அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி
வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.
(ஜமாஅத்)
கூட்டுத் தொழுகையின் சிறப்பு
''கூட்டுத்
தொழுகை என்பது, தனித்துத் தொழுவதைவிட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என
நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1064)
''ஒருவர்,
மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதை விட
25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளுச்செய்து, பின்பு தொழுகைக்காகவே
தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு
காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது விட்டதும் தான்
தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள்
அவருக்காக, ''இறைவா! இவரை மன்னிப்பாயாக!
இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக!'' என்று கூறி பிரார்த்திருப்பார்கள். அவர் (மறு) தொழுகையை
எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1065)
''நபி(ஸல்)
அவர்களிடம் ஒரு குருடர் வந்தார், ''இறைத்தூதர் அவர்களே! பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர்
எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை
அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள்.
அவர் திரும்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு
சப்தத்தைக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்கள். ''ஆம்'' என்றார். ''அப்படியானால்
(பள்ளிக்கு வருவது மூலம்) பதில் கூறுவீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1066)
''என்
உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டு வர நான்
கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை
மக்களுக்கு இமாமத் செய்யச் சொல்லிவிட்டு
(தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்து விட
விரும்புகிறேன்'' என்று நபி(ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1068)
''நாளை
(மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி
அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ்,
உங்களின் நபிக்கு நேரான வழி முறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான
வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல்,
உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால், உங்கள் நபியின் வழிமுறையை
விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள்
வழி தவறியவராவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நயவஞ்சகத்தனம் தெளிவாக
அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறு எவரும்
தொழுகைக்கு வராமல் இருந்ததில்லை. (எங்கள் காலத்தில்) இரண்டு மனிதர்களின்
தோள்களுக்கிடையே தொங்கியவராக கொண்டு வரப்பட்டு முதல் வரிசையில் நிறுத்தப்படுவார்
(என்ற நிலை இருந்ததது). (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1069)
''ஒரு
கிராமத்தில், காட்டில் மூன்று (முஸ்லிம்) நபர்கள் இருந்து, அவர்களிடையே தொழுகை
பேணப்படவில்லையானால், அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே,
ஜமாஅத்தை பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில் பிரிந்து நிற்கும் ஆட்டைத்தான் ஓநாய்
சாப்பிடும் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1070)
''ஜமாஅத்துடன்
இஷாவை ஒருவர் தொழுதால், பாதி இரவு வரை அவர் வணங்கியவர் போலாவார். ஜமாஅத்துடன்
சுப்ஹைத் தொழுதால் அவர் இரவு முழுதும் வணங்கியவர் போலாவார்''என்று நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு
அஃபான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)
''ஜமாஅத்தில்
இஷாத் தொழுகைக்காக ஒருவர் கலந்து கொண்டால், அவருக்கு பாதி இரவு வரை வணங்கிய நன்மை
கிடைக்கும். ஜமாஅத்தில் இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளைத் தொழுதால், அவருக்கு இரவு
முழுதும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)
''இஷா
மற்றும் சுப்ஹுத் தொழுகையின் மாண்பை மக்கள் அறிந்து கொண்டால், அவர்கள்
தவழ்ந்தேனும் அந்த இரண்டு தொழுகைக்கும் வருவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,
முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1072)
''நய
வஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷாத் தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை.
அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் (சுப்ஹு,
இஷா) அவ்விரண்டுக்கும் வருவார்கள்''என்று
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1073)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத்
துதிப்பீராக! (அல்குர்ஆன்: 87:1)
அவனே படைத்தான் ஒழுங்குற அமைத்தான்.
(அல்குர்ஆன்: 87:2)
அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.
(அல்குர்ஆன்: 87:3)
அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
(அல்குர்ஆன்: 87:4)
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
(அல்குர்ஆன்: 87:5)
(முஹம்மதே) உமக்கு ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர்.
(அல்குர்ஆன்: 87:6)
அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன்
பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான். (அல்குர்ஆன்: 87:7)
(முஹம்மதே) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
(அல்குர்ஆன்: 87:8)
அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை
கூறுவீராக! (அல்குர்ஆன்: 87:9)
(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை
பெறுவான். (அல்குர்ஆன்: 87:10)
துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக்
கொள்வான். (அல்குர்ஆன்: 87:11)
அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.
(அல்குர்ஆன்: 87:12)
பின்னர் அதில் சாகவும் மாட்டான்.
வாழவும் மாட்டான். (அல்குர்ஆன்: 87:13)
தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
(அல்குர்ஆன்: 87:14)
தனது இறைவனின் பெயரை நினைத்து
தொழுதான். (அல்குர்ஆன்: 87:15)
ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே
தேர்வு செய்கிறீர்கள். (அல்குர்ஆன்: 87:16)
மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
(அல்குர்ஆன்: 87:17)
இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம்,
மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன்: 87:18,19)
(அல்குர்ஆன்: 87:1-19 அல்அஃலா- மிக
உயர்ந்தவன்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப்
பார்த்தீரா? (அல்குர்ஆன்: 107:1)
அவனே அனாதையை விரட்டுகிறான்.
(அல்குர்ஆன்: 107:2)
ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
(அல்குர்ஆன்: 107:3)
தமது தொழுகையில் கவனமற்று
தொழுவோருக்குக் கேடு தான். (அல்குர்ஆன்: 107:4,5)
அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
(அல்குர்ஆன்: 107:6)
அற்பமானதையும் (கொடுக்க)
மறுக்கின்றனர். (அல்குர்ஆன்: 107:7) (அல்குர்ஆன்: 107:1-7 அல் மாவூன்- அற்பப்
பொருள்)
''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
இன்ஷாஅல்லாஹ்
வளரும்...
அலாவுதீன் S.
11 Responses So Far:
சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனி!
http://www.adiraitntj.com/2014/03/blog-post_3654.html#comment-form
Anwar says:
6 மார்ச், 2014 7:42 பிற்பகல் Reply
இதே போன்று நமதூரில் இருக்கும் முஹம்மது குட்டி ஆலிம்சா செய்தார் என்பதற்காக, காப்பி போஸ்ட் நிருபர்கள் 'முஹம்மது குட்டி பூமி பூஜை செய்கிறார்' என்று கட்டுரை போட்டார்கள்.
அதே போன்று நிருபர்கள் மறைமுகமாக ஆதரிக்கும் தமுமுகவின் தலைவரின் இந்த செயலை 'பூமி பூஜை செய்கிறார் எம்எல்ஏ' என்று கட்டுரை போடுகிறார்களாக என்று பார்ப்போம்.
நன்றி அலாவுதீன்,
"அற்பப் பொருள்" சூராவை அழகாகக் காப்பி பேஸ்ட் செய்து அருமருந்து வாங்கித்தந்த உனக்கு
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா!
இதைப்போல "அற்ப மனிதர்கள்" பற்றிய விளக்கங்களையும் நிருபர்களுக்காக காப்பி பேஸ்ட் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனியை கண்டித்து கட்டுரை போடும் நீங்கள் முஹம்மது குட்டி ஆலிம்சா பூமி பூஜை செய்ததை கண்டித்து காபி பேஸ்ட் இல்லாமல் சுயமா கட்டுரை போடாதது ஏன் முஹம்மது குட்டி ஆலிம்சா கொள்கையை நேரடிய ஆதரிக்கும் தவுஹீத்?வாதிகளா நீங்கள் !!!
ஜசாக் அல்லாஹ் சகோதரர் அலாவுதீன்.
ஹமீது,
உங்கள் புகைப்படத்திலிருந்தும் உங்கள் பெயரை சொடுக்கினால் கிடைக்கும் விவரங்களிலிருந்தும் நீஙகள் யார் என்று தெரிகிறது; உரையாட ஏதுவாகிறது.
சகோ முஹம்மது அஷ்ரஃப் யாரென்று தம்மை வெளிக்காட்டைக்கொள்ளாததால் அவருடன் உரையாடுவதைத் தவிர்க்கவும்.
அ.நி.: நிழல்களுடன் நேர விரயம் செய்ய விருப்பமில்லாததால்தான் "அறிமுகம் இல்லாதவர்களின் கருத்துகள் நீக்கப்படும்" என்னும் நிலைபாடு இங்கு உள்ளது. எனவே,
ஒன்று இவர் யார் என்று இங்கு விளக்கவும் அல்லது இவரின் கருத்தை நீக்கவும்.
ஹமீது, "எது ஆண்மை?" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி வருவதாகச் சொன்னீருகளே, முடித்துவிட்டீர்களா?
//தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14)//
அலாவுதீன்,
மேற்கண்ட குர்ஆன் வசனத்தை மேலும் விளக்கிச் சொல்லவும். அதாவது,
கருத்துத் தெரிந்த காலம் முதல் தூய்மையாக வாழ்ந்தவனா (குறைந்தபட்சம் வாழ முயல்பவனா) அல்லது ரத்தம் செத்தகாலத்திற்குப் பிறகு வேறு வழியின்றி தூய்மையாக வாழ நினைப்பவனா? என்று விளக்கிச் சொல்லவும்.
ஏனெனில், இப்படிப்பட்ட பினாங்க் சபுராளிகளும் லோக்கல் கழிசடைகளும் நம்மூரில் அதிகம் உண்டு. உண்மையை விளக்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர் முஹம்மது அஷ்ரஃப்:
ஆரோக்கியமான கருத்தாடல்களை தொடர அதிரைநிருபர் வலைத்தளத்தின் நெறியாளுமைப்படி தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு சுய அறிமுகம் செய்து கொள்ளா விடின் தாங்கள் பதிந்த கருத்துக்கள் முன்னறிவிப்பு இன்றி மட்டுறுத்தலுக்குட்படுத்தப்படும்.
நெறியாளர்
www.adirainirubar.in
குரான் ஹதீஸ் மூலம் எஙகளை அச்ச மூட்டி எச்சரிக்கும் அலாவுதீன் காக்காவுக்கு நன்றி.அல்லாஹ் அருள் புரிவானாக
சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் \\ஹாஜா கனியை கண்டித்து கட்டுரை போடும் நீங்கள் முஹம்மது குட்டி ஆலிம்சா பூமி பூஜை செய்ததை கண்டித்து காபி பேஸ்ட் இல்லாமல் சுயமா கட்டுரை போடாதது ஏன் முஹம்மது குட்டி ஆலிம்சா கொள்கையை நேரடிய ஆதரிக்கும் தவுஹீத்?வாதிகளா நீங்கள் !!! \\
இஸ்லாத்தில் இல்லாத பூமி பூஜை செய்யும் மௌலானா மௌலவி ஹஜ்ரத் கிப்லா முஹம்மது குட்டி (?)!
http://www.adiraitntj.com/2013/06/blog-post_19.html
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
சபீர்: நீ கேட்ட விளக்கத்தை தர
முயற்சி செய்கிறேன் இன்ஷாஅல்லாஹ்!
Post a Comment