Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சுருக்க நடவுல... ! - வாக்கி டாக்கி ! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2016 | , , , ,


அதிரை மண்ணின் மைந்தர்கள் ஆகாயத்திலும் மனைபோட்டு வீடுகட்ட தயங்காதவர்கள் இருந்தாலும் விமானங்களை வீட்டு மாடியிலேயே இறக்கி கலரிச் சாப்பாட்டில் கலந்து கொள்ளும் வேகமும் இருக்கும். இது கடல் கடந்து இருக்கும் ஆண்மக்களோடு இருந்திடாது, அதிரையின் அழகும், ஆளுமையும், அன்பும், ஆர்ப்பரிப்பும் ஒருங்கே சுற்றிச் சுழலும் பெண்மக்களும் சலைத்தவர்கள் அல்ல. உலக அரசியலானாலும் உள்ளூர் பிரச்சினைகளானாலும், ஜெயா-சசி பிணக்கானாலும், மு.க. குடும்ப பிரச்சினைகளானாலும். எதனையும் அலசும் அசாத்திய துணிச்சலும் தீர்வும் தங்களுக்குள் சொல்லும் இருவர்; சாலை வழி காலை வாக்கிங்  சென்று கொண்டிருந்த இரு பெண்டிரின் அசத்தும் உரையாடலைக் கேட்க நேர்ந்தது அதன் பாதிப்புதான் இந்த பதிப்பு.


“என்னாவுள இந்தப்பக்கமா தெரியுது எதாச்சும் சேதி இல்லாம இந்தபக்கம் வரமாட்டியே”

 “அதயான் கேக்குறேவுள, இம்புட்டு நாளா ஓடிக்கிட்டு இருந்த ‘அட்லாண்ட ஓடத்த’ நிப்பாட்ட போறாஹலாம்”

“அது எங்கவுள ஓடிக்கிட்டு இருந்துச்சு”

“அந்த கூத்து தெரியாத ஒனக்கு? இதுவரைக்கும் பூமிக்கும் வானத்துக்கும் 135 தடவ பறந்து போயிட்டு வந்து கீது மொத மொதல்லே ஆமாத்து மாப்பிள இருக்கிற அமெரிக்காவுல 1983 வருசத்துலதான் சேலன்சர்’னு புராக்கு வாஹம்மாதிரி ஈக்கிறத்துல அனுப்பி அது அங்கே போயி கோளை சுத்த விட்டுட்டு பூமிக்கு திருபும்புனிச்சி.

“வானத்துக்கும் பூமிக்குமா? என்னமோ அதுராம் பட்டன்த்துக்கும் பட்டுக்கோட்டைக்கும் PP லே போயிtடு வரமதிரில சொல்றீய்வுல?”

“அடியா ஆமாவுளே அப்புடித்தாவுள போச்சு ஆனா ஒருவாட்டி போனது திரும்பி வரலே வானத்துலே மாக்குண்டு  சாஞ்சி வெடிச்சி போச்சி  நம்ம ஊரு பொம்புளை ஒன்னு மௌத்தாபோச்சு அது கூட போன பதிமூணு பெரும் சேந்து மௌத்தா போய்ட்டாஹ”

“என்னவுளே சொல்றே  நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான   செய்தியாவுல ஈக்கிது அதுவும்  நம்ம ஊரா எந்த தெருவு”

“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”

“அதானே பாத்தேன். ஆமா அந்தபுள்ள பேருகூட கல்பனா’ன்னு ஊட்லே புள்ளையளுவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருந்துச்சுவோ நா என்னவோ தர்மாஸ்பத்திரி நர்ஸுன்னு நினைச்சேன். அதுகூட அரசல் புரசலா காதுலே உளுந்துச்சி”

