அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும். பல நூற்றாண்டுகளாக, அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை முதலான கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், ஹாங்காங், அரபு வளைகுடா நாடுகள் ஆகியவற்றுடன் கடல் வாணிபம் செய்துவந்தார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இந்த வணிக வரலாற்று முன்மாதிரியை நாம் மறந்துவிடக் கூடாது.
மிக அண்மைக் காலமாக, அதாவது 1960 – 1970களில் அரபு வளைகுடாப் பகுதியில் எண்ணெய் வளம் கொழிக்கத் தொடங்கியபோது நமது இளந்தலைமுறையினர் அந்தப் பகுதிகளுக்குச் சென்று, தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும் (Skilled), அடிமட்டப் பணியாளர்களாகவும் (Unskilled) வேலைகள் செய்து, தம் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டனர். இந்தப் போக்கு எவ்வளவு நாளைக்கு? அரபு நாடுகளின் எண்ணெய் வளம் குறைந்தால், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், நாம் என்ன செய்வது? நம் சந்ததிகளுக்குப் பிழைப்பு வேண்டாமா? அவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்க வேண்டுமா?
இத்தகைய அவல நிலையைப் போக்குவதற்குத்தான், நாங்கள் பல மாதங்களாகச் சிந்தனை வயப்பட்டு, நம் மக்களைத் தொழில் முனைவோராகவும், பெற்ற பணியறிவையும் பட்டறிவையும் முறையாக நமது நாட்டிலேயே பயன்படுத்தி, அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை Entrepreneurship Development Program என்ற பெயரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ்.
நமது நாட்டிலேயே நமக்கென ஒரு தொழில் அமைந்துவிட்டால், அது நமக்குப்பின் வரவிருக்கும் நம்முடைய பல தலைமுறையினருக்குப் பயனளிக்கும் அல்லவா? டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், BSA Group போன்ற வணிக நிறுவனங்கள் சிறிய அளவில் தோன்றி, இன்று பெரும்பெரும் வணிக ஆளுமைகளாக (Conglamorates) வளர்ந்து, அவர்களின் சந்ததிகளுக்குப் பயன்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது அல்லவா?
இவ்வடிப்படையில்தான், SEAPOL குரூப் Entrepreneurship Development Program (EDP) என்ற திட்டத்தை உருவாக்கி, சென்னை United Economic Forum, திருச்சி MAM College of Engineering and Technology ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நம் அதிரை மக்களுக்குப பயிற்சியளிக்கும் அருமையான வாய்ப்பை ஏற்பட்டுத்தித் தர முன்வந்துள்ளது.
ஆர்வமும் தகுதியும் எதிர்பார்ப்பும் உடையவர்களும், வெளிநாடுகளிலிருந்து விடை பெற்றுத் திரும்பி வந்தவர்களும், ஊரிலுள்ள ஆர்வலர்களும் இந்தப் பயிற்சிமுகாமில் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் கீழ்க்காணும் இணைப்பில் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம். https://goo.gl/forms/fxFHf2bqvRhfFYXJ2
பயிற்சி முகாம் நடக்கும் இடம் Richway Garden Restaurant, பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம். நாள்: 2016 டிசம்பர் 24 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5.00 வரை. மேற்கொண்டு விவரம் வேண்டுவோர், கீழ்க்காணும் இணைய தளங்களுக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம்:
அன்புடன் அழைக்கும்,
M.S.TAJUDEEN
Managing Director,
Seaport Logistics Pvt. Ltd.
4 Responses So Far:
http://www.tamiltvshows.net/tamil-tv-shows/raj-tv-shows/koppiyam-yasmin-murder-in-panruti-raj-tv-show/
இந்த ஆக்கத்துக்கான கருத்தல்ல நான் குறிப்பிட்ட லிங்க்,ஆனால் அவசியம் கருதி வெளியிட்டேன்,லிங்கை பார்க்கவும்.
இது ஒரு நல்ல முயற்சி!பயிற்சியில்பங்குகொண்டுவெள்ளம் வருமுன் அணை போட்டுகொள்ளுங்கள்.
Post a Comment