Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

’மரபு’கள் மறைந்த மரபணுக்கள்’ 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 13, 2016 | , , ,

காணொளியொன்றை காண நேரிட்டது அதனை முழுவதுமாக பார்த்து முடித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் சிந்தியிருந்ததை உணர்ந்தேன். 

"நாம் அனைவரும் ஒருதாயின் மக்கள்" என்ற வார்த்தையை உணர்ச்சிக்காகவும் மேம்பூச்சு பேச்சுக்களுக்காகவும் பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்த கூற்று உண்மை என்பதை அறிவியல்பூர்வமாய் எடுத்துரைக்கிறது இந்த காணொளி. வெறும் அறிவியல் சம்மந்தப்பட்ட காட்சிகளாக காண முடியவில்லை இதனை, இன்றைய உலகில் பல்வேறு அண்டை நாடுகளையே வெறுப்பாய் பார்க்கும் மனநிலை கொண்டுள்ளோம். கறுப்பு இனத்தவரை கண்டால் முகம் மாறுகிறோம். எண்ணெய் பிரச்சனைக்காய் பல நாடுகள் அரசியல் செய்கிறார்கள். எல்லை ஆக்ரமிப்புக்காக பல உயிர்கள் இழக்கிறோம். நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் பயங்கரவாதமும், நாடுக்களுக்கிடையே அல்லது உள்நாட்டு போர்களும் நடந்து கொண்டேயிருக்கிறது. தன்னுடைய நலம் என்ற ஒற்றைக் குறிக்கோள் தான் இத்தனையும் தீர்மானிக்கிறது. அந்த தன்னலம் என்பது தன்னையும் தன் உறவுகளையும் மட்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்து மற்றோரை நட்டாந்திரத்தில் விடுகிறது. 

ஒருவேளை அந்நிய நாட்டில் கொல்லப்பட்டவனும், அநீதிக்கு இழைக்கப்பட்டவனும், நாம் வெறுக்கும் நபர்களும் ஏதோ ஓரு தலைமுறையில் ஏதேனும் ஒருவகையில் நம் வம்சாவழியைச் சேர்ந்தவன் என தெரிந்தால் ? நாம் பெருமைகொள்ளும் ஓர் விஷயத்தில் தமக்கு அப்படி பெருமைப்பட்டுக் கொள்ள எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை அறிந்தால்? நம் உணர்வு எவ்வாறாக இருக்கும் ? அப்படியாக அமைந்தது தான் இந்த காணொளி. 
சிலரை அழைத்து வந்து "நீங்கள் யார் ?" என்று கேள்வியை முன் வைக்க "நான் இந்தயிந்த தேசத்தை சேர்ந்தவர்கள்" என்று பெருமையுடன் தங்களை அடையாளப்படுத்தி கொள்கிறார்கள் . இந்த உலகத்தில் எந்த தேசத்தை நீங்கள் பெரிதாக விரும்பவில்லை என்ற கேள்விக்கு காரணங்களோடு சில தேசங்களை சிலவற்றை வெறுப்புடனும் சங்கோஜத்துடன் குறிப்பிடுகின்றனர். 

''சரி, உங்களது மரபணுக்கள் கடந்து வந்த நீண்ட பயணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா ?'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒருவர் தெளிவாக விளக்கும் கேட்கிறார். 

அதற்கு, 

"கவனியுங்கள்! நாம் ஒவ்வொருவரும் மரபு வழியில் 50 % தாயைக்கொண்டும் 50% தந்தையைக்கொண்டும் வந்துள்ளோம். 

அவர்களை பெற்றவர்கள் . . . 
அவர்களை பெற்றவர்கள் . . . . 

என்ற சங்கிலித் தொடரின் பின்னோக்கிய பயணம் இது. இதனைக் கொண்டு உங்களின் மூதாதையர்களின் தொடக்கம் எந்ததெந்த தேசமாக இருக்கும் என்பதன் விகிதாச்சாரத்தில் தெரிந்து கொள்ளலாம். அதற்காக உங்கள் அனைவரின் உமிழ் நீரை இந்த டியூபில் உமிழ்ந்து கொடுங்கள்" என்று பெற்று கொள்கிறார்கள் .

சரியாக இரண்டு வாரம் கழித்து 'உங்களின் மரபணு பயணத்தை தெரிந்து கொள்ளும் முன், 'உங்களால் யூகிக்க முடிகிறதா' என்கிற கேள்விக்கு, மறுபடியும் 'எனது தொடக்கம் நிச்சயமாக பிரிட்டைன், பிரான்ஸ், கூபா, பங்களாதேஷியாக தான் இருக்கும்' என்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சொல்ல, அதில் ஒருவர் "நிச்சயமாக நான் ஒரு வலிமைமிக்க நாட்டவனாக தான் இருப்பேன்" என்றும் "என்னுடைய இந்த கறுப்பின அடையாளத்தில் பெருமை கொள்கிறேன். நிச்சயமாக நான் அவர்களில் ஒருத்தி" என்றும் கூறுகிறாள். 

நிறைவில் தெரியும் நேரம் நெருங்க, அவரவரை அழைத்து சோதனையின் முடிவினை உரக்கச்சொல்லச் சொல்கிறார்கள் 

தான் ஒரு 'பிரெஞ்காரி' என்று அழுத்தமாக சொன்ன பெண்மணியின் மரபியல் பயணம் அவரை 33% "நீ பிரிட்டிஷ்காரி" என்று சொல்ல மலைத்து நிற்கிறார் . "துருக்கி அரசினை வெறுக்கிறேன்" என்று சொன்ன பெண்மணியை துருக்கியின் ஏதோ ஒரு முட்டுச்சந்து ஊரினை சொல்லி நீ அவர்களை சேர்ந்தவள் என்கிறது பரிசோதனை முடிவு ."கூபா தான் எனது அடையாளம்" என்று மார்தட்டிய இளைஞனை நோக்கி "நீ ஐரோப்பியன்" எனகிறது. 

இனத் தூய்மை வாதம் 

"நான் முழுக்க முழுக்க இந்த இனத்தை சேர்ந்தவள் என்று இத்தனை நாட்கள் பெருமை கொண்டு இருந்தேன். ஆனால் நாடு மொழி இனம் எல்லாம் கடந்த கலப்பினம் தான் நாம் என்பதை புரிந்த கொண்டேன்" என்று கண்ணீர் மல்க ஒரு பெண்மணி கூற அந்த கண்ணீர் இந்த காணொளியை காண்பவர் கண்களிலும் எட்டி பார்க்கலாம்.

''உனது மரபணுக்களின் ஒப்பீட்டின்படி இங்கே உனக்கு ஒரு கசின் இருக்கிறார்'' என்று துருக்கிய பெண்ணிடம் சொல்லப்பட்டு ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் சுட்டி காட்டப்பட்ட தருணம் சகோதரதுவத்தின் உச்சம் என்பேன். 

கசின் என்ற ஆங்கில சொல்லுக்கு தாய் தந்தை இவர்களின் இரத்த வழியில் பிறந்த குழந்தைகளை குறிக்கும். இந்த விஞ்ஞானம் பொட்டில் அடித்தது போல சொல்வது 'இந்த உலக மக்கள் அனைவரும் வேற்றுமைகளை கடந்த சகோதரத்துவம் கொண்டுள்ளவர்களே' 

இந்த காணொளி நான் என்ற மனிதன் கொண்ட அகம்பாவத்தினை, இந்த இனம், இந்த தேசம், இந்த நிறம் என்ற பெருமைகளை புலங்காகிதங்களை அடித்து நொறுக்கிச் சொல்கிறது


"அட முட்டாளே ! மனுசப்பய அம்புட்டு பேரும் ஒன்னு தான்டா , அடிச்சாலும் பிடிச்சாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி டா" என்கிற விஞ்ஞான அறைகூவல். புரியுற மாதிரி சொன்னால் நாமெல்லாம் கசின்ஸ் !.

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான்.368 பின்னர் அவரிலிருந்து504 அவரதுஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக்காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில்303 உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?” - அல்குர்ஆன் : 39:6.

சபிதா காதர்

2 Responses So Far:

Unknown said...

காலத்திற்கேற்ப அருமையான ஆக்கம்.ஒரு நிமிசம் இதை உணர்ந்தால் இனம் மதம் மொழியெல்லாம் கடந்து மனிதம் பேண ஆயத்தமாவோம் என்பது திண்ணம். கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்

Unknown said...

காலத்திற்கேற்ப அருமையான ஆக்கம்.ஒரு நிமிசம் இதை உணர்ந்தால் இனம் மதம் மொழியெல்லாம் கடந்து மனிதம் பேண ஆயத்தமாவோம் என்பது திண்ணம். கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு