கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9


ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் கைபர் எனும் யூதக் குடியிருப்பு ஊரை நோக்கிப் படை நடத்திச் சென்றார்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.அந்தப் படையில் பல தரப்பட்ட நபித்தோழர்கள் பங்கெடுத்திருந்தனர். அவர்களுள் கவிஞர்களும் இருந்தனர்.  ஆமிர் பின் அக்வஉ (ரலி) என்பார் ‘ஒட்டகப் பாட்டு’ இசைப்பதில் வல்லவர்.  இரவு நேரமாயிற்று. அப்போது தோழர்களுள் ஒருவர் ஆமிரைப் பார்த்து, “உம் கவிதைகளுள் சிலவற்றைக் கேட்கச் செய்ய மாட்டீரா?” என்றார். உடனே அவருடைய வாயிலிருந்து கவிதைக் கடலின் அலைகள் வரிவரியாக வந்தன:

اللهم لولا أنت ما اهتدينا ، و لا تصدقنا و لا صلينا
فاغفر فداء لك ما اتقينا ، و ثبت الأقدام إن لاقينا
و ألقيا سكينة علينا ، إنا إذا صيح بنا أبينا
و بالصياح عولو علينا

(சஹீஹுல் புகாரீ – 2477, 4196,6148)

இதன் தமிழ்க் கவியாக்கம்:

இறைவா!  நீயே இலையென்றால்
இருக்க மாட்டோம் நேர்வழியில்
சிறப்பாய்த் தான தருமங்கள்
செய்தே இருக்க மாட்டோம்யாம்
மறையோன் உன்னைத் தொழுதேநல்
மாண்புற் றுயர்வைப் பெறமாட்டோம்
சிறியோர் எம்மை உன்னுடைய
திருமுன் அர்ப்பணம் செய்கின்றோம்!

நல்லற மெதுவும் எம்வாழ்வில்
நழுவிற் றென்றால் எம்மைநீ
இல்லை அருளென் றொதுக்காமல்
இறங்கிப் பொறுப்பாய் நாயகனே!
எல்லை மீறும் போக்குடைய
எதிரிப் படையைச் சந்தித்தால்
நில்லா எங்கள் கால்களையே
நிலைக்கச் செய்தே அருள்புரிவாய்! 

எங்கள் மீதே அமைதியினை
இறங்கச் செய்வாய் வல்லவனே!
பொங்கும் ஆர்வப் பெருக்காலே
போவோம் நாங்கள் போர்முனைக்கே
அங்கும் எம்மவர் ஆர்த்தெழுப்பும்
அபயக் குரலைக் கேட்டவுடன்
மங்கா அன்புத் தோழர்க்கு
மாண்போ டுதவி செய்திடுவோம்!

இந்தக் கவியடிகளைக் கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “யார் இந்த ஒட்டக ஓட்டி?” என்று கேட்டார்கள்.  “ஆமிர்” என்று மக்கள் கூறினர்.  இதைக் கேட்ட அண்ணலார், “அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். ‘அல்லாஹ் அருள் புரிவானாக!’என்ற இறைத்தூதரின் இறைஞ்சலின் பிரதிபலிப்பு,அதே கைபர்ப் போரில் அத்தோழருக்கு ‘ஷஹீத்’ என்ற பெரும் பதவியைப் பெற்றுத் தந்தது!

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு ஒன்றில், செவிவழிச் செய்தியை வைத்துப் புனைந்துரை கூறுவதில் கவிஞரும் நபித் தோழருமான ஹஸ்ஸான் (ரலி) அவர்களும் எவ்வாறோ ஈடுபட்டுவிட்டார்! அவரை ஆயிஷாவின் சகோதரி மகனான உர்வா (ரலி) அவர்கள் பிற்றைய நாட்களில் ஏசினார்கள். இதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், “மகனே! அவரை ஏசாதீர்! ஏனெனில், அவர் அல்லாஹ்வின் தூதருக்காக, இணை வைப்பவர்களைத் தாக்கிக் கவிதை பாடி, பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்” என்றார்கள்.
(சஹீஹுல் புகாரீ – 4145, 6150)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)

-அதிரை அஹ்மது

13 கருத்துகள்

Shameed சொன்னது…

ஆய்வு சுருக்கமாக இருந்தாலும் நச்

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

ஆய்வுக் கடலில் மூழ்கியிங்கு
*****ஆதா ரமுத்தெ டுத்துவரும்
தாய்போல் கருணைப் பொங்குகின்ற
*****தகைசால் ஆசான் அவர்கட்கு
நோயில் வீழா வாழ்க்கையோடு
*****நீண்ட கால ஆயுளுடன்
வாய்க்க வேண்டும் வாய்ப்புகளும்
*****வல்லான் அல்லாஹ் அருளாலே

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கவிதை கலகம் செய்யாது...
கவிதை காவியம் படைக்கும்...

அது(தான்) தொடர்கிறது அதிரிநிருபரிலும் !

sabeer.abushahruk சொன்னது…

அஹ்மது காக்காவின் இந்த ஆராய்ச்சித் தொடரானது துவங்கப்பட்ட காரணத்தை ஒட்டியேச் செலவதோடு கூடுதலாக இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளையும் நினைவுபடுத்தி மனத்தினை வெல்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கவிதைக்கு களங்கம் ஏற்படுத்த முடியாது என்பதை ஆய்வுகள் அடித்துச் சொல்கின்றன.

Muhammad abubacker ( LMS ) சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.

கிணறுகளெல்லாம் தூந்து விட்ட இந்நேரத்தில்.ஊற்று கண்ணாய் வந்து கொண்டிருக்கும் கவிக்கு ஆதாரங்கள்.தவறாமல் அள்ளிக்கொள்கிறேன்.
ஜஜாக்கல்லாஹ் கைரன்.

sabeer.abushahruk சொன்னது…

இங்கு யாரோ ஒரு சகோதரர் "அதிரை அறிஞர் அஹமது காக்கா" என்ற என் கருத்திற்கு விளக்கம் கேட்டு எழுதிய பின்னூட்டத்தை அ,.நி. அகற்றிவிட்டதாகத் தெரிகிறது.;

ஆயினும், அந்தச் சகோதரருக்குப் பதில் இதோ:

"அறிஞர்" என்றால் "அறிவுடையோர்" என்று அர்த்தம். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் தங்களின் புரிதலை சுய பரிசோதனை செய்துகொள்வது நலம்.

crown சொன்னது…

sabeer.abushahruk சொன்னது…

இங்கு யாரோ ஒரு சகோதரர் "அதிரை அறிஞர் அஹமது காக்கா" என்ற என் கருத்திற்கு விளக்கம் கேட்டு எழுதிய பின்னூட்டத்தை அ,.நி. அகற்றிவிட்டதாகத் தெரிகிறது.;

ஆயினும், அந்தச் சகோதரருக்குப் பதில் இதோ:

"அறிஞர்" என்றால் "அறிவுடையோர்" என்று அர்த்தம். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின் தங்களின் புரிதலை சுய பரிசோதனை செய்துகொள்வது நலம்.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சபீர் காக்காவின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.வழி மொழிகிறேன்.

நெறியாளர் - editor@adirainirubar.in சொன்னது…

சகோதரர் / சகோதரி Followers of Truth !

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு விவாதத்தை தொடரலாம் அதுவரை உங்களின் கருத்துக்கள் மட்டுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும்.

உங்களின் சுய அறிமுகம் தனி மின்னஞ்சலிலோ அல்லது பொதுவிலே தெரிவிக்க வேண்டுகிறோம்.

இதுநாள் வரை இனியும் அதிரைநிருபர் வலைத்தளம் கடைபிடிக்கும் நெறிமுறையின் அடிப்படையில்.

உங்களின் புரிந்துணர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

sabeer.abushahruk சொன்னது…

//அஹ்மத் அவர்கள் (அறிஞர்)அறிவுடையவர் என்று கூறுகிறீர்கள், எந்த துறையில்?//
 
கவிதைகள் எழுதுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்பட்டதா என்று ஆராயும் அஹ்மத் காக்கா அவர்கள் தமிழ், அராபிக், ஆங்கிலம் மற்றும் கவிதைகள் பற்றிய ஆழ்ந்த ஞானம் உள்ளவர்கள்.  இதுபோன்று ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் துறையில் அறிஞர்.  ஆய்வறிஞர்?
 
அப்புறம் சகோ, நானும் உண்மையைப் பின்பற்றுபவந்தான், உங்கள் சகோதரந்தான்.  வாருங்கள் தோள் தழுவி மேற்கொண்டு உரையாடுவோம்.

Noor Mohamed சொன்னது…

//கவிதைகள் எழுதுவது இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்பட்டதா என்று ஆராயும் அஹ்மத் காக்கா அவர்கள் தமிழ், அராபிக், ஆங்கிலம் மற்றும் கவிதைகள் பற்றிய ஆழ்ந்த ஞானம் உள்ளவர்கள். இதுபோன்று ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் துறையில் அறிஞர். ஆய்வறிஞர்?//

40 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களை ஆய்வு செய்து, இஸ்லாமிய இலக்கிய சிந்தனை என்ற தொடரை 'பிறை' பத்திரிகையில் எழுதியவர்கள். அது பிற்காலத்தில் நூலாக வெளிவந்தது. அதுவுமல்லாது, ஆங்கில நூலும் எழுதியுள்ளார்கள்.

இறையருள் கவிமணி மர்ஹூம் பேரா அப்துல் கபூர் சாஹிப் M.A., D.Lit., மர்ஹூம் மார்க்க மேதை, பேரறிஞர் அப்துல் வஹ்ஹாப் சாஹிப் M.A., B.Th., இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்து தனது ஞானத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.

தம்பி கவி சபீர் அவர்களுக்கு, அஹமது காக்கா அறிந்த மொழிகளில் முக்கியமாக மலையாளம் மறந்து விட்டீர்களே?

Followers of Truth சொன்னது…

அதிரை அஹமத் காக்காவின் மும்மொழி புலமை பற்றியோ கவிதை திறன் பற்றியோ எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை..அவர்களுடைய வயதும் அனுபவமும் பன்மொழி புலமையும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் நம் சமுதயத்திற்கும் நல்ல முறையில் பயனளிக்க வேண்டும் என்பதே எல்லாருடைய அவாவும் துவாவும்....


”நீ யாரிடமிருந்து இல்மை பெற்றுக் கொள்கிறாய் என்பதை கவனித்துக் கொள்” என்ற கிபாருத் தாபியீன் அப்துல்லா இப்னு முபாரக் அவர்களின் கூற்று இங்கு நினைவு கூறதக்கது ”இந்த மார்க்கம் அறிவிப்பாளர் தொடர் கொண்டது. அதுமட்டும் இல்லையெனில் எவரும் எதனையும் கூறுவார்”.


தமிழ்,அரபி மற்றும் ஆங்கில மொழிப் புலமை மட்டுமே ஒருவரை மார்க்க அறிஞராக்கி விடுமா என்பதே இங்கு மையக்கேள்வி.

sabeer.abushahruk சொன்னது…

நூர் காக்கா,

புள்ளிக்கு மலையாளம் சரிக்கு அறியுமா? ஞான் அறிஞோடா. இனி இப்ப மலையாள அறிஞர் எந்நும் பறஞ்சிஅக்கட்டே?

காரியம் ஓர்ப்பிச்சதக்கு வளர நன்னி!

சகோ,
நான அஹ்மது காக்காவை அறிஞர் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறேன். ஆனால்,, நீங்கள் மையக்கருத்தென்று குறிப்பிடுவது இந்த வாதத்தின் மெய்யான கருத்தா?

மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக்கொள்பவரகள் மலிந்துபோய்க்கிடக்கிற இக்காலத்தில் (தாங்கள் குறிப்பிடுவதுபோல்) அஹ்மது காக்காவை மார்க்க அறிஞர் என்று சொல்லிக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. நான் கருத்துச் சொன்னப் பதிவு கவிதைகள் பற்றியது. அந்த ஆய்வில் மார்க்கத்திற்கு முரணான கருத்துக்களை காக்கா அவர்கள் திணித்திருந்தால் சுட்டிக்காஅட்டி வாதாடுவதே அறிவுடைமை, ஆய்வாளரை விமரிசிப்பதல்ல.