“ஒனக்கும் ஊரு ஒலகத்துளே நடக்குறது அப்பொப்போ காதுல உளுவுதுதான், மொதல்ல வாணவேடிக்கை காட்டுறமாதிரி எல்லாம் ராக்கெட்டை வானத்துலே போய் செயற்கை கோளை இறக்கி உட்டுப்புட்டு அந்த ராக்கெட்டு தன்னாலே வெடிச்சி வாணம் முழுக்க ஒரே குப்பையும் கூளமுமா போகுதுன்னுதான் இந்த அட்லாண்ட ஓடத்த கண்டு பிடிச்சாஹ இது போயிட்டு கோளை வானத்துலே விட்டு புட்டு பத்தரமா திரும்பி  வந்துடும் வானத்தையும் குப்பை கூலமக்காது, நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல”

“அடியா ரைமாம பேத்திடியாடி நீ ஒனக்கு வெளக்கா தெருவுலே நல்ல மீனு  மட்டும்தான் வேங்க தெரியும்ன்னு இம்புட்டு நாளா தப்பாவுல வெளங்கிட்டேன் நீனும் வெவரமாத்தான் ஈக்கிறே எந்த புத்துல எந்த பாம்பு ஈக்கும்ன்னு  அல்லாஹ்க்குத்தான் வெளிச்சம்”

“இன்னும் ஈகிது கேளுவுள இந்த அட்லாண்ட ஓடம் மொத்தம் அஞ்சு செஞ்சாஹவுள, அதுலே ஒன்னு வெடிச்சி போச்சி பாக்கி நாளுல ரெண்டே செத்த காலேஜ்லே வச்சிபுட்டாஹ பாக்கி ரெண்டுக்கு இப்போ ஓய்வு கொடுக்க போறாஹவுல”

“இம்முட்டு நாளா இந்த அஞ்சும் என்ன வேல செஞ்சிச்சி இதுக்குமா ஓய்வு கேக்குது ? நீ சொல்லறது எல்லாம் எனக்கு புதுனமா தாம் புள்ள ஈக்கிது”

“வர வர நீனும் நல்ல நல்ல கேள்வியா கேக்குறேவுள. இந்த அஞ்சும் இதுவரைக்கும் நூத்துகணக்கான செயற்கை கோளை வானத்துல போய் சுத்த உட்டுபுட்டு பூமிக்கு திரும்பி வந்துருச்சி அதுலே முக்கியமான ஒன்னு ‘ஹப்பில்’ தொலைநோக்கியை வானத்துலே சுத்த உட்டு ஊரு உலகத்துலே என்ன நடக்குதுன்னு ஒத்து கேக்குறது இல்லே இல்லே உத்து பாக்குறது. அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல”

“ஆமா இந்த நூத்துக்கணக்கான கோலும் அங்கே  வானத்துலே போய் என்னாவுல செய்து ?”

“நல்லா கேட்டே போ, நமக்கு அடுத்த ஊடு பூட்டி இருந்தாலே கொஞ்ச நேரத்துலே நாம  மக்கசக்க ரத்துலே வர்றோம் அவுக எங்கோ போயிட்டாக என்ன வாங்க போய்ட்டஹன்னு தலை சுத்துது அதுபோல் பக்கத்து பக்கத்து நாடெல்லாம் என்ன செய்றாக எங்கே போரஹன்னு  மேலர்ந்து கீழ  உத்து பார்க்கத்தான் இப்புட்டு ஏற்பாடும்”

“அப்போ மேலர்ந்து பாத்தா கீழே எல்லாம் நல்லா தெரிய்மாவுள?!”

“என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும்  எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது.  நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் ! அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள 

“அடியே  இப்புடி காட்டி குடுக்குறதாளதான்  அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !! இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து  போட்டுகிட்டுதான் போவனும். இப்புடி எல்லாத்தையும் அவ்வோ கைலை வச்சிகிரதலதான் இந்த பவுமானமா  இக்கிதோ!”

“நீவேற புதுசு புதுசா கெளப்பி உடுறே இதையும் கேளு அட்லாண்ட ஓடத்த நெருத்துரதால அங்கே வேல செஞ்ச  நாசாவின் 4 ஆயிரம் பேருக்கு வேல இல்லாம போவுதாம்”

“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ ?”

“என்னாவுல எந்த ஒலஹத்துல ஈக்கிறே?”

“அப்போ அவ்வோ  அவ்வளவு பெரும் சோத்துக்கு என்ன செய்வோக நாசன்னு பேர வச்சிக்கிட்டு அந்த  4000 பேரையும் நாசம் பண்ணிட்டாஹலே”

“அடி போடி இவ ஒன்னும் வெலங்காதவளா ஈக்கிரா  அவ்வொளுக்கு சோத்துக்கா பஞ்சம்  இவ்வளவு நாளா செஞ்ச வேலகித்தான் பணத்த அல்லு அள்ளுன்னு அள்ளி ரெண்டு மூணு தல மொறைக்கு சேத்து கட்டி வச்சி இருபாஹலே”

“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ    திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா   பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க  எங்கே பாத்தாலும்  குப்பையும் கூளமுமா    பிளாஸ்டிக் பையா தான்  கெடக்குது  அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம்    எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”

“அடியா சீக்கிரம் நடவுல, நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”

-Sஹமீத்

23 Responses So Far:

Unknown said...

\\என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும் எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது. நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் ! அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள \\

------------------
செம காமெடி :):):)

KALAM SHAICK ABDUL KADER said...

வட்டாரச் சொல்லில் வழங்கும் அறிவியல்
தட்டாமற் தட்டும் துணிவு

crown said...

“அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !!-
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா

crown said...

“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க எங்கே பாத்தாலும் குப்பையும் கூளமுமா பிளாஸ்டிக் பையா தான் கெடக்குது அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம் எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”
---------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி அடி"

crown said...

“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ!
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஹாஹாஹா "ஒன் வே"க்கு நல்ல நக்கல்.

Noor Mohamed said...

ஊர் பாஷையில் உலகத்தை சுற்றிக் காட்டுகிறார் தம்பி ஹமீத்.

//அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல//

இங்குமா ரியல் எஸ்டேட் பிசினஸ். உலகமெங்கும் ரியல் எஸ்டேட் ல வீழ்ச்சி இருந்தும் அதிரையில் இல்லையே! மாறாக, தாருமாருமான ஏற்றம். உழைப்பெல்லாம் ஊனமாகி விடுகின்றன. காரணம் பெண்கள் வியாபாரிகள் பெருகிவிட்டனர். அதனால்தான் என்னவோ தம்பி ஹமீத், இதில் பெண்களை பேசவிட்டுள்ளார் போலும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொம்பள பேச்செ அப்படியே கொட்டி புட்டியோ!

// நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”//

இந்த கையிலே இருக்கிற மூன்றாம் கண்ணா?எடுக்கலையா?

Ebrahim Ansari said...

ஊருக்குப்போய் ஒட்டுக்கேட்டது மாதிரி இருக்கிறது.

மண் வாசனையை அவ்வப்போது இலவசமாக ரீசார்ஜ் செய்து விடும் மருமகன் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுக்கள்.

இப்னு அப்துல் ரஜாக் said...

//அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க எங்கே பாத்தாலும் குப்பையும் கூளமுமா பிளாஸ்டிக் பையா தான் கெடக்குது அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம் எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள?”//

உலக நடப்பும்,ஊர் அக்கறையும் தெரிகிறது.

அமெரிக்காவில் உள்ள குப்பைகள் கப்பல்கள் மூலம் பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு - அந்த நாடுகளில் புதைக்கப்படுகிறது.

ZAKIR HUSSAIN said...

அப்பம் = ஒன்வே ரிட்டர்ன்.....என்ன ஒரு "[B]பாய்" காம்பினேசன்.???!!!

அப்துல்மாலிக் said...

ரொம்பா நாள் கழிச்சி ஊருக்குள்ளார போன உணர்வு, இப்போவெல்லாம் சாட்டிலைட் டீவி ஊட்டுக்குள்ளார வந்து குந்திக்கிட்டு உக்காந்திருக்கு, சீரியலையும் தாண்டி வெளி ஒலகமும் தெரிந்திருக்கு நம்மூர் பொம்பளைங்களுக்கு, பெரிய விசயம், இதுவே ஒரு சிறு முன்னேற்றம்

அருமை ஹமீது காக்கா.. (இதை டைப்ப எவ்வளவு மெனக்கெட்டீங்களோ?)

Shameed said...

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி அடி"

வலைக்கும் முஸ்ஸலாம்
கவிதைக்கு கவிதை போடும் கவிக்காரர் நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம் போட்டாதில் மகிழ்ச்சி நலமா வீட்டில் அனைவரும்

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…
//வட்டாரச் சொல்லில் வழங்கும் அறிவியல்
தட்டாமற் தட்டும் துணிவு //

அப்துல்மாலிக் சொன்னது…
//அருமை ஹமீது காக்கா.. (இதை டைப்ப எவ்வளவு மெனக்கெட்டீங்களோ?) //

இதை டைப் செய்தது "காய்ச்சி ஊத்திய கடப்பாசியில் நடந்தது போல் இருந்தது" .
தம்பி அப்துல் மாலிக் முதலில் உங்கள் ப்ரோபைல் போட்டோவை (கருப்பு வெள்ளை)மாற்றுங்கள் இல்லாட்டி உங்களை சாட்லைட் போட்டோ எடுத்து பெரிய சய்சா போட்டுற போவுது !!

Shameed said...

Ebrahim Ansari சொன்னது…


//மண் வாசனையை அவ்வப்போது இலவசமாக ரீசார்ஜ் செய்து விடும் மருமகன் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டுக்கள்//

ஒவ் ஒரு விசைக்கும் எதிர் விசை உண்டு (நியூட்டன் விதி ) நீங்கள் முதுகில் பின்னாடி தட்டுவது இன்னும் முன்னாடி போ என்று சொல்லாமல் சொல்கின்றது மாமா.

ஆமா எங்கே மாமா இன்னும் கனரக வாகனங்களை காணோம்

Yasir said...

என்ன காக்கா சொல்லவே இல்லை.....அறிவியலை நம்மூரின் தாய்மொழியில் கலந்து....அப்படியே உரிச்சுவச்சாப்ல நம்மூர் பாஷையை உங்கள் ஸ்டையிலில் கொடுத்தது செம ரசனை

..அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ.// நக்கலின் உச்சக்கட்டம்

N.A.Shahul Hameed said...

Dear Savanna
Assalamu Alaikku!!!
Absoultely fantastic. You have explained the difficult scientific concept in a lucid way in the typical Adirai style. Further your pun of words too is also great.
Keep it.
I am in the school now. SO I cannot write in Tamil. Anyway I will do it when I go home.
Riaz is in Singapore now. U know>
Wassalam
N.A.Shahul Hameed

crown said...

Shameed சொன்னது…

crown சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.
" நெத்தி அடி"

வலைக்கும் முஸ்ஸலாம்
கவிதைக்கு கவிதை போடும் கவிக்காரர் ?????????
நீண்ட நாட்களுக்கு பின் பின்னுட்டம் போட்டாதில் மகிழ்ச்சி நலமா வீட்டில் அனைவரும்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்! நான் உள்பட வீட்டில் யாவரும் நலம் அதுபோல் தாங்கள் மற்றும் வீட்டில் உள்ளோர் நலனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.

அலாவுதீன்.S. said...

//// என்னவுளே சொல்றே நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான செய்தியாவுல ஈக்கிது அதுவும் நம்ம ஊரா எந்த தெருவு”

“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”

நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல

அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ !! இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து போட்டுகிட்டுதான் போவனும்.

“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ ?”


“அடி போடி இவ ஒன்னும் வெலங்காதவளா ஈக்கிரா அவ்வொளுக்கு சோத்துக்கா பஞ்சம் இவ்வளவு நாளா செஞ்ச வேலகித்தான் பணத்த அல்லு அள்ளுன்னு அள்ளி ரெண்டு மூணு தல மொறைக்கு சேத்து கட்டி வச்சி இருபாஹலே”

அடியா சீக்கிரம் நடவுல, நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”////
**********************************************************************************************

சகோதரருக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நகைச்சுவையில் நல்லாத்தான் கலாய்க்கிறீங்க!

அதிரை வட்டார மொழியில்! அறிவியலையும் சேர்த்து!

கலக்கிட்டடீங்க! ஹமீது கலக்கிட்டீங்க!

யாரும் பக்கத்தில் இல்லையே! அறிவியல் நகைச்சுவை மன்னன்! (மட்டையை அங்கும் இங்கும் தூக்கிக் கொண்டு ஓடும் டெண்டுல்கருக்கே பாரதரத்தனா கொடுக்கச் சொல்லி போர்க்கொடி) என்ற பட்டத்தை இன்றிலிருந்து
உங்களுக்கு வழங்குகிறோம்.

அருகில் யாரும் இருந்தால் பட்டத்தை களவாடி விடுவார்கள். அதனால் ரகசியமாக அளிக்கப்படுகிறது.

sabeer.abushahruk said...

ஹமீது,
இப்பிடி பொண்டுவ பின்னாடிச் சுத்தறது வூட்டுக்குத் தெரியாதோ? மறச்ச்ச்ச்சிடுவீங்களே.

வரிக்குவரி சிரிப்பு வரவழைக்கிறது. அதிலும் நீங்க சொல்றமாதிரியே கற்பனைபண்ணி பார்த்தேனா செம சிரிப்பு.

உங்களுக்குத் தெரியும்தானே நானெல்லாம் வச்சிப்பார்க்காம வாய்விட்டு சிரிப்பவன். இப்பிடித்தான் ஒரு பட்டான் ஜோக்குக்கு மெஷின்ஸ் நடுவில சிரிக்கப்போய், பாஸ் இன்டெர்காம்ல "சபீர், யாரோ புல் டோஸரை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. என்னென்னு போய்ப் பார்"ன்னு என்னிடமே சொன்னானா அதிலிருந்து சைலன்ஸர் இல்லாமல் நான் சிரிக்கிறதே இல்லை.

sabeer.abushahruk said...

"இந்தாவுல, இந்த ஹமீது காக்காவும் நெய்னா நாநாவும் சொல்றமாதிரி மத்தவங்களும் தமிழ்ல சொன்னா எவ்ளோவ் நல்லா ஈக்கிம்?!"

மெத்தப்படிச்சவங்க மாதிரில எழுதிப்புடுதுவோ?! ஒன்னும் வெளங்காம இவன் வாப்பாவுக்கு ஃபோன் போட்டு கேட்கலேன்னா புரிய மாட்டெங்குதுல்ல.


ராக்கெட் மேட்டர்கூட நம்மூர் பாஷைலதான் நல்லா வெளங்குது

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…


//ஹமீது,
இப்பிடி பொண்டுவ பின்னாடிச் சுத்தறது வூட்டுக்குத் தெரியாதோ? மறச்ச்ச்ச்சிடுவீங்களே//

சுத்துறதே இல்லத்தரசியை தானே

Ebrahim Ansari said...

Shahul Said

//ஆமா எங்கே மாமா இன்னும் கனரக வாகனங்களை காணோம்//

வந்துட்டாங்கய்யா! வந்துட்டாங்கய்யா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதெல்லாம் சரி...

லேட்டஸ்ட டாக்கி என்ன தெரியுமா ?

"இவய்ங்க முன்னாடி வந்தும் எழுதுறாய்ங்க பின்னாடி வந்தும் எழுதுறாய்ங்கன்னு"தானாம்...

உங்களுக்கு பின்னாடி வந்தவரின் காதில் விழுந்த செய்தி இது !

என்ன அடுத்த பதிவா அது !?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு