Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஸ்டெடி ரெடி அப்புறம் புடி ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2016 | , , ,

நம்மைச் சுற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன ! முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ  எடுப்பதை காணாமல் வந்ததில்லை.

கடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல்  போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.

புகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

இப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (!!!) நமக்கு காட்டுகின்றது.

முக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப்போம்னும் எப்போதான் எழுதுறதாம் !


Sஹமீது

6 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

நல்ல புடி! அங்கேயும் ஒருவர் புள்ளயே சுமந்துகொண்டுநிற்கிறார்.அவர் புள்ளைக்கி அப்பனாத்தான் இருக்கணும்! பெற்ற தாய்க்கு பத்து மாதம்; மற்ற மாதங்கள் தந்தைக்கு.!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஆடையில்லா மனிதன் அரை மனிதன்" என்பார்கள். ஆனால் இப்பொழுது மொபைல் கேமரா இல்லாத மனிதன் முக்கால் மனிதனே என்று ஆக்கிவிட்டார்கள். புனித மக்காவிற்கு சென்று பாருங்கள் வயசான கெழடுகட்டை கூட கையில் சிலேட்டுப்பலகை போல் நோட் பேடு மூலம் வீடியோ எடுத்துக்கொண்டு சுற்றுகிறார்கள். ஃபேஸ்புக்கில் பால் குடி மறவா பச்சிளம் குழந்தை முதல் பல்லிழந்த கெழவன் வரை அக்கவுண்ட் வைத்து அப்பக்கிஅப்ப அப்டேட் செய்வதே இதற்கு காரணம்.

Yasir said...

ஆஹா இப்ப ஸ்டேட் வுட்டு ஸ்டேட் தாண்டி போய் படம் எடுக்க ஆரம்பித்து விட்டீர்களா....ஆமா மற்ற படங்கள் எல்லாம் எங்கே

Shameed said...

Yasir சொன்னது…
//ஆஹா இப்ப ஸ்டேட் வுட்டு ஸ்டேட் தாண்டி போய் படம் எடுக்க ஆரம்பித்து விட்டீர்களா....ஆமா மற்ற படங்கள் எல்லாம் எங்கே//



மற்ற படங்கள் எல்லாம் முன்பே பேசும் படமாக அதிரை நிருபரில் போட்டச்சே

sabeer.abushahruk said...

இப்படி உயரமானவற்றோடு சரிக்குச்சரி நிற்பதுபோல் படம் பிடிப்பதுதான் அந்தக் காலத்து காமிரா ட்ரிக்.

இப்ப கிராஃபிக்ஸ் வந்தபிறகு எல்லாம் சாத்தியம் என்றாகிப்போனது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எங்கிருந்தாலும் இந்தியா என் தேசம், என் நேசம்!

படம் புடிப்பு பற்றிய நல் படிப்பு!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு