர்கள் முதல் வரிசைகளில் நிற்பார்கள். மேலும் வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள்'' என்று கூறினார்கள்.  (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1082)

''நபி(ஸல்) அவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குச் செல்வார்கள். எங்களின் நெஞ்சுகளையும், தோள்பட்டைகளையும் தடவுவார்கள். ''நீங்கள் மாறுபட்டு நிற்காதீர்கள். உங்களின் இதயங்கள் மாறுபட்டு விடும்'' என்று கூறிவிட்டு ''நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் உள்ளோருக்கு அருள்புரிகிறான். வானவர்கள்; அருள்புரிய வேண்டுகிறார்கள்'' என்றும் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ரியாளுஸ்ஸாலிஹீன் : 1090 )

''வரிசைகளை (சமமாக) பேணுங்கள். தோள்பட்டைகளை சமமாக்குங்கள். இடைவெளிகளை நீக்குங்கள். உங்கள் சகோதரர்களின் கைகளை மென்மையாகப் பிடியுங்கள். ஷைத்தான்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தி (இடம் தந்து) விடாதீர்கள். வரிசையில் சேர்ந்து நிற்பவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். வரிசையை விட்டு பிரிந்து நிற்பவனை, அல்லாஹ் பிரித்து விடுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது - ரியாளுஸ்ஸாலிஹீன் : 1091 )

''முதல் வரிசையை முழுமைபடுத்துங்கள். பின்பு அடுத்த வரிசையை முழுமைப்படுத்துங்கள். குறை எதுவும் இருப்பின், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்'' என்று  நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன் :1093 )

சுப்ஹின் சுன்னத் இரண்டு ரக்அத்களின் அவசியம்

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விடமாட்டார்கள்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1100)

''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)

''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)

''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்''  (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை  ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108)

லுஹரின் சுன்னத்

''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தையும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தையும் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1113)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை விடாதவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1114)

''லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தையும், லுஹருக்குப்பின் நான்கு ரக்அத்தையும் ஒருவர் பேணி (தொழுது) வந்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை தடை செய்து விட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1116)

''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை தொழாவிட்டால், அதன்பின் (பர்லுக்கு பின்) அதைத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1118)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 5:8)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். ((அல்குர்ஆன்: 49:6)

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! (அல்குர்ஆன்: 49:11)

வானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ளதை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:49:18)

உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை  அவன் படைத்தான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 11: 118,119 )

எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் : யூஸுஃப் - 12:53 யூஸுஃப் நபி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் '' 
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

6 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா...

பொடுபோக்காக இருக்க விடாமல் நல்லதொரு நினைவூட்டலும்... தகுந்த ஆதாரங்களும் !

வல்லமை நிறைந்த அல்லாஹ் உங்களின் இந்த தொடர் செயலும், இன்னும் அனைத்து வகையான அமல்களுக்கும் நற்கூலியை வழங்குவானாக !

பொறுமையை அடிக்கடி எங்களுக்கு சொல்லி வந்திருக்கிறீர்கள், இக்கட்டான சூழலை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று அழகுற அறிவுரையை வழங்கி அதன் பலனை அறுவடை செய்ய தூண்டிருக்கிறீர்கள் !

எங்கள் நன்றி அந்த அல்லாஹ்வுக்கே உரியது ! உங்களின் நலனுக்கும் ஆரோக்கியத்திற்கு துஆச் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆதாரங்களுடன் நினைவூட்டலுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா.

sabeer.abushahruk said...

வெள்ளி விருந்து இந்த அருமருந்து!

நன்றி அலாவுதீன்

Ebrahim Ansari said...

//நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! (அல்குர்ஆன்: 49:11)//

இன்று அனைவருக்கும் இந்த மருந்து தேவை.

ஜசாக் அல்லாஹ் ஹைரைன் சகோதரர் அலாவுதீன் .

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
வெள்ளி விருந்து இந்த அருமருந்து!

நன்றி அலாவுதீன் காக்கா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு